Thursday, 29 December 2016

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் - 1

கண்மணி நாயகம் ﷺ  அவர்களின் எச்சரிக்கை ,



Sahih Muslim Vol 3 Page 617

"இறுதிக் காலத்தில் கூட்டமொன்று வெளியாகும் . அவர்கள் நாகரீகமாக பேசக் கூடியவர்களாகவும் ,குறைந்த வயதுடையவர்களாகவும்,,மடையர்களாகவும் இருப்பர். அவர்களும் அண்ணல் நபியவர்களின் ஹதீதுகளை எடுத்துச் சொல்வர் . எனினும் அவர்கள் வில்லிலிருந்து பாய்ந்து செல்லும் அம்பைப் போல இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் .அவர்களுடைய ஈமான் வாய் பேச்சைத் தவிர தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .இத்தகையோரைக் கண்டால் அந்த இடத்திலேயே அவர்களைக்  கொன்று விடுங்கள் .அவ்வாறு கொல்பவருக்கு யுகமுடிவு நாளில் அதற்குரிய நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் ﷺ   அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என செய்யிதினா அலிய்யுன் கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் கூறுகின்றனர் "

[நூல்  - ஸஹீஹ் முஸ்லிம் ஷரீப் ,கிதாபுஸ் சகாத் ,பாபுத் தஹ்ரீழி அலா கத்லில் கவாரிஜி ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 617 ]


Sahih Muslim Page 610

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டமொன்று வெளியாகும் . அவர்களின் தொழுகையைப் பார்க்கும் நீங்கள் உங்கள் தொழுகையை அற்பமெனக் கருதுவீர்கள் . இன்னும் அவர்கள் குரானை ஓதுவார்கள் ,அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . அத்துடன் அவர்கள் வில்லில் இருந்து அம்பு வெளியேறுவதைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதாகக் அருமை நாயகம் ﷺ   அவர்கள் சொல்லக் கேட்டேன் என்கிறார்கள்  ஹஸ்ரத் அபூ சயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்கள்  "

[ நூல்  - முஸ்லீம் ஷரீப் ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 610 ]


Sahih Buhari Page 196
"அருமை நாயகம் ﷺ   அவர்கள்  எங்களிடையே (போரில் கைப்பற்றப்பட்ட ) கனீமத்துப் பொருட்களைப் பங்கீடு செய்து கொண்டிருந்தனர் . அப்போது தமீமுடைய வம்சத்தைச் சார்ந்த துல்குவைசரா என்பவன் நபியவர்களைப் பார்த்து , அல்லாஹ்வின் ரசூலே ! நீதமாகப் பங்கீடு செய்யுங்கள் என்று சொல்ல ,அதுகேட்ட நபியவர்கள் ;நீ ஒழிந்து போ என்று சாபமிடடவர்களாக நான் நீதமாக நடக்காவிட்டால் வேறு யார்தான் நீதமாக நடப்பார்கள் என்றனர் .அப்போது செய்யிதுனா உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி கோர,

அவனை விட்டு விடுங்கள் .நிச்சயமாக அவனுக்கு சில தோழர்கள் இருக்கிறார்கள் .அவர்களில் ஒருவனுடைய தொழுகை அல்லது நோன்பை உங்களில் ஒருவருடைய தொழுகைக்கும் ,நோன்புக்கும் ஒப்புநோக்கிப் பார்ப்பீர்களேயானால் உங்களுடைய அமல்களை மிக மிக அற்பமான ஒன்றெனக் கருதுவீர்கள் .ஆனால் அவர்கள் < வில்லில் இருந்து பாய்ந்து செல்லும் அம்பைப் போல மார்க்கத்திலிருந்து  வெளியேறிப் போய் விடுவார்கள் எனக் கூறியதாகக் ஹழ்ரத் அபூ சயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றனர் " 

[நூல்- முஸ்லீம் ஷரீப் ,கிதாபுஸ் ஸகாத் ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 610,
             புஹாரி ஷரீப் ,பாகம் 4,பக்கம் 196 ]



"உங்களில் ஒரு கூட்டம் வெளியாகும் . அவர்களுடைய தொழுகைக்கு முன்னால் உங்களுடைய தொழுகையையும் ,அவர்களுடைய நோன்புக்கு முன்னால் உங்களுடைய நோன்பையும் அவர்களுடைய வணக்கத்திற்கு முன்னால் உங்களுடைய வணக்கத்தையும் நீங்கள் துச்சமாகக் கருதுவீர்கள் .இன்னும் அவர்கள் குரானை ஓதுவார்கள் .அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் " 


"எனக்குப் பின் எனது உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் வெளியாகும் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .அவர்கள் முஸ்லிம்களை கொலை செய்வார்கள் .சிலை வணக்கத்தாரை விட்டு விடுவார்கள் .அவர்கள் வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் .நான் அவர்களைப் பெறுவேனாயின் ஆதுடைய கூட்டத்தாராக் கொலை செய்வது போல் கண்டிப்பாக நான் அவர்களைக் கொல்வேன் என்பதாக அருமை நாயகம்  ﷺ   அவர்கள் கூறியதாகக் ஹழ்ரத் அபூ சயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றனர் " 

[நூல்- புஹாரி ஷரீப் ,முஸ்லீம் ஷரீப் , கன்சூல் உம்மால்,பாகம்  11 ,பக்கம் 138]

No comments:

Post a Comment