ஷைகுன் நஜ்த் பேரறிஞர்களின்குடும்ப வாரிசாகப் பிறந்ததால் அவர் தமது தந்தையிடமே ஹன்பலி மத்ஹபின் பிரகாரம் கல்வி கற்றார் . அவர் கல்வி கற்ற அக்காலம் குறித்து அலீ தன்தாவி ஜெளஹரி என்பார் தமது நூலின் 21ம் பக்கத்தில் ....
" ஷைகு நஜ்தி தனது தந்தையிடமே கல்வி கற்றார் . அவர் அப்போதே தனக்கு பிடிக்காத விஷயங்களை எல்லாம் வழிகேடானவை என்று எதிர்த்தார் . இதனால் அனைவரும் அவரை எதிர்க்க துவங்கினர் . அவருடைய தந்தையும் அவர் மீது கோபமுற்றார் . தந்தை பிரச்னைகளை விரும்பாத ஒருவராக இருந்ததால் மகனை பலமுறை எச்சரித்து தடுத்து பார்த்தார் . அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தனது பேச்சுகளையே தொடர்ந்து பேசி வந்தார் . இந்நிலையில் அவரோடு சிலர் இணைந்து கொண்டனர் . இருப்பினும் பெரும்பாலானோர் அவரை எதிர்த்தே வந்தனர் . இறுதியில் அவருடைய தந்தையிடம் வந்து போய் கொண்டிருந்தோர் இரு பிரிவாக பிரிந்தனர் . சொற்பமானோர் மகனோடும் ,பெரும்பான்மையோர் தந்தையுடனும் இணைந்திருந்தனர் "
[ நூல் - தாரீக் நஜ்தோ ஹிஜாஸ் ,பக்கம் 21 ]
அதன்பின் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்ட அவர் மதீனாவுக்கு சென்று சிலகாலம் வரை அங்கே தங்கியிருந்து அங்குள்ள சில உலமாக்களிடம் கல்வி பயின்றார் . புனித மதீனா முனவ்வராவில் அவர் சந்தித்த உலமாக்களை பற்றி நஜ்தைச் சேர்ந்த உஸ்மான் பின் பஷீர் என்பார் 'உன்வானுல் மஜ்த் ஃபீ தாரீகி நஜ்த் 'என்னும் நூலிலும் , அலீ தன்தாவி ஜெளஹரி என்பார் 'முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் 'என்ற நூலிலும் கீழ்கண்டவாறு சொல்கின்றனர் . அதாவது .....
இவரை பற்றி ஷைகு நஜ்தி கூறியதாக பின்வருமாறு சொல்லப்படுகிறது ...
"ஷைகு நஜ்தி கூறுகிறார் : ஒருநாள் இப்னு ஸைபிடம் நான் அமர்ந்திருக்கும் போது மஜ்மஃவாசிகளுக்காக நான் சித்தம் செய்து வைத்துள்ள ஆயுதங்களை காட்டடுமா என்று கேட்க ,அதற்கு நாம் ஆம் என்றேன் . அப்போது அவர் என்னை நூல்கள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று இவைதான் அந்த ஆயுதங்கள் என்றார் . இப்னு ஸைப் என்னும் இவர்தான் ஷைகு நஜ்தியை இப்னு தைமிய்யாவுடைய நூற்களை மறுஆய்வு செய்ய தூண்டியவரும் அதற்கு வழிவகுத்தவருமாவார் . "
இவர் ஷைகு நஜ்தியுடைய முதலாவது ஆசிரியராகும் . இனி இரண்டாவது ஆசிரியரைப் பற்றி கூறப்படுவதாவது ....
"அவர்கள் நிராகரிப்போருக்கு எதிராக தங்களுக்கு வெற்றியைத் தருமாறு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் "
என்று கூறுகின்றான் . இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் திருகுரானின் விரிவுரையாளர் அல்லாமா இமாம் இப்னு கதீர் رحمه الله அவர்கள் ,....

"ஷைகு நஜ்தி மதீனா முனவ்வராவில் இருவரை சந்தித்தார் . அச்சந்திப்பால் அவருக்குள் புதியதோர் திருப்புமுனை ஏற்பட்டது . அதில் ஒருவர் நஜ்தைச் சேர்ந்த மஜ்மஃ என்னும் இடத்திலுள்ள அரசியல்வாதியாகவும் ,அறிஞராகவும் இருந்தார் . அவர் இப்னு தைமிய்யா மற்றும் அவருடைய தோழர்களால் எழுதப்பட்ட நூற்களை மறுஆய்வு செய்யும் ஒருவராக இருந்தார் . அவர்தான் அப்துல்லாஹ் இப்னு இப்ராஹீம் இப்னு ஸைப் என்பவராகும் ".
இவரை பற்றி ஷைகு நஜ்தி கூறியதாக பின்வருமாறு சொல்லப்படுகிறது ...
"ஷைகு நஜ்தி கூறுகிறார் : ஒருநாள் இப்னு ஸைபிடம் நான் அமர்ந்திருக்கும் போது மஜ்மஃவாசிகளுக்காக நான் சித்தம் செய்து வைத்துள்ள ஆயுதங்களை காட்டடுமா என்று கேட்க ,அதற்கு நாம் ஆம் என்றேன் . அப்போது அவர் என்னை நூல்கள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்று இவைதான் அந்த ஆயுதங்கள் என்றார் . இப்னு ஸைப் என்னும் இவர்தான் ஷைகு நஜ்தியை இப்னு தைமிய்யாவுடைய நூற்களை மறுஆய்வு செய்ய தூண்டியவரும் அதற்கு வழிவகுத்தவருமாவார் . "
இவர் ஷைகு நஜ்தியுடைய முதலாவது ஆசிரியராகும் . இனி இரண்டாவது ஆசிரியரைப் பற்றி கூறப்படுவதாவது ....
"ஒருநாள் ஷைகு நஜ்தி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அறைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கே வருகை தந்தவர்கள் அனைவரும் நபியவர்களிடம் நேரடியாக உதவி தேடிக் கொண்டிருந்தனர் . அப்போது அங்கே வருகை தந்த அவருடைய ஆசிரியரிடம் அது பற்றி ஷைகு நஜ்தி கேட்க ,அதற்கவர் ; இவர்களெல்லாம் நாசமாகப் போகக் கூடியவர்கள் . இவர்கள் செய்யும் இக்காரியம் வீணான ஒன்றாகும் என்று சொன்னார் ." அவர்தான் முஹம்மத் ஹயாத் சிந்தீ என்பவராகும் .
ஷைகு நஜ்தியாலும் அவருடைய சக இயக்கவாதிகளாலும் மிக மிக வன்மையாக எதிர்க்கப்பட்டு வரும் விஷயங்களில் பிரதானமானது , நபிமார்கள் வலிமார்கள் போன்றோர்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்களை பொருட்டாக்கியோ உதவிதேடும் விஷயமாகும் .
இது அவர்களின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய விஷயங்களில் மாபெரும் குற்றத்திற்குரிய விஷயமாகும் . இதேபோல இன்னும் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் அடுத்து வரும் பதிவுகளில் உதவிதேடும் விஷயம் சம்பந்தமாக சுருக்கமான விளக்கத்தை பின்னால் பேசுவோம் .
இருப்பினும் வாசகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் இங்கே ஒரேயொரு குர்ஆனுடைய வசனத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகின்றோம் . இறைவன் தனது வேதத்தில் ஸுரா அல் பகராவின் 89ம் வசனத்தில் ....
"அவர்கள் நிராகரிப்போருக்கு எதிராக தங்களுக்கு வெற்றியைத் தருமாறு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள் "
என்று கூறுகின்றான் . இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் திருகுரானின் விரிவுரையாளர் அல்லாமா இமாம் இப்னு கதீர் رحمه الله அவர்கள் ,....
"யூதர்கள் ஏந்தல் நபி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இப்பூவுலகுக்கு அனுப்பப்படும் முன்பாக அவர்களின் பொருட்டால் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜுடைய கூட்டத்தாருக்கு எதிராக வெற்றியைத் தருமாறு பிரார்த்தித்து கொண்டிருந்தார்கள் . அரேபியரில் ஒருவராக நபியவர்கள் அனுப்பப்படவே அவர்களை மறுத்து பொய்ப்பித்து விட்டனர் . இவ்வாறு அவர்கள் பொய்ப்பித்ததைக் கண்ட மஆத் இப்னு ஜபல் , பிஷ்ர் பின் அல் பராஃ , தாவூத் பின் ஸலமா போன்ற தோழர்கள் ,நாங்கள் முஷ்ரிக்குகளாக இருந்த போது எங்களுக்கு எதிராக வெற்றியைத்தா என்று நபியவர்களின் பொருட்டாக்கி உதவி தேடுபவர்களாகவம் , நபியவர்களின் சிறப்பை எங்களுக்கு சொல்பவர்களாகவும் இருந்தீர்கள்.ஆதலால் இப்போது அல்லாஹ்வுக்கு அஞ்சி அந்த நபியைக் கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றனர் ".
ஆனால் இப்போது நம்மிடையே உள்ள தர்ஜுமத்துல் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள பொருள் பிழையாக இருப்பதால் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுகின்றோம் .
இந்த வசனத்தில் சொல்லிக் காட்டப்படுவது போல் நபிகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் இவ்வையகத்தில் தோன்றுவதற்கு முன்பே நபியவர்களை பொருட்டாக்கி யூதர்கள் பிரார்த்தித்து வந்ததாக குர்ஆன் சொல்லிக் காட்டுகின்றது என்றால் இப்போது நபியை பொருட்டாக்கி பிரார்த்திக்கலாமா இல்லையா ? என்பதை நீங்களே தீர்மானியுங்கள் .
அடுத்து ஷைகு நஜ்தி புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவில் இப்னு தைமிய்யாவின் சீடர்களோடு அமர்ந்ததால் ,அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டதோடு இப்னு தைமிய்யாவை விட ஒரு படி மேலே சென்று அப்போதிருந்த முஸ்லிம்களையெல்லாம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் முஷ்ரிக்குகள் எனும் கொள்கையை தனதாக்கிக் கொண்டவராக நஜ்துக்கு திரும்பி சென்றார் . அங்கே சென்றவர் மீண்டும் ஷாம் தேசம் செல்வதற்காக தனது தந்தையிடம் அனுமதி பெற்று பஸரா வழியாக ஷாமை நோக்கி சென்றார் .
பஸ்ராவுக்கு வந்து சேர்ந்தவர் அங்கே சிலகாலம் தங்கியிருந்து முஹம்மத் அல் மஜ்முயி என்பாரிடம் சில விஷயங்களை கற்றுக் கொள்கிறார் . அப்போது பஸராவாசிகளிடம் காணப்பட்ட பல விஷயங்களை அவர் வெறுத்தார் . அது அவ்வூர் மக்களுக்கு தெரிய வரவே அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டார் .
பின்னர் ஷாமுக்கு செல்வதற்கான கட்டுச்சாதம் இல்லாததால் அல் அஹ்ஸாஃ என்னும் ஊருக்குச் சென்று அங்கேயிருந்த அப்துல்லாஹ் பின் லதீப் என்பாரின் வீட்டில் தஞ்சம் புகுந்தார் . பின்னர் அங்கிருந்து ஹுரைமலா என்னும் ஊருக்குப் போய் சேர்ந்தார் . அவருடைய தந்தையும் அங்குதான் வசித்துக் கொண்டிருந்தார் . இது சுமார் ஹிஜ்ரி 1139 -கி.பி 1726ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவமாகும் .
" ஹுரைமலாவுக்கு போய் சேர்ந்த போது அவருடைய தந்தையும் அங்கே இருந்ததால் தந்தையிடமே கல்வியை தொடர்ந்து கற்கலானார் . இருப்பினும் முன்னைவிட இப்போது மிகத்தீவிரமாக நஜ்துவாசிகளின் காரியங்களை எதிர்க்கலானார் . அதனால் தொடர்ந்து தந்தைக்கும் மைந்தனுக்குமிடையே விவாதங்களும் ,தர்க்கமும் அதிகரித்தது . அதேபோல் ஊராருக்கும் அவருக்குமிடையே மோதல்கள் மேலும் வலுக்கத் தொடங்கியது .இந்நிலை ஹிஜ்ரி 1153ஆம் ஆண்டு வரை ,அதாவது தந்தையின் மரணம் வரை தொடர்ந்தது ."
[ நூல் - தாரீக்குன் நஜ்த் -அரபி ,பக்கம் 113 ]