Thursday, 25 July 2019

ஷைகு நஜ்தியும் இந்திய உலமாக்களும்

இந்திய தேசத்தை சார்ந்த தேவபந்திகளால் ஷைகுல் ஹதீதென அழைக்கப்படும் ' அன்வர் ஷாஹ் காஷ்மீரி ' என்பார் ....

anwar shah kashmiri

                                                             
MuqaddamaFaizulBari


"முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் மதிநுட்பம் குறைந்த மடையராகவும் ,அறிவற்றவராகவும் காணப்பட்டார் . அதனால் குப்ரு உடைய தீர்ப்பு வழங்குவதில் அவசரம் காட்டினார் ".

[ நூல் - முகத்தமா ஃபைழுல் பாரி ] 


"அவர் தமது கூட்டத்தாரை தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்றும் , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரைக்    கொல்வது நன்மையான காரியம் என்றும் தீர்ப்பளித்தார் என்கிறார் கலீல் அஹ்மத் அம்பேட்டி "

[ நூல் - அத்தல்பீஸாத் ,பக்கம் 13 . அல் முஹன்னத் ,பக்கம் 18-19 ]  

"அன்பானவர்களே ! பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரேபிய மண்ணில் நஜ்துப் பகுதியில்  தோன்றிய முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் பாத்திலான ( பொய்யான ) கொள்கையுடையவராகும் . அதனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரோடு போர் புரிந்து பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்தார் .  அத்துடன் ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொல்வது நன்மையான ஒன்றென்றும் சொன்னார் . அவர்களின் சொத்துக்களை சூறையாடினார் . அவர்களால் எழுதப்பட்ட நூற்களை எரித்து சாம்பலாக்கினார் . இஸ்லாமிய முன்னோடிகளை கடுமையாக எரித்தார் . இவருடைய அநியாயத்தையும் ,அழிச்சாட்டியதையும் தாங்க முடியாமல் மக்கா மற்றும் மதீனாவை சேர்ந்தவர்கள் எல்லாம் தமது சொந்த இடங்களை விட்டும் வெளியேறி ஓடினர் . இவர் ஒரு படுபாவியும் , அநியாயக்காரருமாகும் என்கிறார் ஹுசைன் அஹ்மத் டாண்டவி என்பார் ".

[ நூல்  - அஷ்ஷிஹாபுத்   தாகிப் ,பக்கம் 42 ]

"அவர்கள் தம்மை தாமே ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர் என்று கூறிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல . அவர்கள் தமது கொள்கைக்கு புறம்பான கொள்கை கொண்டோரை முஷ்ரிக்கீன்கள் என்றே கருதினர் என்னும் அல்லாமா ஷாமியின் கருத்தை பிரதிபலிக்கின்றார் முஹம்மத் தானவி "

[ நூல் - ஹாஷியா  நஸாயி ஷரீப் ] 

"முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பிரார்த்தனை செய்யும் போது  அல்லாஹ்விடம் இன்னார் பொருட்டால் எனக் கேட்போர் அனைவரும் காபிரும் ,முஷ்ரிக்கும் என்று சொன்னார் . காரணமில்லாமல் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொன்று குவித்தார் என்கிறார் உபைதுல்லாஹ் சிந்தீ "

[ நூல் - ஷாஹ் வலியுல்லாஹ் அவ்ர் உன்கீ ஸியாசத்தீ  தஹ்ரீக் , பக்கம் 228 ,229,230 ] 

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பற்றி கருத்து சொன்ன மேற்கண்ட தேவ்பந்திய உலமாக்களும் வஹ்ஹாபிகள் தான் . இந்த தேவ்பந்தியர்கள் மற்ற இயக்கங்களுக்கு புறம்பாக நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுபவர்களாக இருப்பதுதான் இவர்களுக்கும் மற்ற இயக்கங்களுக்கும்   உள்ள வித்தியாசம் . இருப்பினும் இவர்களெல்லாம் ஷைகு நஜ்தி தொடர்பாக கூறிய கருத்துக்களில் நமக்கு ஒரு மாபெரும் பிரயோஜனம் இருக்கின்றது .

அது என்னவெனில்   முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பாத்திலான - பொய்யான கொள்கையை கொண்டவர் . அவரை ஆதரிக்காதோரை முஷ்ரிக் -அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர் என்று வாதிட்டவர் . நல்லாடியார்களான    ஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை கொன்று குவித்தார்  என அவர்களே கூறியிருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தான் . ஆதலால் அவரைப் பற்றிய தகவல்களை இப்பொது பார்ப்போம் .

இவருடைய முழுப்பெயர் பற்றி மஹமூத் ஷுக்ரி என்பார் தமது தாரீக் நஜ்த் (அரபி)  என்னும் நூலின் 111ஆம் பக்கத்தில் ,.....

முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு சுலைமான் இப்னு அலி இப்னு முஹம்மத் இப்னு அலி இப்னு ராஷித் இப்னு புரைத் இப்னு முஹம்மத் இப்னு புரைத் இப்னு முஷ்ரிப் இப்னு உமர் இப்னு புஃழாத் இப்னு ரீஸ் இப்னு சாகிர் இப்னு முஹம்மத் இப்னு அலி இப்னு உஹைப் அத் தமீமி அந்நஜ்தி    என்று கூறுகிறார் .

அடுத்து அவருடைய பிறப்பின் ஆண்டு தொடர்பாக அல்லாமா ஸைனீ தஹ்லான் மக்கீ رضي الله عنه அவர்கள்   ஹிஜ்ரி 1111 ஆம் ஆண்டு எனக் குறிப்பிட்ட போதிலும் ஹிஜ்ரி 1115ஆம் ஆண்டு(கி.பி. 1703)  தான் பிறந்ததாக நஜ்த்துவாசிகள் கூறுகின்றனர் . அவரைக் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கொள்கையை பின்பற்றுவோரையே வஹாபிகள் என்று அழைக்கப்படுகின்றது . இனி இது பற்றியும் கருத்து வேறுபாடு இருப்பதால் அவருடைய கொள்கையை சரிகண்ட  அலி தன்தாவி  ஜெளஹரி என்பார் , முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் தனது நூலில் ,13ஆம் பக்கத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் ....



  "முஹம்மத் என்று பெயருடையவரைத் தான் வஹாபிகள் எனச் சொல்லப்படுகின்றது " என்று கூறுகிறார் .

அடுத்து ஷைகு நஜ்தி பிறந்த காலத்தின் நிலை குறித்தும் அவர் இஸ்லாத்திற்கு புதியதோர் விளக்கத்தை தந்தற்குரிய காரணம் என்னவென்பதைக் குறித்தும் இந்தியாவைச் சேர்ந்த மஸ்வூத் ஆலிம் என்பார் கூறும் கருத்தை சுருக்கமாக சொல்வதாயின் ...........

 "உலகமனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் கப்ருகளை வணங்குபவர்களாகவும் , முஷ்ரிக்கீன்களாகவும் மடமைக் காலத்தில் இருந்ததாகவும் கூறுகிறார் . இதற்கு அவருடைய ஊரோ அல்லது பக்கத்திலிருந்த ஊரோ விதிவிலக்காக இருந்ததில்லை என்றும் , ஏனெனில் ; அவரது சொந்த ஊரான உயைனாவுக்கு பக்கத்திலிருந்த ஜபீலா என்னும் ஊரில் வாழ்ந்த ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்   رضي الله عنه அவர்களது மைந்தரான ஹழ்ரத் ஸைத்   رضي الله عنه அவர்களது கப்ரை அங்கிருந்தோர் வணங்கிக் கொண்டிருந்ததாகவும் , அதேபோல் தர்இய்யாவிலும் பல குப்பாக்களை நபித்தோழர்களுடையதென்று சொல்லிக் கொண்டு அவைகளை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தனர் என்றும் , கபீரா என்னும் ஊரில் ஹழ்ரத் ழிரார் இப்னு  அசூர்  رضي الله عنه அவர்கள் என்னும் நபித்தோழருடைய குப்பா வழிகேட்டின் அடித்தளமாக இருந்ததாகவும் , பழீலத்துள் பிதா என்னும் ஊரில் பழமை வாய்ந்த ஒரு மரத்தடியில் அன்றிருந்த ஆண்களும் ,பெண்களும் இணைந்து சொல்லமுடியாத அனாச்சரங்களை எல்லாம் செய்பவர்களாக காணப்பட்டனர் "என்று கூறும் 
 மஸ்வூத் ஆலிம் அவரது பெற்றோர் பற்றி சொல்லும் பொது அதே நூலின் 17 வது பக்கத்தில் .....

" உயைனா என்னும் ஊரில் பேரறிஞர்களின் குடும்ப வாரிசாக கி.பி  1703 ஆம் ஆண்டு ஹிஜ்ரி 1115ல் பிறந்தார் . இவருடைய தந்தை அப்துல் வஹ்ஹாப் அந்த ஊரின் காழியாக இருந்தார் . அப்போது அவ்வூரின் தலைவராக அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு ஹம்த் இப்னு அப்துல்லாஹ் இப்னு மஃமர் என்பவர்     இருந்து வந்தார் .

இவருடைய பெரிய தந்தையான ஷைகு சுலைமான் என்பவர் அக்காலத்திய பிரபல அறிஞராக இருந்தார் . பல நூற்களையும் இயற்றினார் . சிறிய தந்தையான இப்ராஹீம் என்பவரும் ,அவருடைய மைந்தரான அப்துர் ரஹ்மான் என்பவரும் , அவருடன் பிறந்த சகோதரன் சுலைமான் என்பவரும் பிரசித்தி பெற்ற மாபெரும் அறிஞர்களாக விளங்கியதுடன் அவர்களெல்லாம் தனிப்பட்ட ஓர் மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் ,அந்த   மத்ஹபின் சட்டப்படியே தீர்ப்புகள் வழங்கக் கூடியவர்களாகவும் இருந்தனர் .

அறிஞர்களின் வாரிசாக பிறந்ததால் ஷைகு நஜ்தியையும் அறிவாளியாக்குவதற்கு வேண்டி தனது தந்தையிடமே கல்வி கற்றார் . மேற்படிப்புக்காக தூர தேசங்களுக்கு சென்றது பற்றியோ அல்லது அங்கே ஆண்டுக்கணக்கில் கல்வி பயின்றதற்கோ ஆதாரங்கள் இல்லை . இருப்பினும் தனது 10வது வயதில் முழு குரானையும் மனனம் செய்து விட்டார் . அதன்பின் 12ஆம் வயதில் திருமணமும் செய்து வைக்கப்பட்டார் .

இந்த இடத்தில நாம் கண்டிப்பாக ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . அதாவது அவர் பிறந்து மார்க்கத்திற்கு புதியதோர் விளக்கத்தை சொல்லும் வரை சுமார் 400 வருடங்களாக வாழ்ந்து வந்த உலகமனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் வழிகேட்டில் மூழ்கி கிடந்ததாக சொல்லும் போது , ஷைகு நஜ்தியின் தந்தை , பெரிய தந்தை ,சிறிய தந்தை ,சகோதரர் போன்றவர்கள் மட்டும் எப்படி பேரறிஞர்களாக இருந்தார்கள் ? எல்லோருமே முஷ்ரிக்குகளாக இருந்தார்கள்  என்றால்     இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் எப்படி ஏகத்துவாதிகளாக இருக்க முடியும் ? என்பதுதான் .

பின்னும் பாராளும் பயகம்பர் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களுக்கும் ஹழ்ரத் ஸெய்யிதினா ஈஸா عليه السلام  அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் 570 ஆண்டுகள் மட்டுமே . இந்த இடைப்பட்ட காலத்தில்  வாழ்ந்தவர்களில் சிலர் அல்லாஹ்வைப் பற்றிய அறிவை தமக்குள் கொண்டிருந்தனர் . இருப்பினும் அவர்கள் மவுனிகளாகத்தான் இருந்து வந்ததாக வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது . 

ஒரு பேச்சுக்கு ஷைகு நஜ்தியுடைய குடும்பத்தார் மட்டுமே அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டிருந்தார்கள் என்று நாமாக கருதிக் கொண்டாலும் அவர்கள் நீதவான்களாக இருந்தார்களென்றும் ,ஹன்பலி மத்ஹபின் பிரகாரம் தீர்ப்பு வழங்கி வந்தார்களென்றும் எப்படி சொல்ல முடியும் ?

அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்களாக , கப்ருகளுக்கு தலை வணங்குபவர்களாக இருந்து கொண்டிருந்தவர்களுக்கு தனிப்பட்ட ஒரு மத்ஹபின் பிரகாரம் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும் ? அத்துடன் வஹாபிய கொள்கைப்படி மத்ஹபுகளெல்லாம் வழிகேடு என்று இருக்கும்போது இவர்கள் ஒரு மத்ஹபை எப்படி பின்தொடர்ந்து இருக்க முடியும் ? 

அவ்வாறின்றி ஷைகு நஜ்தியுடைய தந்தை மற்றும் சகோதர்கள் போன்றோர்கள் இவருக்கு பின்புதான் சத்தியத்தை உணர்ந்தார்களென்று வைத்துக் கொண்டால் அவர்கள் இவருடைய கொள்கைகளுக்கு ஊக்கமளித்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் ,அவருக்கு பக்க பலமாகவாது இருந்திருக்க வேண்டுமல்லவா ? 

இந்நிலையில் உறுதுணையாகவும் ,பக்க பலமாகவும் இருக்க வேண்டிய அவருடைய தந்தையும் ,சகோதரரும் அவரை எதிர்த்தாகவும் , அவருடைய நவீன கொள்கைகளை கண்டித்து நூற்கள் இயற்றியதாகவும் ,அவர் ஒரு வழிகேடராக மாறுவதற்குரிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் அவரோடு யாரும் சகவாசம் வைத்துக்  கொள்ளக் கூடாது என்று ஜனங்களை பகிரங்கமாக ஏச்சரித்தது ஏன் ? 

இதில் அவருடைய சகோதரர் பின்னால் மன்னிப்பு கேட்டதாகவும் , அண்ணனுடன் சேர்ந்து கொண்டதாகவும்  நஜ்திகள் ஏன் கூறுகின்றனர் ?  அதிலும் குறிப்பாக சகோதரர் சுலைமான் அவர்களால் அண்ணன் வழிகேடன் , பித்தலாட்டக்காரன் ,பொய்யன் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து தொகுக்கப்பட்ட நூல் இன்னும் இருக்கின்றதே ?

இனி சுலைமான் தனது அண்ணனுடன் சேர்ந்து கொண்டார் எனில் அதற்குரிய வாக்குமூலத்தை கொண்ட எழுத்துப் பிரதியை இந்த வஹாபிகள் காட்ட வேண்டாமா ? உலகில் விலை கொடுத்து வாங்க முடியாத பொருள் ஒன்று இருக்குமாயின் அது தாயும் ,தந்தையும் தானென்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் . ஆனால் அதையும் இவர்கள் விலைக்கு வாங்கி விடுவார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும் . 


No comments:

Post a Comment