ஸுல்தானுல் உலமா இமாம் இப்னு ஆபிதீன் ஷாமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி பற்றி:
“எமது காலத்தில் நஜ்திலிருந்து தோன்றிய இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றுபவர்களிடம் இது நிகழ்ந்தது போன்று; அவர்கள் இரு புனித ஹரம்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அவர்கள் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டனர், ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் முஸ்லிம்களல்ல என்றும், தமது நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பவர்கள் ஷிர்க்கு ( இணைவைப்பவர்கள் ) செய்பவர்கள் என்றும் நம்பினர்.
இதனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தில் இருந்தவர்களையும், அவர்களது அறிஞர்களையும் கொல்வது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என்று கருதினர்; இறுதியில் அல்லாஹ் மிக உயர்ந்தவன் அவர்களது வலிமையையும் ஆற்றலையும் அழித்தான்.”
[📕 ரத்துல் முஹ்தார், இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றுபவர்கள் பற்றிய அத்தியாயம், நமது காலத்தின் காரிஜிய்யூன்]
No comments:
Post a Comment