Monday, 22 June 2020

அல்லாஹ்வின் சின்னமும் வஹாபிஸமும்

ஸவூது உடைய குடும்பத்தாரும் ,ஷைகு நஜ்தியுடைய குடும்பத்தாரும் இணைந்து நடத்திய கொடுமைகளில் புராதான சின்னங்களை அழிப்பதும் முக்கியமான இடத்தை வகிக்கின்றது  .

புராதான சின்னங்கள் பற்றி பேசப்பட்ட போது இலங்கையைச்  சேர்ந்த அப்துல் ஹமீத்பக்ரி என்பவரால்  மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பிரதியொன்று கிடைத்தது.இவர் இலங்கை பரகஹதெனிய என்னும் இடத்தைச் சேர்ந்த வஹாபிய ஏஜெண்டுகளில் ஒருவராகும். இவரைப்பற்றி தனித்தலைப்பில் முன்னால் நாம் கூறியுள்ளோம். அந்த நூல் 50 பக்கங்களை கொண்டது. ஹிஜ்ரி 1380 ஜமாதில் ஆகிர் 24ம் நாள் 'அந்நத்வா'
இதழில் மற்ற மதீனா முனவ்வராவின் புராதனச் சின்னங்கள் என்னும்
தலைப்பில் முஸ்தபா அமீனின் கட்டுரைக்கும் ஹிஜ்ரி 1387ஜமாதில்
அவ்வல் 24ம் நாள் அதே இதழில் இஸ்லாமிய புராதனச்
சின்னங்கள் என்னும் தலைப்பில் ஸாலிஹ் முஹம்மத் ஜமாலுடைய
கட்டுரைக்கு இப்று பாஸால் எழுதப்பட்ட மறுப்புப் பிரதியின்
தமிழாக்கம் தான் அது.

முஸ்தபா அமீனும் , முஹம்மத் ஜமாலும் அப்போது என்ன
எழுதியிருந்தார்கள் என்பது சரியாகத் தெரியாதவரை அவர்கள்
சொன்னதாக இப்னு பாஸ் சொன்னதாகச் சொல்லும் அப்துல்
ஹமீதின் கருத்தை நம்பமுடியாது. முன்னோர்களின் நூல்களிலிருந்தே
அவர்களின் வாசகங்களைத் திருடிய திருட்டுக் கூட்டம் இது.

ஆதலால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்று நாமும் புண்ணிய பூமிகளான மக்காமுகர்ரமாவிலும் மதீனா முனவ்வராவிலும் எவைகளெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமென, கௌரவப்படுத்தப்பட வேண்டுமென குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ அதைத்தான் சொல்லியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

காரணம் புனித மதீனா முனவ்வராவைப் பற்றி அவர் சொல்வதாவது:-
புனித மதீனா முனவ்வராவில் நினைவில் நிறுத்தக் கூடிய
பல புராதனச் சின்னங்கள் இருக்கின்றன. அரபிகளாக இருந்தும்
அவைகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அதேநேரம் லண்டன்,
பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள புராதனச் சின்னங்களை
அந்நாட்டவர்கள் கௌரவிப்பதைக் காணும்போது
முஸ்லிம்களாகிய நாம் ஏன் அவ்வாறு பழமை வாய்ந்த புராதனச்
சின்னங்களை கௌரவப்படுத்தக்கூடாது? இஸ்லாம் இதை மறுக்க
வில்லையே! என எழுதி நம்மையும் லண்டன்,பாரசீகவாசிகளைப்
போலபுராதனச் சின்னங்களை கௌரவிக்கவும் அதை நினைவூட்டக்
கூடிய கட்டிடங்களை அமைக்க வேண்டுமென்றும் அழைக்கிறார்
என பாஸ் சொன்னதாக சொல்லும் பக்ரி,...


ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு விரோதமான அல்லாஹ்வுடைய
வும் அவனுடைய தூதருடையவும் பகைவர்களைப் போன்று
நடந்து கொள்ள வேண்டுமெனக் கூறுவது ஆச்சரியமானது
மட்டுமல்ல. அதிசயமானதுமாகும். ஏனெனில் இன்னொரு
சமுதாயத்தை பின்பற்றுபவன் அச்சமுதாயத்தையே சார்ந்தவர் 
ஆவான் என்னும் நபிமொழியைக் கவனித்தல் வேண்டாமா?
என்று ஆவேசப்படுகிறார்.

இவருடைய ஆவேசததைக் கண்டு கையால் வாயை பொத்திக்
கொண்டு சிரிக்கிறோம் .ஏனெனில் புராதனச் சின்னங்கள் கௌரவிப்பது மாற்று சமுதாயத்தின் வேலையாதலால், நாமும் நமது
புராதனச் சின்னங்களை கௌரவப்படுத்தினால் நாமும் அவர்களாகி
விடுவோம் என்னும் அச்சம் இவர்களிடம் இருப்பதைக் கண்டு
உண்மையாகவே ஆச்சரியப்படுகிறோம்.

ஒரு பொருளை  பாதுகாப்பதற்கு  கையாளப்படும் முறை மற்றும்
விதம் மாற்று சமுதாயததைப் போல் இருக்கக் கூடாதென்று
சொல்லும் இவர், மாற்று சமுதாயத்தினரின் வணக்கத்தை நாம்
நம்மீது சாட்டிக் கொள்வது பற்றி என்ன சொல்வாரோ தெரியவில்லை.

ஆஷுரா நோன்பை கவனியுங்கள். இன்னும் அது ஸுன்னத் தாக்கப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். அந்தத் தினத்தன்று
யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்ணுற்ற பூமான் நபி صلى الله عليه و سلم அவர்கள் அது நமக்குரியது எனக் கட்டளை  பிறப்பிக்கவில்லையா?

இன்னொரு சமுதாயத்தைச் சார்ந்தவர் ஒன்றைச் செய்தால் அதை
செய்வதற்குரிய தடை என்பது நமக்கு இல்லையாயின் நாம் அதை
செய்வதில் ஆட்சேபணையில்லை. இதன் அடிப்படையில் தான்
நாம் நமது புராதனச் சின்னங்களை பாதுகாப்பது என்பதானது
மாற்றுச் சமுதாயத்தைப் பார்த்து செய்யப்படும் ஒன்றாகாது.
இன்னும் அதைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி அவைகளை
அழிப்பதானது மிருகத்தனமான செயலாகும்.

இனி நமது புராதனச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டுமா
அல்லது அழிக்கப்பட வேண்டுமா என்பதைக் குறித்து அல்லாஹ்
வின் திருமறை வசனங்களைக் கொண்டும் அண்ணலெங்கோமான்
அவர்களின் அமுதவாக்குகளைக் கொண்டும் சுருக்கமாக பார்ப்போம்.

திருமறை கூறுவதை பாருங்கள்.


"மகாமே  இப்றாஹீமை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்”.
குர்ஆன்.

இந்த வசனம் நபி இப்றாஹீம் عليه السلام அவர்கள் புனித
கஃபாவை புனர் நிர்மாணம் செய்யும்போது நின்றுகொண்டு
பணிபுரிந்த அவர்களின் பாதம்பட்ட இடத்தை கௌரவப்படுத்தும்
வகையில் தொழக்கூடிய இடமாக ஆக்கிக் கொள்ளுமாறு
ஆணையிடுகிறது.

நபி இப்றாஹீம் عليه السلام அவர்களின் பாதம் பதிந்த
இடம் இன்றும் ஹரம் ஷரீபில் கஃபாவின் வாயிலுக்கு எதிரே ஒரு
அடி தூரத்தில் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்டு
வருவதோடு அவ்விடத்தில் பரக்கத்திற்காக தொழவும் செய்கின்ற
னார். நபியுல்லாஹ் இப்ராஹீம் عليه السلام அவர்களின் பாதம்
பட்ட இடம் புராதனச் சின்னமாகும். அதை அல்லாஹ்பாதுகாப்ப
தோடு அதைப்பற்றி குர்ஆனிலும் பேசுகிறான் எனில் அவை
போன்ற புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா?
அல்லது அழிக்கப்படவேண்டுமா?

இன்னும்,...




"அந்தப் பேழையினுள் - நபிமார்களான -  மூஸா  عليه السلام அவர்களுடையவும் , ஹாரூன் عليه السلام அவர்களுடையவும் புராதனச் சின்னங்க இருக்கின்றன. அதனை  அமரர்கள் சுமந்துவருவார்கள். "

குர்ஆன்.

இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் வேத வியாக்யானிகள்
அந்த நபிமார்களுடைய புராதனச் சின்னம் என்பதானது
அவர்களது கைத்தடியும் பாதணிகளுமாகும் என்கின்றனர்.

மேலும் நம் மூஸா  عليه السلام அவர்கள் பயன்படுத்திய
தடியையும், பாதணியையும் அல்லாஹ் பாதுகாத்து அதனை
அமரர்கள் சுமந்து வருவதாககுர்ஆன் கூறுகிறதென்றால் புராதனச்
சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது அழிக்கப்பட
வேண்டுமா?

ஆதலால் புராதனச் சின்னங்களை பாதுகாப்பதானது காபிர்களு
டைய செயலல்ல. மாருக அது அல்லாஹ்வுடைய சுன்னத்தாகும்.
ஆனால் நீங்கள் புராதனச்சின்னங்ககாபாதுகாப்பதற்குப் பதிலாக
அவ்விஷயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறீர்கள்.

அருமை நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நபியவர்களின் அருமைத் தோழர்களாலும் தாபியீன்களாலும், தபவுத் தாபியீன்களாலும் பாதுகாக்கப்பட்டதைக் குறித்து எத்தனையோ ஆதாரங்களை நம்மால் எடுத்துக் காட்ட முடியும். விரிவஞ்சி ஒரேயொரு
ஆதாரத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

ஸெய்யிதுனா ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்ட இடம் யூதர்களால் குப்பை கூளங்கள் போடப்படும் இடமாக இழிவுபடுத்தப்பட்டது. பின்பு அந்த இடம் கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்ட போது அவர்கள் அந்த   இடத்தை வணக்கஸ்தலமாக ஆக்கிக் கொண்டனர்.

பின்னர்,...



"ஹழ்ரத் ஸெய்யிதினா  உமர் رضي الله عنه  அவர்களால்
பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட போது கலீஃபா அவர்கள் தாம்
அணிந்திருந்த போர்வையால் அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள்.
அத்துடன் அதனுடைய அமைப்பை மாற்றியமைத்து அந்த இடத்திற்கு
முன்பாக நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் தொழுத
இடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தார்கள்.”
[நூல்: அல்பிதாயா வந்நிஹாயா, 2-96.]

ஆனால் நீங்கள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் இவ்வையகத்திற்கு வருகைதந்து வாழ்ந்த வீட்டை பாதுகாத்து கௌரவப்படுத்துவதற்குப் பதிலாக அவ்வீட்டை உடைத்துத் தரைமட்டமாக்கியது போதாதென்று....


"மிருகங்கள் விற்கப்படும் சந்தையாக அவ்வீட்டை மாற்றி
கேவலப்படுத்துகிறீர்கள். "

இன்னும்,....

அருமை நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு
முதன் முதல் வஹீ இறக்கப்பட்ட இடமும், நபியவர்களுக்கு
மிகவும் உகப்பான முஃமினீன்களின் தாயாரான அன்னை கதீஜா
 رضی اللہ عنھا அவர்களின் வீட்டையும் தரைமட்ட
மாக்கியதோடு,..



“அந்த இடத்தை மலஜலம் கழிக்கும் இடங்களாகவும் ஒழு செய்யும்
இடமாகவும் தண்ணீர் தொட்டிகளாகவும் ஆக்கப்பட்டதை பொருந்திக்
கொண்டீர்கள்."

 இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுடைய
உள்ளங்கள் இடமளித்ததென்றால் நீங்களெல்லாம் நிச்சயமாக
முத்திரையிடப்பட்ட உள்ளங்களை கொண்டவர்கள் தானென்றே
நாம் கூறு வோம்.

இன்னும்,....

இரு கிப்லாக்கள் என பிரபலமாக அழைக்கப்பட்ட மஸ்ஜிதில்
காணப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸா கிப்லா என்பதை தெளிவுபடுத்தும்
அடையாளத்தை வழிகேடு எனக்கூறி அழித்தது ஈமான் என்றால் ,.

ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه‎ அவர்களால் யூதர்களிடமிருந்து வாங்கி அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்த
கிணற்றை பாதுகாப்பது பாவமான காரியம் என்பதுதான்
இஸ்லாம் என்றால்,...

நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் முபாரக்கான
திருக்கரத்தால் நடப்பட்ட ஈச்சை மரத்தைக் கொண்ட ஹழ்ரத்
ஸல்மான் பார்ஸி رضي الله عنه‎  அவர்களின்
தோப்பையே இல்லாமலாக்குவது தான் மார்க்கம் என்றால்,...

அண்மைக்காலம் வரை மதீனா முனவ்வராவில் மஸ்ஜிதுல்
குபாவில் காணப்பட்ட அருமை நாயகம் صلى الله عليه و سلم
அவர்களின் ஒட்டகத்துடைய அடையாளத்தை அழித்தது
தான் அறிவுடையோரின் செயலென்றால்,...

இது உண்மையான மார்க்கமேயல்ல என்று அழுத்தமாகச்
சொல்லுவோம். உங்களுடைய சுயவிருப்பம் ஒரு போதும்
மார்க்கமாகாது. உங்களுடைய மனோ இச்சையிலிருந்து பிறந்து
வரும் விளக்கமெல்லாம் ஒருபோதும் குர்ஆன் ,ஹதீதுக்குரிய
விளக்கமாகாது. மாறாக முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபும்
இப்னு சவூதும் பிரிட்டானிய ஏகாதிபத்தியமும் இணைந்து தோற்று
வித்த ஓர் புதிய மார்க்கமாகும். அதுதான் வஹ்ஹாபிஸம், இந்நிலை
யில் உங்களை நாங்கள் என்னவென்று அழைக்க வேண்டும்
என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதுசரி, எதற்குமே
லாயக்கில்லாதவனை என்னவென்று அழைத்தால் தானென்ன.
அதனால் குடியா முழுகி விடப்போகிறது.

மேற்கண்டவைகளில் சில கருத்துகள் அஸ்ஸெய்யித் ஹாசிம் 
அர்ரிபாயி அவர்களால் சொல்லப்பட்டவைகளாகும்.இதே 
போன்று இன்னும் பல விஷயங்களை  அவர்கள் கூறியுள்ளார்கள்,
அவர்களுடைய உபதேசத்தோடு தமது உள்ளத்தின் ஆக்ரோஷத்
தையும் வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இத்தோடு
போதுமாக்கிக் கொண்டோம். தேவையான நேரத்தில் இந்த நூல்
தமது கரத்திற்கு வந்து சேர்ந்ததற்காக அல்லாஹ்வைப் புகழுகிறோம் .

இறுதியாக அல்லாமா லாவி ரஹிமஹல்லாஹ் அவர்கள்
தமது தப்சீர் ஸாவியில் 35ம் அத்தியாயமான சூரா ஃபாத்திரின் 
மூன்றாம் வசனமான

 "திடனாக உங்களுக்கு ஷைத்தான் பகைவராக 
இருக்கிருன். ஆதலால் நீங்களும் அவனை பகைவனாகவே எடுத்துக்
கொள்ளுங்கள்"

என்னும் பொருள் கொண்ட வசனத்திற்கு
அவர்கள் தரும் விளக்கத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு
எடுத்துக்காட்டிவிட்டு ஸவாத்துச்சொல்லலாமென்று நினைக்கிறோம்.
அவர்கள் கூறுகின்றனர்...



"இந்த வசனம் குர்ஆனுடைய வசனங்களுக்கும் நாயகம்
صلى الله عليه و سلم அவர்களின் சுன்னாவுக்கும் தவறான
அர்த்தம் செய்து முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களின்
பொருட்களை சூரையாடுவதும் ஆகுமான ஒன்றெனக் கூறிய கவாரிஜிய்யீன்கள் தொடர்பாக இறக்கப்பட்டதாகும். அவர்களைச் சேர்ந்தோர் தான் ஹிஜாஸ் மாநிலமான - மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா போன்ற இடங்களில் காணப்படும் வஹ்ஹாபிகள் எனப்படும் கூட்டமாகும்.

அவர்கள் சத்தியத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு
வாதிக்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்யர்களாகும். அவர்களை
ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பை அவர்களை விட்டும்
மறக்கடித்து விட்டான். அவர்கள் நஷ்டமடையும் ஷைத்தானின்
கூட்டாளிகளாகும். அவர்களை அடியோடு அழித்து விடுமாறு
அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்”  என்று கூறுகின்றனர்.

எனவே வஹ்ஹாபிகள் எனப்படுவோர் கவாரிஜிய்யீன்கள்
தான். அவர்கள் தற்போது நமக்கு மத்தியில் இருக்கும் எந்தக்
கூட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரியே  என்பதை இங்கே
மீண்டுமொரு முறை உங்களுக்கு நினைவூட்டியவர்களாக இந்த
உண்மையை இவ்வெளியோர்கள் மூலமாக சமுதாயத்திற்கு
எடுத்துச் சொல்வதற்குரிய வாய்ப்பைத் தந்து அதை ஏற்றுக்
கொண்ட எல்லாம் வல்ல வல்லோனாகிய அல்லாஹ்வுக்கே புகழ
கனைத்தும் உரித்தாகுமாக, இன்னும் அவனது ஹபீபாகிய நமக்
கெல்லாம்  ஷஃபீ. ஆகிய ஷஃபீவுல் முத்னிபீன், ஸர்தாரே தோ
ஆலம், ஸர்வரே காயினாத் ஸாஹிபே லவ்லாக் صلى الله عليه و سلم
அவர்களுக்கே சதா ஸலாத்தும் ஸலாமும்
உண்டாகட்டுமாக !




Thursday, 18 June 2020

நஜ்திய உலமாக்களுடன் ஒரு நிமிடம் - 2

ஷைகு நஜ்தி முஹ்ம்மத் இப்னு அப்துல் வஹாபுக்கு பின்னர் தோன்றிய வழிகேடர்களில் அண்மைக்காலத்தில் தோன்றிய அல்பானி குறிப்பிடத்தக்கவராகும் .  இவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே உங்களின் பார்வைக்கு வைப்பது உசிதம் என்று நினைக்கின்றேன் .


அல்பானி என்னும் இந்நபர் 1614ஆம் ஆண்டு அல்போனியாவின் தலைநகரான அஸ்கொதரா  என்னும் ஊரில் ஒரு வறிய குடும்பத்தில் தோன்றி ஹிஜ்ரி 1420ஆம் ஆண்டு ஜமாதில் ஆகிர் 22ஆம் நாள் சனிக்கிழமை அன்று (கி.பி. 1999ல் ) இறந்து போனவராகும். அல்போனியாவின் அதிபர் அஹ்மத் சுகே அந்நாட்டில் மதசார்பற்ற ஆட்சியைப் பிரகடனப்படுத்தியதால் மேற்கத்திய கலாச்சாரம் அம்மக்கள் மத்தியில் பரவி மார்க்க பற்றுள்ள பலர் அந்நாட்டை துறந்து துருக்கி,சிரியா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் .

இதில் அல்பானியின் குடும்பமும் சிரியா தலைநகரான டமாஸ்கஸ் நோக்கி நகர்ந்தது . திருமறை முதல் அரபி இலக்கணம் , மொழி இலக்கணம் , பிக்ஹ் போன்ற மார்க்க கல்விகளை தமது தந்தையிடமும் , நண்பர்களிடமும் கற்றார் . சிரியா நாட்டுப் பெரியார் ஒருவரிடம் ஹதீதுக் கலைக்கான இஜாஸத்தை -அனுமதியை பெற்றதாக சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல . இதுபற்றி அஸ்ஸெய்யித் ஹசன் அலி சக்காப் என்பார் அல்பானி ஹதீதுக் கலைக்கு இஜாஸா பெற்றிருந்தால் அதைக் காட்டுமாறு அப்போதே சவால் விட்டிருந்தார் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்றாகும் .

இவருடைய தந்தை நூஹ் ஹாதி நஜாத்தி என்பார் ஹனபி மத்ஹபின் அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்பதாக 'மகாலத்துல் அல்பானி ' என்னும் நூலின் 231ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . இனி இப்னு தைமிய்யாவின் குடும்பம் முழுவதுமே ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் , அதன்படியே தீர்ப்பு வழங்குபவர்களாகவும் இருந்தனர் . இவ்வாறே முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் குடும்பத்தினரும் ஹன்பலி மத்ஹபின் அடிப்படையில் தான் செயல்பட்டு வந்ததோடு அதன்படியே தீர்ப்பு வழங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் . இந்நிலையில் தமது பெற்றோர்களை வழிகேடர்கள் என்று அவர்களாகவே கூறிக்கொள்கின்றனர். இந்தநிலை இவர்களுக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா ? இவர்கள் நமது உயிரினும் மேலான நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் அருமை பெற்றோரை தவறாக விமர்சித்ததால் அல்லாஹ் அவர்களுடைய பெற்றோர்களை அவர்களைக் கொண்டே விமர்சனம் செய்ய வைத்துள்ளான் .

இதில் , அல்பானி நமது அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமாத்தின் முன்னோர்கள் அனைவரையும் குறை கண்ட நபராகும்.  முன்னோர்களால் எழுதப்பட்ட எந்த ஒரு கிரந்தத்திலும் இவர் தவறு காணாமல் விட்டதில்லை . இமாம் ஸுயூத்தி , இமாம்  தஹபி, இமாம் ஹாக்கிம் , இமாம் முன்திர், இமாம் இப்னு ஹஜர் , இமாம் சுப்கி , இமாம் மனாவி, ஜாஹித் அல் கவ்தாரி, ஸுவைப் அர்நாவூத், மஹ்முத் ஸயீத் மம்தூஹ் போன்றோர் மட்டுமல்ல . ஹதீதுகலையின் காற்றைக் கூட சுவாசித்திராத இவர் சிஹாஹ் சித்தாக்கள் என்று போற்றப்படும் அனைத்து கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகளுடன் மேற்கண்ட மேற்கண்ட நூற்களையும்   சேர்த்து  கிட்டத்தட்ட 6000 ஹதீதுகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பை சொன்னவராகும் . இன்னும் இவர் எதற்குமே அருகதை இல்லாதவர் என்பதே நல்லடியார்களின் ஏகமானதான தீர்ப்பாகும் .

மேலும் அல்பானியைக் குறித்து அவரது மாணவர்களில் ஒருவரான இப்ராஹீம் பாஜிஸ் அப்துல் அஜீஸ் என்பாரால் சொல்லப்பட்டுள்ள தகவலொன்று 'மகாலத்துல் அல்பானி 'நூலில் 233ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது ....


" இவருடைய பண்புகளோடு இவரிடம் ஒத்துப் போன அறிஞர்கள் மிக மிகக் குறைவாகும் . இவருடைய குணங்களில் முக்கியமானதொரு குணம் என்னவெனில் இவர் எந்த   தகவலை உண்மையானதென்றும் , சரியானதென்றும் நினைக்கிறாரோ அதையே பிடித்துக் கொள்பவராகும் .      இந்நிலையில் அவரால் சரிகாணப்பட்ட அத்தகவல் ஏகோபிக்கப்பட்ட
தீர்ப்புக்கு மாற்றமானதாகவோ அல்லது எதிரானதாகவோ இருந்தாலும்
சரியே. இதனால் பெரும்பான்மையான மத்ஹபுவாதிகளும் சூபிஸவாதி
களும் பித்அத்துக்காரர்களும் இவரை பகைத்துக் கொள்ளலாயினர்." 
என்று கூறுகிறார். 

இன்னும் இவருடைய பிரத்யேகமான ஆராய்ச்சியின் பலனாக சமுதாயத்திற்கு தரப்பட்ட ஒருசில மார்க்கத்தீர்ப்புக்களை பாருங்கள்.

1. தங்க ஆபரணங்கள் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டதைப்
போல பெண்களுக்கும் ஹராமாகும்.

2. வேண்டுமென்றே தொழுகையை விட்டாலும் அதை கழா செய்
வது ஹராமாகும்.

3. பெருந்தொடக்குடைய பெண்கள் குர்ஆனை ஓதலாம். தொடலாம்.
சுமக்கலாம்.

4. நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின்
புனிதமிகு ரௌழா ஷரீபை ஸியாரத்துச் செய்வதற்காக பிரயாணம்
செய்வதும், அவர்களிடம் ஷபாஅத்துத் தேடுவதும் மிகப்பெரும் வழி
கேட்டுக்குரிய செயலாகும்.

5. தஸ்பீஹ் மணியை கையில் சுமந்துகொண்டு உலவுவது வழி
கேடாகும்.

6. நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரௌழா
ஷப் மஸ்ஜிதுன் நபவியின் உட்பகுதியில் இருப்பது மாபெரும் குற்றத்திற்குரிய காரியமாகுமாதலால் ரௌழா ஷர்பை பள்ளியின் உட்பகுதி
யிலிருந்து அகற்றுவது அவசியமாகும்.

7. அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிருன்.

8. விந்தை தன்னிச்சையாக வெளியேற்றுவதால் நோன்பு முறியாது.
என்பன போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

இப்போது நாம் இந்த அல்பானியுடன் இணைந்து பல ஆண்டு
கள் அவருக்கு அடிபணிந்து அவரை ஒரு மாபெரும் மார்க்க
அறிஞரென்று எண்ணி அவருடன் மார்க்க விஷயத்தில் இணைந்து
செயலாற்றியவர்களில் இருநபர்களை பற்றி பார்ப்போம். 

இவ்விருவரில் முக்கியமானவர் அல் மக்தபுல் இஸ்லாமிய்யா என்னும்
அச்சக உரிமையாளரான   ஸூஹைர் ஷாவீஷ் என்பாராகும் .இவர் அல்பானியின் சீடருமாவார் . இவரை பலமுறை அல்பானி பேசி  பெருமைபடுத்தியிருக்கிறார். அவசியம் எனக்கருதுவோர் ஷரஹ் தஹாவியின் முன்னுரையை பார்க்க வேண்டுகி
றோம். ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலமாக ஒன்றாக இணைந்தி
ருந்தவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் நிலை வந்தபோது
அல்பானி தனது பிறவிக்குணத்தை காட்டும் வண்ணம் 
ஷாவீஷ்  உணவுக்காக தமது உருவத்தை மாற்றிக் கொள்பவர் எனத்தூற்றத்
துவங்கி விட்டார்.


இன்னும் ஷாவீஷின் அச்சகத்தில் தான் அல்பானியின் நூல்கள்
அனைத்தும் அச்சிடப்பட்டுவந்தன. இதில் இவ்விருவருக்குமிடையே
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குரிய பிரச்னைகள் அனைத்தும்
ஊடகங்களில் எல்லாம் வெளியானது உலகறிந்த உண்மையாகும். இந்த இடத்தில் நாம் அல்பானியால் ஷாவீஷுக்கு எழுதப்
பட்ட கடிதமொன்றை  உங்களின்
பார்வைக்காக தருகிறோம். இக்கடிதம் 8-18-1999 புதன்கிழமை
அன்று வெளியான 1059ம் இதழான அல்லிவா என்னும் பத்திரிக்
கையின் 15ம் பக்கத்தில் வெளியான தகவலாகும்.

அடுத்து ஷாவீஷின் அச்சகத்தில் அச்சிடப்பட்டாலும் அச்சகத்
தின் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியான ஒரு நூல் -  'கிதாபுன் 
மஃப்தூஹுன் இலஷ் ஷெய்கி நாஸிரித்தின் அல்பானி ' என்பதாகும். இந்நூலை எழுதியவர் அல்பானியின் இரண்டாவது மாணவரான உஸ்தாத் மஹ்முத் மஹ்தி என்பாராகும். இவர் இஸ்தான்புல்
நாட்டைச் சேர்ந்தவர். இவர் அல்பானியை விட இரண்டு வயது
மூத்தவராக இருந்தும் அல்பானியுடன் நாற்பதாண்டு காலமாக
இணைந்திருந்தவர்.

 இதில் அல்பானியை பற்றி தெரிந்து கொள்ள
விரும்புவோர் மேற்கண்ட நூலை அவசியம் படித்துப் பார்க்க
வேண்டுகிருேம். மஹ்மூத் அவர்கள் அந்த நூலின் 12ம் பக்கத்தில்
இவ்வாறு கூறுகிறார்,...



"அல்பானியே! இது உமது தீய நடத்தை மற்றும் முட்டாள்தனத்தில்
நின்றுமுள்ளதாகும்." எனக் கூறுகிறார், அல்பானியுடன்
கரம் கோத்து நின்றவர்கள் அனைவரும் இறுதியில் அவரை தூற்றத்தான் 
செய்தனர்.


இன்னும் இந்த அல்பானி மிகக்கெட்ட வழிகேடரும் வழி
கெடுப்பவருமாகும். இவரைத்தான் இன்றுள்ள வஹ்ஹாபிகளெல்லாம் தங்களின் இமாமாக எண்ணி பின்பற்றுகின்றனர்
இவர் தனது சுயவிருப்பப்பிரகாரம் ஹதீதுகளுக்கு தீர்ப்புக்கூறி 
எண்ணிலடங்காக ஹதீதுகளை  ஓரங்கட்டச்செய்தவராகும். இவர்
எந்த ஹதீதை ஸஹீஹானதென்று சொன்னாரோ அதைத்தான்
இவருடைய சகாக்கள் ஆதாரமாகக்கொள்கின்றனர். மற்றபடித்த
ரங்களை உடையலத்துகள் எல்லாம் ஓரங்கட்டி விட்டனர்.

மேலும் இந்த அல்பானி ஹதீதுகளுக்குத்  தந்த தீர்ப்புக்கள்
சரியானவை தானா? அல்லது ஒரு ஹதீதுக்கு பல்வேறுவகையான
தீர்ப்புக்கள் சொன்னா என்பதை தெரிந்துகொள்ள விரும்பு
வோர் "தனாகுழாத் அல்பானில் வாழிஹாத்" என்னும் பலபாகங்களை கொண்டதும் நூலை பார்வையிட வேண்டுகிறோம்.

இன்னும் அல்பானி ஹதீதுக்குரிய ஆய்வுகளில் தவறாக தீர்ப்ப
ளித்தவர் என்பதை அவரை அல்லாமா எனப்போற்றிப் புகழும்
நாஸிர் லாலிம் என்பார் "அல்கௌலுல் மன்வூத் பி தஃப்ஸீலில்
பஸ்மலத்தி வல்குனூத்" என்னும் நூலின் 18ம் பக்கத்தில்,...



"நான் கூறுகிறேன். இந்த ஹதீதுக்கு தரப்பட்ட தீர்ப்பு: அல்பானியின்
கற்பனையாகும். பின்னும் இந்த ஹதீதுடைய விஷயத்தி (தீர்ப்பி)ல்
அல்பானி தவறிழைத்து விட்டார்" என்று கூறுகிறார்.

வாசகர்களே! இவரால் தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட ஹதீத்  எது
தெரியுமா? பஸ்மலா - அதாவது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்
ரஹிம் பற்றிய ஹதீதாகும். இந்த ஹதீத் ஸுனன்  அபூதாவுதில்
எண்4001லும், இமாம் அஹ்மத் அவர்கள் தமது நூலின் 6ம்
பாகம், 302ம் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக "இர்வா
வுல் அலில், 2-60ல் குறிப்பிட்டுள்ளார். "

தமிழக இஸ்லாமியரிடையே அல்பானியை அல்லாமா எனக்கூறுவோர் இதை நமக்குக் காட்டித் தருவார்களா? இவருக்கும் பெயர் ஷைகுதான். அதேநேரம் இவருடைய தோழர்களுடைய பட்டப்பெயரும் ஷைகுதான். தனது கற்பனைக்கேற்றவாறும் சுயவிருப்பப்படியும் ஹதீதுக்கு தீர்ப்பளிக்கும் ஒருவரைதனது முன்னோடியாகக் கொள்ளும் சமூகத்தைவிட ஒருமோச
மான கீழ்த்தரமான சமூகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா 
என்ன?

இன்னும் அல்பானி ஹதீதுகளை மோசடித்தனம் செய்பவராகும் என்பதோடு ஹதீதுக்கு சுயமானதோர் விளக்கம் தருபவர்
கண்டிப்பாக முன்னோர்களின் விளக்கத்திற்கு மாறான புதியதோர்
விளக்கத்தை தான் கூறுவார். இப்படி சுய விளக்கம் தருவோரை
குறித்து நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள்
இவர்கள் பொய் தஜ்ஜால்கள் என்றும், இத்தகையோரை பின்பற்
றுவதை குறித்து உங்களைதான் எச்சரிக்கிறேன் என்றும் கூறியுள்ள
வார்த்தை உங்களுக்கு நினைவிருக்குமென்று எண்ணுகிறோம்.


நஜ்திய உலமாக்களே! சுவூதிய மன்னர்களே! 

எங்களின் உயிர் நாடியான உயிருக்கும் மேலான உயிருக்குள்
உயிராக உறைந்துள்ள உத்தமத் திருநபி صلى الله عليه و سلم   வர்களின் புனித தேகத்தை தனக்குள் கொண்டுள்ள
இடமானது எங்களுக்கு ஹரமை விட என்பதல்ல. அர்ஷை
விடவும் மேலான ஒன்றாகும். ஆனால் அப்புனித இடம் உங்கள்
பார்வைக்கு நீங்கள் சிலை வணங்கிகளின் அரவணைப்பில் வாழுவதால் சிலையாகத் தென்படுகிறது. அதனால் தான் அதை உடைக்க
வேண்டும். 

கட்ரை அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம்
மாறி மாறி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.
ஆம். 450 வருடங்களாக ஓலமிட்டு வரும் நீங்கள் அல்லாஹ்வின்
மீதாணையாக ஒருக்காலும் செய்யவே முடியதென்பது மட்டும்
திண்ணம்.

இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்குச் செய்த ஏன் இன்றைக்கும்
செய்து கொண்டுள்ள அராஜகங்களில் இதுவும் ஒன்றாகும்.
அதாவது, உங்களின் கொள்கைக்கு மாற்றமான நூல்களை
இல்லாமலாக்குவதும், அதனுடைய அறிவிப்பாளர்களை ஆய்வு
செய்வது போல பாசாங்குக் காட்டி அவர் மீதுள்ள குற்றச்சாட்டை
மட்டும் எடுத்துக் காட்டி ஹதீதைப் பொய்யாக்குவதும் அல்லது
வசனங்களை மாற்றியமைப்பதும் தான் நீங்கள் இஸ்லாத்திற்கு
செய்யும் துரோகங்களில் மாபெரும் துரோகமாகும். 

இதற்கு உதாரணமாக "அல் அத்கார் என்னும் நூல் இமாம் நவவிக்குச் சொந்தமானதாகும். இந்த நூல் ஹிஜ்ரி 1409ல்  ரியாதிலுள்ள தாருல் ஹுதா பதிப்பகத்தில் அச்சானபோது அந்நூலின் 295ம் பக்கத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அவர்களின் ரவ்லா ஷரீபை தரிசிப்பது தொடர்பான பாடம் எனத் தலைப்பிட்டிருந்த தலைப்பானது , நாயகம் அவர்களின் பள்ளியை தரிசிப்பது தொடர்பான பாடம் என்பதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதில் சொல்லப்பட்டிருந்த உத்பா உடைய சம்பவம்  உட்பட பலவிஷயங்கள் அகற்றப்பட்டு அச்சிடப்பட்டிருந்தது. அந்நூலின் முஹக்கிக்கான அப்துல் காதிர் அர்னாவூத் என்பார் அந்த அச்சகத்தாரிடம் கேட்ட பொழுது அவர்களால் தரப்பட்ட பதிலுக்குரிய எழுத்துப் பிரதி நம்மிடம் இருக்கிறது ".

"ஹனபி மத்ஹபின் சட்டக் கோர்வையான இப்னு ஆபிதீனுடைய ஹாஷியாவில் அவ்லியாக்கள் , அப்தால்கள் , நல்லடியார்கள் பற்றிய பகுதி நீக்கப்படுள்ளது . "

"இப்னு தைமிய்யாவுடைய  பத்வாவுடைய 10ஆம் பாகமான தஸவ்வுப் தொடர்பான பாகம் நீக்கப்படுள்ளது ". என்பன போன்றவைகளை குறிப்பிடலாம் . 





Tuesday, 16 June 2020

நஜ்திய உலமாக்களுடன் ஒரு நிமிடம் -1

ஷைகுன் நஜ்தி முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபால் தோற்றுவிக்கப்பட்ட மத்ஹபானது வழிகேட்டின் ஊற்றுக்   கண்ணாக திகழ்ந்ததோடு , முஸ்லீம்களும் ,முவஹ்ஹிதீன்களும் காபிர்களெனத் தீர்ப்பளிக்கப்பட்டு ,ஆண்கள் கொல்லப்பட்டும் ,பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் கேவலப்படுத்தப்பட்டனர் .அத்தோடு தாங்கள் விரும்பியவாறு எல்லாம் மனம் போன போக்கில் குர்ஆனுக்கும் , ஹதீதுக்கும் விளக்கமளித்தனர் . இவையனைத்தும் உண்மையிலேயே புண்ணிய பூமியான குர்ஆன் இறங்கிய மண்ணில் நபிகள் நாயகம் அவர்களும் ,அவர்களது அருமைத் தோழர்களும் நடமாடிய மண்ணிலேயே இப்படிப்பட்டதோர் நிலை ஏற்படுத்தப்பட்டதென்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் ?

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை முஷ்ரிக்குகள் என்றும் .அஜமிகளான நம்மை அடிமைகளென்றும் கருதக்கூடிய சவூதிய நஜ்த் உலமாக்களையும் , இப்னு சவூதின் மன்னர்களையும் இப்போதும்கூட மதிப்பவர்கள் ,அவர்கள் தங்களின் நாவால் ஏகத்துவ கலிமாவை உச்சரிக்கிறார்களே என்னும் ஒரே காரணத்திற்காக தான் . நாவால் கலிமாவை உச்சரித்து உள்ளத்தால் முனாஃபிக்குகளாக இருந்தாலும் அவர்களை குறித்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை உடைய , சகல நிலைகளிலும் மூஃமின்களாக உள்ள  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை  உதாசீனப்படுத்தும் வேலையைத் தான் அவர்கள் செய்கின்றனர் .

இவர்களால் முன்னொரு காலத்தில் தானே இப்படியெல்லாம் நடந்தது . இப்போது அப்படியெல்லாம் இல்லையே . முன்பு நடந்ததைச் சொல்லி இப்போது முஸ்லிம்களின் ஒற்றுமையை நாம் சிதைக்கப் பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம் . அதனால் தான் இவர்கள் இஸ்லாமியர்களுக்கு இழைத்த கொடுமைகளை எல்லாம் இவர்களை ஆதரிக்கும் இந்திய உலமாக்களைக் கொண்டே ஆதாரப்படுத்திய நாம் ,அவைகளெல்லாம் அப்பட்டமான உண்மை என்பதோடு இன்னும் அதே நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை குவைத் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சரும் , இஸ்லாமிய சட்டசபை அமைச்சருமாக இருந்த ஷெய்கு அஸ்ஸெய்யித் யூசுப்  இப்னு ஹாஷிமுர்   ரிபாயி அவர்களின் நூலாகிய "நஜ்திய சகோதர உளமக்களுக்கு ஓர் உபதேசம் (நஸீஹா லி இக்வானினா உலமா நஜ்த் )" என்னும் நூலிலிருந்து சில கருத்துக்களை எடுத்து உங்களின் பார்வைக்கு தருகின்றோம் .

ஷெய்கு அஸ்ஸெய்யித் யூசுப்  இப்னு ஹாஷிமுர்   ரிபாயி


* "உங்களோடு தொழுது கொண்டும் , நோன்பு நோற்றுக் கொண்டும் ,ஸகாத் கொடுத்துக் கொண்டும் , திரும்பத் திரும்ப ஆண்டவனே உனக்கே நாங்கள் வழிபட்டோம் . உனக்கு யாரும் நிகரில்லை . நிச்சயமாக புகழனைத்தும் உன்னையே சாரும் . அதிகாரமும் உனக்கே உரியது எனக் கூறும் முவஹ்ஹிதீன்களான முஸ்லிம்கள் மீது பழி சுமத்தக் கூடாது "  என்று சொல்லப்பட்ட பண்புக்குரிய நல்லடியார்களுடைய விஷயத்தில் இப்போதும் முஷ்ரிக்குகள் என்னும் கருத்தில்தான் இவர்கள் இருக்கின்றனரா இல்லையா ?



*  " இஷா தொழுகை முடிந்ததும் நாயகம் அவர்களின் கண்ணியத்திற்குரிய பள்ளிவாசலை மூடி விடுகிறீர்கள் . இது இஸ்லாமிய வரலாற்றில் எங்குமே காணப்படாத ஒன்றாகும் . இவ்வாறே அப்பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதையும் , தஹஜ்ஜத் தொழுவதையும் தடுக்கிறீர்கள் " இது ஏன் ? இதற்கு என்ன காரணம் ? இந்த உரிமையை உங்களுக்கு தந்தது யார் ? உங்களை யாராலும் கேட்க முடியாது என்ற அகம்பாவம் தானே ? உங்களுக்கு உலகத் திருத்தூதர் நாயகம் அவர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு ?


  * " புண்ணிய பூமியான மதீனா முனவ்வரா மற்றும் மக்கா முகர்ரமாவின் வெளிப்பகுதியில் இறப்பெய்தும் முஸ்லிம்களை அங்குள்ள ஜன்னத்துல் முஅல்லாவிலும் ,ஜன்னத்துல் பஃகீ யிலும்   நல்லடக்கம் செய்வதை ஏன் தடுக்கின்றீர்கள்   ? அல்லாஹ்வும் , அவன் றஸுலும் நேசிக்கின்ற அப்புண்ணிய பூமியில் நல்லடக்கம் செய்ய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளை பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம்களை நீங்கள் தடுக்கின்றீர்கள் ".

ஜன்னத்துல் பகீஃ பற்றி அண்ணலெங்கோமான்  அவர்கள் என்ன சொலிகிறார்கள் என்று பாருங்கள் .


" அதிலிருந்து மறுமை நாளன்று பதினான்காம் பக்கத்து நிலவைப் போன்ற தோற்றத்தில் எழுபதாயிரம் பேர் எழுப்பப்படுவார்கள் . அவர்களனைவரும் கேள்வி கணக்கின்றி சுவர்கத்துக்குள் நுழைவார்கள் ".


"எங்களது இம்மையவாடியில் யார் அடக்கம் செய்யப்படுகிறாரோ அவருக்கு நாம் ஷபாஅத்து செய்வோம் . அல்லது அவருக்கு நாம் சாட்சி சொல்வோம் என்கிறார்கள் ஏந்தல் நபி அவர்கள் "

[ நூல் :  அத்துர்ரதுஸ்  ஸமீனா ஃபீ தாரீகில் மதீனா  ,   பக்கம் -229]

ஸவூதியின் வஹாபிய உலமாக்களே ! இந்த நபிமொழிகள் உங்களுக்கு தெரியாதா ? அல்லது நீங்கள் ஷபாஅத்தை பொய்ய்யாக்கும் கூட்டமா ?

" விசுவாசிகளே ! உங்களின் தொனியை நபிகள் நாயகம் அவர்களின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் . இன்னும் உங்களில் ஒருவரை இன்னொருவர் அழைப்பதைப் போன்று நபியவர்களை அழைக்காதீர்கள் . அன்றி அவ்வாறு செய்வீர்களாயின் உங்களது  வணக்கமெல்லாம் தவிடு பொடியாகிவிடும் . ஆனால் அதை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது . "

என்பதாக அல்லாஹ் வன்மையாக எச்சரித்த பின்னும் நாயகம் அவர்களின் தர்பாரில் அவமரியாதையாக நின்று கொண்டு உரத்த குரலில் சப்தமிடுவதற்காக சிலரை அமர்த்தீயுள்ளீர்களே .அல்லாஹ்வை அஞ்சாத யூத ,கிறிஸ்தவர்களின் பொம்மைகளா நீங்கள் ?


* அருமை நாயகம் அவர்கள் தங்கள் முபாரக்கான கரத்தால் சகோதரர் உஸ்மான் இப்னு மழ்வூன் அவர்களின் கப்ரை அடையாளம் கண்டு கொள்வதற்காக கல் ஒன்றை வைத்தார்கள் .

"யார் அக்கல்லை பாய்ந்து தாண்டுகிறாரோ அவர் எங்களில் அதிக  உயரம் தாண்டுபவர் என்று கணிக்கப்படும் அளவுக்கு அக்கல் உயரமானதாக இருந்தது ".

அனால் நீங்கள் அருமை ஸஹாபா பெருமக்கள் , உம்மஹாத்துல் முஃமினீகள் ,அஹ்லுஸ் பைத்தினர்களின் சங்கைமிகு கப்ருகளையெல்லாம்      சுடுகாட்டைப் போலாக்கி விட்டீர்கள் .குப்பாக்கள் மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்வு ?

* " அருமை நாயகம் அவர்களின் தர்பாருக்கு அருகிலேயே காரியாலயம் ஒன்றை அமைத்து நபியவர்களின் முன் அழுது பிரார்த்திப்பவரையும் , உள்ளச்சத்தோடு காணப்படுபவரையும் அதிகமாக ஸியாரத்துச் செய்பவரையும் அழைத்து விசாரணை நடத்துவது ஏன் ? "



* " கொடை வள்ளல்களில் ஒருவர் தமது சொந்த செலவில் கந்தக் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஹழ்ரத் செய்யிதினா ஸித்தீகுல் அக்பர் அவர்களின் அப்பள்ளிவாசலை உடைத்து புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதித்தீர்கள் . ஆனால் பழைய பள்ளிவாசல் உடைக்கப்பட்ட பின் அப்பள்ளியை புனர்நிர்மாணம் செய்யவிடாமல் அவரை ஏன் தடுத்து விட்டீர்கள் . அத்துடன் அப்பள்ளி அடைக்கப்பட்டதைக் கண்டு சந்தோசம் அடைகின்றீர்கள் "

* " ஆரிபுபில்லாஹ் முஹம்மத் ஸுலைமான் ஜஸுலி  அவர்களால் கோர்வை செய்யப்பட்ட  ஸலவாத் நூலை  ஓதுவதை தடுப்பதோடு ,மவ்லித் ,மீலாத் போன்ற நிகழ்ச்சிகளையும் வன்மையாக ஏன் கண்டிக்கின்றீர்கள் ? "

* " நாஸிருல் அல்பானி , முக்பில் இப்னு ஹாதி போன்ற  அல்லாஹ் ரஸூலின் விரோதிகளை அவர்கள் விரும்பும் கருத்துகளை சொல்ல அனுமதித்தது ஏன் ? "

அல்பானி 'அஹ்காமுல்  ஜனாயிஸி வபிதஹியாவிலும் ' , முக்பில் இப்னு ஹாதி   போன்ற அல்லாஹ் ரசூலின் விரோதிகளை அவர்கள் விரும்பும் கருத்துகளை சொல்ல அனுமதித்தது ஏன்


அல்பானி 'அஹ்காமுல் ஜனாயிஸி வபிதயிஹாவிலும்' மற்றும்  

முக்பில் இப்னு ஹாதி ' ஹவ்வில் அல் குப்பத்த மப்னிய்யத அலா கப்ரிர் ரஸூல் ' என்பதிலும் பகிரங்கமாக நபியவர்களின் ரவ்லா ஷரீபின் மீது கட்டப்பட்டுள்ள குப்பா பித்அத் என்று தீர்ப்பளித்து அப்பள்ளியில் இருந்து நபி அவர்களின் கபூரை அப்புறப்படுத்த வேண்டும், குப்பாவை உடைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த பின்னரும் அந்நூலை ஏன் பிரசுரித்து கொண்டு இருக்கிறீர்கள் ?


அப்படி என்றால் நீங்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் காத்தமுன் நபி அவர்களின் திருவுடலை திருட வந்த திருட்டுக் கூட்டத்தின் சகாக்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?


இந்த முக்பில் இப்னு ஹாதியின் மாணவர்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் பின் யஹ்யா என்பார் ' கவாரிவுல் அஸி ன்னத்தி பிர்ரத்தி அலா அதாயிஸ் ஸுன்னத்தி ' என்னும் நூலின் 28 வது பக்கத்தில் சிலை வணங்கிகள் என்னும் தலைப்பில் எங்களுடைய காலத்தில் சிலை வணக்கங்கள் அதிகரித்து விட்டன .அச்சிலைகளில் ஒன்றுதான் நபியவர்களுடைய புனித மிகு ரவ்ழாவாகும் எனக் கூறுகிறார் .

ஷைகு நஜ்தியின் குடும்பத்தார் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களின் புனித ரவ்லா ஷரீப் இனை ஒரு சராசரி மனிதன் கூட சொல்ல முடியாத
வாக்கியங்களைக் கொண்டுகொஞ்சம் கூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர் . அதேநேரம் இவர்களுக்கு முழுக்க முழுக்க உதவிசெய்யும் அந்நாட்டு மன்னர்களில் ஒருவரான அமீர் பைஸல் , அந்த நாட்டின் துணை பிரதமராக இருந்தபோது (1959ஆம் ஆண்டு ) இந்தியாவுக்கு வருகை தந்தவர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக நவாயே வக்த் என்னும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டியிருந்தது கவனிக்கத்தக்கதாகும் .

[ நூல் - தாரீக் நஜ்தோ ஹிஜாஸ் , பக்கம் 424]









Wednesday, 15 April 2020

இலங்கையில் வஹாபியிசம் - 2

தப்லீக் ஜமாத் இயக்கத்திற்கு எதிராக அதன் உண்மை நிலைகளை தெளிவுபடுத்த தொகுக்கப்பட்ட தமிழ் நூற்கள் இன்றும்கூட பாதுகாப்பாக இருக்கின்றன . நலன் விரும்பிகள் அவைகளை மறுபிரசுரம் செய்து சத்தியத்தை பாதுகாக்க முன் வரலாம் . இன்னும் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையை முழுக்க முழுக்க ஆதரிக்கும் உலமாக்கள் மற்றும் பாமரர்கள் ,படித்தவர்கள் போன்றோர் அவ்வியக்கத்தில் சேர்ந்து அவர்களை நாம் திருத்தலாம் என்று நினைப்பார்களாயின் அவர்களின் எண்ணம் கானல் நீராகத்தான் முடியும்.

அத்துடன் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் தவறான வழியில் செல்வதற்கு இவர்களே காரணமாகி விடக்கூடாது . அத்துடன் இவ்வியக்கம் வஹாபிகளின் இயக்கமல்ல என்பதை நிரூபிக்க குரல் கொடுப்போர் மேற்கண்ட ஆதாரங்கள் குறித்து என்ன பதில் தருவார்கள் என்பதை தெளிவுபடுத்துவதோடு ,அவர்கள் உலமாக்களால் அப்போது கூறப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் கருத்துக்களுக்கு விளக்கம் தருவதே இப்போது போதுமானதாகும் . புதிதாக ஏதும் விளக்கம் தர தேவையில்லை என்று நினைக்கின்றோம் .நாம் அக்கருத்துக்கள் அனைத்தையும் வன்மையாக எதிர்ப்பவர்கள் . பின்னும் ஸுன்னத் வல் ஜமாத்தினர் தான் சத்தியத்தில் நிலைத்து நிற்கும் கொள்கைவாதிகள் .


அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அருமை நாயகம் அவர்களின் நேசர்களே ! மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவரும் அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது அவர்களின் மீது கட்டாயமான கடமையாகும் .இதில் மாறு செய்பவன் தண்டிக்கப்படுவான் . அதேநேரம் அவனை மன்னிப்பது அல்லாஹ்வின் விருப்பத்தை பொறுத்தது . இதில் இறையாணையை நிறைவேற்றியவனுக்கு அவன் சன்மானம் வழங்கி சிறப்பிக்கின்றான் . அதேநேரம் அவனால் நிகழ்த்தப்படும் வணக்கங்கள் அவனை சுவர்கத்துக்கு அழைத்துச் செல்லாது . இன்னும் ஒரு மனிதனின் வெளிப்படையான வணக்க வழிபாட்டை கவனத்தில் கொண்டு அவனை சுவர்க்கவாதி என்று கூற யாருக்கும் உரிமை கிடையாது .


மாறாக சுவர்க்கம் செல்லுதல் என்பதெல்லாம் அல்லாஹ்வின் பேருபகாரத்தைக் கொண்டுதான் . இன்னும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை கொண்டுதான் ஒருவன் சுவர்க்கம் செல்ல முடியும் என்னும் நபிமொழி நமக்கு கூறும் ஒரு மிகப்பெரும் யதார்த்தமான விஷயம் என்னவென்றால் யாரை நமது நபிகள் நாயகம் صلى الله عليه وآله   அவர்கள் பொருந்திக் கொண்டார்களோ அவர்தான் சுவர்க்கம் செல்லமுடியும் என்பதேயாகும் . மேலும் நமது நாயகம் صلى الله عليه وآله  அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் என்பது அல்லாஹ்வின் வாக்காகும் .

ஆதலால் ஒரு மனிதனுடைய வணக்கம் , உடல் அமைப்பு , ஆடை , மொழிவன்மை   போன்றவைகளை கவனித்து நாம் ஏமாளிகளாகிவிடக்கூடாது . இதை நிரூபிக்க வரலாற்றின் உண்மை சம்பவம் ஒன்றை உங்களின் பார்வைக்கு தருகின்றோம் . படித்துப் பயன்பெறுங்கள் .

ஹிஜ்ரி 511ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 11ஆம்  நாள் ஞாயிற்றுக்கிழமை சூரியோதய நேரத்தில் ஹலப் என்னும் ஊரில் பிறந்து ஹிஜ்ரி 580ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் 11ஆம் நாள் புதன்கிழமையன்று இறையடி சேர்ந்த திமிஷ்க்கில் நல்லடக்கம் செய்யப்பட்டவர் அல் ஆதில் நூருத்தீன் மஹ்மூத்   பின் ஸங்கீ ஷஹீத் என்னும் அரசராகும் .

இப்பெரியாரின் கப்ரை பற்றி இமாம் இப்னு கதீர் رحمه الله அவர்கள் ,இவருடைய கப்ரு தரிசிக்கப்படுவதாகவும், தரிசிப்போர் அங்கிருந்து பரக்கத்தை பெற்றுச் செல்வதாகவும்   கூறுகின்றார்கள் . இன்னும் இமாம் தஹபி رحمه الله அவர்களும் மக்கள் இப்பெரியாரை ஸியாரத்துச் செய்வதாக கூறுகின்றனர் . இப்பெரியாரின் கனவில் ஒருநாள் இரவு கண்மணி நாயகம் صلى الله عليه وآله அவர்கள் மூன்றுமுறை தோன்றி இரு நபர்களை சுட்டிக்காட்டி அவ்விருவரும் தனக்கு தீங்கு விளைவிப்பதாக கூறினார்கள் . கனவைக் கண்ட அன்றிரவே தமக்கு நெருங்கிய அமைச்சர் ஜமாலுத்தீன் என்பாரை அழைத்து நடந்ததைக் கூறி விஷயத்தை மறைத்து வைக்குமாறும் , உடனே மதீனா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கூற , ஏற்பாடு செய்யப்பட்டு இருபது சிப்பாய்களோடு பதினாறு நாட்களில் மதீனா வந்து சேர்ந்தனர் .

இதில் நாயகம் صلى الله عليه وآله அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட அவ்விருவரையும் கண்டுகொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை . இந்நிலையில் அங்கே மக்ரிப் - மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் மட்டும் வரவில்லை  என்றும் அவ்விருவரும் யாரிடத்திலும் எதையும் பெறுவதில்லை என்றும் மாறாக அவர்கள் மக்களுக்கு வாரி வழங்கு தனவந்தர்கள் என்றும் அரசருக்குச் சொல்லப்பட்டது .மேலும் ...


" அவ்விருவரும் சதா நோன்பு நோற்பதாகவும் , ரவ்ழா ஷரீஃபில் தொழுகையை நிறைவேற்றுவதாகவும் , அதிகமதிகம் நாயகம் صلى الله عليه وآله அவர்களின்  ரவ்ழா ஷரீபை ஸியாரத்துச் செய்வதாகவும் ,தினந்தோறும் அதிகாலையில் ஜன்னத்துல் பகீயை தரிசிப்பதாகவும் ,சனிக்கிழமை தோறும் மஸ்ஜிதுல் குபாவை தரிசிப்பதாகவும் ,கேட்போருக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது வாரி வாரி வழங்குவதாகவும் அவர்களைப் பற்றி மக்கள் புகழந்து பேசினர் " .

அதுகேட்ட அரசர் அவ்விருவரையும் பார்க்க வேண்டுமென்று சொல்ல அவ்விருவரும் வருகை தந்தனர் . கனவில் காட்டித்தரப்பட்டவர்கள் இவர்கள் தான் என்று அரசர் கண்டுகொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்று பார்த்தபொழுது அங்கே அதிகமான பணமும் வேறு சில பொருட்களும் தான் இருந்ததேயன்றி வித்தியாசமான எதுவும் இல்லாததால் அரசர் தனியாக வீட்டைச் சுற்றி பார்த்தபொழுது அங்கே விரிக்கப்பட்ட பாய் ஒன்றை உயர்த்திப் பார்த்தபொழுது ...


"அருமை நாயகம் صلى الله عليه وآله அவர்களின் புனிதமிகு ரவ்ழா ஷரீஃபிற்கு சென்று சேரும் சுரங்கப் பாதையொன்று தோண்டப்பட்டிருப்பதைக் கண்ட அனைவரும் திகைத்துப் போயினர் "

உடனடியாக அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர் . அதன்பின் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே  அவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களால் அனுப்பப்ட்டவர்கள் என்றும் தாங்களும் கிறிஸ்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டனர் . இதன்பின் அவ்விருவரும் கொல்லப்பட்டனர் . அதற்குப்பின் ரவ்ழா ஷரீபை சுற்றி ஈயத்தினால் ஆன வெலி உள்ளே போடப்பட்டது .

சகோதரர்களே ,பார்த்தீர்களா ! அல்லாஹ்வுடைய ரஸூலின் விரோதிகள் எந்த வேஷத்தில் செயல்பட்டுள்ளனர் என்பதை கவனித்தீர்களா ? 900  ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அனைவராலும் கண்டு கொள்ளமுடியாமல் போயிருக்கும்போது இப்போது உங்களால் அவர்களை கண்டுபிடிக்க முடியுமா ?

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரைத் தவிர அனைத்து இஸ்லாமிய பெயர் தாங்கி இயக்கங்களும் இஸ்லாத்தின் விரோதிகள் தாம் . ஆதலால் அவர்களின் சகவாசம் உங்களுக்கு வேண்டாம் . இன்னும் அவர்கள் தம்மையும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினர் தாம் என்று எனப் பிரச்சாரம் செய்து கொண்டாலும் , வஹாபிஸம் வழிகேடு என்பதை அவர்கள் உணர்ந்தும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் ,صلى الله عليه وآله அவர்களின்  ரவ்ழா ஷரீபையும் ,மஸ்ஜிதுன் நபவியையும் பிரிக்க வேண்டும் ;மஸ்ஜிதுந் நபவிக்குள் கப்ரு இருப்பது வழிகெடுக்குரிய செயல் என்று சொல்லும் தரங்கெட்ட கொள்கைவாதிகளே !

தனது திருவுடலை திருட வந்தவர்கள் பற்றி முன்னறிவிப்புச் செய்த நபியவர்கள் , அம்மன்னனிடம் ; மக்கள் தனது கப்ரை பள்ளிக்குள் வைத்துள்ளனர் ,கப்ரு இருக்கும் பள்ளிவாசலில் தொழக் கூடாது , ஆதலால் எனது கப்ரையும் ,பள்ளியையும் தனித்தனியாக பிரித்து விடுங்களென்று ஏன் சொல்லாமல் விட்டு விட்டார்கள் ?   அதுசரி ! மனிதர்களாக இருந்தார்களென்றால் அல்லவா இவர்கள் சிந்திப்பார்கள் !

பின்னும் நாயகம் صلى الله عليه وآله அவர்களால் பள்ளிவாயிலில்  தொழுது கொண்டிருந்த ஒருவனை கொலை செய்யுமாறு தனது தோழர்களுக்கு கட்டளையிட்டார்களே நபியவர்கள் ! அக்கொடியோனின் வாரிசுகள் இவர்கள் . ஆதலால் வெளித்தோற்றத்தை கண்டு ஏமாந்து விடவேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .

மேலும் பள்ளியின் உட்பகுதியில் (தொழுவோருக்கு இடைஞ்சல் ஏற்படும் வண்ணம் ஹராமான முறையில் ) புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பது முதன் முதலில் கி.பி.1806 - ஹிஜ்ரி 1221ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 7ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்றுதான் மக்கா முகர்ராமாவில் ஹரம் ஷரீபில் வைத்து நஜ்திய வஹாபிய புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்டது . இதைப் பின்பற்றித்தான் பள்ளியின் உட்பகுதியில் புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை முகல்லிதுகள் ஏற்படுத்தினர் .



Wednesday, 11 March 2020

இலங்கையில் வஹாபியிசம் - 1

இனி இலங்கை நாட்டில் தோன்றிய வஹாபிய கூட்டம் பற்றி நமது பார்வையை இப்பொது திருப்புவோம் . 1951 ஆம் ஆண்டு கல்முனையில் வைத்து மாநாடு ஒன்று நடைபெற்றது . அந்த மாநாட்டை பற்றி ( இரு வழிக்கு ஒரு வழித் தேர்வு ) என்று பத்வா ஒன்று கொடுக்கப்பட்டு அது அன்று பிரசுரமாக வெளியிடப்பட்டது . அதன்பின் அப்பிரசுரம் 28/09/1997 ல் நீர்க்கொழும்பில் பலஹத்துறையில் வைத்து நடைபெற்ற அகில இலங்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் மஜ்லிஸுல் உலமா சபையின் ஏழாவது ஆண்டு நிறைவு விழாவில் எளிய தமிழ் நடையில் 'திரை கிழிந்தது , வஹாபிகள் தப்பி ஓட்டம் ' என்னும் பெயரில் மறுபிரசுரம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது .

மேலும் அம்மாநாட்டில் நீதிபதியாக அன்று நியமிக்கப்பட்டவர்  அஸ்ஸகுமுல்  காரி ஃபீ  ஐனிஸ் ஜிந்தீகில் ஃபாஸிக் - பாவியாகிய வழிகேடரின் கண்ணை துளைக்கும் அம்பு என்னும் பெயரால் ஒரு நூலை அச்சிட்டிருந்தார் . அவர்தான் வெலிகம மத்ரஸதுல் கிழ்ரியா அரபிக் கல்லூரியின் அதிபரான மவ்லானா ஏ.எச்.ஏ.எம்   ஆலிம் அவர்கள் . இன்னும் அப்பிரசுரம் பல உலமாக்களால் சரிகாணப்பட்டு அவர்களுடைய கையெழுத்தோடு கொழும்பு வீரகேசரி அச்சகத்தில் ஜனாப் எம்.கே.ஏ மஹமூத் லெப்பை என்பாரின் முயற்சியால் 1951 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது .  அந்த பத்வாவில் கையொப்பமிட்டிருந்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு ....

1 . மவ்லவி எஸ்.யு.எம்.ஹிபதுல் கரீம் ஆலிம் பாகவி - தலைவர், ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு .

2. மவ்லவி காரீ டபிள்யூ.எச் .எல் .எம் . றாமிஸ் ஆலிம் -காரியதரிசி , ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு .   

3.மவ்லவி ஸெய்யித் ஸஹ்ல் பின் ஸெய்யித் தாஹா மெளலானா , வலிகாமம் .

4. மவ்லவி    டபிள்யூ .முஹம்மத் ரிழா ஆலிம் பஹ்ஜி , வலிகாமம் .

5. மவ்லவி எச் .எல் .எம் .உஸ்மான் ஆலிம் ,வலிகாமம் .

6. மவ்லவி எம் .எம் .முக்தார் ஆலிம் , அதிபர் அல்காமம் அரபிக் கல்லூரி .

7. மவ்லவி இஸட் . எல் .எம் நஜ்முத்தீன் பஹ்ஜி , தடாலி .

8. மவ்லவி ஏ .எல் .எம் .அதாவுல்லாஹ் ஆலிம் பாகவி , வலிகாமம் .

9. மவ்லவி என் .டி .அப்துர் ரஸ்ஸாக் ஆலிம் ஜமாலி ,ஆசிரியர் அல் இல்ம் ,கொழும்பு .

10. மவ்லவி எம் .ஸெய்யித் அஹ்மத் ஆலிம்  பஹ்ஜி , காழியார் களுத்துறைபகுதி  .

11. மவ்லவி யு .எல் .எம் .ஹாமீம் ஆலிம் பஹ்ஜி , அதிபர் ஸாவியா அரபிக் கல்லூரி ,வலிகாமம் .

12. மவ்லவி என் .டி .ஏ  அபுல் ஜமால் முஹம்மத் பக்ருத்தீன்  ஆலிம் - கிருஷ்ணாஜிப்பட்டிணம் ,தஞ்சாவூர் .

13. மவ்லவி ஏ .எல் .எம் . கவுஸ் ஆலிம் பாகவி , பஞ்சிகாவத்தை கொழும்பு .

14 . மவ்லானா எம் .ஸெய்யித் பழ்லுல்லாஹ் பஹ்ஜி அகியோர்களாகும் .

இப்பொது அப்பிரசுரத்திலுள்ள சில விஷயங்களை நாம் பார்ப்போம் .

அன்று வஹாபிய கருத்துக்குரிய பிரச்சனையில் கதாநாயகனாக நின்று செயல்பட்டவர் குருநாகல் பறகஹதெனிய  என்னும் கிராமத்தைச் சேர்ந்த 'தர்வேஷ் ' என்பவராகும் . இவர் மார்க்கக் கல்வி கற்பதற்காக இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள பொதக்குடி என்னும் ஊரில் உள்ள மதராசாவிற்குச் சென்றார் . அங்கே இவருடைய ஒழுக்கமின்மை காரணமாக இவர் மத்ரஸாவிலிருந்து நீக்கப்பட்டார் . அதன்பின் வேலூரிலுள்ள மத்ரஸாவிற்கு சென்றார் . அங்கேயும் இவருடைய புத்தி சுவாதீனமற்ற நிலையைக் கண்டதால் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டு ராய வேலூரிலுள்ள ஒரு சிறிய மதரஸாவில் சென்று சேர்ந்தார் .

அங்கே சேர்ந்து ஓரிரு மாதங்களே ஆன நிலையில் இவருடைய தீய நடத்தை காரணமாக அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார் . இப்படி ஒவ்வோர் ஊராக அலைந்து திரிந்தவர் இறுதியில் இலங்கையில் உள்ள நிந்தவூர் என்ற ஊருக்கு வந்து சேர்ந்த பொழுது அவ்வூருக்கு இவர் தர்வேஷ் அப்துல் ஹமீது என்ற பெயரில் அறிமுகமானார் . அதுபோது இவர் போதை பொருட்களை உபயோகிப்பவராக இருந்துள்ளார் . அதன்பின் திடீரென காணாமல் போனவர் 1948 ஆம் ஆண்டு மீண்டும் திரும்பி வந்து ஒரு சங்கத்தை துவக்கினார் . அதுதான்  "அன்ஸார் ஸுன்னத் முஹம்மதியா " என்னும் இயக்கமாகும் .

இது இப்படியிருக்க சாய்ந்தமருது மாளிகைக் காட்டில் தன்னை மஜ்தூப் எனப் பாசாங்கு செய்து நடித்துக் கொண்டிருந்த குட்டி மஸ்தான் வெள்ளைக்குட்டி என்பவர் மணமாகிக் வாழ்ந்து கொண்டிருந்த தன் மகளை ஃபசகு    செய்யவைத்து  பறகஹதெனிய வெள்ளமம்முடரின் மகனான தர்வேஷுக்கு மணமுடித்து கொடுத்தார் .

இந்த தர்வேஷ் சவுதிக்கு போய் வந்தபின் அவ்வூரிலுள்ள மக்கள் அதுவரை கேள்விப்படாத பல்வேறு கருத்துக்களை இவர் பிரச்சாரம் செய்ய துவங்கினார் . இதனால் சாய்ந்தமருது மரைக்காமார்கள் தர்வேஷையும் , ஊரிலுள்ள உலமாக்களையும் பள்ளிவாசலுக்கு அழைத்து யார் சொல்வது சரியானது என்பதை நிரூபிக்க முயன்றனர் .

அதுசமயம் உலமாக்கள் சார்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை  மாவட்டங்களைச் சார்ந்த சுமார் நாற்பது உலமாக்கள் அழைக்கப்பட்டனர் .  ஆனால் அக்கூட்டத்திற்கு தர்வேஷ் வரவில்லை . இதனால் வேறுவழியின்றி அவருடைய கருத்துக்களை  நன்கு அலசி ஆராய்ந்தவர்கள் 02/10/1948 ஆம் தேதியன்று கல்முனை ஆறாம்குறிச்சி  தக்கியா பள்ளியில் வைத்து இவர் ஒரு வஹாபி என்று மார்க்கத்தீர்ப்பு அளித்தனர் .

  இதைக் கேள்விப்பட்ட தர்வேஷ் தமது சொந்த ஊரான பறகஹதெனிக்கு ஓடிப்போனார் . அதன்பின் சில மாதங்கள் கழித்து மாளிகைக் காட்டில் அவருக்குகொரு சொந்த இடம் கிடைத்ததால் மீண்டும் தனது பிரச்சாரத்தை துவக்கியவர் கல்முனைக்குடி மூன்றாம் குறிச்சிக்கும் வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார் .

இப்படி இவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்ததால் அந்தந்த ஊரில் இருந்தவர்கள் பல்வேறு பலவகையான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை நேரிட்டது . அத்துடன் பாமர மக்கள் வெகுவாகக் குழப்பப்பட்டனர் . இந்நிலையில் இதற்கொரு முடிவு காணப்பட    வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டனர் . அதற்காக பலமுறை கல்முனைக்குடியைச் சேர்ந்த தலைவர்கள் மாநாடு ஒன்றை நடத்துவதற்குரிய  அவசியம் குறித்து தர்வேஷிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியும் அதற்கவர் சம்மதிக்கவில்லை .

தர்வேஷ் இசைந்து வராததைக் கண்ட அவர்கள் அதையெனும் மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்  என்பதற்காக 13/07/1951 ஆம் நாள் பிற்பகல் மூன்று மணிக்கு கடற்கரை பள்ளிவாசல் முற்றத்தில் வைத்து நத்வத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி பி.எம் .மக்பூல் ஆலிம் அவர்களின் தலைமையில் மரைக்காமார்களின் ஒத்துழைப்போடு பிரம்மாண்டமான மாநாடு ஒன்று நடைபெற்றது .

அம்மாநாட்டில் நத்வத்துல் உலமா சபை போஷகர் மவ்லவி .எஸ் .எம் .ஏ . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் அவர்கள் மாநாட்டில் முக்கியமான அங்கத்தவராக பங்கேற்று வருகை தந்திருந்த பாமரர்கள் அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தினார் . இவரின்றி இன்னும் பல உலமாக்களும் உரையாற்றும் போது தர்வேஷின் போக்கை குறித்து தெளிவுபடுத்தினர் . ஆனால் தர்வேஷ் வருகை தரவில்லை .

இம்மாநாடு நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பின் 11/08/1951ஆம் நாள் தல்கஸ்பிடி இஸ்லாம் மத ஆராய்ச்சியாளரின் தரப்பிலிருந்து துண்டு பிரசுரமொன்று வெளியிடப்பட்டது . அதில் 12 விஷயங்களைக் குறித்து சொல்லப்பட்டு அவைகளை செய்பவர்கள் தெய்வ வணக்கம் புரிபவர்கள்  என்றும் அவைகளுக்கு தக்க பதிலளிப்போருக்கு 1000
 ருபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்பிரசுரத்தில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களை தெளிவுபடுத்த ஒரு விவாதத்திற்குரிய மாநாடு ஒன்று நடத்தியே தீர வேண்டும் என்பதற்காக மூன்றாம் முறையாக குழுவொன்று உண்டாயிற்று . அதில் ஏ.முஹம்மத் காஸிம் , இ.ஆதம்பாவா , எஸ்.ஏ .மஜீத் , எம்.எச் .எம் . அப்துல் காதர் , எம் .எச் .எம் .ஹனீபா , வி.வி.இ.எல் .முஹைதீன் ஆகியோர் நிர்வாகிகளாக இயங்கினர் .

இக்குழு நத்வத்துல் உலமா சபையையும் , அன்ஸார் ஸுன்னத் சங்கத்தாரையும் விவாதிக்க வருமாறு பகிரங்கமாக அழைத்ததன் பேரில் இரு சாராரும் சம்மதம் தெரிவித்தனர் . அதில் மொத்தம் 22 விஷயங்கள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டன . அவையாவன ,.....

விவாதிக்க வேண்டிய விஷயங்கள் : 


1. அல்லாஹ் அர்ஷில் தான் இருக்கிறான் . 

2. ரஸூலுல்லாஹ்வுக்கு ஷபாஅத் கிடையாது .

3. மவ்லித் ஓதுவது கூடாது .

4.தராவீஹ் எட்டு ரக்அத்துகளே 

5.ஸதகத்துல் பித்ரு ஒரு கொத்து அரிசி மட்டும் தான் 

6.கல்முனைக்குடி  போன்ற கிராமங்களில் பல ஜும்மாக்கள் நடத்தலாம் .

7. இமாம் பூஸிரி காபிர் (நவூதுபில்லாஹ் ) 

8.ஸியாரதுல் குபூர் ஹராம் 

9.ஹயாத்துன் நபி ஹிழ்ர்  இறந்துவிட்டார் . 

10. தொழுகையில் பாத்திஹா சூராவிற்குப் பின் வழல்லாலீனுக்கும் , ஆமீனுக்கும் இடையில் ரப்பிஃக்பிர்லி என்று சொன்னால் தொழுகை பாத்திலாகி விடும் . 

11. தரீக்காக்கள் அனைத்தும் வழிகேடு 

12. அல்லாஹ் அல்லாத வலிமார்களுக்கு நேர்ச்சை செய்வது தெய்வ வணக்கமாகும் . 

13. கப்ரை கட்டுவது ஹராமாகும் .

14. கப்ருகளில் குறிப்பிட்ட நாளில் ஒன்று சேருவதும் மவ்லித் போன்றவைகளை ஓதுவதும் பித்அத்தாகும் .

15. கொடி ஏற்றுவதும் அதற்காக நேர்ச்சை செய்வதும் ஷிர்க்காகும் .

16. ஜனாஸாவை கொண்டு செல்லும்போது சத்தமாக கலிமா போன்றவைகளை கூறுவது வழிகேடு .

17. தல்கீன் , நாள் குறிப்பிட்டு பாத்திஹா ஓதுவது வழிகேடு 

18. மரணித்தவருக்காக குர்ஆன் ஓதுவது வழிகேடு 

19. ஜும்மாவில் மஹ்ஷர் ஓதுவது வழிகேடு 

20 . ஸுபுஹ் தொழுகையில் ருகூவுக்குப் பின்  குனுத் ஓதுவது வழிகேடு 

21. தொழுது முடிந்தபின் கூட்டு பிரார்த்தனை செய்வது வழிகேடு 

22. நேர்ச்சை செய்யப்பட்ட பிராணிகளை உண்பது ஹராம் .


இருவழிக்கு ஒருவழித் தேர்வு  மார்க்க மாநாட்டின் சாராம்ச வரலாறு    :

1951 புரட்டாசி மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு கல்முனை முற்றவெளியில் வைத்து  விவாதத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் கல்முனை தொகுதி பாராளுமன்ற பிரதிநிதி இராசவால் முதலியார் எம் .எஸ் .காரியப்பர் ஜேபி.யு .எம் கல்முனை பிரதேச சபை தலைவர் அவர்களின் தலைமையில் விவாதத்திற்குரிய மாநாடு ஆரம்பமாயிற்று . மவ்லானா முஹம்மத் அலி மரைக்காயர் பின் அஹ்மத் மரைக்காயர் அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்கள் . காரியதரிசியாக அஸ்ஸெய்யித் மவ்லவி பழ்லுல்லாஹ் மவ்லானா அவர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள் . மவ்லவி ஏ.எம் .இப்ராஹீம் அவர்களின் கிராத்துடன் கூட்டம் துவங்கிற்று .

அன்ஸார் ஸுன்னத் சார்பாக வருகை தந்தவர்கள் :

1 . தர்வேஷ் பக்ரி

2.  மவ்லவி அஹ்மத் குர்ணி

3. நெய்னா முஹம்மத் ஆலிம்

4. ஏ .எச் . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம்

5. யு .எல் .எம் . குத்தூஸ்

ஆகியோருடன் பெயர் சொல்லப்படாத நான்கு  நபர்களுமாக ஒன்பது நபர்கள் கலந்து கொண்டனர் . இவர்களில் தர்வேஷும் , அஹ்மத் குர்ணியும் தான் பேச்சாளராக இருந்தனர் .

நத்வத்துல் உலமா சார்பாக வருகை தந்தவர்கள் :

1 . முஹம்மத் இப்ராஹீம் ஆலிம் , காத்தான்குடி

2. எம் .எச் . முஹைதீன் ஆலிம் , மருதமுனை

3. எஸ் .எம் .ஏ . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் , கல்முனைக்குடி    
              
4. பி .எம் . மக்பூல் ஆலிம் ,  கல்முனைக்குடி

5. எஸ் .எம் .கே . அப்துல் காதர் மவ்லானா ,சாய்ந்தமருது

6. ஏ . எம் .முஸ்தபா ஆலிம் , சாய்ந்தமருது

7. எஸ் .எல் .முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் ,நிந்தவூர்

8. இ .எல் . முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் , அட்டாளைச்சேனை

9. ஏ .எம் .புஹாரி ஆலிம் ,அக்கரைப்பற்று

ஆகிய ஒன்பது நபர்களாகும் .


விவாத மன்றத்தை சுற்றி  முள்கம்பி வேலியிடப்பட்டிருந்ததோடு காவல்துறையைச் சேர்ந்த ஏ.எஸ்.பி உட்பட பதினாறு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது . அத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட   இடத்தின் வலப்பக்கமாக நத்வத்துல் உலமா சபையைச் சேர்ந்தவர்களும் ,இடப்பக்கமாக அன்ஸார் ஸுன்னா சங்கத்தினரும் மத்தியில் தலைவர் ,நீதிபதி ,காரியதிரிசி போன்றோரும் அவரருக்குரிய ஆசனங்களில் அமர்ந்திருந்தனர் . நுழைவாயிலுக்குரிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தோர் உள்ளேயும் மற்றவர்கள் வேலிக்கு அப்புறமாக இருந்து விவாதத்தை கவனித்தனர் . இதன்றி ஆயிரக்கணக்கான உலமாக்களும் ,பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர் .

விவாதத்திற்கான நிபந்தனைகள் முதலில் தலைவரால்  வாசிக்கப்பட்டதை தொடர்ந்து விவாதம் ஆரம்பமாயிற்று . முதன் முதலாக தர்வேஷ் அழைக்கப்பட்டார் . விவாதத்தின் முதல் சுற்று மதியம் இரண்டு மணி வரை நடந்தது . அதுவரை ஆறு விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . அது ,...

1. தல்கீன்
2.இறந்தோருக்கு குர்ஆன் ஓதுதல்
3.அல்லாஹ் அர்ஷில் தான் இருக்கிறான்
4.ஜனாஸாவிற்கு பின்னால் தக்பீர் கூறுதல் ,சாம்பிராணி போடுதல்
5.தொழுகை மூலமாக மைய்யித்திற்கு பிரயோஜனம் அளித்தல்
   ஆகியவற்றோடு இன்னொரு விஷயமுமாகும் .

இந்த ஆறு விஷயங்களுக்கும் பதில் அளிப்பதற்காக நத்வத்துல் உலமா சார்பில் மவ்லவி எஸ் .எம்.ஏ முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் ,மவ்லவி எம்.எம்..இப்ராஹீம் ஆலிம் ,எஸ்.எல் .முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் , இ.எல் .முஹம்மத் இஸ்மாயீல் ஆலிம் ,ஏ .எம் .முஸ்தபா ஆலிம் , ஏ .எம் .புஹாரி ஆலிம் ஆகியோர் வந்திருந்தனர் .

அதன்பின் பகல் இரண்டு மணிக்கு மதிய உணவிற்காக விவாதம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பமாயிற்று . இரண்டாம் சுற்றுக்கான நேரம் வந்தது . நத்வத்துல் உலமா சபையைச் சேர்ந்தவர்கள் ஆஜராகி அரைமணி நேரமாகியும் ,தர்வேஷும் அவரைச் சார்ந்தவர்களும் வரவில்லை . உடனே கூட்ட நிர்வாகிகளும் ,போலீசும் சென்று அவர்களை அழைக்க ,அவர்கள் வரமுடியாது என்று மறுத்து விட்டனர் . அதன்பின் அவர்களால் கொண்டு வரப்பட்ட நூல்களனைத்தும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு தர்வேஷ் இல்லாமலேயே விவாதம் நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற்றது .

தர்வேஷ் வராததால் மேற்குறிப்பிட்ட ஏழாவது விஷயத்திலிருந்து இருபதாம் விஷயம் வரை விவாதிக்கப்பட்டு பிற்பகல் 4:30 மணியளவில்  நீதிபதி அல்லாமா முஹம்மத் அலி மரைக்காயர் அவர்களால் சத்தியக் கொள்கையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு முழுக்க முழுக்க மாறுபட்ட தர்வேஷும் அவரைச் சார்ந்தவர்களும் வழிகெட்ட வஹாபிகள்  எனத் தீர்ப்பளிக்கின்றேன் என்னும் பத்வாவை வாசித்தார் . இவையனைத்தும் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளாகும் .

அன்று தர்வேஷால் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தான் இன்றும் அனைத்து நவீன இயக்கங்களும் பிரச்சாரம் என்னும் பெயரில் வாந்தி எடுத்துக் கொண்டிருப்பது நாடறிந்த உண்மையாகும் . இவ்வியக்கங்கள் பல்வேறு பெயர்களில் புதுப் புது தோற்றங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன . இந்த வகையில் ஒரு விசித்திரமான தோற்றத்தில் அனைத்து பாமர மக்களையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் ஒரு இயக்கமொன்று இந்த நாட்டை வந்தடைந்தது . அதைப்பற்றி இப்போது பார்ப்போம் .
தக்வியத்துல் ஈமான்

திங்களெம்கோமான் தாஹா நபி அவர்களின் முன்னறிவிப்பின்படி நஜ்த் என்னும் ஊரில் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் என்பாரின் தோற்றம் ஏற்பட்டது . அவ்வியக்கம் தனது தீய கொள்கைகளை "கிதாபுத் தவ்ஹீத் " என்னும் நூல் வழியாக எடுத்துக் காட்டியது . அந்த நூலை உருது மொழியில் இந்திய தேசத்தைச் சேர்ந்த மவ்லவி இஸ்மாயீல் திஹ்லவி என்பார் "தக்வியத்துல் ஈமான் " என்னும் பெயரில் மொழிபெயர்த்து இந்திய மண்ணில் முதன் முதலாக வஹாபிய கொள்கையை பரப்பினார் .

இக்கொள்கைக்கு பலமான எதிர்ப்பு கிளம்பி ஷரீயத் படி   இஸ்மாயீல் திஹ்லவி கொல்லப்பட்டார் . அதன்பின் அக்கொள்கைகளை இவருடைய சிஷ்யர்களான ரஷீத் அஹ்மத் கங்கோஹி , காஸிம் நானோத்வி , கலீல் அஹ்மத் அம்பேத்வி , அஷ்ரப் அலி தான்வி போன்றோர் மிகவும் போற்றிப் புகழ்ந்ததோடு  இஸ்மாயீல் திஹ்லவியை ஷஹீத் என்றும் பறைசாற்றினர் . மேற்குறிப்பிட்ட அனைவரையும் தமது குருவாக ஏற்றுக்கொண்டவர் தான் தப்லீக் ஜமாத்தின் நிறுவனர் இல்யாஸ் காந்தலவி .இவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் 'தப்லீக் ஜமாத் ' முகல்லித் வஹாபிகள் எனும் பெயரில் காட்சி தருகின்றனர் . இதனுடைய நோக்கமும் வஹாபியக் கொள்கையை பரப்புவது தான் .

இவ்வியக்கம் இலங்கை நாட்டுக்கு வந்த போது ,அதற்கு எதிராக மாத்தறையில் கோட்டக்கரை ஜும்மா பள்ளியில் 08-08-1965 ஆம் நாள் இஜ்திமா ஒன்று நடத்தப்பட்டது . அப்போது அதனுடைய முகமுடியை கிழித்தெறிய இம்மாநாட்டில் சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அல் ஆரிபுபில்லாஹ் ,அல் முஹிப்பிர்ரஸூல் அஷ் ஷாஹ் அப்துல் காதிர் ஆலிம் ஸுபி காதிரி காஹிரி رضي الله عنه அவர்களுக்கும் பன்னிரெண்டு முகல்லித் வஹாபிகளுக்கும் இடையே விவாதமொன்று நடைபெற்றது . இதற்கு இரு சாராரின் சம்மதத்தோடு கீழ்கண்டோர்   நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர் .அவர்கள்,...

1.ஷெய்குல் பஹ்ஜி அல்ஹாஜ் மவ்லவி எச் .எல் . அப்துல் ஹமீத் (காலி அரபிக் கல்லூரி அதிபர் )

2. மவ்லவி பாஸில் ஏ.எல் .முஹம்மத் கவுஸ் பாக்கவி

3.ஜனாப் எம் .ஐ.எம் .காஸிம் மரைக்காயர் (காத்தான்குடி பிரதேசத் தலைவர் )

இக்கூட்டத்திற்கு ஜனாப் எம்.என்.எம்.ழியாவுத்தீன் ஜே .பி ஆலிம்     தலைமை தாங்கினார்கள் .இந்த விவாதத்தில் தாங்கள் தோல்வியுற்று விடுவோம் என்று தெரிந்து கொண்ட தப்லீக் ஜமாத்தினர் எந்தவொரு முடிவும் ஏற்படாத வண்ணம் கூச்சலையும் ,குழப்பத்தையும் ஏற்படுத்தி விவாத அரங்கை விட்டு வெளியேறியதோடு விவாதத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தப்பும் தவறுமாக திரித்து எழுதி உண்மைக்கு புறம்பான பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர் .

ஆனால் உண்மையில் நடந்தது என்ன ? மூன்று நீதிபதிகளில் ஒருவரான மவ்லவி முஹம்மத் கவுஸ் பாக்கவி அவர்களின் கையெழுத்தை தப்லீக் ஜமாத்தினர் அன்னாரிடமிருந்து திருட்டுத்தனமாக பெற்று விவாத நிகழ்ச்சியை திரித்து தங்களுக்கு சாதகமாக வெளியிட்டனர் . இதை பொய்யென்று நிரூபித்து "விவேகமில்லாத மாநாடும் , வீணான தீர்ப்பும் " என்னும் தலைப்பில் சுன்னத் வல் ஜமாத்தினரால் பிரசுரமொன்று வெளியிடப்பட்டது . அதில் முஹம்மத் கவுஸ் பாக்கவி அவர்களால் 22-08-1965ல் தன்னிடம் பொய் சொல்லி கையெழுத்துப் பெற்று சென்றதாக எழுதப்பட்ட மடலும் பிரசுரிக்கப்பட்டது .







Monday, 27 January 2020

இந்தியாவில் வஹாபியிசம்

ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்திய நாட்டில் முஸ்லிம்கள் பெருமையோடு , தலைநிமிர்ந்து யாருக்கும் அஞ்சாமல் நடமாடிய ஒரு காலமிருந்தது . முஸ்லிங்கள் என்றால் அவர்கள் அனைவரும் ஒரே கொள்கையுடைவர்களாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினராக இருந்ததோடு, தஸவ்வுப்   உடைய காதிரிய்யா , ஷாதுலிய்யா , சிஷ்தியா , நக்ஷ்பந்தியா , ரிபாயிய்யா போன்ற தரீக்காக்களில் இணைந்தவர்களாகவும் , நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர் . முகல்லிதுகளான தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளும் தம்மை சிஷ்தியா தரீக்கா வழிமுறையை பின்பற்றுவோர் என்று சொன்னவர் தாம் .

இதில் அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்கள் தான் இந்த தரீக்காக்களை அமைத்து இஸ்லாத்தை நாடு தழுவிய அளவுக்கு எடுத்துச் சென்றவர்களாகும் . ஹிந்துல் வலி கரீப் நவாஸ் ஹழ்ரத் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி   அஜ்மீரி رضي الله عنه‎  அவர்களின் கரம்பற்றி 90 லட்சம் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள் என்றால் இது அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அருட்கொடையாகும் .

ஆம் .இஸ்லாத்தின் வளர்ச்சியை எப்போதுமே சகித்துக் கொள்ள முடியாத காபிர்கள்  அரபு மண்ணில் கண்ட வெற்றியைப் போல அஜமிகளையும் அவ்வாறு சிக்க வைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிநோக்கி காத்திருந்தனர் .
யார் மூலமாக இதை செயல்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாத்தை கூறுபோட்டு , முஸ்லிம்களிடையே மார்க்கத்தின் பெயரால் கலகத்தை ஏற்படுத்தி , முஸ்லிம்களே முஸ்லிம்களை துண்டாடுவதற்காக சிலரை அவர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊதியமும் வழங்கி ஊக்குவித்தனர் .  அவர்கள் யாரென்று  பாருங்கள் .

1 . இந்தியாவின் அலிகர் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சர் செய்யித் அஹ்மத் .

2. லாகூரிலுள்ள ஸீனபுவாலி பள்ளிவாசலின் இமாம் அப்துல்லாஹ் சக்டாலவி   .

3. அஹ்மத் தீன் பங்வீ .

4. அஸ்லம் சிறாஜ்புரி .

5. நியாஸ் பதஹ்பூரி .

6. மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி

ஆகியோராகும் .

குலாம் அஹ்மத் காதியானி

இதில் பிரபலமான குலாம் அஹ்மத் காதியானியை வெறுக்கத் தெரிந்த நமக்கு அவருடைய பேச்சுக்கும் , கருத்துக்கும் அடித்தளம் அமைத்து தந்தவர் யார்  என்பதை மட்டும் நாம் தெரிந்து கொள்ள முயலவில்லை . அவர்தான் இங்கே முதல் நபராக குறிப்பிடப்பட்டிருக்கும் சர்
செய்யித் அஹ்மத் .
சர்  செய்யித் அஹ்மத்

ஸெய்யிதினா ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் இறந்து விட்டார்கள் என்னும் காதியானிகளின் கருத்தை முதன் முதலில் இந்திய மண்ணில் பேசியவர் சர்
 செய்யித் அஹ்மத்  தானென்று கூறுகிறார் மவ்லவி ரபீக் சாஹிப் திலாவரி என்பவர் . இத்தகவல் ரயீஸ் காதியான் என்னும் நூலின் பாகம் -1, பக்கம் 176 ல் குறிப்பிடப்பட்டிருப்பதோடு , 20/05/1916ல் வெளியான ' அல் பழ்ல் ' என்னும் காதியானிகளின் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப்படுள்ளது   .

இதில் சர் செய்யித் அஹ்மதை மவுனமாக்கி மிர்ஸா குலாம் அஹ்மதை பிரபல்யப்படுத்தியது ஆங்கிலேயர்கள் தான் . இது இந்திய தேசத்தில் காபிர்களுக்கெதிரான இந்திய முஸ்லிம்களின் குரலை திசை திருப்புவதற்காக ஆங்கிலேயர்களால் கையாளப்பட்ட குள்ளநரித்தனமான செயலாகும் .

காதியானிகள் தங்களின் கருத்துக்களை பிரபல்யப்படுத்தி முஸ்லிம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியதோடு மறுபக்கம் சர் செய்யித் அஹ்மதை  காபிர்களுக்கு எதிராக பேசப்படும் பேச்சுக்களை நிறுத்திவிட்டு காபிர்களோடு அறப்போர் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மூடி மறைத்துவிட்டு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை முதலில் சரி செய்ய வேண்டுமென பிரச்சாரம் செய்வதற்காக அவரை தூண்டி விட்டனர் .

இஸ்மாயீல் திஹ்லவி

இதற்காகப் பயன்படுத்தப்பட்டவர் தான் இஸ்மாயீல் திஹ்லவி என்பவராகும் . இவர் செய்யித் அஹ்மத் ரேபரேலியின் முரீது என்பதே அதன் மூல காரணமாகும் . இஸ்மாயீல் திஹ்லவி என்றழைக்கப்படும் இவர் கைர் முகல்லிதுகளான அஹ்லே ஹதீத் தரப்பாலும் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினராலும்  முஜத்தித் என்றும் , ஷஹீத் என்றும் புகழ்ந்து பேசப்படுகிறார் .

இஸ்லாமிய மார்க்கத்தில் தோன்றிய  பிரிவினைவாதிகளில், நான்கு  மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்ற முகல்லிதுகளான வஹாபியக் கொள்கையுடையோரும் , நான்கு  மத்ஹபுகளில் எதையுமே ஏற்றுக்கொள்ளாத கைர் முகல்லிதுகளான வஹாபிகளும் என இரு பிரிவினர் தான் வெவ்வேறு பெயர்களில் முஸ்லிம்களிடையே  அறிமுகமாகியுள்ளனர் என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .

இதில் முகல்லிதுகளான தேவ்பந்தி வஹாபிகளும் , கைர் முகல்லிதுகளான வஹாபிகளும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்பவர்கள் என்றல்லவா நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் . அத்துடன் இருவரும் இருவேறு கொள்கையுடையவர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம் .ஆனால் உண்மை அதுவல்ல . இவ்விஷயத்தில் இவ்விருவர் மட்டுமல்ல . மூன்றாவதான காதியானிகள் கூட இவர்களோடு மோதிக் கொள்ளத்தான் செய்கிறார்கள் .

ஒருவரை ஒருவர் எதிர்த்தும் பேசுகின்றனர் . நூல்கள் தொகுத்து வெளியிடுகின்றனர் . இப்படியெல்லாம் செய்தால்தானே இவர்களைப் பின்பற்றும் அப்பாவிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வர் . இதற்காகத்தானே ஆங்கிலேயர்களும் இவர்களை உருவாக்கினார்கள் . ஆனால் இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் உள்ளுக்குள்ளே ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல . பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வளர்ப்புப் பிள்ளைகளும் கூட .

முஸ்லிம்களை துண்டாடி அவர்களுக்கிடையே பகைமை என்னும் நெருப்பை கொளுந்து விட்டெறியச் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஆயுதமாகும் . இன்னொரு மாபெரும் உண்மையென்னவெனில் இந்த ஆங்கிலேயர்கள் வகுத்து தந்த கொள்கைகள் தாம் ஷைகு நஜ்தியால் சொல்லப்பட்ட கருத்துக்களாகும் .

மேலும் இந்த இயக்கங்களுடைய மறுபக்கத்தை அறியாதவர்களும் , இவர்களின் பூர்வீக சரித்திரத்தை தெரியாதவர்களும் தான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் , வஹாபியிசத்தையும் காதியானிகளையும் வன்மையாக எதிர்ப்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு அலைகின்றனர் . ஆனால் இவர்களனைவரும் காபிர்களால் வளர்க்கப்பட்டவர்கள் . அவர்களிடம் மாதாமாதம் ஊதியம் வாங்கித் தின்று அவர்களின் காலை நக்கிக் கொண்டிருப்பவர்கள் .

 இந்த உண்மையை மறைப்பதற்காகவே பல பேருடைய பெயரால் பல இயக்கங்களை இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்துகின்றனர் . எனவே இவ்வியக்கங்களில் ஒன்று மற்றோன்றை எதிர்ப்பதைப் பார்த்து நம்மவர்கள் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .


ஏனெனில் தேவ்பந்திகளும் , அஹ்லே ஹதீத் , தவ்ஹீத் ஜமாத்,ஜமாத்தே இஸ்லாமி , காதியானி  இயக்கத் தலைவர்கள் போன்ற இவர்கள் எல்லோருமே ஆங்கிலேயரின் அடிமைகள்தான் . இவர்களின் இயக்கங்களும் , இவர்களால் வெளியிடப்படும் நூற்களும் வஹாபிய நச்சுக் கருத்துக்களை கொண்டதாகத் தான் அமைந்ததுள்ளது  .   ஆனால் தற்போதுள்ள தொழுகைக்கு அழைக்கும் தப்லீக் ஜமாத் இயக்கத்திலுள்ளவர்கள் அப்படிபட்டவர்கள் இல்லையே என்று நீங்கள் யோசிப்பீர்களாயின் அதற்குமுன் 'தாம்பரம் கமால் ' என்பவர் எழுதிய "நீங்கள் எந்த கூட்டம் " என்ற பக்வாசஸுக்குரிய நுலைப் படித்தபின் முடிவு செய்யுங்கள் .

ஜனாப் கமால் அவர்கள் அந்த நூலில் , ஹாமித் பக்ரி , பீ. ஜைனுல் ஆபிதீன் போன்றோரையும் ,அவர்களை ஆதரிப்போரையும் நாத்திகர்களை விட கேவலமானவர்கள் என்று கூறுகிறார் . குர்ஆனின் வசனங்களையெல்லாம் திரித்து கூறுவதாக  குற்றம் சாட்டும் இவரும் , இவரைச் சார்ந்த இயக்கமும் அதே காரியத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும் ! ஆதலால் இவர்களனைவருமே வழி தவறிய கூட்டமென்றுதான் நாம் சொல்லுவோம் .

மேலும் இவ்வியக்கங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோர் " வஹ்ஹாபியத் கா போஸ்ட்மார்ட்டம் , நஜ்த் ஸே காதியான் பிராஸ்தா தேவ்பந்த் , வஹ்ஹாபி மத்ஹப் " போன்ற உர்து மொழியிலுள்ள நூற்களை பார்க்க வேண்டும் .  அத்துடன் அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் பொய்யனாவை ,இட்டுக்கட்டப்பட்டவை ,பொறாமையால் புளுகியவை என்றெல்லாம் சொல்லப்படுவதை கண்டு ஏமாந்துவிடாதீர்கள் .


உதாரணமாக , முகல்லிதுகளான (மத்ஹபை பின்பற்றுபவர்கள் ) தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளான தொழுகைக்கு அழைக்கும்   இயக்கம் என்று தம்மை கூறிக் கொள்பவர்களைச் சார்ந்தவர்களின்  முன்னோடி மவ்லவி அஷ்ரப் அலி தானவி  என்பார் , ஹிஜ்ரி 1336ஆம் ஆண்டு ஸபர் மாதம் வெளிவந்த அல் இம்தாத் என்னும் பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் , அஷ்ரப் அலி தானவியை விரும்பும் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்கின்றார் .



அதாவது , நான் கனவில் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்னும் கலிமாவை ஓதுவதற்குப் பதிலாக அஷ்ரப் அலி ரஸுலுல்லாஹ் என்று ஓதுகின்றேன் . இவ்வாறு ஓதுவது தவறென்று எனக்கு தெரிகின்றது . அதே நேரம் நான் என் வசத்தில் இல்லை . அதன்பின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அத்தவறை திருத்திக் கொள்ளும் வகையில் ஸலவாத்து சொல்ல நினைத்து ஸலவாத்தை ஓதிய பொழுது , அது அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வநபியினா  வமவ்லானா அஷ்ரப் அலி என்று வருகின்றது . இதே நிலை மறுநாளும் தொடர்கின்றது . அதற்காக நான் மிகவும் அழுதேன் . என்ன செய்வது ? நான் என் வசத்தில் இல்லை . அத்துடன் நிர்பந்திக்கப்பட்டவனாகவும் இருக்கின்றேன் . இதன்றி வேறுபல காரணங்களும் உள்ளன . நான் தங்களை மிகவும் நேசிக்கின்றேன் . இதற்கு மேல் என்ன சொல்ல ? எனக் கேட்கின்றார் .


அதற்கு மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,இச்சம்பவத்தில் அமைதி இருக்கின்றது . நீர் யாரை நோக்கி திரும்புகின்றீரோ அவர் சுன்னத்துகளை பின்பற்றுவராகும் என்று பதில் கூறுகிறார் . இதைத் தவறென்று ஸுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த பல்வேறு உலமாக்கள் எடுத்துக் காட்டியதற்கு ,  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மவ்லவி ஜகரிய்யா என்பார் , ' தேவ்பந்த் ஸே பரேலி தக் ' என்னும் நூலில் , ' பவாயிதுஸ்   ஸாலிகீன் ' என்னும் நூலை ஆதாரமாகக் காட்டி , ஹிந்துல் வலி ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் அஜ்மீரி சிஷ்தி  رضي الله عنه‎  அவர்களிடம் பைஅத்து பெறுவதற்காக வந்த ஒருவரிடம் சிஷ்தி ரஸுலுல்லாஹ் என்று கூறுமாறு சொன்னதாகவும் , இதேபோல் அல்லாமா ஷிப்லி رحمه الله அவர்களிடம்  பைஅத்து  பெறுவதற்காக வந்த ஒருவரிடம் ஷிப்லி ரஸுலுல்லாஹ் என்று கூறுமாறு சொன்னதாகவும், அப்படியானால் இவர்களை பற்றி என்ன கூறுவீர்கள் என்று கேட்கின்றார் .

இது மொட்டை தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்ற வேலை . அத்துடன் இஸ்லாத்தை சீர்குலைக்க நினைக்கும் எவர் வேண்டுமானாலும் மேற்கண்ட மவ்லவி ஜகரிய்யா  கூறுவதைப் போல தம்மை ரஸூல் என்று வாதித்து விட்டு அதன்பின் நான் என் சுயநினைவில் சொல்லவில்லை . அத்தோடு ஷிப்லி رحمه الله மற்றும் காஜா முயீனுத்தீன்  رضي الله عنه‎  அவர்களும் தம்மை ரஸூல் என்று வாதித்திருக்கும் போது நான் மட்டும் சொன்னால் தவறாகி விடுமா ? எனக் கேட்பதைப் போலுள்ளது இவருடைய வாதம் . ஆக தொழுகைக்கு  அழைக்கும் இயக்கம் என்னும் பெயரில் முகல்லிதீன்களிலுள்ள  வஹாபிகளான இவர்கள் வடிகட்டிய வஹாபிகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் .

ஆனால் அதேநேரம் சமீபகாலமாக தமிழகத்தில்  தங்களை சிஷ்தியாவுடைய தரீக்காவாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களான ( நூரிஷாஹ் உடைய தொடர்பில் உள்ள பைஜி ஷா , ஜூஹூரி ஷா ,ஐனி ஷா , முஹிப்பி ஷா ,இர்பானி ஷா ,ஆமிரி ஷா,நிஜாமி ஷா  , பிலாலி ஷா இன்னும் மற்ற ஷாக்கள் மற்றும் ஆரணி கமாலுத்தீன் பாகவி உடைய தொடர்பில் உள்ள ஸில்ஸிலா ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான  போலி தரீக்காவாதிகள் ) என்று குறிக்கொள்வோர் வெளியிட்டுள்ள  நூரிஷா நினைவு மலரில் மவ்லானா ஸகரிய்யா உடைய அதே வாதத்தை தான் இவர்கள் மீண்டும் வாந்தி எடுத்துள்ளனர் .மேலும் நூரி ஷா , ஆரணி பாகவி ஆகியோருடைய ஸில்ஸிலாவும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளின் முன்னோடிகள் மூலம் தான் தொடர்கின்றது . 


ஆக இவர்கள் தரீக்கா என்னும் பெயரில் உலா வந்து கொண்டுள்ள வஹாபிகளாகும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்  .    இதெல்லாம் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களால் கையாளப்படும் தந்திரங்களில் ஒன்றாகும் . இந்த இயக்கங்கள் பற்றி இந்திய தேச உலமாக்களால் சொல்லப்பட்டிருப்பதோடு , அவர்கள் சவால் விட்டதற்குரிய ஆதாரமும் இருக்கின்றது  என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .

ஆதலால் தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று பொதுவில் சொல்லப்படும் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தை  ஆதரிக்கும் உலமாக்கள் மவ்லவி இல்யாசால் ஆரம்பிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தை விட்டு நீங்கி விட்டு நல்லடியார்களான நாதாக்களுடன் இணைந்து சத்தியத்தை பாதுகாக்க துணை புரியுமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம் . இல்யாஸி தப்லீக் ஜமாத் நல்லெண்ணத்திலோ , குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டோ தோற்றுவிக்கப்ட்ட இயக்கமல்ல என்பதை அவ்வியக்கத்தின் பின்புலம் , வரலாறு தெரியாத உலமாக்களுக்கு மீண்டும் , மீண்டும்  தாழ்மையாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம் .