தற்போதுள்ள வஹாபிய இயக்கங்களெல்லாம் பல்வேறு பெயர்களில் பல்வேறு இடங்களில் தொற்றமெடுத்தாலும் , இவர்களுக்கெல்லாம் மூலகர்த்தாவாக விளங்கியவர்கள் பூமியின் எந்தப் பிரதேசத்தில் இருந்து வெளிப்படடார்கள் என்பதை அடுத்து வரும் நபிமொழிகள் விளக்குகின்றன
"கிழக்குப் பிரதேசத்தில் இருந்து ஒரு கூட்டம் வெளிப்படும் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் .எவ்வாறு வில்லை விட்டுச் சென்ற அம்பு மீண்டும் வில்லுக்கு திரும்பாதோ அவர்களும் மார்க்கத்திற்கு திரும்ப மாட்டார்கள் . இன்னும் அவர்களின் அடையாளம் தலையை சிரைப்பது ஆகும் ".
[நூல் - கன்ஸூல் உம்மால் ,பாகம் 11,பக்கம் 143 ]
"கிழக்கிலிருந்து பல கூட்டம் வெளிப்படும் . அவர்கள் தமது தலையைச் சிரைத்திருப்பர் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .வில்லில் இருந்து அம்பு பாய்ந்து விரைந்தோடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் ."
[நூல் - கன்ஸூல் உம்மால் ,பாகம் 11,பக்கம் 143 ]
"கிழக்கிலிருந்து ஓரு கூட்டம் வெளிப்படும் .அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . ஒவ்வொரு கூட்டமும் மறையும் தருவாயில் இன்னொரு கூட்டம் தோற்றம் எடுக்கும் . இவ்வாறு அவர்கள் தஜ்ஜால் வெளிப்படும் வரை தோன்றிக் கொண்டிருப்பார்கள் "
[நூல்- முஸ்னத் அஹ்மத் ,பாகம் 2,பக்கம் 692,எண் 6952 , முஸ்னத் அப்துர்ரஸ்ஸாக் ,எண் 20790]
"அருமை நாயகம் ﷺ அவர்கள் கிழக்குத் திசையை முன்னோக்கி நின்றவர்களாக இங்கிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் எனக் கூறினர் "
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,கிதாப் பித்தன்,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]
"உம்முல் மூஃமினீன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இருந்து வெளிவந்த வாய்மையுள்ள வள்ளல் நபி ﷺ அவர்கள் கிழக்குத் திசையைச் சுட்டிக் காட்டி ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு இங்கிருந்து தான் குஃப்ரின் தலைமைப் பீடம் வெளியாகும் என்றனர் "
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,கிதாப் பித்தன்,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]
"அருமை நாயகம் முஹம்மத் ﷺ அவர்கள் மிம்பரில் அருகில் நின்றவர்களாக ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு குழப்பம் இங்கிருந்து தான் ,குழப்பம் இங்கிருந்து தான்எனக் கூறினார்கள் "
"அருமை நாயகம் முஹம்மத் ﷺ அவர்கள் குத்பாவுக்காகத் தயாரான பொழுது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டின் பக்கமாக சைக்கினை செய்து ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் என்று மூன்று முறை கூறினார்கள் "
[நூல்- புஹாரி ஷரீப் ,கிதாபுல் ஜிஹாத் , நுஸ்கத்துல் காரி,பாகம் 6,பக்கம் 318]
"ஷைத்தானுடைய இரு கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு குழப்பம் இங்கிருந்து தான் வெளியாகும் . குழப்பம் இங்கிருந்து தான் தோற்றமெடுக்கும் ,குழப்பம் இங்கிருந்து தான் வெளியாகும் என்று மூன்று முறை கிழக்குத் திசையை நோக்கி தங்களின் முபாரக்கான கரத்தைக் கொண்டு சைக்கினை செய்தார்கள் ".
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]
"கிழக்குத் திசையிலிருந்து தலையை சிரைத்துள்ள கூட்டமொன்று தோன்றும் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது< . அவர்களை கொல்லுவோருக்கே சோபனம் என்பதாக ஏந்தல் நபிகளார் ﷺ அவர்கள் நவின்றார்கள் "
[நூல் - தாரீக் திமிஷ்குல் கபீர் ,பாகம் 25,பக்கம் 278]
"கிழக்குத் திசையிலிருந்து சிலர் தோன்றுவார்கள் அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . அவர்களில் இறுதி மனிதன் தஜ்ஜாலுடன் இணையும் வரை அவர்கள் அவர்கள் தோன்றிக் கொண்டிருப்பார்கள் "
[நூல்- கன்ஸூல் உம்மால் ,எண் 31244]
"கிழக்குப் பக்கமிருந்து வெளிப்படும் கூட்டமானது அவர்கள் குரானை ஓதுவர் . ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . அத்துடன் அவர்கள் வில்லிலிருந்து அம்பு விரைந்தோடுவதைப் போல மார்க்கத்திலிருந்து வெள்யேறிப் போய் விடுவார்கள் "
[நூல்- கன்ஸூல் உம்மால் ,பாகம் 11,பக்கம் 205]
மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் ,இன்று நாம் கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் அடித்தளம் ,புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவின் கிழக்குப் பகுதியில் இருந்துதான் தோன்றியது என்பதைத் தெளிவுபடுத்துவதோடு அவர்கள் தமீமுடைய வம்சத்தவர் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது .




















