"காபிர்களுடைய திட்டப்படி அருமை நாயகம் عليه الصلاة والسلام அவர்களை கொல்லும் எண்ணத்துடன் வீட்டு வாசலை சூழ்ந்து அதற்குரிய தருணத்தை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை அறியாமலேயே நபியவர்கள் அவர்களுக்கு முன்னாலேயே வெளியேறுகின்றனர் . அருமை நபியவர்கள் வெளியேறும் போது சூறா யாஸீனுடைய வசனம் ஒன்று முதல் ஒன்பது வரை ஓதி மண்ணில் ஊதி அம்மண்ணை அவர்கள் மீது தூவினார்கள் . அதன் காரணமாக அவர்கள் அனைவரும் தங்களின் பார்வையை இழந்து போயினர் . அதன்பின் புனித ஹிஜ்ரத்திற்குரிய பயணத்தை மேற் கொண்டார்கள் ".
"நாயகம் عليه الصلاة والسلام அவர்கள் அங்கிருந்து வெளியேறியதை உணராது தம்மை மறந்தவர்களாக காபிர்கள் நின்று கொண்டிருக்கும் பொது நஜ்த் உடைய ஷெய்கு அங்கு வருகை தந்து ,யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்க , அதற்கவர்கள் ,இன்னாரை என்று சொன்னதும் ,அல்லாஹ் உங்களை இழிவு படுத்துவானாக என்று சாபமிட்டு ,உங்களுடைய தலையில் மண்ணை வாரி போட்டுவிட்டு அவர் போக வேண்டிய இடத்திற்குப் போய் விட்டார் என்றான் . அப்போதுதான் அவர்கள் தமது தலையில் மண் இருப்பதை உணர்ந்தனர் . "
[ நூற்கள் - உயூனுல் அஸர் , 1-292,293,294 . அர்ரெளழுல் உல்ப் ,2-306,307,308,309 . அல் காமில் பித் தாரீக் , 1- 694,695 . தலாயிலுன் நுபுவ்வத் இமாம் பைஹகீ , 2-467,468,469,470 . அத்தபகாத்துல் குப்ரா , 1-227 . அல் பிதாயா வன் நிஹாயா , 3-175,176177 . தப்சீர் பகவி , சூறா அன்பால் ,வசனம் 30 ]
* தொப்பி அணிவதை ஸுன்னத்தான அமல் இல்லை என வாதிப்போர் இக்கட்டத்தை சார்ந்தவர்கள் தான் என்பது இதன் மூலம் ஆதாரப்படுத்தப்படுவதை கவனிக்க வேண்டுகின்றோம் .
இது மட்டுமா !நபியவர்கள் தமது நபித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பே அவர்களை அவமானப்படுத்த திட்டமிட்ட நஜ்துடைய ஷெய்கின் எண்ணம் ஈடேறாமல் போனதால் நபியவர்களை கொல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் . அதற்குரிய வாய்ப்பும் அவனுக்கு தானாக வந்து அமைந்தது . அதிலும் அவன் கலந்து கொண்டு அதற்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்தான் . இருந்தும் அதிலும் அவன் தோல்வி கண்டான் .
ஆம் ! நாயகம் عليه الصلاة والسلام அவர்களை அவமானப்படுத்த வேண்டும் .அவர்களை கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்ட நஜ்துவாசிகள் அவைகளில் தோல்விக்கு மேல் தோல்வியைத் தழுவியதாலும் ,இந்நிலையில் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியையும் கண்டு அளவில்லாத பொறாமை கொண்டனர் . முடிவில் நபியவர்களை கொல்ல முடியாதென உணர்ந்து கொண்ட அவர்கள் அவர்களின் தோழர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினர் . இதோ அதற்கான சான்றுகளை பாருங்கள் .
"ஆமிர் பின் மாலிக் பின் ஜாஃபர் என்பார் புனிதமிகு மதீனா முனவ்வராவில் நாயகம் عليه الصلاة والسلام அவர்களை சந்திப்பதற்காக வந்தார் . அதுபோது அவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு நபியவர்கள் சொல்ல ,அதை அவர் ஏற்கவும் இல்லை ,பொய்ய்யாக்கவும் இல்லை . அதற்கு மாறாக நபியவர்களிடம் உங்களின் தோழர்களில் சிலரை நஜ்துக்கு அனுப்புங்கள் . அவர்கள் அங்குள்ள மக்களை இஸ்லாத்தின் பக்கமாக அழைப்பார்கள் . அவர்களின் அழைப்பை நஜ்த் உடைய மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னார் . அதற்கு நாயகம் عليه الصلاة والسلام அவர்கள் நஜ்து வாசிகள் எனது தோழர்களுக்கு அநீதம் இழைத்து விடுவார்களென நான் அஞ்சுகின்றேன் என்றனர் . அதுகேட்ட அவர் , உங்களுடைய தோழர்களுக்கு நான் பொறுப்பாளி . பயப்படாமல் அவர்களை இஸ்லாத்தின் பக்கமாக அழைப்பதற்கு அனுப்புங்கள் என்றார் ".
[ நூல் - புகாரி ஷரீப் , கிதாபுல் மஙஆசி , இர்ஷாதுஸ்ஸாரி , பாகம் 9 ,பக்கம் 155 ]
நஜ்த்துவாசிகளுடைய தோற்றத்தில் பலமுறை இப்லீஸ் தோன்றி தனக்கு தீங்கு விளைவிக்க முனைந்ததை நபியவர்கள் கவனத்தில் கொண்டுதான் அப்பகுதி மக்கள் இஸ்லாத்தின் பரமவிரோதிகள் .அவர்கள் ஒருபோதும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக உழைக்க மாட்டார்கள் . இந்நிலையில் நஜ்த் வாசிகளை இஸ்லாத்தின் பக்கமாக அழைக்க அவர் தமது தோழர்களை அனுப்புமாறு கூறிய போது தமது தோழர்களுக்கும் அவர்கள் தீங்கு விளைவித்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன் என்று சொன்னார்கள் ,எனில் நஜ்த்வாசிகளை நாயகம் عليه الصلاة والسلام அவர்கள் எந்தளவுக்கு வெறுத்தார்கள் என்பதையும் , அவர்கள் மீது எவ்வளவு கோபம் கொண்டிருந்தாரகள் என்பதையும் நம் புரிந்து கொள்ளலாம் .
அத்துடன் நஜ்த்வாசிகளால் இஸ்லாத்திற்கு ஒருபோதும் நிம்மதி கிடைக்க போவதில்லை . முஸ்லீம்களையும் அவர்கள் நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்பதையும் ஏந்தல் நபி அவர்கள் நமக்கு தெளிவு படுத்தி விட்டார்கள் . அது மட்டுமல்ல . கண்மணி நாயகம் عليه الصلاة والسلام அவர்களது அகமியத்தை ,அவர்களது எதார்த்தத்தை நஜ்த்வாசிகள் ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள் என்பதயும் நபியவர்களின் நபித்துவம் வெளியாவதற்கு முன்னரே இப்லீஸ் எடுத்துக் காட்டிவிட்ட உண்மையை நாம் மறக்கக்கூடாது . அதன் பின் நபியவர்கள் ....
" உங்களின் தோழர்களை இஸ்லாமிய அழைப்புக்காக நஜ்துக்கு அனுப்புங்கள் என்னும் கோரிக்கையை ஏற்று எழுபது தோழர்களை அனுப்பி வைத்தார்கள் . அவர்களனைவரும் வாலிப பருவத்தை உடைய அன்ஸார்களாகவும் காரிகள் என்று அழைக்கப்பட்டவர்களும் ஆவார்கள் .
முன்திர் இப்னு அம்ர் என்பவர் அவர்களுடைய தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் . அவர்கள் மவூனா என்னும் கிணற்றடியை சமீபித்த போது பெரும்பான்மை கூட்டமொன்று அவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களோடு சண்டை செய்தனர் . அதில் அவ்வெழுபது தோழர்களும் ஷஹீதாக்கப்பட்டனர் ".
நஜ்துவாசிகளை இஸ்லாத்தின் பக்கமாக அழைப்பதாக பொய் திட்டம் வகுத்து அத்தோழர்களை அழைத்துச் சென்று கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாமல் கொலை செய்த நஜ்துவாசிகளைக் கொண்டு மூஃமின்கள் நிம்மதி அடைவார்களா ? அதன்பின் காலப்போக்கில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று மார்க்கத்தை துண்டாட நினைத்தனர் .
இதில் ,தானொரு இஸ்லாத்தின் விரோதி எனக் கூறிக் கொண்டு இஸ்லாத்தை எதிர்க்க முடியாது என்பதாலும் ,அதில் தங்களுக்கு ஒருக்காலும் வெற்றி கிடைக்காது என்பதாலும் ,இதை நன்கு உணர்ந்திருந்த அவர்கள் தானும் முஸ்லிம்களில் ஒருவன் தான் என்று நடிப்பதன் மூலம் வெற்றிபெற முடியும் என்று நினைத்தனர் . அதில் நஜ்துவாசிகளும் ,நஜ்துடைய ஷெய்கும் வெற்றி கண்டனர் .
இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காகவென்று தோழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட செய்தி நபியவர்களுக்கு கிடைக்கப் பெற்ற போது நபியவர்கள் கடும் சினம் கொண்டார்கள் . நஜ்துவாசிகள் தமது தோழர்களுக்கு இழைத்த தீங்கை சகித்துக் கொள்ள முடியாமல் போனபோது தான் அவர்களுக்கு எதிராக ......
[ நூல் - புஹாரி ஷரீப் , கிதாபுல் மஙஆஸி , தபகாத்துல் குப்ரா , 2-52, அர்ரெளழுல் உன்ப் , 3-379 , அல் பிதாயா வன் நிஹாயா , 4 -71 , தாரீக் திப்ரி , வாகிதி, அல் காமில் , உயுனுல் அதர் ,அத்தபகாத் , அத்தலாயில் , அல் மவாஹிப் , அஸ் ஸாத் ]
அண்ணல் நபி عليه الصلاة والسلام அவர்கள் ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத்தைக் குறித்து பிராத்தித்த பொழுது நஜ்தைச் சார்ந்த தோழர்கள் எங்களின் நஜ்துக்கும் பிராத்தியுங்கள் என்ற பொழுது அங்கிருந்து தான் குழப்பங்களும் , ஷைத்தானுடைய கொம்பும் உதயமாகும் என்பதாக நபியவர்கள் கூறியதற்குரிய சுருக்கமான காரணங்களை நபியவர்களின் காலத்திலியே நிலவி வந்த ஒரு சில பிரச்சினைகளை இதுவரை நாம் பார்த்தோம் .
அத்துடன் அப்பகுதி நபியவர்களின் பிரார்த்தனைக்கு இலக்காகாமல் போனதோடு ,நபியவர்களால் சாபமிடப்பட்ட ஒரு பிரதேசம் என்றால் அது இன்றைய சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்ட நஜ்த் தான் .
அவ்வூரின் உண்மை நிலையை மறைப்பதற்காகவே அதனுடைய பெயரை மாற்றியதோடு ,இப்பொது அங்கே இருப்பவர்களும் அன்று இருந்தோரின் எண்ணங்களை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இனங்காட்டுவதற்காகவே அதை அந்த நாட்டின் தலைநகராகவும் பிரகடனப்படுத்தினார்கள் . அவ்வாறு இல்லையெனில் மக்காவையோ அல்லது மதீனாவையோ தலைநகராக பிரகடனப்படுத்தி இருக்கலாம் அல்லவா ?
அடுத்து நபிமொழிக் கிரந்தங்களான புஹாரி ஷரீப் ,முஸ்லிம் ஷரீப் போன்ற நூற்களில் யுத்த சம்பந்தமான பகுதியில் அர்ரிகாஃ என்னும் பிரிவில் பல ஹதீதுகளில் நஜ்த் என்னும் சொல் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம் .உதாரணமாக .....
நான் நாயகம் عليه الصلاة والسلام அவர்களோடு நஜ்த் பக்கமாக போரிட்டுள்ளேன் என்கிறார்கள் ஹஜ்ரத் ஸெய்யிதினா அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் .
[ நூல் -புஹாரி ஷரீப் ]
இதைத் தவிர வரலாற்றுடைய நூல்கள் ,சரித்திர ஏடுகள் போன்றவைகளிலும் நஜ்த் என்னும் சொல் நிறைந்து காணப்படுகின்றது . ஆதலால் இப்போது நஜ்த் என்று எதற்கேல்லாம் சொல்லப்படுகின்றது என்பதையும் , இது குறித்து வரைபட வல்லுநர்கள் உட்பட பல்வேறு நபர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம் .






No comments:
Post a Comment