அடுத்து மேற்கண்ட ஹதீதுக்கு அவர்களால் தரப்படும் விளக்கத்தில் அந்த ஹதீதில் உள்ள 'முஷ்ரிபூன்' மற்றும் 'ஸவ்வைதஹு ' என்னும் வாக்கியம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் . இதில் முஷ்ரிபூன் என்னும் வாக்கியம் உயரமான ஒரு பொருளுக்கு சொல்லப்பட்டாலும் கூட இது ஒட்டகத்தின் திமில் வடிவத்தின் உயரத்திற்கு மட்டுமே சொல்லப்படும் வாக்கியமாகும் .
அடுத்து ஸவ்வைதஹு என்னும் வாக்கியமானது ஸவ்வா எனும் மூலத்தில் இருந்து திரிந்த ஒன்றாகும் . இதற்கு சமம் , பரிபூரணம் என்பது அதற்குரிய பொருளாகும் . இவ்விரு வாக்கியத்தின் பொருளுக்குரிய அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இதற்கு இப்படி விளக்கம் சொல்லலாம் ....
1) அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் உயரமாக காணப்படும் கப்ருகளை பூமியோடு சமப்படுத்துமாறு அபுல் ஹய்யாஜை ஏவினார்கள் என்பது ஒருவகை விளக்கமாகும் . இது பொய்யான (பாத்திலான ) விளக்கமாகும் . ஏனெனில் ஸவ்வா என்னும் வாக்கியத்திற்கு உடைத்தல் என்னும் பொருளாகாது . அவ்வாறு பொருள் தரப்பட்ட வேண்டுமாயின் (பூமியுடன் ) என்னும் வாக்கியத்தை சேர்ந்து உபயோகப்பட்டிருக்க வேண்டும் . அடுத்து கப்ரு பூமியுடன் சமமாக ஆக்கப்பட வேண்டும் என்பதாக நம்முடைய அறிஞர் பெருமக்கள் நமக்கு கற்றுத் தரவில்லை .மாறாக ....
"ஒரு சான் அளவுக்கு உயரமானதாக கப்ருடைய மேலேயுள்ள மண் உயர்த்தப்படிருக்க வேண்டும் . அதுதான் ஸுன்னத்தாகும் " என்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது . இதையொட்டித் தான் நாமும் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . அத்துடன் கப்ரு உயர்த்தப் பட்டதற்குரிய ஆதாரம் ஹதீதிலும் உள்ளது . ஆம் .கப்ரு சமதரையாக இருக்கக் கூடாதென்று தான் இஸ்லாம் கூறுகின்றது .
2) ஒட்டகத்துடைய திமில் வடிவத்தில் கூம்பையாக உயர்த்தப்பட்டிருக்கும் கப்ருடைய வடிவத்தை மாற்றி அவைகளை சமப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள் என்பது இரண்டாவது விளக்கமாகும் .
3) இந்த ஹதீதானது முஷ்ரிக்கீன்களுடைய விஷயத்தில் சொல்லப்பட்டதாகும் . ஆதலால் எந்த வகையிலும் இது நபிமார்கள் மற்றும் வலிமார்களின் கப்ருகள் மீது கட்டபட்டுள்ள குப்பாக்களை உடைத்து தரையோடு தரையாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்களால் சொல்லப்பட்டதை சரியாக விளங்கிக் கொள்ளாமல் அதனுடைய ஆழம் புரியாமல் திட்டமிட்டு வேண்டுமென்றே இவர்கள் முஃமின்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் . இது இங்கே சுருக்கமாக சொல்லப்பட்ட நமது விளக்கமாகும் . அனால் அதே நேரம் தேவையான நேரத்தில் விரிவாக விளக்குவோம் இன்ஷா அல்லாஹ் !
கப்ருகள் கட்டப்பட்ட கூடாது . குப்பாக்கள் அமைக்கப்பட கூடாது .அவைகள் உடைத்து தரை மட்டமாக்கப் படவேண்டும் என்பதெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தின் ஷரீஅத்து கற்றுத் தரும் ஒன்றல்ல . அதற்கு மாறாக கப்ருகள் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.நபிமார்கள் ,வலிமார்களின் கப்ருகளைச் சூழ சுவர்கள் அமைக்கப்பட்டு அவைகள் முகடுகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே ஷரீஅத்து தருகின்ற தீர்ப்பாகும் .
ஒரு பெரிய குண்டை தூக்கி போடுவதாக யோசிக்கின்றீர்களா ? இதோ நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் சொன்ன வார்த்தையை கூர்ந்து பாருங்கள் .
" நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படும் இடத்தில் தான் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் " என்று கூறுகின்றனர் .
அவ்வாறாயின் நான்கு சுவர்களும் அதன் மீது முகடும் கொண்ட வீட்டுக்குள் தான் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நபியவர்கள் கூறுவதைக் கவனியுங்கள் .இதைத் தழுவி கண்மணி நாயகம் صلى الله عليه و سلم அவர்களை அவ்வாறு நல்லடக்கம் செய்யவில்லையா ? கப்ருகளுக்கு முகடுகள் கட்டப்படக்கூடாது என்றிருந்தால் மேல் முகட்டை கொண்ட வீட்டுக்குள் இவ்வையகத்தின் வாழ்கை முடிவை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ?
இதற்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லப்படுமாயின் அதன்பின் நபியவர்களின் தோழர் பெருமக்கள் அதை ஏன் விட்டு வைத்தார்கள் ? என்னும் கேள்விக்கெல்லாம் இவர்கள் பதில் தந்தாக வேண்டும் . ஆகையால் கப்ருகள் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஷரீஅத்தின் தீர்ப்பாகும் என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .
அடுத்து கப்ரஸ்தானில் தொழுவது பற்றியும் , கப்ருள்ள பள்ளியில் தொழுவது பற்றியும் வேறு சில கருத்துக்களை இப்போது பார்ப்போம் . இங்கு நாம் மூன்று விஷயங்களை நமது ஆய்வுக்கு உட்படுத்துவோம் .
1 .மையவாடியில் தொழுதல் : அதாவது நாற்புறங்களிலும் கப்ருகளால் சூழப்பட்டுள்ள ஒரு இடத்தின் மத்தியில் கட்டிடமொன்றை அமைத்துக் கொண்டு தொழுதல் . அல்லது திரை ஏதுமில்லாமல் தொழுதல் .
விசாலமான மையவாடியாக இருந்து அதற்குள் ஒரு இடம் மீதமாக இருந்து அவ்விடத்தில் ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தால் அங்கே தொழுதல் .
2. கப்ரை உள்ளடக்கிய பள்ளியில் தொழுதல் : அதாவது பள்ளிவாயிலுக்கு பக்கத்தில் ,அல்லது பள்ளியின் முற்றத்தில் , அல்லது பள்ளியின் ஒரு பகுதியில் கப்ரு இருப்பதாகும் . அதை மையவாடி என்று சொல்லப்பட மாட்டாது . அன்றி மையவாடியில் தொழுவதைத்தான் கூடாதென்று ஹதீத் சொல்லிக் கொண்டிருக்கின்றது .
3. கப்ரை முன்னோக்கி தொழுவதாகும் : அதாவது தனக்கு முன்னால் கப்ரை வைத்துக் கொண்டு அதை முன்னோக்கி ஸுஜூது செய்வதாகும் .
முதலாவது மையவாடியில் தொழுதல் :
மண்ணறைகள் தோண்டப்பட்டிருந்தாலும் , மூடப்பட்டிருந்தாலும் அவைகள் மீது ஒரு விரிப்பை விரித்து தொழுவதை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله அவர்கள் ஹராம் என்றும் அத்தொழுகை பாத்திலாதென்றும் குறிப்பிடுகின்றார்கள் . இக்கருத்துக்கு .....
"மையவாடி மற்றும் குளியலறை தவிர்த்த ஏனைய எல்லா இடங்களுமே மஸ்ஜிதாகும் என்ற ஹதீதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர் . "
இங்கே மையவாடி தோண்டப்பட்டதாக மட்டுமே இருக்குமாயின் அங்கே தொழுவது ஹராமாகும் எனக் கூறுகின்றனர் இமாம் ஷாபிஈ رحمه الله அவர்கள் ,அன்றி மூடப்பட்டுள்ள கப்ரின் மீது தொழுவது வெறுக்கத்தக்க செயலாகும் என்றும் குறிப்பிடுகின்றனர் .
மண்ணறைகள் தோண்டப்பட்டிருந்தாலும் ,மூடப்பட்டிருந்தாலும் அந்த இடத்தில் தொழுவது நல்லதல்ல . மாறாக வெறுக்கத்தக்க செயலாகும் எனக் கூறுகின்றனர் இமாம் அபூ ஹனீஃபா رحمه الله அவர்கள் . இதற்கு ....
" எந்த இடத்தில் தொழுகை உன்னை வந்தடைந்தாலும் அவ்விடத்திலேயே தொழுது கொள் . அந்த இடம் மஸ்ஜிதாகும் என்னும் ஏந்தல் நபி அவர்களின் ஹதீதை ஆதாரமாகக் காட்டுகின்றனர் "
[ நூற்கள் -ஸஹீஹ் புஹாரி ,முஸ்லீம் ]
அடுத்து பொதுவாக மையவாடியில் தொழலாம் எனக் கூறுகின்றனர் இமாம் மாலிக் رحمه الله அவர்கள் . இதற்கு ....
"மஸ்ஜிதுன் நபவியை துப்பரவு செய்த ஏழை பெண்மணி -அல்லது வாலிபன் இறந்து விடுகின்றனர் . நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் அவரைப் பற்றி விசாரிக்கின்றனர் . அப்போது அவர் இறந்து விட்டார் என சொல்லப்படுகின்றது . அதுகேட்ட நபி صلى الله عليه و سلم அவர்கள் எனக்கு ஏன் சொல்லவில்லை என்றவர்கள் ( இதையும் சொல்ல வேண்டுமா என்ன எனக் கருதிக் கொண்டார் என்பதாக அறிவிப்பாளர் கூறுகின்றார் ) அவருடைய கப்ரை காட்டுங்கள் எனக் கூறிய நபியவர்கள் அந்த இடத்திற்குப் போய் சேர்ந்தவர்கள் அங்கே தொழுதபின் இந்த கப்ருகளனைத்தும் இருளால் சூழப்பட்டிருந்தது . என்னுடைய தொழுகையால் அல்லாஹ் அவர்களின் நிலையை ஒளியாக்கினான் என்றும் கூறியதை ஆதாரமாக காட்டுகின்றனர் "
[ நூல் - ஸஹீஹ் முஸ்லீம் , இக்மால் ,பாகம் 3 ,பக்கம் 420 . ஷரஹ் நவவி ,பாகம் 7,பக்கம் 25 ]
இனி மையவாடியில் தொழுவது குறித்து சொல்லப்பட்ட கருத்துக்களை பார்க்க விரும்புவோர் ஷரஹ் ஸுனன் இப்னு மாஜா ,பாகம் -1,பக்கம்- 412 லும் , துஹ்பதுல் அஹ்வதி ஷரஹ் திர்மிதி ,பாகம் -2,பக்கம் -219லும் , ஆரிழதுல் அஹ்வதி ஷரஹ் திர்மிதி ,பாகம் - 3,பக்கம் - 113லும் , பத்லுல் மஹ்ஜூத் ஷரஹ் அபீ தாவூத் ,பாகம் -3,பக்கம் 336லும் , அவ்னுல் மஃபூத் ஷரஹ் அபீ தாவூத் ,பாகம்- 2,பக்கம்- 112லும் பார்க்க வேண்டுகிறோம் .
மேலும் இங்கே சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும் போது மையவாடியில் கப்ரடியில் தொழலாம் என்பது தெளிவாகிறது . இன்னும் மையவாடியில் தொழக்கூடாதென்னும் ஹதீதை இமாம் திர்மிதி رحمه الله முர்ஸலானது எனக் கூறுகின்றனர் . அத்துடன் பூமி முழுவதும் எனக்கு மஸ்ஜிதாக ஆக்கித் தரப்பட்டுள்ளது என்னும் ஸஹீஹான ஹதீதுக்கும் இது மாற்றமாக இருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும் .
இரண்டாவது கப்ருள்ள பள்ளியில் தொழுதல் :
கப்ரை உள்ளடக்கி பள்ளியில் தொழக்கூடாதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை . கப்ரு உள்ள இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருந்தாலும் சரியே . அல்லது அப்பள்ளி கட்டப்பட்ட பின்னர் பள்ளிக்குள் கப்ரு ஏற்படுத்தப்பட்டாலும் சரியே . பின்னும் கப்ரை உள்ளடக்கிய பள்ளியில் கூடாதென்பதற்காக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ்கள் அவர்களின் அறியாமையை தான் நமக்கு புலப்படுத்துகின்றது . மாறாக அந்த ஹதீதுகளை புரிந்து கொள்வதற்குரிய திறமை அவர்களிடம் இல்லை என்பதும் இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது .
மேலும் கப்ருகள் உள்ள இடத்தில் தொழமுடியாதெனில் பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாக ஆக்கித் தரப்பட்டுள்ளது என்னும் ஹதீதுக்கொப்ப இறந்து போவோர் அனைவரையும் ஒன்று எரிக்க வேண்டும் ,அல்லது கடலில் வீசி எறியப்பட வேண்டும் . இப்படியொரு பத்வாவை இவர்கள் தந்தாலும் ஆச்சரியமில்லை .
அடுத்து ஹதீதில் கூறப்பட்டுள்ள மஸாஜித் என்னும் வாக்கியத்தை ஒரு இடத்திற்குரிய பெயராகக் கொள்ள வேண்டுமாயின் ஹதீதானது ' லா தத்தகிதூ அலல் குபூரி மசாஜித ' என்பதாக பதிவாகியிருக்க வேண்டும் . அப்படி இல்லாததால் அந்த வாக்கியத்தை மஸ்தர் மீமியாகத்தான் கணிக்கப்படும் . இதெல்லாம் இவர்களுக்கு புரியவா போகிறது .
அடுத்து கப்ரை வணங்கும் எண்ணத்தில் அல்லது கப்ரை கிப்லாவாக ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் அதற்கு முன்னால் ஸுஜூது செய்வதாகும் . இதைத்தான் இவர்களால் எடுத்துக் காட்டப்படும் ஹதீதுகள் அனைத்தும் கூறுகின்றன .
அவ்வாறின்றி வணக்கத்துடைய எண்ணமின்றி கிப்லாவாக ஆக்க வேண்டுமென்னும் நிய்யத் இன்றியும் திரையிடப் பட்ட நிலையில் ஒரு கப்ரு பள்ளிக்குள் இருக்குமாயின் அங்கே தொழுவதில் ஆட்சேபனை இல்லை . இதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் உண்மையாகும் . அதற்கு மாறாக மக்காவிலுள்ள இமாம் சொல்லிவிட்டார் என்பதற்காக அது வேதவாக்காக ஆகிவிடாது .
அத்துடன் அவர் அரேபியர் என்பதற்காக அவர் சொல்வதையெல்லாம் கேட்பதற்கு நாங்கள் என்ன ஜாஹிலியீன்கள் காலத்தவர்களா ? யூதர்கள் கூட அரபிதான் பேசுகின்றனர் . அதற்காக அவர்கள் குரானை ஓதுகின்றனர் என்றா சொல்ல முடியும் ?
இனி கப்ரை உள்ளடக்கிய பள்ளியில் தொழுவது குறித்து எழுதப்பட்ட வஹாபிகளின் "வணக்கஸ்தலங்களும் ,அடக்கஸ்தலங்களும் " என்னும் நாவலில் (!) கதைக்குதவாத உப்பு சப்பற்ற வெறும் வாதங்கள் தான் உள்ளன . இன்னும் அந்த நாவலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குர்ஆனையும் ,ஹதீதையும் கொஞ்சம்கூட விளங்கிக் கொள்ளாத தான்தோன்றித்தனமான அதே சமயம் சமுதாயத்தில் மிகக் கீழ்த்தரமான தரத்தைக் கொண்ட ஆலே ஷைகும் , ஆலே சவூதும் இணைந்து உருவாக்கிய வடிகட்டிய வழிகேடர்களால் சொல்லப்படும் வெறும் சொத்தைக் கருத்துக்களாகும் . இருந்த போதிலும் அக்கதை புத்தகத்தில் கூறப்பட்டுள்ள , ஒரேயொரு கதையைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம் . அவர் கூறுகிறார் ,
"அதன்பின் ஹிஜ்ரி 88வரை எந்த விஸ்தரிப்பு வேலையும் நடைபெற வில்லை . 88க்குப்பின் வலீத் பின் அப்துல் மலிக் பள்ளியை விஸ்தரிப்பு செய்தார் . முன்னோர்களான ஸெய்யிதினா உமர் அவர்களும் , ஸெய்யிதினா உஸ்மான் அவர்களும் செய்யாததை இவர் செய்து நாயகம் அவர்கள் எதைக் குறித்து அஞ்சினார்களோ , சபித்தார்களோ , மரண வேளையில் கூட அடிக்கடி எச்சரித்தார்களோ அதை இவர் செய்து விட்டார் . இவர் செய்த பாதகத்தை அன்று இருந்த மிகப்பெரும் அறிஞரும் , தாபியீனுமான ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள் .
பள்ளி வேறாகவும் , கப்ரு வேறாகவும் இருந்ததை இவர் தான் ஒன்றாக இணைத்தார் . அன்றைய சூழ்நிலையில் நபித்தோழர்கள் யாரும் இருக்கவில்லை . மதீனாவில் அவ்வாறு இருந்திருப்பின் கண்டிப்பாக விஷயம் வேறாக இருந்திருக்கும் . ஆட்சியின் மமதையில் இவர் சமகாலத்தவர்களை சட்டை செய்யவில்லை . இதன் விபரீதமே இன்று இந்நிலை தோன்றுவதற்கு காரணமாகிவிட்டது . "
அவர் என்ன கூறுகிறார் எனில் வலீத் பின் அப்துல் மலிக் நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் புனிதப் பள்ளிவாசலை விஸ்தரித்த போதுதான் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரவ்லா ஷரீஃபை பள்ளியின் உட்பகுதியில் வந்து இணைத்தார் . இதோர் பாவமான காரியமாகும் . அப்போது அங்கிருந்த ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்கள் அச்செயலை வன்மையாக கண்டித்ததாகவும் , நபித்தோழர்கள் யாரும் அப்போது இல்லையென்றும் , இருந்திருந்தால் அப்படிப்பட்டதோர் நிலை ஏற்பட்டிருக்காதென்றும் ரத்தம் கொதித்துப் போகிறார் . இவரும் ஒரு கலாநிதியாம் !
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அருமை இஸ்லாமிய சகோதர்களே ! அல்லாஹ்வுடைய ரஸுலும் நமது உயிரினும் உயிர் நாடியான மழ்ஹருல் அதம்மான நாயகம் صلى الله عليه و سلم அவர்களால் சிறப்புக்குரிய காலங்கள் என உத்திரவாதமளிக்கப்ட்ட காலங்களைப் பற்றிய ஹதீது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான் . நபியவர்களால் சுபச்செய்தி தரப்பட்ட அப்புனிதமான காலத்தில் வாழ்ந்தவர் தான் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களாகும் . அத்துடன் இவர்கள் இரண்டாம் உமர் என்று போற்றப்பட்ட பெரியாருகும் . இவருடைய தாயார் அமீருல் மூஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்களின் புதல்வரின் புதல்வியாகும் . நமது நபியவர்களின் துணைவியர்களில் ஒருவரான அன்னை மைமூனா رضی اللہ عنھا அவர்கள் மறைந்த வருடமான ஹிஜ்ரி 63 ஆம் ஆண்டில் பிறந்தவர்களாகும் .
அன்றிருந்த மிகப்பெரும் அறிஞரும் , தாபியீனுமான ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்கள் வலீத் செய்த காரியத்தை வன்மையாக கண்டித்தார் என மேற்படி நாவலில் கூறப்பட்டுள்ளதல்லவா ? அதே ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்களிடம் ஒருவர் மஹ்தி எனப்படுபவர் யார் என்று கேட்டபோது , அதற்கவர் ....
"நீர் மர்வானுடைய வீட்டுக்கு சென்றதுண்டா என்று அவரிடம் கேட்க , அதற்கவர் ;இல்லையென்று சொல்ல , அதற்கந்த அறிஞர் முதலில் அங்கே சென்றுவா என்று சொன்னார்கள் . அந்த வீட்டுக்குச் சென்ற அவர் அங்கே மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த தலைவரைப் பார்த்துவிட்டு திரும்பி வந்தவர் , அங்கே மஹ்தி என்று சொல்லப்படும் யாரையும் நான் பார்க்கவில்லை என்று சொன்னார் . அதுகேட்ட அறிஞர் ; அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த மாவீரரைப் பார்த்தாயா எனக்கேட்க , அதற்கவர் ; ஆம் என்று சொல்ல ,அவர்தான் மஹ்தி என்று அறிஞர் கூறினார் . அவர்தான் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களாகும் . "
[ நூல் - தபகாத் இப்னி ஸஃத் , பாகம் 5 ,பக்கம் - 333 ]
இன்னும் இதே ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்கள் தான் ஹர்ராவுடைய நாட்களில் நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரவ்லா ஷரீபிலிருந்து பாங்கொலி கேட்டதை வைத்து தொழுகைக்குரிய நேரங்களை தெரிந்து கொண்டதாக கூறுகிறார் .இதை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா ? இவர்கள் பணத்திற்காகவும் ,பதவிக்காகவும் பசப்புகின்ற அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள் .
மாபெரும் அறிஞர்களால் மஹ்தி என்று போற்றப்பட்ட ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் 25து வயதுடையோராக இருக்கும் போதுதான் மேற்படி நாவலில் சபிக்கப்பட்ட வலீத் பின் அப்துல் மலிக் அவரை புனித மதீனா முனவ்வராவின் அதிகாரியாக ஹிஜ்ரி 87ஆம் ஆண்டு நியமித்தார் . அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட பின் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் அவ்வூர் அறிஞர்களை எல்லாம் அழைத்து பின்வருமாறு உபதேசம் செய்தார் . அதாகிறது ......
" அல்லாஹவை புகழந்த பின் நிச்சயமாக நான் உங்களை அழைத்ததெல்லாம் சத்தியத்தை நிலைநாட்ட நீங்கள் எல்லாம் எனக்கு உத்தசையாக இருக்க வேண்டும் . உங்களுடைய அபிப்பிராயம் இல்லாது நான் எதையும் செய்ய மாட்டேன் " என்று சொன்னார் . அந்த அறிஞர்கள் யார் தெரியுமா ? .....
ஹழ்ரத் உர்வா பின் ஸுபைர் , ஹழ்ரத் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உர்வா , ஹழ்ரத் அபூபக்கர் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் , ஹழ்ரத் அபூபக்கர் பின் சுலைமான் பின் அபீ ஹத்மா , ஹழ்ரத் சுலைமான் பின் யஸார் , ஹழ்ரத்காஸிம் பின் முஹம்மத் , ஹழ்ரத் ஸாலிம் பின் அப்துல்லாஹ் , ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர் , ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ , ஹழ்ரத் காரிஜா பின் ஸைத் பின் தாபித் رضی اللہ عنھم போன்றோராகும் .
[ நூல் - தபகாத் இப்னி ஸஃத் , பாகம் 5 ,பக்கம் - 334 . அல் பிதாயா வன் நிஹாயா ,பாகம் 9, பக்கம் - 71 ]
மதீனா முனவ்வராவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் ஹஜ்ஜுக்காக தயாராகின்றனர்
"வலீத் பின் அப்துல் மலிக்கின் ஆட்சியின் கீழ் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் மதீனா முனவ்வராவின் அதிகாரியாக இருக்கும்போது புனித ஹஜ்ஜுப் பயணத்திற்காக தயாராகின்றனர் . அப்போது அங்கே வருகை தந்தது நபித்தோழரான ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள்தான் " இன்னும் ....
" நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் பின்னால் தொழுவதைப் போன்ற ஓர் உணர்வை இந்த வாலிபரான உமர் பின் அப்துல் அஜீஸ் உடன் தொழும்போது மட்டும் தான் நான் பெற்றுக் கொண்டேன் . அதன்றி வேறு யாரிடமும் அப்படிப்பட்டதோர் உணர்வை நான் பெறவில்லை எனக் கூறுகின்றனர் ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் ".
இதில் ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . நமது காருண்ய நபி صلى الله عليه و سلم அவர்களுக்கு பத்தாண்டு காலம் பணியாளராக ஊழியம் புரியும் நற்பாக்கியத்தை பெற்றவர்கள் . இவர்கள் ஹிஜ்ரி 93ல் பஸ்ராவில் வைத்து இறையடி சேர்ந்தனர் . இன்னும் இவர்களையன்றி ஹழ்ரத் ஸெய்யிதினா அபுத் துபைல் ஆமிர் பின் வாஸிலா رضي الله عنه என்ற நபித்தோழரும் அக்காலத்தில் வாழ்ந்தவராகும் . இவர்கள் ஹிஜ்ரி 110ல் மக்கா முகர்ரமாவில் வைத்து இறையடி சேர்ந்தனர் . நபித்தோழர் பெருமக்களில் இறுதியாக இவ்வுலகத்திற்கு பிரியாவிடை கொடுத்த தோழர்இவர்களே ஆகும் .
[ நூல் - அல் பிதாயா வன் நிஹாயா ,பாகம் 9, பக்கம் - 190 , அல் இஸ்தீஆப் , பாகம் -4 ,பக்கம் - 259 , அல் இஸாபா , உஸுதுல் காபா ]
இன்னும் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களின் காலத்தில் மதீனா முனவ்வராவில் தாபியீன்களில் உள்ள மிகப்பெரும் சட்டக்கலை மேதைகள் எனப் போற்றப்பட்ட ஏழு நபர்கள் வாழ்ந்தனர் . அவர்கள் ...
1 .ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீத் பின் முஸய்யப் رحمه الله
2. ஹழ்ரத் ஸெய்யிதினா காஸிம் பின் முஹம்மத் رحمه الله
3. ஹழ்ரத் ஸெய்யிதினா உர்வா பின் ஸுபைர் رحمه الله
4. ஹழ்ரத் ஸெய்யிதினா காரிஜா பின் ஸைத் رحمه الله
5. ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ ஸல்மா பின் அப்துர் ரஹ்மான் رحمه الله
6. ஹழ்ரத் ஸெய்யிதினா உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர் رحمه الله
7. ஹழ்ரத் ஸெய்யிதினா ஸுலைமான் பின் யஸார் رحمه الله
ஆகியோர்களாகும் . அடுத்து நாயகம் அவர்களின் ரவ்லா ஷரீஃப் வலீதைக் கொண்டு பள்ளியின் உட்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது நபித்தோழர்களில் யாருமே இல்லை என்று மேற்படி நாவலின் ஆசாமி கதை அளப்பது உண்மையா என்ன ? யோசியுங்கள் !

No comments:
Post a Comment