Thursday, 28 November 2019

புனித மதீனா முனவ்வராவின் விஸ்தரிப்பு

88ஆம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் வலீதிடமிருந்து ஆளுநரான ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களுக்கு மடலொன்று வந்து சேர்ந்தது . அதில் ....

புனித மஸ்ஜிதுன் நபவியை புணர் நிர்மாணம் செய்வதற்காக அங்குள்ள நாயகம் அவர்களின் துணைவியர்களின் வீடுகளையும் அம்மஸ்ஜிதோடு இணைத்து உள்ளடக்கி ஆக்குமாறு எழுதப்பட்டிருந்தது .

உடனே முன்னர் கூறப்பட்ட பத்து அறிஞர்களையும் ,மதீனாவிலுள்ள மக்களையும் அழைத்து கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததைச் சொல்ல , அதுகேட்ட அவர்கள் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர் . அவ்வாறு செய்யக்கூடாதென எதிர்த்தனர் . அனைவருடைய எதிர்ப்புக்கு மத்தியிலும் கட்டுமானப் பணி துவக்கப்பட்டபோது நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த போது அழுவதைப் போல அவர்களெல்லாம் அழத் துவங்கினர் . ஏன் அழுதனர் ? எதற்காக மறுப்பு தெரிவித்தனர் ? புரியவில்லை அல்லவா ! இதோ அதற்கான காரணத்தை அவர்களே கூறுகின்றனர் ...



 "இப்போது இருப்பதைப் போலவே விட்டு விடுவதுதான் நல்லது . அப்போதுதான் ஹாஜிகளும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை தரிசிக்க வருவோரும் ,பிரயாணிகளும் அவைகளை காணும் பாக்கியம் பெற முடியும் . அத்துடன் அதைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்வதற்குமுரிய வாய்ப்புண்டு எனக் கூறினர் . "

[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம்  -9, பக்கம் - 74 . அல் ஹுஜுராதுஷ் ஷரீபா , பக்கம் - 189 ] 

அப்போது ஹழ்ரத் ஸயீத் பின் முஸைய்யப் رضي الله عنه அவர்கள் பள்ளியின் உள்பகுதியில் நபியவர்களின் ரவ்லா ஷரீபை உள்ளடக்கப்படுவதை எதிர்த்தார்களென்று சொல்லப்படுகின்றது . இவர்கள் கீல் , கால் , யுஹ்கா , ஹுகிய என்பதையெல்லாம்  எப்போது ஆதாரமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்பதுதான் நமக்கு புரியவில்லை .

இனி ஹழ்ரத் ஸயீத் பின் முஸைய்யப் رضي الله عنهஅவர்கள்  உண்மையில் அச்செயலை எதிர்த்தார்களெனில் அவரால் மஹ்தி என்று போற்றப்பட்ட ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنهஅவர்களுக்கு அது தெரியாமலா போய் விட்டது ? அத்துடன் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த அறிஞர்களாலும் , மக்களாலும் அப்பிரச்சினை குறித்த ஓர் பிரேரணை ஏன் கொண்டு வரப்படாமல் விடுபட்டு போயிற்று ?

மேலும் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டுக்கு முன்னால் மஸ்ஜிதுன் நபவி விஸ்தரிக்கப்பட்டதை குறித்து மேற்படி நாவல் பேசும்போது , அம்மஸ்ஜிதை அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்கள் மூன்றாவது முறையாகவும் , அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உஸ்மான் துன்னுரைன் رضي الله عنهஅவர்கள் நான்காவது முறையாகவும் ஹிஜ்ரி முப்பதாம் ஆண்டு வாக்கில் பெரிதுபடுத்தினார்கள் என்றும் , அப்போது அவ்விரு கலீஃபாக்களும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ரவ்லா ஷரீஃபை உள்ளடக்கிய அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்களின் வீட்டுப் பகுதியை விட்டு விட்டு ,  மற்ற பகுதிகள் மட்டும் விஸ்தரிக்கப்பட்டு விடப்பட்ட பகுதியை பள்ளியோடு சேர்க்கக் கூடாதென்றும் பிரகடனப்படுத்தப்பட்டதாக கூறுகின்றார் .

முதலில் அப்படியொரு பிரகடனம் வெளியிடப்பட்டதற்குரிய  ஆதாரத்தை அவர் நமக்கு காட்ட வேண்டும்  . அடுத்து அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ரவ்லா ஷரீபை உள்ளடக்கியது தான் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்களின்  வீடு என்பதை ஏற்றுக் கொள்பவர் நபியவர்களின் புனித கப்ரு இருந்த இடத்தில் தான் அன்னையவர்கள் சுமார் 50 வருடங்களாக வாழ்ந்து வந்தனர் என்பதையும் ஏற்றுக் கொள்கிறாரா ?

இன்னும் அருமை நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பொழுது அன்னையவர்கள் 18 வயதுடையவர்களாகத்தான் இருந்தார்கள் . இனி அன்னையவர்கள் இவ்வுலகை விட்டு மறையும் போது அவர்களின் வயது 67 ஆக இருந்தது .

நமது நாயகம் அவர்களின் அருமை துணைவியார் அவர்கள் ஹிஜ்ரி 58 அல்லது 57ல் தான் இவ்வுலகை விட்டு மறைகிறார்கள் . இந்நிலையில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயில் இறுதியாக ஹிஜ்ரி 30 ல் தான் புனர் நிர்மாணம் செய்யப்படுள்ளது . அதன்பின் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டில் வைத்துதான் மீண்டும் விஸ்தரிக்கப்படுகின்றது .

இதில்  அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்களும் , அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உஸ்மான் துன்னுரைன் رضي الله عنه அவர்களும் பள்ளிவாயிலை புனர் நிர்மாணம் செய்தபோது நபியவர்களின் ரவ்லாவை உள்ளடக்கிய அறையில்தான் அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்கள் வாழ்ந்து வந்தனர் . இப்போது ரவ்லா ஷரீஃப் ஏன் பள்ளியோடு இணைக்கப்படவில்லை என்பது உங்களுக்கு புரிகின்றதா !

அடுத்து கப்ரு உள்ள இடத்தில் தொழ வேண்டாம் என நாயகம் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்ததாகக் கூறுகின்றார்களே ....

"சுமார் ஐம்பதாண்டு காலம் வரை அன்னையவர்கள் கப்ரு உள்ள இடத்தில்தான் தொழுத்திருக்கிறார்கள் "  . இதற்கு என்ன பதில் தருவார்கள் ?

[ நூல் - கஷ்ஃபுல்  இர்தியாப் ,பக்கம் - 341 ]

பின்னும் அன்னையவர்கள் மட்டும்தான் கப்ரு உள்ள இடத்தில் தொழுது வந்தார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா   ? இல்லை .இல்லவே இல்லை . அண்ணல் நபியவர்களின் மறைவுக்குப் பின் வாழ்ந்த அனைத்து நபித்தோழர்களும் கப்ரு உள்ள இடத்தில்தான் தொழுது வந்தார்கள் .

இனி கப்ரு ஜியாரத் உள்ள பள்ளியில் தொழக்கூடாதெனில் , நபித்தோழர்கள் அனைவருடைய தொழுகையும் கூடாதென தான் சொல்ல வேண்டும் .இன்றும்  பல பள்ளிகளில் எப்படி ஒரே வளாகத்தில் பள்ளிவாயிலோடு கப்ருகள் இணைக்கப்பட்டுள்ளதோ அதேபோலத்தான் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு வரை நாயகம் அவர்களின் ரவ்லா ஷரீஃபும் பள்ளிவாயிலோடு குறுக்கே ஒரு சுவரை கொண்டு இணைந்திருந்தது .

ஹிஜ்ரி 88ல் வலீதுடைய ஆட்சியின் கீழ் ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களது தலைமையின் கீழே மஸ்ஜிதுன் நபவி விஸ்தீரணம் செய்யப்பட்ட பொழுது ரவ்லா ஷரீஃப் பள்ளியின் உட்பகுதிக்குள் கொண்டு சேர்க்கப்பட்டது .

மேலும் புராதனைச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் நீங்கள் பிறகு ஏன் அவைகளை முன்னோர்கள் உடைத்தார்கள் என வினவலாம் . இதில் உடைக்கப்பட்டவை அனைத்தும் நபியவர்களுக்கே அர்ப்பணிக்கப்பட்டது . அப்புனிதர்களால் அவ்வாறு செய்யப்பட்டதற்காக நாம் அல்லாஹ்வை புகழுகின்றோம் . இல்லையெனில் அசுத்தமான இவர்களுடைய கரங்கள் அல்லவா அதில் பட்டிருக்கும் !


இப்போது சொல்லுங்கள் . மேற்படி நாவலாசிரியர் குர்ஆன் ,ஹதீதை ஆதாரமாக காட்ட தகுதியானவரா ? இஸ்லாமிய வரலாற்றை கூட தெரியாத இவரா கலாநிதி ? இவரும் ,இவருடைய மூதாதையரும் கேள்விப்படாத புதிய புதிய புதிய விளக்கத்தையெல்லாம் சொல்லும் இவர்கள் தஜ்ஜாலுடைய கூட்டத்தையல்லவா சேர்ந்தவர்கள் .  இவர் மட்டுமல்ல ? இவருடைய சகாக்களான சவூதியின் முப்திகள் சொன்னாலென்ன ? அதென்ன மார்க்கமாகி விடுமா ? இவர்கள் அனைவரும் இஸ்லாத்தின் ஆணிவேர் மீது வெந்நீர் ஊற்றி அதன் புனிதத்தன்மையை சுத்தமாகத் துடைத்தெறிய வந்த சியோனிசவாதிகளின் பொம்மைகள் . இன்னும் இவர்களுடைய தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக !

இனி  "நல்லடக்கம் செய்யப்பட்ட  இடம் சொந்த இடமாக இருக்கமாயின் அங்கே குப்பாக்களை கட்டிக் கொள்ளலாம் "  எனக் கூறுகிறார் இப்னு தைமிய்யயாவின் மாணவரான இமாம் இப்னுல் முஃப்லிஹ் رحمه الله அவர்கள் . இவரைக் குறித்து இப்னு கையிம்      கூறும்போது ,


" இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்களின் மத்ஹபுக்குரிய சட்ட மேதைகளில்  இப்னுல் முஃப்லிஹை விட சிறந்த ஒருவரை நான் காணவில்லை "என்றார் .

[ நூல் -  இஹ்யாவுல் மக்பூர் , பக்கம்  9 ] 

குறிப்புக்கு: - நான்கு மத்ஹபுகளின் ஏகோபித்த முடிவு என்னவெனில் அசுத்தங்களை விட்டும் நீங்கியதாக மையவாடி இருக்குமாயின் அந்த இடத்தில் தொழலாம் . அத்தொழுகை நிறைவேறும் . அதற்கு மாறாக அசுத்தம் எந்த இடத்தில இருந்தாலும் அங்கே தொழப்படும் தொழுகை நிறைவேறாது .

மேலும் நாம் கப்ருகளை கவுரவப்படுத்தி அவைகளுக்கு மரியாதை செய்வதை பாவமான காரியமென்றும் , ஸியாரத்துச் செய்வதற்காக பயணம் செய்வதை கூடாதென்றும் இவர்கள் கூறுகின்றனர் . மாறாக இதுபற்றி நபித்தோழர்கள் என்ன கூறுகிறார்களென்று பார்ப்போம் ,


"ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுபதாயிரம் மலக்குகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுடைய ரவ்லாவிற்கு வருகைதந்து தங்களின் இறக்கைகளால் நபியவர்களின் ரவ்லாவை சூழ்ந்தவர்களாக மாலைவரை நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர் . மாலையானதும் அவர்கள் வானத்திற்குச் செல்ல , அவர்களைப் போன்ற எண்ணிக்கையைக் கொண்ட வேறு மலக்குகள் வானத்திலிருந்து ரவ்லாவை நோக்கி வருகை தந்து காலைவரை ஸலவாத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் .இந்நிலை நபியவர்கள் தமது கப்ரிலிருந்து   எழுப்பப்படும் வரை நடந்து கொண்டிருக்கும் என்பதாக ஹழ்ரத் ஸெய்யிதினா கஃபுல் அஹ்பார் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றனர் "

[ நூல் - ஸுனன் தாரமி , 1-44 ]

இதற்குப் பிறகும் மாநபி அவர்களின் புனித மிகு கப்ரை    தரிசிப்பதற்காக பயணம் செய்வதை பாவமான ஒன்றென்றா இவர்கள் சொல்லப் போகின்றனர் ! பாருங்கள் , நபியவர்களின் ரவ்லாவை அல்லாஹ் வானவர்களைக் கொண்டல்லவா கவுரவப்படுத்துகின்றான் .   ஆனால் மனிதன் அதை பாவமான காரியமென்று சொல்கின்றான் . இதுதான் காலத்தின் கோலம் என்பதோ ! சரி . நாம் விஷயத்திற்கு வருவோம் .

உஸ்மானாலும் கைவிடப்பட்டதால் ஷைகு நஜ்தி அங்குமிங்குமாக அலைந்தார் . தொடர்ந்து அவமரியாதையாக நடத்தப்பட்டதால் மிகவும் மனம் நொந்து போனார் . இந்நிலையில் அவரை அரவணைக்கவும் ,அவருடைய நோக்கத்திற்கு ஆதரவளித்து ஊக்கமளிக்கவும் படைபலமும் ,ஆயுதபலமும் கொண்ட ஒருவர் அவருக்கு சீக்கிரம் தேவைப்பட்டார் .

தன்னிடம் அறிவிறிக்கின்றது . ஆனால் ஆயுதபலமோ , படைபலமோ இல்லையே என்று யோசித்தவராக ,அதற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது  இன்னொரு பக்கத்தில் வல்லரசுகளின் ஆயுத பலத்தோடு தமது காரியத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு அறிஞன் தனக்கு கிடைக்கவில்லையே என்று இன்னொருவன் யோசித்துக் கொண்டிருந்தான் . அவன்தான் நபியவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஷைத்தானின் இரண்டாவது கொம்பாகும் . அவன் ....

No comments:

Post a Comment