ஸவூது உடைய குடும்பத்தாரும் ,ஷைகு நஜ்தியுடைய குடும்பத்தாரும் இணைந்து நடத்திய கொடுமைகளில் புராதான சின்னங்களை அழிப்பதும் முக்கியமான இடத்தை வகிக்கின்றது .
குர்ஆன்.
பின்னர்,...
அணிந்திருந்த போர்வையால் அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள்.
புராதான சின்னங்கள் பற்றி பேசப்பட்ட போது இலங்கையைச் சேர்ந்த அப்துல் ஹமீத்பக்ரி என்பவரால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பிரதியொன்று கிடைத்தது.இவர் இலங்கை பரகஹதெனிய என்னும் இடத்தைச் சேர்ந்த வஹாபிய ஏஜெண்டுகளில் ஒருவராகும். இவரைப்பற்றி தனித்தலைப்பில் முன்னால் நாம் கூறியுள்ளோம். அந்த நூல் 50 பக்கங்களை கொண்டது. ஹிஜ்ரி 1380 ஜமாதில் ஆகிர் 24ம் நாள் 'அந்நத்வா'
இதழில் மற்ற மதீனா முனவ்வராவின் புராதனச் சின்னங்கள் என்னும்
தலைப்பில் முஸ்தபா அமீனின் கட்டுரைக்கும் ஹிஜ்ரி 1387ஜமாதில்
அவ்வல் 24ம் நாள் அதே இதழில் இஸ்லாமிய புராதனச்
சின்னங்கள் என்னும் தலைப்பில் ஸாலிஹ் முஹம்மத் ஜமாலுடைய
கட்டுரைக்கு இப்று பாஸால் எழுதப்பட்ட மறுப்புப் பிரதியின்
தமிழாக்கம் தான் அது.
முஸ்தபா அமீனும் , முஹம்மத் ஜமாலும் அப்போது என்ன
எழுதியிருந்தார்கள் என்பது சரியாகத் தெரியாதவரை அவர்கள்
சொன்னதாக இப்னு பாஸ் சொன்னதாகச் சொல்லும் அப்துல்
ஹமீதின் கருத்தை நம்பமுடியாது. முன்னோர்களின் நூல்களிலிருந்தே
அவர்களின் வாசகங்களைத் திருடிய திருட்டுக் கூட்டம் இது.
ஆதலால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்று நாமும் புண்ணிய பூமிகளான மக்காமுகர்ரமாவிலும் மதீனா முனவ்வராவிலும் எவைகளெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமென, கௌரவப்படுத்தப்பட வேண்டுமென குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ அதைத்தான் சொல்லியிருப்பார் என்பதில் ஐயமில்லை.
காரணம் புனித மதீனா முனவ்வராவைப் பற்றி அவர் சொல்வதாவது:-
புனித மதீனா முனவ்வராவில் நினைவில் நிறுத்தக் கூடிய
புனித மதீனா முனவ்வராவில் நினைவில் நிறுத்தக் கூடிய
பல புராதனச் சின்னங்கள் இருக்கின்றன. அரபிகளாக இருந்தும்
அவைகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அதேநேரம் லண்டன்,
பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள புராதனச் சின்னங்களை
அந்நாட்டவர்கள் கௌரவிப்பதைக் காணும்போது
முஸ்லிம்களாகிய நாம் ஏன் அவ்வாறு பழமை வாய்ந்த புராதனச்
சின்னங்களை கௌரவப்படுத்தக்கூடாது? இஸ்லாம் இதை மறுக்க
வில்லையே! என எழுதி நம்மையும் லண்டன்,பாரசீகவாசிகளைப்
போலபுராதனச் சின்னங்களை கௌரவிக்கவும் அதை நினைவூட்டக்
கூடிய கட்டிடங்களை அமைக்க வேண்டுமென்றும் அழைக்கிறார்
என பாஸ் சொன்னதாக சொல்லும் பக்ரி,...
ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு விரோதமான அல்லாஹ்வுடைய
வும் அவனுடைய தூதருடையவும் பகைவர்களைப் போன்று
நடந்து கொள்ள வேண்டுமெனக் கூறுவது ஆச்சரியமானது
மட்டுமல்ல. அதிசயமானதுமாகும். ஏனெனில் இன்னொரு
சமுதாயத்தை பின்பற்றுபவன் அச்சமுதாயத்தையே சார்ந்தவர்
ஆவான் என்னும் நபிமொழியைக் கவனித்தல் வேண்டாமா?
என்று ஆவேசப்படுகிறார்.
இவருடைய ஆவேசததைக் கண்டு கையால் வாயை பொத்திக்
கொண்டு சிரிக்கிறோம் .ஏனெனில் புராதனச் சின்னங்கள் கௌரவிப்பது மாற்று சமுதாயத்தின் வேலையாதலால், நாமும் நமது
புராதனச் சின்னங்களை கௌரவப்படுத்தினால் நாமும் அவர்களாகி
விடுவோம் என்னும் அச்சம் இவர்களிடம் இருப்பதைக் கண்டு
உண்மையாகவே ஆச்சரியப்படுகிறோம்.
ஒரு பொருளை பாதுகாப்பதற்கு கையாளப்படும் முறை மற்றும்
விதம் மாற்று சமுதாயததைப் போல் இருக்கக் கூடாதென்று
சொல்லும் இவர், மாற்று சமுதாயத்தினரின் வணக்கத்தை நாம்
நம்மீது சாட்டிக் கொள்வது பற்றி என்ன சொல்வாரோ தெரியவில்லை.
ஆஷுரா நோன்பை கவனியுங்கள். இன்னும் அது ஸுன்னத் தாக்கப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். அந்தத் தினத்தன்று
யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்ணுற்ற பூமான் நபி صلى الله عليه و سلم அவர்கள் அது நமக்குரியது எனக் கட்டளை பிறப்பிக்கவில்லையா?
இன்னொரு சமுதாயத்தைச் சார்ந்தவர் ஒன்றைச் செய்தால் அதை
செய்வதற்குரிய தடை என்பது நமக்கு இல்லையாயின் நாம் அதை
செய்வதில் ஆட்சேபணையில்லை. இதன் அடிப்படையில் தான்
நாம் நமது புராதனச் சின்னங்களை பாதுகாப்பது என்பதானது
மாற்றுச் சமுதாயத்தைப் பார்த்து செய்யப்படும் ஒன்றாகாது.
இன்னும் அதைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி அவைகளை
அழிப்பதானது மிருகத்தனமான செயலாகும்.
இனி நமது புராதனச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டுமா
அல்லது அழிக்கப்பட வேண்டுமா என்பதைக் குறித்து அல்லாஹ்
வின் திருமறை வசனங்களைக் கொண்டும் அண்ணலெங்கோமான்
"மகாமே இப்றாஹீமை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்”.
குர்ஆன்.
இந்த வசனம் நபி இப்றாஹீம் عليه السلام அவர்கள் புனித
கஃபாவை புனர் நிர்மாணம் செய்யும்போது நின்றுகொண்டு
பணிபுரிந்த அவர்களின் பாதம்பட்ட இடத்தை கௌரவப்படுத்தும்
வகையில் தொழக்கூடிய இடமாக ஆக்கிக் கொள்ளுமாறு
ஆணையிடுகிறது.
நபி இப்றாஹீம் عليه السلام அவர்களின் பாதம் பதிந்த
இடம் இன்றும் ஹரம் ஷரீபில் கஃபாவின் வாயிலுக்கு எதிரே ஒரு
அடி தூரத்தில் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்டு
வருவதோடு அவ்விடத்தில் பரக்கத்திற்காக தொழவும் செய்கின்ற
னார். நபியுல்லாஹ் இப்ராஹீம் عليه السلام அவர்களின் பாதம்
பட்ட இடம் புராதனச் சின்னமாகும். அதை அல்லாஹ்பாதுகாப்ப
தோடு அதைப்பற்றி குர்ஆனிலும் பேசுகிறான் எனில் அவை
போன்ற புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா?
அல்லது அழிக்கப்படவேண்டுமா?
இன்னும்,...
இன்னும்,...
"அந்தப் பேழையினுள் - நபிமார்களான - மூஸா عليه السلام அவர்களுடையவும் , ஹாரூன் عليه السلام அவர்களுடையவும் புராதனச் சின்னங்க இருக்கின்றன. அதனை அமரர்கள் சுமந்துவருவார்கள். "
குர்ஆன்.
இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் வேத வியாக்யானிகள்
அந்த நபிமார்களுடைய புராதனச் சின்னம் என்பதானது
அவர்களது கைத்தடியும் பாதணிகளுமாகும் என்கின்றனர்.
மேலும் நம் மூஸா عليه السلام அவர்கள் பயன்படுத்திய
தடியையும், பாதணியையும் அல்லாஹ் பாதுகாத்து அதனை
அமரர்கள் சுமந்து வருவதாககுர்ஆன் கூறுகிறதென்றால் புராதனச்
சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது அழிக்கப்பட
வேண்டுமா?
ஆதலால் புராதனச் சின்னங்களை பாதுகாப்பதானது காபிர்களு
டைய செயலல்ல. மாருக அது அல்லாஹ்வுடைய சுன்னத்தாகும்.
ஆனால் நீங்கள் புராதனச்சின்னங்ககாபாதுகாப்பதற்குப் பதிலாக
அவ்விஷயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறீர்கள்.
அருமை நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நபியவர்களின் அருமைத் தோழர்களாலும் தாபியீன்களாலும், தபவுத் தாபியீன்களாலும் பாதுகாக்கப்பட்டதைக் குறித்து எத்தனையோ ஆதாரங்களை நம்மால் எடுத்துக் காட்ட முடியும். விரிவஞ்சி ஒரேயொரு
ஆதாரத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகிறோம்.
ஸெய்யிதுனா ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்ட இடம் யூதர்களால் குப்பை கூளங்கள் போடப்படும் இடமாக இழிவுபடுத்தப்பட்டது. பின்பு அந்த இடம் கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்ட போது அவர்கள் அந்த இடத்தை வணக்கஸ்தலமாக ஆக்கிக் கொண்டனர்.
பின்னர்,...
"ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் رضي الله عنه அவர்களால்
பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட போது கலீஃபா அவர்கள் தாம்
அத்துடன் அதனுடைய அமைப்பை மாற்றியமைத்து அந்த இடத்திற்கு
முன்பாக நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் தொழுத
இடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தார்கள்.”
[நூல்: அல்பிதாயா வந்நிஹாயா, 2-96.]
[நூல்: அல்பிதாயா வந்நிஹாயா, 2-96.]
ஆனால் நீங்கள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் இவ்வையகத்திற்கு வருகைதந்து வாழ்ந்த வீட்டை பாதுகாத்து கௌரவப்படுத்துவதற்குப் பதிலாக அவ்வீட்டை உடைத்துத் தரைமட்டமாக்கியது போதாதென்று....
"மிருகங்கள் விற்கப்படும் சந்தையாக அவ்வீட்டை மாற்றி
கேவலப்படுத்துகிறீர்கள். "
இன்னும்,....
இன்னும்,....
அருமை நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு
முதன் முதல் வஹீ இறக்கப்பட்ட இடமும், நபியவர்களுக்கு
மிகவும் உகப்பான முஃமினீன்களின் தாயாரான அன்னை கதீஜா
رضی اللہ عنھا அவர்களின் வீட்டையும் தரைமட்ட
“அந்த இடத்தை மலஜலம் கழிக்கும் இடங்களாகவும் ஒழு செய்யும்
இடமாகவும் தண்ணீர் தொட்டிகளாகவும் ஆக்கப்பட்டதை பொருந்திக்
கொண்டீர்கள்."
இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுடைய
இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுடைய
உள்ளங்கள் இடமளித்ததென்றால் நீங்களெல்லாம் நிச்சயமாக
முத்திரையிடப்பட்ட உள்ளங்களை கொண்டவர்கள் தானென்றே
நாம் கூறு வோம்.
இன்னும்,....
இன்னும்,....
இரு கிப்லாக்கள் என பிரபலமாக அழைக்கப்பட்ட மஸ்ஜிதில்
காணப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸா கிப்லா என்பதை தெளிவுபடுத்தும்
அடையாளத்தை வழிகேடு எனக்கூறி அழித்தது ஈமான் என்றால் ,.
ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه அவர்களால் யூதர்களிடமிருந்து வாங்கி அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்த
ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه அவர்களால் யூதர்களிடமிருந்து வாங்கி அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்த
கிணற்றை பாதுகாப்பது பாவமான காரியம் என்பதுதான்
இஸ்லாம் என்றால்,...
நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் முபாரக்கான
திருக்கரத்தால் நடப்பட்ட ஈச்சை மரத்தைக் கொண்ட ஹழ்ரத்
ஸல்மான் பார்ஸி رضي الله عنه அவர்களின்
தோப்பையே இல்லாமலாக்குவது தான் மார்க்கம் என்றால்,...
அண்மைக்காலம் வரை மதீனா முனவ்வராவில் மஸ்ஜிதுல்
குபாவில் காணப்பட்ட அருமை நாயகம் صلى الله عليه و سلم
அவர்களின் ஒட்டகத்துடைய அடையாளத்தை அழித்தது
தான் அறிவுடையோரின் செயலென்றால்,...
இது உண்மையான மார்க்கமேயல்ல என்று அழுத்தமாகச்
சொல்லுவோம். உங்களுடைய சுயவிருப்பம் ஒரு போதும்
மார்க்கமாகாது. உங்களுடைய மனோ இச்சையிலிருந்து பிறந்து
வரும் விளக்கமெல்லாம் ஒருபோதும் குர்ஆன் ,ஹதீதுக்குரிய
விளக்கமாகாது. மாறாக முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபும்
இப்னு சவூதும் பிரிட்டானிய ஏகாதிபத்தியமும் இணைந்து தோற்று
வித்த ஓர் புதிய மார்க்கமாகும். அதுதான் வஹ்ஹாபிஸம், இந்நிலை
யில் உங்களை நாங்கள் என்னவென்று அழைக்க வேண்டும்
என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதுசரி, எதற்குமே
லாயக்கில்லாதவனை என்னவென்று அழைத்தால் தானென்ன.
அதனால் குடியா முழுகி விடப்போகிறது.
மேற்கண்டவைகளில் சில கருத்துகள் அஸ்ஸெய்யித் ஹாசிம்
அர்ரிபாயி அவர்களால் சொல்லப்பட்டவைகளாகும்.இதே
போன்று இன்னும் பல விஷயங்களை அவர்கள் கூறியுள்ளார்கள்,
அவர்களுடைய உபதேசத்தோடு தமது உள்ளத்தின் ஆக்ரோஷத்
தையும் வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இத்தோடு
போதுமாக்கிக் கொண்டோம். தேவையான நேரத்தில் இந்த நூல்
தமது கரத்திற்கு வந்து சேர்ந்ததற்காக அல்லாஹ்வைப் புகழுகிறோம் .
இறுதியாக அல்லாமா லாவி ரஹிமஹல்லாஹ் அவர்கள்
தமது தப்சீர் ஸாவியில் 35ம் அத்தியாயமான சூரா ஃபாத்திரின்
மூன்றாம் வசனமான
"திடனாக உங்களுக்கு ஷைத்தான் பகைவராக
"திடனாக உங்களுக்கு ஷைத்தான் பகைவராக
இருக்கிருன். ஆதலால் நீங்களும் அவனை பகைவனாகவே எடுத்துக்
கொள்ளுங்கள்"
என்னும் பொருள் கொண்ட வசனத்திற்கு
என்னும் பொருள் கொண்ட வசனத்திற்கு
அவர்கள் தரும் விளக்கத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு
எடுத்துக்காட்டிவிட்டு ஸவாத்துச்சொல்லலாமென்று நினைக்கிறோம்.
"இந்த வசனம் குர்ஆனுடைய வசனங்களுக்கும் நாயகம்
صلى الله عليه و سلم அவர்களின் சுன்னாவுக்கும் தவறான
அர்த்தம் செய்து முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களின்
பொருட்களை சூரையாடுவதும் ஆகுமான ஒன்றெனக் கூறிய கவாரிஜிய்யீன்கள் தொடர்பாக இறக்கப்பட்டதாகும். அவர்களைச் சேர்ந்தோர் தான் ஹிஜாஸ் மாநிலமான - மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா போன்ற இடங்களில் காணப்படும் வஹ்ஹாபிகள் எனப்படும் கூட்டமாகும்.
அவர்கள் சத்தியத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு
அவர்கள் சத்தியத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு
வாதிக்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்யர்களாகும். அவர்களை
ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பை அவர்களை விட்டும்
மறக்கடித்து விட்டான். அவர்கள் நஷ்டமடையும் ஷைத்தானின்
கூட்டாளிகளாகும். அவர்களை அடியோடு அழித்து விடுமாறு
அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
எனவே வஹ்ஹாபிகள் எனப்படுவோர் கவாரிஜிய்யீன்கள்
தான். அவர்கள் தற்போது நமக்கு மத்தியில் இருக்கும் எந்தக்
கூட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரியே என்பதை இங்கே
மீண்டுமொரு முறை உங்களுக்கு நினைவூட்டியவர்களாக இந்த
உண்மையை இவ்வெளியோர்கள் மூலமாக சமுதாயத்திற்கு
எடுத்துச் சொல்வதற்குரிய வாய்ப்பைத் தந்து அதை ஏற்றுக்
கொண்ட எல்லாம் வல்ல வல்லோனாகிய அல்லாஹ்வுக்கே புகழ
கனைத்தும் உரித்தாகுமாக, இன்னும் அவனது ஹபீபாகிய நமக்
கெல்லாம் ஷஃபீ. ஆகிய ஷஃபீவுல் முத்னிபீன், ஸர்தாரே தோ
ஆலம், ஸர்வரே காயினாத் ஸாஹிபே லவ்லாக் صلى الله عليه و سلم
அவர்களுக்கே சதா ஸலாத்தும் ஸலாமும்
உண்டாகட்டுமாக !





No comments:
Post a Comment