Sunday, 21 December 2025

வஸீலாவை முதன்முதலாக மறுத்தவர்

🌹  அண்ணல் நபி  ﷺ அவர்களது வஸீலாவை முதலில் மறுத்தவர் 🌹

ஷெய்குல் இஸ்லாம் அல்லாமா ஸுப்கீ அஷ்-ஷாஃபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்: 

" அல்லாஹ் தஆலாவிடம் ,அண்ணல் நபி  ﷺ  அவர்களை வஸீலாவாகக் கொண்டு துஆ செய்வது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். இதைத் இப்னு தைமிய்யாவைத் தவிர ,  முன்னர் மற்றும் பின்னர் உள்ள சலஃப் மற்றும் கலஃபில் எவரும் இதை மறுக்கவில்லை. 

இப்னு தைமிய்யா (தான் முதன்முதலாக )  இதை ஒரு பித்அத்தாகக் என்று அறிவித்தார் ; அவருக்கு முன்னர் எந்த இஸ்லாமிய அறிஞரும் இவ்வாறு கூறவில்லை.

(ஹாஷியத்து இப்னு ஆபிதீன்  ரத்துல் முஹ்தார், திபாஅ அல்-ஹலபீ ٦/٣٩٧)

Friday, 19 December 2025

வழிகேடர்களுக்கு மறுப்புரை - 2

ஆக்கம் : முப்தி Dr. தெஹ்ஸீன் ரிழா ஹம்தானி காதிரி நூரி 


ராபிழியாக்கள் ( ஷியாக்கள்) 

ராபிழியாக்கள் குழு என்பது இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஒரு குழுவாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழு தங்கள் நம்பிக்கை அமைப்புகளின் அடிப்படையில் பல துணைக் குழுக்களாகப் பிரிந்தது.

அண்ணல் நபி ﷺ  ஸெய்யிதினா அலீ  كرم الله وجهه அவர்களிடம்  கூறினார்கள்:

"அலீயே ! உம்மில் ஈசா நபி போன்ற ஒரு ஒற்றுமை உள்ளது; யூதர்கள் அவரை எந்தளவு  வெறுத்தனர் என்றால்  அவரது தாயை அவதூறு செய்தனர். கிறிஸ்தவர்கள் அவரை அவ்வளவு நேசித்தனர் என்றால் அவர் தகுதியற்ற ஒரு அந்தஸ்துக்கு ( இறைவனின் குமாரன்)  உயர்த்தினர்."

பின்னர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் அலீ  كرم الله وجهه அவர்கள்  கூறினார்கள்:

_"என்னால் இரு வகையான மக்கள் அழிவுக்கு உள்ளாவார்கள்: என்னை மிகைப்படுத்தி நேசிப்பவர், எனக்கு இல்லாத குணங்களைப் புகழ்பவர், மற்றும் என்னை மிகைப்படுத்தி வெறுப்பவர், என்னை அவதூறு செய்பவர். எச்சரிக்கை! நான் ஒரு நபி அல்ல, என் மீது வஹீ இறங்குவதில்லை."_

[ஆதார நூல் 📕 அல் முஸ்தத்ரக் லில் ஹாகிம், ஹதீஸ் 4622, ஸஹீஹ்]

இதிலிருந்து தெளிவாகிறது  ஒரு குழு நமது எஜமானர் ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் அலீ முர்தளா  كرم الله وجهه  அவர்களிடம் மிகைப்படுத்தலால் அழிவுக்கு உள்ளாகும். 

இத்தகைய பண்பு ராபிழியாக்களது பழக்கமாகும். ஷீஆக்களின் இந்த மிகைப்படுத்தல்கள் மற்றும் பிற தவறான நம்பிக்கைகள் பின்வருமாறு:

- ஹழ்ரத் அலீ  رضي الله عنه அண்ணல் நபி ﷺ அவர்களைத் தவிர அனைத்து நபிமார்களையும் விட உயர்ந்தவர்கள்.

- ஹழ்ரத் அலீ  رضي الله عنه அன்ஹுவின் நேசத்தில், சிலரைத் தவிர மற்ற அனைத்து ஸஹாபாக்களையும் காஃபிர்கள் என்று அறிவிக்கின்றனர்.

- அவர்களின்படி, அசல் குர்ஆன் 17,000 வசனங்களைக் கொண்டிருந்தது. இன்றைய குர்ஆன் முழுமையடையாதது.

அவர்களது புத்தகங்களில் உள்ள குறிப்புகள்:

- ரிஜால் அல் காஷி, பக்கம் 12, கர்பலா பதிப்பு, ஈராக்.

- உஸூல் அல் காஃபி, தொகுதி 2, பக்கம் 634, தாருல் கிதாப், தெஹ்ரான்.

இந்த தவறான நம்பிக்கைகளால், ராபிழி ஷீஆ குழு இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டது. இவர்களது நம்பிக்கைகளைத் தெரிந்த பிறகு இவர்களை நேர்வழி பெற்றவர்கள் என்று கருதுபவர் அல்லது இவர்களது நம்பிக்கைகளை வெறும் கருத்து வேறுபாடு என்று கருதுபவர் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்.

_தொடரும்_

Thursday, 18 December 2025

வழிகேடர்களுக்கு மறுப்புரை - 1

ஆக்கம் : முப்தி Dr.தெஹ்ஸீன் ரிழா ஹம்தானி காதிரி நூரி 

இந்த தலைப்பு சுன்னி சஹீஹுல் அகீதா முஸ்லிம்களுக்கு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மிகவும் முக்கியமானது. உம்மத்திற்குள் பிளவையும், சீர்கேட்டையும் உண்டாக்கியவர்களின் வழிகெட்ட நம்பிக்கைகளை அறியாமல் இருந்தால், ஒருவர் அவர்களின் தீமைகளிலிருந்து ஒருபோதும் பாதுகாக்கப்பட மாட்டார். 

நமது அகீதாக்கள்/கொள்கைகள் அல்லாஹ் தஆலா தன் இறை அருளை அருள்புரிந்த புனிதர்களின் அகீதாக்களுக்கு ஏற்ப இருந்தால்தான் உம்மத்தாக ஒன்றுபட முடியும்.

சூரதுல் ஃபாத்திஹாவில் நாம் தினமும் ஓதுகிறோம்:

_"எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக! நீ அருள் புரிந்தவர்களின் வழியை!"_ [அல்குர்ஆன், 1:5-6]

அல்லாஹ் தஆலா யாருக்கு அருள் புரிந்தான்?

அல்லாஹ் தஆலா கூறினான்:

_"யார் அல்லாஹ்வையும், தூதரையும் வழிப்படுகின்றாரோ அவர்கள் அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன் இருப்பார்கள்: நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் மற்றும் நல்லடியார்கள் – அவர்கள் எத்துனை சிறந்த தோழர்கள்!"_ [அல்குர்ஆன், 4:69]

ஆகவே, நேர்வழி என்பது நமது நபிமார்கள், சித்தீகீன்கள் (உண்மையாளர்கள்), ஷுஹதா (ஷஹீதுகள்) மற்றும் அவ்லியா-உல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்கள்) ஆகியோரின் வழியாகும்.

மேலும், கலிமா தய்யிபாவிலிருந்து நாம் அறிகிறோம்: உண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன் பொய்மையை மறுப்பது அவசியம். கலிமா ஷரீஃபில் நாம் முதலில் அறிவிக்கிறோம்:

லா இலாஹ:
"இறைவன் இல்லை (பொய்யான/வேறு தெய்வம் இல்லை),"

பின்னர் உறுதிப்படுத்தி கூறுகிறோம்,

இல்லல்லாஹ்:
"அல்லாஹ்வே (உண்மையான இறைவன்)"

ஆகவே, உம்மத்தை அழிவுக்கு உள்ளாக்கியவர்களின் பொய்யான நம்பிக்கைகளை மறுப்பதன் முக்கியத்துவம் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கும் அவசியமானது, தன்னை அதன் தீமைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இஸ்லாமின் உண்மையை உண்மையாக உறுதிப்படுத்துவதற்காகவும்.

( தொடரும்) 

Thursday, 27 November 2025

யார் இந்த வஹாபிகள்

இமாமே அஹ்லேசுன்னத் இமாம் அஹ்மத் ரிழா கான் அல்-ஹனஃபீ ரحمه الله [மறைவு: 1340 ஹிஜ்ரீ] அவர்கள் தமது «ஃபதாவா அல்-ஹரமைன்» என்ற நூலில் கூறுகிறார்கள்:
“வஹ்ஹாபிகளைப் பொறுத்தவரை அவர்கள் வழிகெட்ட ஒரு கூட்டத்தார் . அவர்களைக் காஃபிர்கள் என்று அறிவிக்கும் பல நூல்கள் — அரபி மொழியிலும் மற்ற மொழிகளிலும் — தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எமது ஹதீஸ் ஆசானும், எமது எஜமானும், ஆலிம் ஷெய்கு ஸெய்யது அஹ்மத் இப்னு ஸைனி தஹ்லான் அல்-மக்கீ — அல்லாஹ் அவர்களின் ரகசியத்தைப் பரிசுத்தமாக்குவானாக — எழுதிய «அத்-துரர் அஸ்-சனிய்யா ஃபில்-ரத்தி அலல்-வஹ்ஹாபிய்யா» என்ற நூலும் ஒன்றாகும்.

அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட மிகச் சிறந்த வார்த்தை, மதீனத்துல் முனவ்வராவின் முஃப்தியான மவ்லானா அபூ ஸுத் ( رَحِمَهُ ٱللَّٰهُ )  அவர்கள் கூறியதாகும்:

{ஷைத்தான் அவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டான்; அதனால் அல்லாஹ்வின் நினைவை அவர்கள் மறந்து விட்டார்கள். இவர்கள் தான் ஷைத்தானின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! ஷைத்தானின் கட்சியினர் தான் நஷ்டவாளிகள்»
 (திருக்குர்ஆன் 58:19)

— ஃபதாவா அல்-ஹரமைன் பி-ரஜ்ஃபி நத்வதில் மைன், பக்கம் 9, ஹகீகத் கிதாபேவி, துருக்கி பதிப்பு.

Wednesday, 26 November 2025

முஹத்திஸீன்களது வஸீலா

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  رَحِمَهُ ٱللَّٰهُ  மற்றும் இமாம் தஹபீ رَحِمَهُ ٱللَّٰهُ   ஆகிய இரு மகத்தான முஹத்திஸ்களும், ஹதீஸின் உஸூல்கள் மற்றும் அஸ்மாஉர்ரிஜால் அறிவின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி கோருவது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது பற்றி விளக்கிய அகீதா (நம்பிக்கை) பின்வருமாறு:

ஹஜ்ரத் அபூ அலீ நைஷாபூரீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு: 349 ஹிஜ்ரீ) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் மிகவும் கடுமையான கஷ்டத்திலும் துன்பத்திலும் இருந்தேன். அப்போது எனக்கு கனவில் அண்ணல் நபி ரசூலுல்லாஹ்  ﷺ அவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போது ஏந்தல் நபி  ﷺ  அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

‘யஹ்யா பின் யஹ்யா அவர்களின் கப்றிடம் செல், அங்கு நீ இஸ்திஃபாரும் (பாவமன்னிப்புக் கோருதலும்) செய், அவரை வஸீலாவாக வைத்து உதவி கோரு; அப்போது உன் கஷ்டம் நீங்கிவிடும்.’

நானும் அவ்வாறே செய்தேன்; மறுநாளே என் துன்பம் நீங்கிவிட்டது.”

( இமாம் யஹ்யா பின் யஹ்யா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் மறைவு : 226 ஹிஜ்ரீ)
ஆதார  நூல் 📕தஹ்தீபுத் தஹ்தீப், தொகுதி 4, பக்கம் 398

இப்போது எந்த வஹ்ஹாபியோ, தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரோ அல்லது அஹ்லே ஹதீஸ் உடையவராவது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரை கப்ரு வணக்கம் செய்பவர்கள்,ஷிர்க் செய்பவர்கள் ( நவூதுபில்லாஹ் ) என்று  ஃபத்வா கொடுக்கத் துணிவாரா?


Thursday, 20 November 2025

இப்னு தைமிய்யா குறித்து இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ ‎رَحِمَهُ ٱللَّٰهُ

கல்லுடைந்தாலும்  சொல்லுடையாத இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இப்னு தைமிய்யா பற்றி கூறியது:
இப்னு தைமிய்யா என்பவன் அவமானப்படுத்தப்பட்டவனாகவும், குருடனாகவும், செவிடனாகவும், இழிவானவனாகவும் ஆக்கப்பட்டவன் ஆவான். இதை அவரது காலத்து இமாம்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவன் பாசிக் , பொய்யன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யார் அவனது சுயரூபத்தைப்  பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாரோ, அவர் இமாம் அபூ ஹசன் அஸ் ஸுப்கீ அல்-முஜ்தஹித் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அவரது இமாமத், மகத்துவம், இஜ்திஹாத் அந்தஸ்து ஆகியவற்றில் ஒருமித்த கருத்து உள்ளது. 

மேலும் அவரது மகனார் இமாம் தாஜுத்தீன் அஸ் ஸுப்கீ, ஷைகுல் இஸ்லாம் இஸ்ஸு பின் ஜமாஹ் மற்றும் அவரது காலத்து ஷாஃபிஈ, மாலிகீ, ஹனஃபீ உலமாக்களின் நூல்களையும் படிக்க வேண்டும்.

இப்னு தைமிய்யா பிந்தைய சூஃபிகளுக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை; அவன் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் இப்னு அல்ஃகத்தாப் رضي الله عنه மற்றும் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீ தாலிப்   كرم الله وجهه ஆகியோருக்கும் எதிராக ஆட்சேபனை தெரிவித்தான்.

சுருக்கமாகச் சொல்வதானால்: அவனுடைய எழுத்துகளுக்கு எந்த மதிப்பும் இல்லை; மாறாக, அவை குப்பையில் வீசப்பட வேண்டியவை. அவனைப் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டியது என்னவென்றால், அவன் ஒரு பித்அத் செய்தவன் , வழிகெட்டவன், அறியாதவன், ஃகுலுவ் (அளவு கடந்து போவது) செய்தவன் ஆவான். அல்லாஹ் அவனுக்கு தனது நீதியின்படி கைமாறு செய்வானாக! அவனுடைய நம்பிக்கைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.

ஆதார நூல் 📕 : அல்-ஃபதாவா அல்-ஹதீஸிய்யா, இப்னு ஹஜர் அல்-ஹைதமீ رَحِمَهُ ٱللَّٰهُ , பக்கம் 114-115

Saturday, 15 November 2025

வஹாபிகளைப் பற்றி இமாம் இப்னு ஆபிதீன்

ஸுல்தானுல் உலமா இமாம் இப்னு ஆபிதீன் ஷாமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி பற்றி:

“எமது காலத்தில் நஜ்திலிருந்து தோன்றிய இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றுபவர்களிடம் இது நிகழ்ந்தது போன்று; அவர்கள் இரு புனித ஹரம்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அவர்கள் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டனர், ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் முஸ்லிம்களல்ல என்றும், தமது நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பவர்கள் ஷிர்க்கு (  இணைவைப்பவர்கள் ) செய்பவர்கள் என்றும் நம்பினர். 

இதனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தில் இருந்தவர்களையும், அவர்களது அறிஞர்களையும் கொல்வது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என்று கருதினர்; இறுதியில் அல்லாஹ் மிக உயர்ந்தவன் அவர்களது வலிமையையும் ஆற்றலையும் அழித்தான்.”
[📕 ரத்துல் முஹ்தார், இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றுபவர்கள் பற்றிய அத்தியாயம், நமது காலத்தின் காரிஜிய்யூன்]

Wednesday, 3 September 2025

வஹாபிகள் பார்வையில் மீலாத்

இப்னு அப்துல் வஹ்ஹாபுந் நஜ்தியுடைய மகன் மீலாதுந் நபி கொண்டாட்டம் பற்றி என்ன சொல்கிறார்??
-------------------------------------------------------------



பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் புனித மீலாதில் மகிழ்ச்சி கொண்டாட அல் குர் ஆனில் இருந்தும் ஹதீதில் இருந்தும் ஏராளமான ஆதாரங்களை நாம் வழங்கிவருகின்ற போதிலும் வஹ்ஹாபிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.

காரணம் அவர்கள் எதிர்பார்க்கும் ஆதாரம் குர் ஆன் ஹதீதில் இருந்து அல்ல! மாறாக தங்கள் குருநாதர்களின் கருத்துக்களில் இருந்து கிடைப்பவற்றை மட்டுமே அவர்கள் ஏற்று பின்பற்றுவார்கள். 

அவர்களது குருநாதர்கள் யாரென்பதை உலகறியும்.

கொள்கையில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்தையும் ஹதீஸ் துறையில் அல்பானியின் கருத்தையும் தாண்டி ஒரு முழமேனும் இந்தக் கும்பல் நகராது.

வழிகெட்ட வஹ்ஹாபிஸத்தின் தோற்றுவாயான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தியுடைய மகன் "அப்துல்லாஹ்" என்பவர் "முக்தஸர் ஸீரதுர் றஸூல்" என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அந்தக் கிரந்தத்தில் மீலாதுந் நபி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு நாம் ஆதாரமாகக் கொள்ளும் பின்வரும் கருத்தில் அமைந்த ஹதீஸினைக் கொண்டு வருகிறார்.

"கண்மணி றஸூலுல்லாஹ் பிறந்த செய்தியை அறிவித்த அபூலஹபுடைய அடிமைப் பெண்ணான துவைபாவை மகிழ்ச்சியின் காரணமாக அவன் விடுதலை செய்தான். அவனது மரணத்துக்குப் பின்னர் அவன் ஒருவரது கனவில் தோன்றி  தான் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் திங்கட்கிழமைகளில் தன் சகோதரர் மகனான பெருமானார் பிறந்த செய்தியை அறிவித்த துவைபாவை மகிழ்ச்சியின் காரணமாக எந்த விரல்களை நீட்டி விடுதலை செய்தேனோ அதிலிருந்து தனக்கு நீர் புகட்டப்படுவதாகவும் கூறினான்"

மேற்படி செய்தியோடு மட்டும் அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அந் நஜ்தி  நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை..

ஆனால் இச்செய்திக்கு அடுத்தே இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் இந்த ஹதீஸ் குறித்து கூறியுள்ள கூற்றினைக் கொண்டு வருகிறார். 

இங்குதான் வஹ்ஹாபிகளின் இரத்த நாளங்கள் வெடித்துச் சிதறப் போகிறது!

இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிரார்கள் :

"அல் குர்ஆனில் அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஒரு காபிருக்கே நபிகளாரின் மீலாதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்தளவு நன்மை கிடைக்கிறது எனில் மீலாது கொண்டாடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் அடையும் நன்மைகளை கற்பனை செய்து பாருங்கள்"

வஹ்ஹாபிகளே!

நீங்கள் புனிதராகப் போற்றும் இப்னு அப்துல் வஹ்ஹாபுந் நஜ்தியின் மகனார் மீலாதுந் நபி கொண்டாட்டத்துக்கு ஆதரவாக ஹதீதையும் பதிவு செய்துவிட்டு அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இமாம் இப்னு ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தையும் தனது கிரந்தத்தில் கொண்டு வந்திருக்கிறாரே!!

தனையனே தன் தந்தையின் கொள்கையை குழிதோண்டிப் புதைத்துவிட்ட பின்னர் அந்த அசிங்கத்தை நீங்கள் ஏன இன்னும் சுமந்து திரிகிறீர்கள்?