தனது நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும் ஒருவனை தேடி கண்டுபிடிக்கும் எண்ணத்தில் ஷைகு நஜ்தி தர்யிய்யா என்னும் ஊருக்கு பயணமானார் . இது ஹிஜ்ரி 1160 ல் நடந்த சம்பவமாகும் .அந்த ஊருக்கு போய் சேர்ந்த பொழுது அங்கே இருந்த தனது சிஷ்யர்களில் ஒருவனான அப்துல்லாஹ் இப்னு ஸுவைலிம் என்பானின் வீட்டுக்கு வந்தார் . இந்த ஊரின் அமீராக அப்போது இருந்தவர் தான் முஹம்மத் பின் சவுத் .
ஷைகின் வருகையைக் கண்டு அஞ்சிய சிஷ்யன் அவருடைய உபதேசத்தால் சிறிது அமைதி பெற்றான் . ஷைகைப் பற்றி அமீரிடம் சொல்வதற்குரிய தைரியம் அவனுக்கு இல்லாததால் அமீருடைய சகோதரர்களான முஷாரி , ஸனிய்யான் ஆகிய இருவரிடமும் முதலில் சொன்னான் . அவ்விருவரும் அமீரின் மனைவிகளான மெளழா , மூழா பின்த்து அபீ கஹ்தானிடம் ஷைகு நஜ்தியைப் பற்றியும் ,அவருடைய திறமையை பற்றியும் சொல்ல ,தனது கணவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் இவர்தான் என்பதை தெரிந்து கொண்டவளாக தனது கணவனிடம் சென்று ,
" எழும் . இவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அருட்கொடையாகும் . நீர் அவருக்கு உதவி செய்யும் . உமது இரு உலகப் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்றாள் " .
[ நூல் - முஹம்மத் பின் அப்துல் வஹாப் , பக்கம் - 34 ]
மனைவியின் சொல்லே மந்திரம் என்பது போல இப்னு சவூதும் அவரைப் பார்ப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் . இருவரும் தங்களின் காரியம் நிறைவேறுவதற்காக எடுத்த ஆயுதம் திருக்கலிமாவாகும் . இதனால் இவ்விருவரின் சுயரூபத்தை அறியாதவர்கள் இவர்களோடு கை சேர்ந்தனர் . இவர்களை புரிந்தவர்கள் தமது உயிரைக் கூட தியாகம் செய்யத் துணிந்தனர் . அப்போது இப்னு சவுத் ஷைகு நஜ்தியை நோக்கி ....
"பெரியவரே ! நீங்கள் சொன்ன கருத்துக்களனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் மற்றும் அவனுடைய மார்க்கம் தான் . ஆகையால் உமது கட்டளைக்கு உதவி செய்வதைக் கொண்டு உமது சொல்லுக்கு நாம் கட்டுப்படுகின்றோம் . உம்மை எதிர்ப்பவர்களோடு நாம் போர் புரிவோம் என்று சுபச்செய்தி கூறுகிறோம் . இருப்பினும் அதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு .
ஒன்று , உமக்கு நாம் உதவி செய்து போர்புரிந்து நாடுகள் கைப்பற்றப்பட்டால் எங்களை விட்டு நீர் போகக் கூடாது . எங்களுக்கு பதிலாக வேறு யாரையும் அரசராக நியமிக்கக் கூடாது .
இரண்டாவது , தர்யிய்யாவில் எனக்கு வரவேண்டிய சொத்துக்களை கைப்பற்றும் விஷயத்தில் என்னை தடுக்கக் கூடாது என்றார் . "
அதைக் கேட்ட ஷைகு நஜ்தி ....
" கையைக் கொடு என்று சொல்ல , இப்னு சவூதும் தனது கையைக் கொடுக்க அதைப் பற்றி பிடித்த ஷைகு நஜ்தி , முதல் நிபந்தனை பிரகாரம் எனது இரத்தம் உமது இரத்தமாகும் .எனது தோல்வி உமது தோல்வியாகும் என்றார் . அடுத்து இரண்டாவது நிபந்தனை பிரகாரம் உமக்கு நீர் கற்பனை செய்து பார்க்க முடியாத சொத்துக்கள் எல்லாம் உம்மை வந்தடையும் என்றார் " இதனையடுத்து ஷைகு நஜ்தியின் கரத்தில் இப்னு சவூத் பைஅத்துச் செய்து கொடுத்தார் . இதன்பின் இப்னு சவூதின் அட்டூழியம் ஆரம்பம் ஆயிற்று .
மேற்கண்டவாறு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்ட போது ஷைகு நஜ்தியுடைய வயது 46 ஆகத்தான் இருந்தது . இதைத் தொடர்ந்து முதன் முதலாக இவர் ரியாதைக் கைப்பற்ற முயன்று இப்னு தவ்வாஸுக்கு எதிராக போர் தொடுத்தார் . இப்போர் சுமார் 30 ஆண்டுகள் வரை நீடித்தது . இறுதியில் இப்னு சவூதுடைய மைந்தன் அப்துல் அஜீஸுடைய காலத்தில் 1773ஆம் ஆண்டு ரியாத் கைப்பற்றப்பட்டது .
இப்னு சவூத் , தவ்வாஸுடன் போர் புரிந்து கொண்டிருந்த போதே ஷைகு நஜ்தியை கொல்ல வேண்டுமென்றும் இல்லையேல் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் மடல் எழுதியவரின் பிரதேசமான அல் அஹ்ஸாவுடன் போரிட்டார் . அப்போரில் அந்த ஊரும் கைப்பற்றப்பட்டது .
இப்படி அவர் எதிபாராத அளவுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்து கொண்டிருப்பதைக் கண்ட அவரும் ,அவருடைய குடும்பத்தாரும் நஜ்தைச் சேர்ந்த மக்களும் இவையனைத்தும் நஜ்த் உடைய ஷைகால் தான் என்றெண்ணி அவரை பெரிதும் மதிக்க துவங்கினர் .
இது பற்றி மஹமூத் ஷுக்ரி என்பார் தமது தாரீக் நஜ்த் - அரபி நூலின் 119வது பக்கத்திலும் , மஸ்வூத் ஆலிம் என்பார் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் நூலின் 42வது பக்கத்திலும் கீழ்கண்டவாறு கூறுகின்றனர் ,
" சவூதுடைய குடும்பத்தார் எதைச் செய்தாலும் ஷைகைவர்கள் சொல்வதற்கொப்பவே செய்தனர் . நஜ்த் உடைய மக்கள் அருமை நாயகம் அவர்களுக்கு அவர்களது தோழர் பெருமக்கள் வழிப்பட்டதைப் போல வழிப்பட்டனர் . ஷைகை யாரேனும் தப்பாகப் பேசினால் அவரை கொலையும் செய்தனர் . "
இன்னும் ,....
" சவூதும் ,அவருடைய குடும்பத்தாரும் ஷைகுன் நஜ்த் அவர்களின் காலடியில் தம்மை அர்ப்பணித்துவிட்டனர் . அவர்களுக்கு கிடைத்த இப்பாக்கியம் ஷைகவர்களின் செருப்புடைய பரக்கத்தால் கிடைத்ததென்று கருதினர் . முஹம்மத் இப்னு சவூதும் அவருடைய குடும்பத்தாரும் ஷைகவர்களின் ஆலோசனையின்றி எதையும் செய்வதில்லை . ஷைகைவர்களை உலகிலுள்ள எந்த பொருளின் தேவையுமற்ற மாபெரும் புண்ணியவானாக அவர்கள் கண்டார்கள் " .
இதே அடிப்படையில் தான் இன்று நம்முடைய நாட்டில் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் , இப்னு தைமிய்யாவையும் எதிர்ப்போருக்கு ஹஜ்ஜுக்குக்குரிய விசா மறுக்கப்படுகின்றது . வஹ்ஹாபியக் கொள்கைகளை எதிர்ப்போருக்கு குத்பாக்கள் வழங்கப்படுவதில்லை . பள்ளிவாசல்களில் இருந்து விரட்டப்படுகின்றனர் . சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களை அடிக்கவும் முற்படுவதோடு , சந்தர்ப்பம் கிடைத்தால் கொலையும் செய்வதோடு அவர்களால் மிரட்டப்படவும் செய்கின்றனர் .
அதன்பின் முஹம்மத் பின் சவூத் ஹிஜ்ரி 1179ல் இறந்து போக ,அவருடைய மைந்தன் அப்துல் அஜீஸ் அதே ஆண்டு ஷைகுன் நஜ்தியுடைய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது .அப்துல் அஜீஸ் பின் சவூதிற்கு , முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் உடைய மகளை மணமுடித்து இரு குடும்பத்தாருக்கும் இரத்த பந்தமும் உண்டானது .
இவ்விரு குடும்பத்தாரால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சனை புண்ணிய பூமிகளான மக்கா முகர்ரமா ,மதீனா முனவ்வராவையும் விட்டு வைக்கவில்லை . அங்கேயும் அவர்கள் போர் தொடுத்தனர் . அவர்கள் விளைவித்த அராஜகங்கள் பற்றி 'அல் பஜ்ருஸ் ஸாதிக் 'என்னும் நூலின் 22ஆம் பக்கத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது ....
" முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்தொடர்ந்த வஹாபிகள் எனப்படுவோர் புரிந்த ஆகமோசமான கீழ்த்தரமான செயல்களில் ,அவர்கள் புனித தாயிப் நகரைச் சென்றடைந்த பொழுது நடத்தப்பட்ட கொடுங்கோன்மையாகும் . அங்கே அவர்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை ,ஆண்கள் முதல் பெண்கள் வரை பாகுபாடு பார்க்காமல் எல்லோரையும் கொன்று குவித்ததாகும் . தாயுடைய மடியில் பாலருந்திக் கொண்டிருந்த குழந்தையை அத்தாயின் கண் முன்னாலேயே அறுத்தனர் .
குர்ஆனை ஓதும் ஒரு கூட்டத்தாரை கண்ட பொது அவர்களனைவரையும் கொலை செய்தனர் . இன்னும் கடைகளில் இருந்தவர்களையும் ,கடைத்தெருவில் இருந்தவர்களையும் கொன்று குவித்தனர் . பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தனர் . திருமறை ,புஹாரி ,முஸ்லிம் போன்ற கிரந்தங்களையும் ,சட்டக் கிரந்தங்களையும் நடைபாதையில் பரப்பி அவைகளையெல்லாம் தங்களின் காலினால் மிதித்துக் கொண்டே சென்றனர் . ஒரு காகிதத்தைக் கூட அங்கிருந்தவர்களில் யாராலும் எடுக்க முடியவில்லை . இவையனைத்தும் சுமார் ஹிஜ்ரி 1217ல் நிகழ்ந்த சம்பவங்களாகும் . "
திங்களெம் கோமான் நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم
இன்னும் இப்படியெல்லாம் நடந்த உண்மை வரலாற்றை சொல்லும் பொழுது இவர்களை ஆதரிக்கும் திருட்டுக் கூட்டம் இவர்களால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் பொய்யானதாக இருக்குமாயின் 250 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இவர்களின் ஆட்சி அழிந்து போகாமல் மேலும் மேலும் விரிந்து கொண்டல்லவா இருக்கிறதென்று கேட்கின்றனர் ?
இதைவிட பைத்தியக்காரமான சிந்தனை வேறு ஏதாவது இருக்கு முடியுமா என்ன ? இவர்கள் சொல்வதைப் போல் இப்பூமியிலுள்ள பிற சமயவாதிகளை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் . மக்கள் தொகையிலும் ,ஆயுத பலத்திலும் ,பொருளாதாரத்திலும் உயர்ந்தவர்களாக இவர்கள் இப்போது இருப்பதாலும் அல்லாஹ்வை வணங்குபவர்களை விட அவனுக்கு மாறு செய்யும் இவர்கள் தான் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக இவர்கள்தான் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்று சொல்வீர்களா என்ன ? ஒருவேளை இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள் . ஏனெனில் இவர்களுக்கு இவர்களின் மனோ இச்சை தானே இரட்சகன் !
அதன்றி காபிர்களால் முறியடிக்கப்பட முடியாமல் அவர்களுக்கெல்லாம் பெரும் சவாலாக இருந்த உஸ்மானியாக்களின் ஆட்சி இவ்விரு குடும்பத்தாரால் தான் மண்ணோடு மண்ணாகிப் போனது . நஜ்த் உடைய ஷைகும் , இப்னு சவூதும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் இஸ்லாத்தை அளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளாகும் .
அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீனக் கொள்கைதான் அதற்குரிய அணு ஆயுதம் என்பதாக ஆங்கிலேயர்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட உளவாளி ஹம்ப்ரே என்பவர் கூறுகிறார் .
அரபுலகின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாசிரியரும் , விமர்சகருமாகிய பேராசிரியர் ஜலால் கிஸ்க் அவர்கள் தமது ம் " சவூதியர்களும் ,இஸ்லாமியத் தீர்வு" எனும் நூலில் ஷைகுன் நஜ்தி இப்னு அப்துல் வஹ்ஹாபை ஒரு சமூகத் துரோகி என்று கூறுகிறார் . பிரித்தானியரின் பிடியில் சிக்கி மார்க்கத்திற்குப் புறம்பாக புரிந்த செயல்களனைத்தும் உளவாளி ஹென்றியின் டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை இலங்கை ,காத்தான்குடி ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியின் ஆசிரியரும் ,இலங்கை முஸ்லீம் சேவை வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மவ்லவி எம் .ஹெச்.எம் .புஹாரி ஒத்துழைப்போடு எழுதப்பட்டு அல் ஹஸனிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் எம் .ஐ.எம் .அப்துல் லத்தீப் ஆலிம் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்த " வஹாபிகளுக்கோர் மறுப்பு " என்னும் நூல் சுட்டிக் காட்டுகின்றது .
இதுபற்றி விரிவான விஷயங்கள் "இஃதிராஃபாத் அல் ஜாஸுசுல் இங்கிலீசி "என்னும் அரபு நூலில் .அல்லது அதனுடைய கருத்துக்களைச் சுமந்துள்ள தமிழ்நாடு மஜ்லிஸுல் உலமாயே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தின் செயலாளரும் , 'அஹ்லே ஸுன்னத் 'மாத இதழ் ஆசிரியருமான மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ் எப் .எம் .இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத் رحمه الله அவர்களால் எழுதப்பட்ட " வஹாபியத் தோற்றம் " என்னும் நூல் பார்க்க வேண்டுகின்றோம் .
அன்று ஷைகு நஜ்தியுடைய குடும்பமும் , இப்னு சவூதுடைய குடும்பமும் இணைந்து உலகிலுள்ள முஸ்லிகளெல்லாம் முஷ்ரிக்குகள் என்றும் , கப்ருகளை முஸ்லிம்கள் வணங்குவதாகவும் பழிசுமத்தி கொன்று குவித்தனர் . அவர்களின் பொருட்களையெல்லாம் சூறையாடினர் . குப்பாக்களையும் கப்ருகளையும் உடைத்து தரைமட்டமாக்கிய நிகழ்ச்சிகளையெல்லாம் உண்மையான முஸ்லீம் ஒருபோதும் மறக்க மாட்டான் . அன்று தொடங்கப்பட்ட இவர்களின் கொடுங்கோன்மை இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது .
ஷைகு நஜ்த் உடைய குடும்பத்தாருக்கும் , சவூதுடைய குடும்பத்தாருக்கும் கப்ருகள் அழிக்கப்பட வேண்டும் , கப்ருகளுக்கு மரியாதை செய்வோர் அழிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோளாகும் . அதேபோல் வல்லரசுகளுக்கு இஸ்லாம் அழிக்கப்பட வேண்டும் என்பது குறிக்கோளாகும் . இவ்விரு நோக்கத்திற்காகவும் அவர்களுடைய முன்னோடிகளால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ,தற்போது நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அதை உண்மைப்படுத்திக் கொண்டுள்ளது .
அவ்வாறு இல்லையேல் உண்மை முஸ்லிகளான இவர்களுக்கு இஸ்லாமிய அரசான கிலாஃபத் ஆட்சியை அழிக்க துடித்துக் கொண்டிருந்த வல்லரசுகளோடு என்ன நட்புறவு ? அல்லாஹ்வின் நேசர்களான நபிமார்களிடமும் ,வலிமார்களிடமும் உதவி தேடுவதை ஷிர்க் என்று சொல்லும் இவர்கள் காபிர்களிடம் உதவி தேடலாமா ?
இன்னும் இவர்களாக அப்புனித பூமியில் இருந்து அவர்களை வெளியேற்ற மாட்டார்கள் . ஆனால் ஒருநாள் அவர்கள் மட்டுமல்ல , இவர்களும் சேர்ந்து விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .
அத்துடன் யாரை இவர்கள் தங்களின் நண்பர்களாக கருதிக்கொண்டு அவர்களின் பாதுகாப்பில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களாலேயே , அவர்களின் ஆயுதத்தாலேயே இவர்களுக்கு பாதிப்பு ஏற்படப் போகின்றது என்பதை மட்டும் இவர்கள் மறக்காமல் இருந்தால் சரி . காலம் இன்னும் கடந்துவிடவில்லை . இப்போதாவது உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை பாதுகாக்க முன்வந்தால் சரி .
இதுமட்டுமா ! இதுவரை இஸ்லாத்தின் முதல் கிப்லா புண்ணிய பூமியான பைத்துல் முகத்தஸ் உள்ள பலஸ்தீனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதற்குரிய காரணமும் இந்த வல்லரசுகளுக்குப் பின்னால் இவ்விரு குடும்பத்தாரும் அதற்கு தூண்டுகோலாய் இருப்பது தான் . சொல்வதற்கு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை நிலவரமாகும் . இதற்கான காரணத்தை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

![]() |
| அப்துல்லாஹ் பின் சவூத் கைவரைந்த ஓவியம் ,நூல் : முஹம்மத் அலி ஆட்சியில் எகிப்திய வரலாறு , 1823 |