புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே !
ஸலாத்தும் ஸலாமும் எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மீதும்,அவர்தம் உத்தம தொழர்களான ஸஹாபாக்கள் மீதும்,அவர்தம் பரிசுத்த குடும்பத்தினர் மீதும்,தாபயீன்கள்,தபாத் தாபயீன்கள்,இமாம்கள் , ஸித்தீக்கீன்கள்,ஷுஹதாக்கள்,மஷாயிகுமார்கள்,ஸாலிஹீன்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக !!!
இஸ்லாம் தோன்றிய காலம் முதல் ஒரு சில குறைமதியினரால் விமர்சிக்கப்பட்டதும், அதற்கான முறையான பதில் அவர்கள் முன் வைக்கப்பட்ட போது நியாயவான்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள உண்மை.
இஸ்லாமிய சமுதாயம் இன்று சந்தித்து கொண்டிருக்கும் சவாலானது இதற்கு முன்னர் கண்டிராத வரலாற்று நிதர்சனம். உலகில் மூன்றில் ஒரு பங்கு நிலபரப்பை ஆண்டு வந்த இந்த சமுகம், இன்று அமெரிக்க கண்டம் முதல் ஆஃப்ரிக்க கண்டம் வரை பழிக்கப்படுவதன் காரணமென்ன ?
பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்படல்
உலக மாந்தரின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் யூதர்களால் கைப்பற்றபட்ட போது நிகழ்ந்த அசம்பாவிதங்களை மௌலனா ஸையது அலி மியான் என்பார் தனது மனுக்குமுறலை இவ்வாறு வெளிப்படுதுகிறார்
“ அனைத்து உலகின் முன் இம்மோசமான வெட்கி தலைகுனிவதற்குரிய தோல்வியும்,இழிவும் முடிவில் எவ்வாறு நேர்ந்தது? இத்தனைக்கும் நெற்று வரை இறையுதவியை பெற்று வந்த நிலை இருந்ததோடு முஅஃஜிஸாக்கள் என்னும் அற்புதங்களும் வெளிப்பட்டு கொண்டிருந்தன. அத்துடன் விண்ணிலிருந்து அவர்களுக்காக பாதுகாப்பு படைகளும் இறங்கிக் கொண்டிருந்தன”.
அன்றிலிருந்து இன்றுவரை உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுடைய கரங்களும் விண்ணை நோக்கி உயர்த்தப்பட்டு, இறைவா! இரட்சகா !! எங்களுடைய முதல் கிப்லாவை எங்களுக்கு திருப்பி தா!!! என எவ்வளவோ மன்றாடியும் உயர்ந்த கரங்கள் வெறுங்கரங்களாகவே இன்று வரை காலியாக திரும்பி கொண்டிறுக்கின்றன. உண்மையில் இறையுதவி வருவதென்பது நின்று தான் பொய் விட்டது.வெகுகாலமாகவே நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டுதான் வருகின்றன.எதுவரை எனில் மக்காவில் உள்ள இரண்டாவது கிப்லாவாகிய கஃபாவும் அவமதிக்கப்படுவதற்குரிய நிலைமையும் தோன்றியது.
கஃபா அவமதிக்கப்படுதல்
ஆம்,ஹிஜ்ரி 1400 முஹர்ரம் பிறை, கி.பி.1979 நவம்பர் இருபதாம் தேதி அன்று,உலக மாந்தர் அனைவரும் குழப்பங்களை விளைவித்து குருதியை கொட்டுவோர் என வானவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை தக்கவைத்துக்கொள்வதை பொன்ற அந்நாள், ‘முஹம்மத் பின் அப்துல்லாஹில் கஹ்தானி’ என்பவன் மூலம் மஹ்தி எனும் தோற்றத்தின் பெயரால் தொடங்கியது.அதன்பின் அடுத்து வந்த பதினைந்து நாட்களும் ஹிஜ்ரி பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்க காலத்தை இருண்ட காலமாகவே நிலைபெற செய்துவிட்டது.
காஃபா மனித ரத்தத்தால் சிவப்பாயிற்று. கஃபாவின் சுவர்கள் துப்பாக்கித் தோட்டாக்களால் சல்லடைக் கண்ணாக துளைக்கப்பட்ட்து.அடுத்து வந்த பதினைந்து நாட்களும் தொழுகை,பாங்கு,தவாப்(வலம்வருதல்) என்ற எதுவுமே இல்லாமல் காஃபா மூளியாக்கப்பட்டது.அந்த பதினைந்து நாட்களும் உலக இஸ்லாமியரது பார்வையும் இறைவனுடைய பாதுகாப்புப் படையை எதிர்பார்த்து விண்ணையே நோக்கிக் கொண்டிருந்தன.
ஆம்,இதற்கு முன்பும் வரலாற்றில் ‘அப்ரஹா’ என்பவன் தனது படைகளைக் கொண்டு கஃபாவை தகர்க்க வந்த போது மகத்துவமிக்க இறைவன் தனது இல்லத்தை பாதுகாப்பதற்காக ‘அபாபீல்’ என்னும் படையை அனுப்பி உதவியவன் இப்போது உதவிக்கு வரவில்லை. காரணம் இறைவனின் இனிய தூதுர் ஆயிரம் ஆண்டுக்ளுக்கு முன்பே, ‘ அவ்வில்லத்தின் காப்பாளர்களே அதை களங்கப்படுத்தும் காரியத்தை செய்வர் என்றும்,அதன் பொருட்டு அவர்களை அவர்களின் போக்கிலேயே போக விட்டு அவர்களின் அஃமால் நாமாவில்(பட்டோலையில்) கரும்புள்ளிகளை நிரப்பி கொள்வர். ஆகையால் உலக சாம்ராஜ்ஜயத்தை நிர்வகிக்கும் தகுதியை இழந்து விடுவர்’ என்றும் கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அபூஹுரைரா என்னும் நபிதொழர் தமது நபியைக் கொண்டு அறிவிக்கின்றனர், ‘அந்த மனிதன் ஹஜ்ருல் அஸ்வத்துக்கும்(சுவர்க்கத்தில் இருந்து இறக்கப்பட்ட கல்) மகாமே இப்ராஹீமுக்கும் (இப்ராஹீம்என்னும் இறைதூதர் அந்த ஆலயத்தை கட்டிய பொது நின்ற இடம்)இடையில் வைத்து பிரமாணம் வாங்குவான்.அதன்பின் அவ்வில்லத்தை அவனுடைய வீட்டாரைத் தவிர வேறு யாரும் களங்கப்படுத்த மாட்டார்கள்.அவ்வில்லம் களங்கப்படுத்தப்பட்ட பின் அரபியர் எப்போது அழிந்து போவார்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறுகின்றனர்.’
[ நூல்- லவாமிவ்வுல் அன்வார்,பாகம் -2,பக்கம்-122. ]
இதனை அர்ஸகீ என்பாரும் தனது ‘தாரீகே மக்கா’ என்னும் நூலில் குறித்துள்ளனர். இவ்வாறு ஹாகிம் என்பாரும் இதனை ஸஹீஹான ஹதீஸ் என்று உறுதிபடுத்துகிறார்.மேலும் கஃபாவில் நடைபெற்ற அப்பதினைந்து நாட்களின் அந்த அசம்பாவிதம் மேற்கண்ட இறைதூதரின் அறிவிப்பை உறுதிபடுத்தும் வகையில் ‘தன்னை மஹதி என்று வாதிட்ட அப்போலி மனிதர் ஹஜ்ருல் அஸ்வத்துக்கும் மகாமே இப்ரஹீமுக்கும் நடுவில் வைத்து தான் தன்னைச் சார்ந்தோரிடம் வாக்குப் பிரமாணம்’ வாங்கினான் என்பதைக் கொண்டு உறுதியாகிறது.இறைத்தூதரின் இன்னொரு அறிவிப்பை பாருங்கள்,
“ அபுஹுரைரா என்னும் நபிதோழர் தனது நபியைக் கொண்டு அறிவிக்கிறார், எனது சமூகத்தார் குரைஷிகளிலுள்ள தறிகெட்ட வாலிபர்களின் கரத்தால்அழியும் ”
[நூல்- புஹாரி,குழப்பம் பற்றிய பாடம் ]
[நூல்- புஹாரி,குழப்பம் பற்றிய பாடம் ]
நடைபெற்ற அந்த சம்பவம் உண்மயை உடைத்துக் காட்டிற்று. ஆம், கஃபாவில் நடைபெற்ற அந்த அசம்பாவிதத்தில் பங்கு பெற்ற அனைவருமே வாலிபர்களாகவும்,இருபது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர்.இது மட்டுமல்ல, உள்ளத்தை உறைய வைக்கும் பேரழிவின் அச்சம்பவத்திற்குரிய முகவுரையை நிகழ்த்தியவன் யார் என்பதையும் நபியவர்களின் அறிவிப்பு சூரியனைப் போல் நமக்கு பிரகாசமிட்டு காட்டுவதை பாருங்கள்.
“அபூஹுரைரா என்னும் நபிதொழர் தனது நபியைக் கொண்டு அறிவிக்கிறார், உலகின் அழிவு நாள் வராது,எதுவரை எனில் கஹ்த்தானில் இருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு தனது தடியைக் கொண்டு ஆட்டுவிக்காதவரை என்று கூறுகின்றனர் ”
[ நூல்-புஹாரி,கஹ்த்தான் பற்றிய பாடம் ]
[ நூல்-புஹாரி,கஹ்த்தான் பற்றிய பாடம் ]
தொடுரும் வேதனைகள்
மௌலானா சையது அலிமியான் கூறுவதைப் போல் உண்மையில் இறைவனுடைய உதவி வருவது நின்று தான் போய் விட்டது.இது உலக இஸ்லாமியர்களை எச்சரிக்கை செய்கின்ற ஒன்றில்லையா என்ன? இன்னும் முஹம்மது நபியவர்களை விசுவாசித்தவர்களின் கரத்தாலேயே கஃபா களங்கப்படுத்தப் பட்டபின், அரபியரின் அழிவைக் குறித்த நபியவர்களின் வார்த்தையை நாம் நம்புகிறோம் என்பது உண்மையானால்,இது உலக அரங்கில் ஒரு மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தப் போகிறது என்பதை நாம் இப்போதாவது உணர வேண்டாமா? அத்துடன் இன்று உலக முஸ்லிம்களின் மீது இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது எனபதை பாருங்கள்.
இஸ்லாமியர்கள் குறைவாக உள்ள நாடுகளில் மட்டுமள்ள,அவர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் நாடுகளில் கூட அவர்களின் வழிபாட்டுத் தலங்கள்,உயிர் மற்றும் உடமைகள்,மானம்,மரியாதை,அரசியல் சமூக,பொருளாதார,வாழ்வியல் போன்ற நிலைகளிலும் கூட முஸ்லிம்கள் மிக மிகப்பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்.மேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் இழப்புகள்,ஜபல்பூர் மற்றும் ஜாம்ஷெட்பூரில் நடந்துவரும் வகுப்புவாத துவெஷங்களின் முடிவில்லாத சோகங்கள்,அஸ்ஸாம் கலவரம்,பாப்ரி மஸ்ஜிதின் இடிப்பு,பிலிப்பைன்ஸ்,பர்மா,ரஷ்யா,சீனா,மங்கொலியா, ப்ரான்ஸ்,யுகஸ்லொவாகியா போன்ற நாடுகளில் வாழுகின்ற இஸ்லாமியர்களின் மீது கட்டவிழுத்து விடப்படும் அடக்குமுறை மற்றும் அராஜகங்கள்,பாகிஸ்தானில் நடந்து வரும் பாரம்பரிய சண்டைகள்,இஸ்ரேலியர்களின் கரத்தால் பத்து லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொன்றோழிக்கப்பட்டது,அதன்பின் பலஸ்தீனரே தமக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட கொடூரங்கள்,துருக்கி,எகிப்து,ஷாம்,லிபியா,பஹ்ரைன், இந்தொனெஷியா,மலேஷியா,மாலி,நைஜீரியா,சூடான், போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற அத்துமீறல்கள்,ஆஃப்கான் முஸ்லிம்களின் தொடர்கதையாகிப் போன துயரங்கள்,ஈரானுக்கும் ஈராக்கும் இடையே பத்து ஆண்டுகளாக நடந்த போரில் எண்ணிலடங்கா செத்து மடிந்த உயிர்கள்,எத்தியோப்பாவில் நிகழ்ந்த வரலாறு காணா பஞ்சம்,ஐரோப்பா அமேரிக்கா,ஆஃப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களுக்கிடையே ஏற்பட்ட புகைச்சலில் எண்ணற்ற முஸ்லிம்கள் சிறைபிடிக்கப்பட்டு சிறைக் கூடங்களில் அனுபவித்து வரும் அவலங்கள் போன்றவை எதை உணர்த்துகின்றன ?
நபியவர்களின் எச்சரிக்கை ஒன்றை பாருங்கள், “ ஸப்வான் என்னும் நபித்தொழர் தனது நபியைக் கொண்டு அறிவிக்கிறார் , வெகுவிரைவில் உங்களின் மீது இன்னொரு சமூகத்தார் கணக்கின்றி வெளிப்படுவர். எவ்வாறு உணவு அருந்துவோர் உணவுத் தட்டுகளின் மீது வருவார்களோ அவ்வாறு என்ற போது,அப்பொது ஒருவர்,’அண்ணலாரே ! அப்போது நாம் எண்ணிகையில் கூறைவாக இருப்போமா என்று வினவ,அதற்கு நபியவர்கள் இல்லை நீங்கள் எண்ணிகையில் மிகைத்திருப்பீர்கள்.இருப்பினும் நீங்கள் சமூதிரத்தில் தோன்றும் நீர்க்குமிழிகளைப் போல் இருப்பீர்கள்.பின்னும் இறைவன் உங்களுடைய விரோதிகளுடைய உள்ளத்தில் இருந்து உங்களுடைய அச்சத்தை நீக்கி விடுவான்.அத்தோடு உங்களுடைய உள்ளங்களில் சோர்வையும் தந்து விடுவான் என்று கூற, அப்பொது ஒரு நபிதொழர் ,’நாயகமே சோர்வு எப்படி வரும்’ என்று கேட்க,அதற்கு நபியவர்கள் உலகதின் மீதுள்ள பற்றும்,மரணதின் மீதுள்ள அச்சமும் தான் அதற்கு காரணம் என்று கூறினர் ”
[ நூல்- பைஹகீ,அபூதாவூத்.]
[ நூல்- பைஹகீ,அபூதாவூத்.]
== இன்னுமா உறக்கம் ? (ஆஷிக்குர் ரசூல் அல்லாமா அல் ஹாபிழ் மர்ஹும் எப் .எம் .இப்ராஹீம் ரப்பானி ஹஜ்ரத் ரஹ்மதுல்லாஹி அலைஹி )
என்னும் நூலில் இருந்து தொகுக்கப்பட்டது இந்த கட்டுரை. இஸ்லாமிய சமூகம் எவ்வாறு முஸ்லிம் பெயர் தாங்கிகளான ஸலபி,அஹ்லே ஹதீத்,நஜாத்,ஜாக்,தவ்ஹீத்,முஜாஹித்,ஜமாத்தே இஸ்லாமி போன்ற கொள்கை குழப்பவாதிகளால் தன்னுடைய ஒற்றுமை என்னும் கட்டமைப்பை இழந்ததையும் , கிலாஃபத் என்னும் இஸ்லாமிய அரசியல் அதிகாரத்தையும் இழந்து அரசியல் தலைமை இழந்து அனாதைகளான வரலாற்றின் பதிவுகளே இத்தளம் .
உம்மதே முஹம்மதியா மீண்டும் உலக சக்ராதிபதிகளாக உதயமாக ஸவாதே ஆஸம் என்னும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஹ் என்னும் நேரிய இஸ்லாமிய கோட்பாட்டின் படி வாழ்வதே ஈருலக வெற்றியின் ரகசியம்.




