Sunday, 18 August 2019

கொள்கை பிரச்சாரம் - 2

இத்தனை ஆதாரங்களை கொடுத்த பின்பும் சவூதி வஹாபிகள் தங்களது பெரும் ஹதீத் அறிஞர்  (?)  என்று மார்தட்டும் நஸீருத்தீன் அல்பானி தமது தஹ்ரீகுல் மஸாஜித் என்னும் நூலின் ,பக்கம் 101,102 ல் தமக்கே உரிய பிறவி குணத்தை கொண்டு குறை கூறுகிறார் . அதில் அவர் மேற்கண்ட நபிமொழியை நம்பிக்கைக்குரிய  ஹதீத் கலை வல்லுநர்கள் யாருமே இது நம்பத்தகுந்த ஒன்றெனக் கூறவில்லை எனவும் , இமாம் ஹைத்தமி رضي الله عنه அவர்கள் இது விஷயத்தில் தவறாக தீர்ப்பளித்து விட்டாரென்றும் கூறுகின்றார் . இவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் .

இவரைச் சேர்ந்தோருக்கு அதை எவ்வளவுதான் விளக்கினாலும் அது விழலுக்கு இரைத்த நீர் போல் தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை . ஆதலால் நல்லடியார்களுக்கு ஹதீதுக் கலையின் வல்லுநர்களான ஹாபிழ் இப்னு ஹஜரும் رضي الله عنه , ஹாபிழ் இமாம் ஹைத்தமியும் رضي الله عنه மஸ்ஜிதுல் கைபில் நபிமார்களின் மண்ணறைகள் இருந்ததாகச் சொல்லப்படும் ஹதீத் நம்பத்தகுந்த ஒன்றுதான் என்பதை ஆதாரப்படுத்துவதே போதுமானதாகும் . இதற்கு மேல் விரிவான விளக்கத்தை பார்க்க விரும்புவோர் கஷ்புஸ்ஸுதூர் அம்மா உஷ்கில மின் அஹ்காமில் குபூர் என்னும் நூலில் 123ம் பக்கத்திலிருந்து 136ஆம் பக்கம் வரை பார்க்க வேண்டுகின்றோம் .

ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்கள் மக்காவில் வைத்து மறைந்ததாகவும் , அவர்களது தயாரான ஹாஜரா அவர்களின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்னும் தகவலை 1999ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக ஸவூதி அரசால் பிரசுரிக்கப்பட்ட 'முஸீருல்  வஜ்த்  ஃபீ  அன்ஸாபி முலூகி நஜ்த் ' என்னும் நூலின் 101வது பக்கத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்க ஒன்றாகும் .

இது மட்டுமா ! திங்களெம் கோமான் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஆயிரக்கணக்கான முஷ்ரிக்கீன்களின் மண்ணறைகளை கொண்ட மயானத்தின் மீதல்லவா கட்டப்படுள்ளது ?

பின்னர் கப்ருகள் இருக்கும் இடத்தில தொழுவது ஹராம் . அது முஷ்ரிக்கீன்களின் செயல் என்று சொல்லப்பட்டால் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அருமை துணைவியார் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக நபியவர்களின் புனித ரவ்லா ஷரீபை உள்ளடக்கிய தமது வீட்டில் தானே தொழுது வந்தார்கள் ? உங்களது குற்றச்சாடுகளுக்கு அவர்களும் தப்ப இயலாதே ? என்ன மோசடி !

இது மட்டுமா ! ஈருலக வேந்தரான அவர்களின் ஈரல் குலை எனப் பேசப்படும் சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியான அன்னை பாத்திமா  رضي الله عنها அவர்கள்


"நபியவர்களின் சிறிய தந்தையான ஹழ்ரத் ஹம்ஸா رضي الله عنه அவர்ளின் கப்ரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தரிசிப்பதற்காக சென்று அங்கே தொழுவார்கள் . இன்னும் அழுவார்கள் " என்றும் சொல்லப்படுகின்றதே !

[ நூல் - முஸ்தத்ரக் , 1-533]

இந்த ஹதீதை அறிவித்தவர்களை இமாம் தஹபி முன்கர் ஜித்தன் என்கின்றனர் . ஆதலால் கப்ரடியில் , கப்ருகள் உள்ள இடத்தில் தொழுவது கூடாதெனில் மீறித் தொழுபவர்கள் முஷ்ரிக் எனில் , அன்னை பாத்திமாவுமா ..? நவூது பில்லாஹ் !

பகுத்தறிவற்ற மிருகங்களை விட கேடு கெட்டவர்கள்  செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் ஏன் செய்து கொண்டிருக்கிண்றீர்கள் ?
இதைவிட இனிமையான சந்தர்ப்பம் கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இப்போதாவது கலிமாவின் கருத்தை உணர்ந்து இஸ்லாத்தை அழிக்க முனையும் யூத , கிறிஸ்தவர்களோடு சமர் செய்யும் நாளை எதிர்பாருங்கள் .

அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் பலா பலன்களை விட கோடான கோடி மேன்மைகுரிய    பலன்கள் உங்களை படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்விடம் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து இனியாவது செயல்படுங்கள் . நீங்களெல்லாம் நல்லடியார்களாக மாறிட அல்லாஹ்வின் அருமை தூதரான முஹம்மத் முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களிடம் மனமாற உள்ளமுருகிக் கேட்கின்றோம் . அல்லாஹு வரஸுலுஹு  அஃலம் .

எனவே ஒரேயொரு கப்ரை உள்ளடக்கியது மட்டுமல்ல .சொற்ப நபர்களை கொண்ட பல்லைவாசல்களில் தொழுபவர்கள் கூட அவர்கள் பார்வையில் முஷ்ரிக்குகள் எனில், அவர்களனைவரும் யார் என்பதை யோசித்து முடிவு செய்தால்    அதற்கு பதில் கூறாமல் மவுனமாக இருந்திருக்கலாம் . அவ்வாறு இல்லையெனில் நாம் மூஃமின்களாக   இருப்பதால் அவர்களின் குற்றச்சாட்டு அவர்களைத் தான் சாரும் என்னும் ஹதீதைக் கருத்தில் கொண்டு மவுனத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நினைக்கிறோம் .

இனி கப்ருகள் கட்டப்படுத்தல் பற்றி எடுத்துக் காட்டப்படும் சில தகவல்களை இப்போது பார்ப்போம் . 



" ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் நாயகம் அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள் ,நாங்கள் தாயிப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கப்ருக்கு அருகாமையில் சென்றோம் . அப்போது இது அபூ ரிகால் என்பருடைய கப்ராகும் என நபியவர்கள் கூறினார்கள் ". இவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரை சார்ந்தவராகும் .

[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா , 1-137 ]


" ஹழ்ரத் ஸெய்யிதினா இப்ராஹீம் عليه السلام ,ஹழ்ரத் ஸெய்யிதினா இஸ்ஹாக் عليه السلام,ஹழ்ரத் ஸெய்யிதினா யஃகூப் عليه السلام ஆகியோரின் கப்ருகள் நாலா புறங்களிலும் சூழப்பட்டதோர் இடத்தில் இருந்தது . அதைக் கட்டியவர் ஹழ்ரத் ஸெய்யிதினா தாவூத் عليه السلام    அவர்களின் மைந்தரான ஹழ்ரத் ஸுலைமான் عليه السلام அவர்களாகும் . இந்த இடம் இப்போது அல் கலீல் என்னும் பெயரில் பிரபலமாக உள்ளது . இன்னும் இது பனீ இஸ்ரவேலர்களின் காலந்தொட்டு இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது " எனக் கூறி விட்டு ... 


"அந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது  என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லையென்றாலும் அங்கே நபி இப்ராஹீம் عليه السلام அவர்களுடைய ,அல்லது அவர்களின் புதல்வர்களில் யாரேனும் ஒரு நபியுடைய கப்ரு இருந்தால் அதற்கு தரப்பட வேண்டிய மரியாதையையும் ,கண்ணியத்தையும் கொடுப்பதோடு அந்த இடத்தை யாரும் மிதித்து விடாமல் பாதுகாக்கவும் வேண்டும் "என்பதாகவும் கூறப்பட்டுள்ளது .

[ நூல்  -அல் பிதாயா வந் நிஹாயா , 1-175 ] 

இவ்விரு தகவல்களையும் நாம் எடுத்துக் காட்டும் பொழுது இந்த நஜ்திய கொள்கைவாதிகள் ,இவைகள் முன்னிருந்த சமுதாயத்தில் ஆகுமாக்கப்பட்டவைகளாக இருந்திருக்கலாம் . ஆனால் அதன்பின் அண்ணலெம் கோமான் அவர்களின் மார்க்கத்தில் மாற்றப்பட்டு விட்டதென கூறுகின்றனர் . 

அவ்வாறாயின் அவை யாரால் எப்போது உடைக்கப்பட்டது என்பதையும் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும் . இவர்கள் விரும்பினால்  ஃபுதூஹுஷ் ஷாம் என்னும் நூலையும் , இஹ்யாவுல் மக்பூர் ,பக்கம் 40 யையும் பார்க்கட்டும் . இன்னும் இது பற்றி  இவர்களின் மூல வித்து இப்னு தைமிய்யா ....

    
"ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை குதூஸில் நபிமார்களது கப்ருகளின் மீது கட்டிடம் கட்டப்பட்டிருந்ததாகவும் , அதனுடைய வாயில்கள் மூடப்பட்டிருந்ததாகவும் " தமது அஸ் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் நூலில் பக்கம் 676ல் குறிப்பிட்டிருப்பதாக  ' அல் வஹ்ஹாபிய்யா ஃபில்  மீஸான் ' என்னும் நூலின் 69ஆம் பக்கத்திலும் , 'ரிஸாலா   அல் அவ்ராகுல் பக்தாதியா ' என்னும் நூலின் 9ஆம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது .

இன்னும் இது குறித்து உலக வரலாற்றாசிரியர்களில் பிரபலமான இப்னு பதூதா அவர்கள் புனித பைத்துல் முகத்தஸுக்கு சென்ற போது மேற்குறிப்பிட்ட நபிமார்களின் கப்ருகளை தரிசித்ததாகவும் , அது பற்றி அங்கிருந்த அறிஞர்களிடம் கேட்டறிந்ததாகவும் தமது 'ரிஹ்லத்  இப்னு பதூதா 'என்னும் நூலில் 1-74ல் கூறுகின்றார் . 

  இப்புனித ஸ்தலங்கள் எல்லாம் பாலஸ்தீனில் இருப்பதால் அவைகளை உலகிலுள்ளோர் யாரும் சென்று தரிசித்து விடக் கூடாதென்பதற்காகவும் , அங்கே வாழுகின்ற மக்கள் அவைகளை மதிப்பதாலுமே அந்த இடங்களெல்லாம் யூதர்களால் காப்பற்றப்பட்டு அம்மக்கள் சொல்லொனாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் . 

இன்னும் இதற்கு பின்னால் இதை ஊக்குவித்துக் கொண்டிருப்போர் சவூதுடைய வம்சமும் , ஷைகு நஜ்தியுடைய வம்சமும் தான் என்பதை இஸ்லாமிய உலகம் அறியும் வரை வெற்றி என்பது அறவேயில்லை . மேலும் அல்பானி பாலஸ்தீனர்கள் அம்மண்ணை விட்டு ஹிஜ்ரத்துச் செய்வது அவர்கள் மீது கடமையாகும் என்று  கூறுகிறார் என்றால் அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்கும் என்று எண்ணி பாருங்கள் . 

அடுத்து இந்த ஷைகு நஜ்தியுடைய கொள்கைவாதிகள் , ஈராக்கை அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்கள் வெற்றி கொண்ட போது , ஸெய்யிதினா தானியால் நபி அவர்களுடைய கப்ரின் மீதிருந்த அடையாளங்களையெல்லாம் ஏன் அகற்றினார்கள் எனக் கேட்கின்றனர் .

கலீபா அவர்கள் அவ்வாறு செய்ததற்குரிய காரணம் இவர்களால் எடுத்துக் காட்டப்படும் ஒன்றல்ல என்பது ஒருபுறமிருக்க ,அது பாவமான காரியமென்றோ , இஸ்லாம் கப்ருகளின் மீது அடையாளம் இடப்படுவதை அங்கீகரிக்கவில்லை என்றோ , அதனால் தான் கலீபா அவர்கள் அகற்றினார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் இவர்கள் அதே கலீபா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தராவீஹுடைய தொழுகை இருபது ரக்அத்துகள் தானென்பதை ஏற்றுக் கொள்ளாததுடன் அவர்கள்தான் வழிகேட்டிற்குரிய வாசலை திறந்து வைத்தவர்கள் என்று கொஞ்சம் கூட நாகூசாமல் சொல்கிறார்களே ! 

வெகு விரைவில் அல்லாஹ்வுடைய தண்டனையை நீங்கள் அனுபவிக்கத் தான் போகின்றீர்கள்  .  ஆம் . தவ்பாவின் வாசல்படி அடைபடுவதற்குமுன் அண்ணல் நபி அவர்களின் தர்பாரில் ஆஜராகி மண்டியிட்டு நபியவர்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள் . அதன்பின் அவர்களுடைய  பொருட்டால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் . இல்லையேல் உங்களின் ஆடைகளோ பாஷையோ அலங்காரமோ ஒன்றுக்கும் உதவாது . 

அடுத்து இவர்கள் கப்ருகளை இடிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரங்களில்  ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு எடுத்துக் காட்டி, அதற்கு அவர்கள் தருகின்ற விளக்கம் சரியானது தானா என்பதைப் பார்ப்போம் . ஏனெனில் இந்த இடத்தில் அது மிக பொருத்தமாக இருக்கும் என்பதாலே ....


"அபுல் ஹய்யாஜ் அல் அஸதி என்பார் கூறுகிறார் :  எந்த காரியத்தை செய்வதற்காக நாயகம் அவர்கள் என்னை அனுப்பினார்களோ அக்காரியத்திற்காக உம்மை நான் அனுப்பட்டுமா ? எனக் கேட்ட ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் ,உயர்ந்துள்ள கப்ருகளை சமப்படுத்துமாறும் , உருவச் சிலைகளை கண்டால் அவைகளை அழித்து விடுமாறும் சொன்னார்கள் ". 

[ நூல் -ஸஹீஹ் முஸ்லீம் , கிதாபுல் ஜனாயிஸ் . ஸுனன் திர்மிதி , பாபு மாஜாஅ ஃபீ தஸ்வியத்தில் கப்ரி .ஸுனன் நஸாயீ -பாபு  தஸ்வியத்தில் கப்ரி

இந்த ஹதீதில் இரு விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் . ஒன்று இதனுடைய அறிவிப்பாளர்கள் பற்றியது . இரண்டாவது இதனுடைய கருத்து பற்றியது . இதில் முதலாவது விஷயத்தில் எதிர்தரப்பார் கையாளும் அதே முறையை நாமும் கையாளுவதற்காக நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் சகோதரர்களிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் . ஏனெனில் அவர்களுடைய் முறையை கையாளுவதன் நோக்கம் உண்மையை கொண்டு வருவதேயாகும் .

அந்த வகையில் மேற்கண்ட ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் வகீஃ , ஸுஃப்யானுஸ் செளரி , ஹபீப் இப்னு அபீ தாபித் , அபூ வாயில் , அபுல் ஹய்யாஜ் அல் அஸதி போன்றோர் இடம் பெறுகின்றனர் . இவர்களைப் பற்றி ஷெய்குல் இஸ்லாம் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி رضي الله عنه அவர்கள் தமது  'தஹ்தீபுத் தஹ்தீப் ' என்னும் நூலில் , ......

ஹதீதுடைய அறிவிப்பாளர்களில் முதல் நபரான    வகீஃ  என்பவரை எடுத்துக் கொண்டால் ,...

  " இவர் 500 ஹதீதுகளில் தவறு இழைத்துள்ளார் " என்பதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்களும் ...


"( வகீஃ  )  ஹதீதுகளுக்கு பொருள் சொல்வதில் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் அல்லர் "  என்று முஹம்மத் இப்னு நஸ்ருல் மரூஸி அவர்களும் பாகம் -11 ,பக்கம்  - 111,114ல் கூறுகின்றனர் .

அடுத்து இரண்டாவது நபரான ஸுப்யானுஸ் ஸவ்ரியைப் பற்றி இப்னு முபாரக் அவர்கள் 

   
"ஸுப்யான் அவர்கள் ஒரு ஹதீதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அந்த ஹதீதை அவர் யாரிடம் இருந்து பெற்றாரோ அவருடைய பெயரைச் சொல்லாமல் மறைத்து பேசிக் கொண்டிருந்தார் . அதுபோது நான் அங்கே செல்ல என்னை கண்டதும் அவரது முகம் வெட்கித்து போயிற்று " என்று பாகம் 4,பக்கம் 104ல் கூறுகின்றார் .

இதேபோல மூன்றாவது நபரான ஹபீப் இப்னு அபீ தாபித் என்பாரைப் பற்றி இப்னு ஹிப்பான் அவர்கள் ,


"யாரிடமிருந்து ஹதீதை பெற்றாரோ அவருடைய பெயரை சொல்லாமல் ,அவருக்கு மேலே உள்ளவரின் பெயரைச் சொல்லி அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதைப் போல் சொல்பவராகும் " என்று கூறுகின்றார் .

இன்னும் இவரைப் பற்றிதான்  கித்தான் என்பார் "லா யுதாபஃ அலைஹி வலைஸத் பி மஹ்பூசதின் " என்பதாக பாகம் 2, பக்கம் 165ல் கூறுகின்றார் .

அதற்கடுத்து நான்காவது நபரான அபூ வாயில் என்பவர் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் மீது விரோதம் கொண்டவராக இருந்தார் என்பதாக அபுல் ஹதீதுக்கு சொந்தமான ஷரஹ் நஜ்ஹுல் பலாகாவில்   கூறப்படுள்ளது .

அடுத்து ஐந்தாவது நபரான அபுல் ஹய்யாஜ் அல் அஸதி என்பார் ,ஹதீதுகளை நேரடியாக  அமீருல் முஃமினீன்    ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள்  கூறியதாக அறிவித்தவராகும் என்று கூறப்பட்டுள்ளது .

மேலும் ஸிஹாஹ் ஸித்தாக்களான அங்கீகரிக்கப்பட்ட புஹாரி , முஸ்லீம் ,திர்மிதி , இப்னு மாஜா ,நஸாயி  , அபூ தாவூத் போன்ற கிரந்தங்களில் இவரால் அறிவிக்கப்பட்ட ஒரேயொரு ஹதீது மட்டும் கூறப்பட்டுள்ளது . இந்த வகையில் இவர் ஒரு நபிமொழி அறிவிப்பாளரே அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் . ஆதலால் மேற்கண்ட ஹதீதில் சந்தேகத்திற்கு இடமான ஒன்றைக் கொண்டு தீர்ப்பு சொல்வது கூடாது . 



Sunday, 4 August 2019

கொள்கை பிரச்சாரம் - 1

கூண்டில் அடைபட்ட குருவி போல தந்தையின் காலத்தில் தனது கருத்துக்களை பகிரங்கமாக சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஷைகு நஜ்திக்கு தந்தையின் மரணம் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது . அந்த மகிழ்ச்சியில் அவரது கொள்கையை ஹுரைமலாவில் பகிரங்கமாக அறிவித்தார் . ஏற்கனவே இவருக்கும் ஊருக்கும் இடையே பூசல் ஏற்படும் போதெல்லாம் தந்தையின் முகத்துக்காக அவர் மீது கொண்டிருந்த மரியாதைக்காக சகித்துக் கொண்டிருந்த அம்மக்கள் இப்பொது அவரை கொல்ல வேண்டுமென   திட்டம் தீட்டினர் . இது தெரியவே ,இரவோடிரவாக சொந்த ஊரான உயைனாவிற்கு பயணமானார் .

அவர் உயைனா வந்து சேர்ந்த போது உஸ்மான் பின் ஹம்த் இப்னு முஃமர் என்பவன் அந்த ஊரின் தலைவனாக இருந்தான் . அவன் அவரை வரவேற்று கண்ணியப்படுத்தினான் . அதைக் கண்ட அவர் தலைவனைப் பார்த்து ....


" லா இலாஹா இல்லல்லாஹ்   எனும் கலிமாவிற்காக எனக்கு நீ உதவி செய்தால் அல்லாஹ் உனக்கு வெற்றியைத் தருவான் . அத்துடன் நஜ்தும் அதன் சுற்றுப் புறங்களும் உன்னுடைய அதிகாரத்திற்கு வந்து சேரும் "என்றார்  . அதைக் கேட்ட உஸ்மான் ,அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்தான் . அதன்பின் அவனுடைய ஒத்தாசையோடு ,முன்னை விட முனைப்போடு ஷைகு நஜ்தி செயல்படத் துவங்கினார் .

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இயக்கமென்று தனது இயக்கத்திற்கு பெயர் சூட்டினார் .  சூடான அதேநேரம் சாதுர்யமான பிரச்சாரத்தின்  பயனாக மக்கள் கவரப்பட்டார்கள் . அதனால் இன்னும் அதிக உற்சாகத்தோடு தனது முதல் பணியாக குப்பாக்களை உடைத்து ஏறியத்   தொடங்கினார் . இதுபற்றி உஸ்மான் இப்னு பஷீர் அந்நஜ்தி என்பார் உன்வானுல் மஜ்த் ஃபீ  தாரீகி நஜ்த் என்னும் நூலின் 9வது மற்றும் 10வது பக்கத்தில் பின்வருமாறு சொல்கிறார் .....


"ஷைகு நஜ்தி ஜுபைலா என்னும் ஊரில் ஹழ்ரத் ஸைத் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்களது கப்ரின் மீது கட்டப்பட்டிருந்த குப்பாவை  உடைக்க எண்ணங்கொண்டு ,மக்களின் நேர்வழிக்கு இடையூறாக இருந்து வழிகெடுத்துக் கொண்டிருக்கும் இந்த குப்பாவை உடைத்தெறிவோம் வாரீர் என உஸ்மானிடம் சொல்லவே ,அதற்கவர் :அதை நீரே செய்து கொள்ளும் என்றான் . அதற்கவர் ஜுபைலாவுடைய மக்கள் படை எடுப்பார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்  .  ஆதலால் உன்னுடைய உதவியின்றி என்னால் செய்லபட முடியாதென்று சொல்ல ,உஸ்மான் 600 பேர்களை கொண்ட ஒரு குழுவை தயார் செய்து கொண்டு அங்கே போய் சேர்ந்த போது ஜுபைலாவுடைய மக்கள் வேறு வழியின்றி வழிவிட்டனர் . அதன்பின் குப்பாவை நெருங்கியதும் அதன் மீது நான் கை வைக்க மாட்டேன் என்று உஸ்மான் சொல்லவே ஷைகு நஜ்தி தன்னிடம் கோடரியைத் தருமாறு வாங்கி தன்னுடைய கையால் குப்பாவை உடைத்து தரைமட்டமாக்கினார் ".

மேலும் இந்த ஊரில் வைத்துதான் ஷைகு நஜ்தியால் 'கிதாபுத் தவ்ஹீத் ' என்னும் நூல் தொகுக்கப்பட்டது . இந்த நூல் இன்றும் கூட சவூதி அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது . பல்வேறு மொழிகளில் இந்நூல் அச்சிடப்பட்டாலும் இந்தியாவில் இந்நூலை முதன் முதலில் மொழி பெயர்த்தவர் தேவ்பந்த் இயக்கத் தலைவர்களில் ஒருவரான மவ்லவி இஸ்மாயீல் திஹ்லவி என்பரவாகும் .

குப்பா தகர்த்தெறியப்பட்ட செய்தி அப்பகுதியின் பக்கத்திலுள்ள ஊர்களான அல் அஹ்ஸாஃ , அல் கதீஃப்      போன்றவைகளின் தலைவரான சுலைமான் இப்னு முஹம்மத் இப்னு அஸீஸ் அல் ஹுமைதி என்பாருக்குத் தெரியவரவே அவர் உஸ்மானுக்கு மடலொன்றை எழுதினார் . அதில் அவர் .....


"எனது மடல் உம்மை வந்தடைந்தால் அவரை கொன்று விடும் . இல்லையேல் எம்மிடமிருக்கும் உமது சொத்துக்கள் அனைத்தையும் நாம் முடக்கிவிடுவோம் " என்பதாக அதில் எழுதப்பட்டிருந்தது .

[ நூல் - தாரீகுன்  நஜ்த் -அரபி , பக்கம் 114 ] 

மடல் உஸ்மானை வந்தடைந்த போது அதில் கூறப்பட்டிருந்த விஷயத்தை ஷைகு நஜ்தியிடம் எடுத்துக்காட்டி அவரை எதிர்க்கும் சக்தி தனக்கு இல்லையென்றும் , அதேநேரம் உம்மை கொல்லவும் நான் விரும்பவில்லை .ஆதலால் நீர் இவ்வூரை விட்டு போய் விடும் என்றான் . அதற்கு ஷைகு நஜ்தி ,உஸ்மானிடம் திரும்பவும் ,நீ எனக்கு உதவி செய்தால் நஜ்த் உனக்கு கிடைக்குமென்று சொல்ல ,அவன் அதை மறுத்து விட்டான் .

இப்படி குப்பாக்களை உடைப்பதும் ,கப்ருகளை தரை மட்டமாக்குவதும் , கப்ருகள் உள்ள மஸ்ஜிதுகளில் தொழுவது ஹராம் என்னும் பல்வேறு கருத்துக்கள் இவர்களுடைய கொள்கை திட்டங்களில் உள்ளவைகளாகும் . இதனை இன்றுள்ள அவர்களின் ஏஜெண்டுகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமுல்படுத்தவும் செய்கின்றனர் .

இதே போன்று இப்னு சவூதும் ,ஷைகு நஜ்தியும் இணைந்து அமுல்படுத்திய விஷயங்களைத் தான் இன்றுள்ள சவூதி அரசாங்கமும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது . இதை நாம் நிரூபிக்க வேண்டுமாயின் ....

தமிழகத்தில் இவர்களின் எடுபிடி ஏஜெண்டுகளாக இருந்து இன்று சிதறி சின்னா பின்னாமாகியுள்ள , விபச்சார காமுகன் பீ.ஜே என்ற ஷைத்தானின் தலைமையில் சமீப காலம் வரை தமுமுக , தவ்ஹீத் ஜமாத் என்று இயங்கிய இவர்கள் தமது பத்திரிக்கைகளிலும் ,இணைய தளங்களிலும் , தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் எடுத்துள்ள நிலைப்பாட்டை கவனித்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும் . இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்கள் கண்மணி நாயகம் அவர்களது புனித குப்பாவை இடிக்க வேண்டும் என்று சவடால் விட்ட பொழுது , ஒரு வழியாக தமிழக இஸ்லாமிய சமூகம் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது சமீபத்திய வரலாறு .



இதே போன்று இலங்கையிலுள்ள இவர்களின் ஏஜெண்டுகள் வெளியிட்டிருந்த மக்கா ஹரம் ஷரீபின் இமாம்  திட்டமிட்டவாறு கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஏன் ஜும்மா தொழுகை நடத்தவில்லை ? என்று பிரசுரம் ஒன்றின் கருத்தை கீழே தருகின்றோம் .பாருங்கள் ....

"கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் கப்ரு இருப்பதால் அதில் தொழுவது ஹராம் " எனக்கூறி அதற்காதாரமாக இரண்டொரு ஹதீதுகளையும் எடுத்துக் காட்டியிருந்தனர் . அந்த ஹதீதுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு மிகப் பகிரங்கமாக சொல்லப்பட்டிருந்த விஷயம் என்னவென்றால் அதில் தொழுவோர் அனைவரும் முஷ்ரிக்குகள் என்பதேயாகும் .

அதன்பின் புனித மதீனா ஷரீப் பள்ளிவாயிலின் பிரதம இமாம் கலாநிதி ஸலாஹ் முஹம்மத் அல் புதைர் ,இலங்கையின் வேறொரு சாராரால் அழைக்கப்பட்டு வருகை தந்தவர்  நாட்டின் பல பாகங்களுக்கும் சென்ற பொழுது கல்முனை அல் ஹாமியாவிற்கும் சென்று உரையாற்றிய அவரது உரையாடல் 8-10-2002 ல் வெளியான தினகரன் நாளேட்டின் 2ஆம் பக்கத்தில் "ஈமானை பாதிக்கும் கப்ரு வணக்கம் நரகத்தில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டிருந்தது .

இப்படிப்பட்டதொரு மாபெரும் குற்றச்சாட்டை அவர்களால் சொல்லப்பட்ட பொழுது நம்மவர்கள் மவுனம் சாதித்தது ஏன் என்று புரியவில்லை ? அதற்குரிய காரணம்  என்னவாக இருக்குமென்று நாம் யோசித்த பொழுது நமக்கு கிடைத்த காரணம் இதுதான் ....

கப்ரு ஜியாரத் இருக்கும் பள்ளியில் தொழுவது ஹராம் என்றும் அதில் தொழுபவர்களெல்லாம் முஷ்ரிக்கீன்கள் என்றும் சொன்னவர்கள் அத்துணை பேரும் மக்கா முகர்ரமாவிலுள்ள ஹரம் ஷரீபில் தானே தொழுகின்றனர் ?

அத்துடன் அங்கே இலட்சக் கணக்கான மக்கள் சதா வருகை தந்த வண்ணம் உள்ளனர் . காரணம் அதிகமான  நன்மை கிடைக்குமென்றால் அங்கு தொழுவதற்குத்தான் கிடைக்கும் . அப்பேற்பட்ட பள்ளியில் ....

AL-BIDAYAH WAN-NIHAYA



"ஹழ்ரத் ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلامஅவர்களும் ,அவர்களுடைய தாயாருமான அன்னை ஹாஜரா عليه السلامஅடக்கப்பட்டிருப்பதாகவும் " இன்னும் ...


" ஹழ்ரத் ஸெய்யிதினா நூஹ் நபி عليه السلام அவர்களின் கப்ரும் இருப்பதாகவும் " இன்னும் .....


 " ஸெய்யிதினா நூஹ் நபி عليه السلام அவர்களின் கப்ரு கர்க் என்னும் ஊரில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அங்கே ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது " என்றும் சொல்லப்படுகிறதே !

[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம் 1 , பக்கம் 120 ,193 ]

மஸ்ஜிதுல் ஹரமில்  பல நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதை ஸஹீஹான , ஹசனான ,ளயீபான பல தகவல்கள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன .

இமாம் அஸ்ரகீ அவர்கள் அக்பார் மக்கா என்னும் நூலிலும் , ஹாபிழ் இப்னு ஜரீர் ,  ஹாபிழ் இப்னு அபீ  ஹாத்திம் , ஆகிய இருவரும் தத்தம் தனது தப்ஸீர்களிலும்  நபிமார்களான நூஹ் ,ஹுத் , ஸாலிஹ் , ஷுஐப் போன்றோர் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் .

இத்தகவலை ஹாபிழ் இப்னு ஜரீர் அத்திப்ரீ  முர்ஸலான ஒன்றெனக் கூறுவதோடு இது நம்பிக்கைக்குரிய தகவலென்றும் கூறுகின்றார் . ஹாபிழ் இப்னு கதீர் அவர்களும் இதனை முர்ஸல் எனக் கூறுவதோடு இதில் பலவீனம் இருப்பதாகவும் கூறுகின்றார் . எனினும் இத்தகவலை வேறுபல தகவல்களைக் கொண்டு ஊர்ஜிதப்படுத்துவதை எவராலும் மறுக்க முடியாது .    

உதாரணமாக இமாம் பாகிஹானி அவர்கள் ஃபழாயிலு மக்கா என்னும் நூலிலும் ,  ஹாபிழ் தகியுத்தீன் பாஸி அவர்கள் ஷிபாவுல்    ஃகராம் என்னும் நூலிலும் , ஹாபிழ் அஸ்ரகீ அவர்கள் தாரீக் மக்கா என்னும் நூலிலும்   , ஹாபிழ் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் முஸன்னப் என்னும் நூலிலும் , இமாம் முஹம்மத் பின் ஹசன் அவர்கள் அல் ஆஸார் என்னும் நூலிலும் ,  இமாம் அபூ யூசுப் அவர்கள் தமது அல் ஆஸார் என்னும் நூலிலும் ,  இமாம் ஹாகிம் அவர்கள் முஸ்தத்ரக் என்னும் நூலிலும் , ஹாபிழ் இப்னு ஸஃத் அவர்கள் அத்தபகாத் என்னும் நூலிலும் , ஹாபிழ் அபூ நயீம் அவர்கள் ஹுல்யா என்னும் நூலிலும் மேற்கண்ட தகவலை பதிவு செய்துள்ளனர் .

இவ்வனைத்து தகவல்களிலும் பன்னிரண்டு நபர்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள் .  அவர்களில் இருவர் ஸஹீஹானவர்கள் . இருவர் ஹஸனானவர்கள் . ஐவர் ளயீபானவர்கள் . ஒருவர் ஸஹீஹ் அல்லது ஹஸனானவர் .  இன்னும் ஒருவர் ஹசனுடைய     படித்தரத்துக்கு  ஒப்பாவார் . ஆதலால் மஸ்ஜிதுல் ஹராமில் நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்னும் தகவல் ஏற்கத்தக்க ஒன்றாகும் .

இதுதவிர நபியுல்லாஹ் இஸ்மாயீல்  عليه السلام அவர்களும் ,அவர்களுடைய அருமை தாயார் ஹாஜரா  عليه السلام அவர்களும் கஃபத்துல்லாவிற்கு பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்டுள்ளர்கள் என்பதை இப்னு ஜவ்ஸி அவர்கள் அல் முன்தழம் , பாகம் 1 ,பக்கம் 305 ழும் , இமாம் அப்துர்ரரஹ்மான் ஸுஹைலி அவர்கள் அர்ரெளழுல் உன்ப் .பாகம் 1,பக்கம் 88ழும் , சீறத் இப்னு ஹிஷாம் , பாகம் 1,பக்கம் 42 ழும் , ஹாபிழ் தகபி தாரீகுல் இஸ்லாம் , பாகம் 1 , பக்கம் 20ழும் ,அபுல் ஹசன் அலீ பின் ஹுசைன் மஸ்வூதி அவர்கள் அல் முரவ்வஜித் தஹப் ,பாகம் 2,பக்கம் 48ழும் , ஹாபிழ் இப்னு அதீர் அல் காமில் ,பாகம் 1,பக்கம் 102ழும் , அபுர் ரஃபீஃ சுலைமான் பின் மூஸா அல் கலாயி அவர்கள் - அல் இத்திபா பீ மகாஸீ ரசூலுல்லாஹ் வஸ்ஸலாஸத்தில் குலபா ,பாகம் 1,பக்கம் 63ல் குறிப்பிட்டுள்ளதை நாம் காணலாம் .

ஹழ்ரத் அப்துர்ர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உபைதுல்லாஹ் அல் குறைஷிய்யீ  அத்தமீமி رضي الله عنه என்னும் நபித்தோழர் பற்றி  கூறப்படும் தகவல் என்னவெனில் , ஸஹாபா தோழர் அவர்கள் கொல்லப்பட்ட போது ஹஸ்வரா என்னுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் .அதன்பின் மஸ்ஜிதுல் ஹராம் விஸ்தரிக்கப்பட்ட பொழுது அவருடைய கப்ரும் பள்ளியின் உட்பகுதியிலேயே அமைக்கப்பட்டது .

[ நூல் - அல் இஸாபா ,பாகம் 2,பக்கம் 410 . தஹ்தீபுத் தஹ்தீப் ,பாகம் 6,பக்கம் 227. அல் இக்துஸ் சமீம் , பக்கம் 1758 . இத்ஹாபுல் வரா , பாகம் 2,பக்கம் 102    ]

இத்ஹாபுல் வரா பி அக்பாரி உம்மில் குரா நூலில் ,பாகம் 2, பக்கம் 454 ல் ஹிஜ்ரி 451ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை கூறும் போது , மகாமே இப்ராஹீமுக்கும் ஹிஜ்ருக்கும் இடையில் தோண்டப்பட்ட பொழுது பெருவாரியான மண்டை ஓடுகளும் எலும்புகளும் தென்பட்டன . அதைக் கண்ட பொழுது அதை அவ்வாறே வைத்து மூடப்பட்டன என்று கூறுகின்றனர் .  

மேற்கண்ட தகவலிலிருந்து நமக்கு கிடைக்கும் விஷயம் என்னவெனில் ஹஸ்வரா என்னுமிடம் அருமை ஸஹாபா பெருமக்களின் காலத்தில் நல்லடக்கம் செய்யும் ஓர் இடமாக இருந்ததையும் அதன்பின் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் இணைக்கப்பட்டது என்பதையும் , கஃபாவின் அருகில் நபிமார்கள் அல்லாதவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துவதை நாம் காண்கின்றோம் . ஆக தற்போற்துள்ள  ஹரம் ஷரீபின் எல்லைக்குள்   பல கப்ருகள் இருக்கின்றன என்பதே உண்மையாகும் .

Masjid-Khayf

இதேபோல மக்காவிற்கு அருகில் இருக்கும் மினா என்னும் இடத்தில அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைபை எடுத்துக் கொண்டால் அப்பள்ளிக்குள் எழுபது நபிமார்களுடைய மண்ணறைகள் இருப்பதாக அருமை நாயகம்  அவர்களது பொன்மொழி முஸ்னதுல் பஸ்ஸார் என்னும் நூலில் ,எண் : 1177ழும் , தப்ரானி கபீர் ,பாகம் -12,பக்கம் 316ழும் கூறப்பட்டுள்ளது .

இத்தகவலை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் முக்தஸர் ஸவாயித் பஸ்ஸார் என்னும் நூலின் எண் : 813 ல்  ஸஹீஹான அறிவிப்பளர்களைக் கொண்டு கூறப்ப்பட்டதென்றும் , ஹாபிழ் ஹைத்தமி அவர்கள் மஜ்மவுஸ் ஸவாயித் என்னும் நூலின் ,பாகம் 3,பக்கம் 297 ல் ஹாபிழ் பஸ்ஸாரின் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைகக்குறியவர்கள் என்று கூறுகின்றார் .