Monday, 7 October 2024

மக்கா முற்றுகை - வஹாபிய வரலாறு

இன்றைய நவீன சவூதி அரேபியாவின் இறக்குமதி கொள்கையான வஹாபிசத்தின் தோற்றுவாய, ஸவூத் இப்னு அப்துல் அஜீஸ் மற்றும் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் நஜ்தி தமீமி ஆகியோர்.

இவர்களது வழிகேடான
 கொள்கையோடு ,இவர்களது இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிரான போக்கினை வெளிப்படுத்தும் அநேக வரலாறு நூற்களை புறந்தள்ளும் இந்நவீன கவாரிஜ்கள் , அவர்களே எழுதிய " தாரீகுந் நஜ்த்" நூலின் வாக்குமூலம் பின்வருமாறு ,

"ஸவூத் இப்னு அப்துல் அஜீஸ் புனித நகரமான மக்கா முக்கரமாவை முற்றுகையிட்டான்.அவன் மக்காவிற்கு உணவு மற்றும் தினசரி பயன்பாட்டிற்கான பொருட்கள் கொண்டு செல்லும் பாதையை முழுமையாக மறித்ததால் ,மக்காவாசிகள் நாய்களை உண்பதற்கு நிர்பந்திக்கப்பட்டு ,பசியால் உயிரை மாய்க்கும் அளவிற்கு சென்றார்கள்." 

மிகப்பெருமையுடன் வஹாபிய கொள்கைவாதிகள் தமது நூல்களில் இதனை பதிவு செய்துள்ளனர்.


Thursday, 3 October 2024

கவாரிஜ்கள் கிலாபுன் நார்

கவாரிஜ்கள் கிலாபுன் நார் 

அபூ காலிப் அவர்கள் அறிவிக்கின்றார்கள் ,ஸெய்யிதினா அபூ உமாமா رضي الله عنه அவர்கள் கூறினார்கள் , "

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، يَقُولُ شَرُّ قَتْلَى قُتِلُوا تَحْتَ أَدِيمِ السَّمَاءِ وَخَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوا كِلاَبُ أَهْلِ النَّارِ قَدْ كَانَ هَؤُلاَءِ مُسْلِمِينَ فَصَارُوا كُفَّارًا ‏.‏ قُلْتُ يَا أَبَا أُمَامَةَ هَذَا شَىْءٌ تَقُولُهُ قَالَ بَلْ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم

கவாரிஜ்கள் பூமியில் வெட்டப்பட்டவர்களில் மிகவும் மோசமானவர்கள்.அவர்கள் நரகத்து நாய்கள்.இவர்கள் முதலில் இஸ்லாத்தில் இருந்தார்கள்,பின்னர் காபிராகிவிட்டார்கள்.

அபூ காலிப் அவர்கள் ஸெய்யிதினா அபூ உமாமா رضي الله عنه அவர்களிடம் கேட்டார்கள் ,இது உங்களது சுயமான கருத்து என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்ட பொழுது ,இல்லை இதனை ஏந்தல் நபி  ﷺ அவர்கள் கூற நான் கேட்டேன் என்று பதிலுரைத்தார்கள்.

ஆதார நூல் : ஸுனன் இப்னு மாஜா,ஹதீஸ் # 176

இக்காலத்திய கவாரிஜ்களின் அடையாளங்களை பின்வரும் ரிவாயத்தில் காணலாம்,

ஸெய்யிதினா அப்தில்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள் , "

وكان ‏ ‏ابن عمر ‏ ‏يراهم شرار خلق الله ‏ ‏وقال إنهم انطلقوا إلى آيات نزلت في الكفار فجعلوها على المؤمنين

மனிதர்களில்  மிகவும்  மோசமானவர்கள் கவாரிஜ்கள் தான்.அவர்கள் தான் காஃபிர்கள் குறித்து இறங்கிய இறக்கப்பட்ட அல்குர்ஆனின் ஆயத்துகளை ,முஸ்லிம்கள் மீது திருப்பி விடுவார்கள். " 

ஆதார நூல் : ஸஹீஹ் புஹாரி ,பாகம் 2,பக்கம் 88,பாடம் 5,ஹதீஸ் # 6929

இக்காலத்தில் கவாரிஜ்களது அடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளவர்கள் தேவ்பந்தி தப்லீக் வஹாபிகள்,அஹ்லே ஹதீஸ், ஸலபி,ஜாக்,நஜாத்,தவ்கீத் ஜமாத்,ஜமாத்தே இஸ்லாமி ஆகியோர் என்பது கண்கூடு.

இவர்கள் தான் காபிர்கள் குறித்து இறங்கிய ஆயத்துகளை முஸ்லிம்கள் மீது திருப்பி விடுபவர்கள்.