Tuesday, 23 July 2019

ஷைகு நஜ்தி முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்

இவர் நஜ்த் மாகாணத்தில் தன்னை நபியென வாதிட்ட முஸைலமா பிறந்த ஊரான உயைனாவில் தான் பிறந்தார் . இந்த ஊர் தற்போது ரியாதில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . இதைத்தான் ...


" இறுதிக்காலத்தில் முஸைலமாவின் ஊரில் இருந்து ஒருவன் தோன்றுவான் . அவன் இஸ்லாத்தை மாற்றி அமைப்பான் என்பதாக அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின்  பொன்னான வாக்கு தெளிவுபடுத்துகின்றது  "

இன்னும் ...


"முழரின் பிள்ளைகளில் இல்யாஸும் ஒருவர் . இல்யாஸின் குடும்பத்தார் முத்ரிகா ,தாபிகா என இரு கிளைகளாக பிரிந்தனர் . இவர்களில் தாபிகாவின் வழித்தோன்றலே ஷைகு நஜ்தியாகும் "

[ நூல் - முதீருள் வஜ்த் ஃபீ அன்பாசி முலூகி நஜ்த் , பக்கம் 10 ]

இன்னோரிடத்தில் ...



"நஜ்தில் இருக்கும் பனு தமீம்கள் மூன்று குடும்பங்களில் உள்ளடங்குவர் . அதிலொன்று 'ஹன்ழலா' வாகும் . அக்கோத்திரத்தை சார்ந்தவர்கள் தான்  அப்துல்   வஹ்ஹாபின் அங்கத்தினர்களாகும் . அவர்கள் தான் ரியாத்திலுள்ள முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் குடும்பத்தினராகும் "

[ நூல் - ஹாஷியா முதீரில் வஜித் , பக்கம் 32 ]

ஷைத்தானின் கொம்பாகத் திகழ்ந்த முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ,நாயகம்   صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அமுத வாக்கிற்கிணங்க  முழர் குடும்பத்தைச் சார்ந்தவராக இருப்பதுடன் , துல்குவைஸராவின் கோத்திரமான பனு தமீமையும் சேர்ந்தவராக இருக்கிறார் . முழருடைய குடும்பத்தில் ,பனு தமீமுடைய கிளையில் ,நஜ்த் மாகாணத்தில் ,உயைனாஎன்னும் ஊரில் தோன்றிய அனைவருமே கொடியவர்கள் , ஷைத்தானுடைய கொம்புகள் என்று சொல்வது தவறாகும் . காரணம் அவர்களில் நல்லவர்களும் இருக்கலாம் . இதற்கு ஆதாரமாக அடுத்து வரும் ஹதீதை எடுத்துக் கொள்ளலாம் . அதாவது ....


"ஈராக்கிலுள்ள நல்லவர்கள் ஷாமுக்கும் ,ஷாமிலுள்ள தீயவர்கள் ஈராக்கிற்கும் சென்றடையாத வரை இறுதிநாள் தோன்றாது என்கிறார்கள் ஏந்தல் நபி  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் "

எனவே எல்லா இடத்திலும் ,எல்லா வம்சத்திலும் நல்லவர்களும் இருப்பர் . தீயவர்களும் இருப்பர் என்பதால் இப்போது நாம் பனு தமீம் பற்றியும் ,துல்குவைஸரா பற்றியும் பார்ப்போம் . 


" பனு தமீமுடைய கிளையைச் சார்ந்தோரில் சிலர்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களது  திருச்சபைக்கு வருகை தந்த போது நபியவர்கள் அவர்களை நோக்கி , ' பனு தமீம்களே ! உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்  ' என்றனர் . அதற்கு அவர்கள் ,( ஏற்கனவே)   எங்களுக்கு சுபச் செய்தி சொல்லி விட்டீர்களாதலால் இப்போது (பணம் ) கொடுங்கள் என்றனர் . அதுகேட்ட நபியவர்கள் திருவதனம் சினத்தால் மாறிப் போய் விட்டது . அப்போது எமன் தேசத்தை சார்ந்தவர்கள் சிலர் அங்கே வருகை தந்தனர் . அவர்களிடம் நபியவர்கள் , எனது சுபச் செய்தியை பனு தமீம்கள் ஏற்கவில்லை ,நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல ,அதற்கவர்கள்;நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்றனர் ".

[  நூல் - புஹாரி ஷரீப் , அறிவிப்பாளர் : ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹுசைன்  رضي الله عنه அவர்கள் , பாகம் -3,பக்கம் 262 . நஸாயி ,திர்மிதி ,கிதாபுல் மனாகிப் . இப்னு ஹிப்பான் , பாகம் 9 , பக்கம் 202 ] 

இன்னும் ...


 " ஹபீபே ! உங்களுடைய அறையின் வெளிப்பக்கமிருந்து உங்களை அழைப்பவர்களில் பெரும்பாலானோர் அறிவிலிகளாக இருக்கின்றனர் "
[ அல் குர்ஆன் ] 

 இவ்வசனமானது , திங்களெம் கோமான் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள்  தமது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள போது நபியவர்களின் வீட்டு வெளிப்பக்கமிருந்து சிலர் நபியவர்களின் திருப்பெயரைச் சொல்லி அழைத்த பொழுது அவர்களது விஷயத்தில் இவ்வசனம் இறக்கப்பட்டது . 

[ நூல் - நூருல் யகீன் பீ ஸீரத்தி ஸையிதில் முர்சலீன் , பக்கம் 247 , அஸ் சீறதுன் நபவிய்யா பாகம் 2,பக்கம் 314 ] 

அவர்களை அறிவீனர்கள் என்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான் . அவர்கள் தான் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் உடைய முன்னோர்களான பனு தமீம்களாகும் . ஆம் ,அல்லாஹ்வால் அறிவீனர்கள் என்று பேசப்பட்ட கூட்டத்தை சார்ந்த இந்த ஷெய்கு நஜ்தியை தான் ஷிர்க்கையும் ,பித்அத்தையும் அழித்தொழித்து ஏகத்துவத்தை புதுப்பிக்க வந்த புரட்சியாளர் என்கிறது ஒரு கூட்டம் .

ஆனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் எனச் சொல்லப்படும் நல்லடியார்களைத் தவிர உள்ள ஏனைய எல்லா சிறு சிறு கூட்டங்களுமே ஷைகு நஜ்தியின் சகாக்களாக இருப்பதை பார்த்துக் கொண்டே,   என்ன காரணத்திற்காக  இப்படிச் சொல்கின்றனர் என்பதுதான் நமக்கு புரியாத புதிராகும் . 


No comments:

Post a Comment