"எனது உம்மத்திலுள்ள சிலர்,அவர்களது அடையாளம் தலையை சிரைப்பது ஆகும் . அவர்கள் அவர்கள் குரானை ஓதுவார்கள் ,ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது. >அவர்கள் வில்லில் இருந்து பாய்ந்து செல்லும் அம்பைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள். அதன்பின் அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் மீளவே மாட்டார்கள் . அவர்கள் படைப்புகளிலேயே மிகவும் மோசமானவர்கள் என்பதோடு இயற்கை அமைப்பிலேயே அவர்கள் கொடியவர்கள் என்பதாக ஏந்தல் நபி ﷺ நவின்றதாக ஹழ்ரத் அபூதர் கிபாறி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றனர் " .
[நூல் - கன்சுல் உம்மால் , பாகம் 11 , பக்கம் 139 ]
"எனது சமுதாயத்தில் ஒரு கூட்டம் வெளியாகும்.அவர்கள் குரானை ஓதுவார்கள் அவர்கள் ஓதுவதை உங்கள் ஓதுதலோடும் ,அவர்களுடைய தொழுகையை உங்கள் தொழுகையோடும் ,அவர்கள் நோன்பை உங்கள் நோன்போடும் நீங்கள் ஒப்பிடுப் பார்ப்பீர்களேயானால் உங்களுடைய வணக்கங்களை நீங்கள் அற்பமாகப் பார்ப்பீர்கள். அத்துடன் குரான் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றது என்ற எண்ணத்துடன் அதை அவர்கள் ஓதுகின்றனர் . ஆனால் அது அவர்களுக்கு பாதகமாகவே இருக்கும் . இன்னும் அது அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது . வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்லுவதைப் போல அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதாக அருமை நாயகம் ﷺ நவின்றதை ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் அறிவிக்கின்றனர் "
[நூல் -முஸ்லீம் ஷரீப் ,கிதாபுஸ் ஸகாத் ,பாபுத் தஹ்ரீழி அலா கத்லில் கவாரிஜி ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 618]
இதுவரை மேற்கூறப்பட்ட நபிமொழியாவும் ஹழ்ரத் அலீ இப்னு அபீதாலிப் கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் காலத்தில் வாழ்ந்த க்வாரிஜீய்யீன்களைக் குறித்து சொல்லப்படாதல்லவா என நீங்கள் யோசிக்கலாம் . அது ஒருவகையில் நியாயமும் கூட . இன்னும் க்வாரிஜீய்யீன்களை குறித்து அருமை நாயகம் ﷺ இவ்வளவு கடுமையாக எச்சரித்ததன் காரணம் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்களேயானால் , இன்றுள்ள வஹாபிகளின் செயல்பாடுகளுக்கும் க்வாரிஜீய்யீன்களின் நடவடிக்கைகளுக்கும் பெயர் மாறுபாடு மட்டும்தானேயன்றி , மற்றபடி இரு சாராரின் நடவடிக்கைகளும் ஒரே மாதிரி தான் அமைந்துள்ளது என்பதை சிந்திக்கும் ஆற்றல் உடையோருக்கு தெளிவாகத் தெரியும் .
அவ்வாறின்றி நீங்கள் இதை ஏற்க மறுப்பீர்களேயானால் ,
" தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காமல் குரானை அவர்கள் வாயளவில் மட்டுமே ஓதிக் கொண்டிருப்பர் ,இன்னும் அக்கூட்டம் தஜ்ஜாலுடைய வருகை வருகைவரை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் " என்ற நபிமொழியையும்
"அக்கூட்டத்தில் இறுதியானவன் கொடியோன் தஜ்ஜாலாகும் " என்ற நபிமொழியையும் பொய்யாக வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கின்றோம் .
"ஹழ்ரத் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் க்வாரிஜீய்யீன்களை படைப்புகளிலேயே மிகக் கெட்டவர்களாக கருதினர் . காரணம் அவர்கள் நிச்சயமாகக் காபிர்கள் குறித்து இறக்கப்பட்ட திருமறை வசனங்களை மூஃமீன்கள் மீது திருப்புகின்றவர்களாக இருந்தனர் எனக் கூறுகின்றனர் "
[நூல்- ஸஹீஹ் புஹாரி ]
"(இந்த க்வாரிஜீய்யீன்கள் ) திருமறைக்குரிய பொருளை மட்டுமல்ல அதன் விளக்கங்களையும் சூறையாடுபவர்களாகும் "
[ நூல் - ஷரஹ் முஸ்லீம் ,இமாம் நவவி , கிதாபுஸ் ஸகாத் ]
மேற்கண்ட விளக்கத்தைக் கொண்டு தற்காலத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜாமத்தினரைத் தவிரவுள்ள அனைத்து இயக்கங்களும் காபிர்களைப் பற்றி இறக்கப்பட்ட வசனங்களையெல்லாம் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீது திருப்புவதன் மூலம் மூஃமீன்களையெல்லாம் முஷ்ரிக்குகளாக ஆக்குவதையும் , திருமறை வசனங்களுக்கு இமாம்கள் தப்ஸீர்களில் கொடுத்துள்ள விளக்கங்களை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தன்னிச்சையாகப் பொருள் தருகின்றனர் . அதனால் தான் மேற்கூறப்பட்ட நபிமொழிகள் அனைத்தும் இவர்களையே சாரும் .




No comments:
Post a Comment