Sunday, 4 August 2019

கொள்கை பிரச்சாரம் - 1

கூண்டில் அடைபட்ட குருவி போல தந்தையின் காலத்தில் தனது கருத்துக்களை பகிரங்கமாக சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஷைகு நஜ்திக்கு தந்தையின் மரணம் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது . அந்த மகிழ்ச்சியில் அவரது கொள்கையை ஹுரைமலாவில் பகிரங்கமாக அறிவித்தார் . ஏற்கனவே இவருக்கும் ஊருக்கும் இடையே பூசல் ஏற்படும் போதெல்லாம் தந்தையின் முகத்துக்காக அவர் மீது கொண்டிருந்த மரியாதைக்காக சகித்துக் கொண்டிருந்த அம்மக்கள் இப்பொது அவரை கொல்ல வேண்டுமென   திட்டம் தீட்டினர் . இது தெரியவே ,இரவோடிரவாக சொந்த ஊரான உயைனாவிற்கு பயணமானார் .

அவர் உயைனா வந்து சேர்ந்த போது உஸ்மான் பின் ஹம்த் இப்னு முஃமர் என்பவன் அந்த ஊரின் தலைவனாக இருந்தான் . அவன் அவரை வரவேற்று கண்ணியப்படுத்தினான் . அதைக் கண்ட அவர் தலைவனைப் பார்த்து ....


" லா இலாஹா இல்லல்லாஹ்   எனும் கலிமாவிற்காக எனக்கு நீ உதவி செய்தால் அல்லாஹ் உனக்கு வெற்றியைத் தருவான் . அத்துடன் நஜ்தும் அதன் சுற்றுப் புறங்களும் உன்னுடைய அதிகாரத்திற்கு வந்து சேரும் "என்றார்  . அதைக் கேட்ட உஸ்மான் ,அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்தான் . அதன்பின் அவனுடைய ஒத்தாசையோடு ,முன்னை விட முனைப்போடு ஷைகு நஜ்தி செயல்படத் துவங்கினார் .

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இயக்கமென்று தனது இயக்கத்திற்கு பெயர் சூட்டினார் .  சூடான அதேநேரம் சாதுர்யமான பிரச்சாரத்தின்  பயனாக மக்கள் கவரப்பட்டார்கள் . அதனால் இன்னும் அதிக உற்சாகத்தோடு தனது முதல் பணியாக குப்பாக்களை உடைத்து ஏறியத்   தொடங்கினார் . இதுபற்றி உஸ்மான் இப்னு பஷீர் அந்நஜ்தி என்பார் உன்வானுல் மஜ்த் ஃபீ  தாரீகி நஜ்த் என்னும் நூலின் 9வது மற்றும் 10வது பக்கத்தில் பின்வருமாறு சொல்கிறார் .....


"ஷைகு நஜ்தி ஜுபைலா என்னும் ஊரில் ஹழ்ரத் ஸைத் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்களது கப்ரின் மீது கட்டப்பட்டிருந்த குப்பாவை  உடைக்க எண்ணங்கொண்டு ,மக்களின் நேர்வழிக்கு இடையூறாக இருந்து வழிகெடுத்துக் கொண்டிருக்கும் இந்த குப்பாவை உடைத்தெறிவோம் வாரீர் என உஸ்மானிடம் சொல்லவே ,அதற்கவர் :அதை நீரே செய்து கொள்ளும் என்றான் . அதற்கவர் ஜுபைலாவுடைய மக்கள் படை எடுப்பார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்  .  ஆதலால் உன்னுடைய உதவியின்றி என்னால் செய்லபட முடியாதென்று சொல்ல ,உஸ்மான் 600 பேர்களை கொண்ட ஒரு குழுவை தயார் செய்து கொண்டு அங்கே போய் சேர்ந்த போது ஜுபைலாவுடைய மக்கள் வேறு வழியின்றி வழிவிட்டனர் . அதன்பின் குப்பாவை நெருங்கியதும் அதன் மீது நான் கை வைக்க மாட்டேன் என்று உஸ்மான் சொல்லவே ஷைகு நஜ்தி தன்னிடம் கோடரியைத் தருமாறு வாங்கி தன்னுடைய கையால் குப்பாவை உடைத்து தரைமட்டமாக்கினார் ".

மேலும் இந்த ஊரில் வைத்துதான் ஷைகு நஜ்தியால் 'கிதாபுத் தவ்ஹீத் ' என்னும் நூல் தொகுக்கப்பட்டது . இந்த நூல் இன்றும் கூட சவூதி அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது . பல்வேறு மொழிகளில் இந்நூல் அச்சிடப்பட்டாலும் இந்தியாவில் இந்நூலை முதன் முதலில் மொழி பெயர்த்தவர் தேவ்பந்த் இயக்கத் தலைவர்களில் ஒருவரான மவ்லவி இஸ்மாயீல் திஹ்லவி என்பரவாகும் .

குப்பா தகர்த்தெறியப்பட்ட செய்தி அப்பகுதியின் பக்கத்திலுள்ள ஊர்களான அல் அஹ்ஸாஃ , அல் கதீஃப்      போன்றவைகளின் தலைவரான சுலைமான் இப்னு முஹம்மத் இப்னு அஸீஸ் அல் ஹுமைதி என்பாருக்குத் தெரியவரவே அவர் உஸ்மானுக்கு மடலொன்றை எழுதினார் . அதில் அவர் .....


"எனது மடல் உம்மை வந்தடைந்தால் அவரை கொன்று விடும் . இல்லையேல் எம்மிடமிருக்கும் உமது சொத்துக்கள் அனைத்தையும் நாம் முடக்கிவிடுவோம் " என்பதாக அதில் எழுதப்பட்டிருந்தது .

[ நூல் - தாரீகுன்  நஜ்த் -அரபி , பக்கம் 114 ] 

மடல் உஸ்மானை வந்தடைந்த போது அதில் கூறப்பட்டிருந்த விஷயத்தை ஷைகு நஜ்தியிடம் எடுத்துக்காட்டி அவரை எதிர்க்கும் சக்தி தனக்கு இல்லையென்றும் , அதேநேரம் உம்மை கொல்லவும் நான் விரும்பவில்லை .ஆதலால் நீர் இவ்வூரை விட்டு போய் விடும் என்றான் . அதற்கு ஷைகு நஜ்தி ,உஸ்மானிடம் திரும்பவும் ,நீ எனக்கு உதவி செய்தால் நஜ்த் உனக்கு கிடைக்குமென்று சொல்ல ,அவன் அதை மறுத்து விட்டான் .

இப்படி குப்பாக்களை உடைப்பதும் ,கப்ருகளை தரை மட்டமாக்குவதும் , கப்ருகள் உள்ள மஸ்ஜிதுகளில் தொழுவது ஹராம் என்னும் பல்வேறு கருத்துக்கள் இவர்களுடைய கொள்கை திட்டங்களில் உள்ளவைகளாகும் . இதனை இன்றுள்ள அவர்களின் ஏஜெண்டுகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமுல்படுத்தவும் செய்கின்றனர் .

இதே போன்று இப்னு சவூதும் ,ஷைகு நஜ்தியும் இணைந்து அமுல்படுத்திய விஷயங்களைத் தான் இன்றுள்ள சவூதி அரசாங்கமும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது . இதை நாம் நிரூபிக்க வேண்டுமாயின் ....

தமிழகத்தில் இவர்களின் எடுபிடி ஏஜெண்டுகளாக இருந்து இன்று சிதறி சின்னா பின்னாமாகியுள்ள , விபச்சார காமுகன் பீ.ஜே என்ற ஷைத்தானின் தலைமையில் சமீப காலம் வரை தமுமுக , தவ்ஹீத் ஜமாத் என்று இயங்கிய இவர்கள் தமது பத்திரிக்கைகளிலும் ,இணைய தளங்களிலும் , தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் எடுத்துள்ள நிலைப்பாட்டை கவனித்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும் . இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்கள் கண்மணி நாயகம் அவர்களது புனித குப்பாவை இடிக்க வேண்டும் என்று சவடால் விட்ட பொழுது , ஒரு வழியாக தமிழக இஸ்லாமிய சமூகம் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது சமீபத்திய வரலாறு .



இதே போன்று இலங்கையிலுள்ள இவர்களின் ஏஜெண்டுகள் வெளியிட்டிருந்த மக்கா ஹரம் ஷரீபின் இமாம்  திட்டமிட்டவாறு கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஏன் ஜும்மா தொழுகை நடத்தவில்லை ? என்று பிரசுரம் ஒன்றின் கருத்தை கீழே தருகின்றோம் .பாருங்கள் ....

"கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் கப்ரு இருப்பதால் அதில் தொழுவது ஹராம் " எனக்கூறி அதற்காதாரமாக இரண்டொரு ஹதீதுகளையும் எடுத்துக் காட்டியிருந்தனர் . அந்த ஹதீதுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு மிகப் பகிரங்கமாக சொல்லப்பட்டிருந்த விஷயம் என்னவென்றால் அதில் தொழுவோர் அனைவரும் முஷ்ரிக்குகள் என்பதேயாகும் .

அதன்பின் புனித மதீனா ஷரீப் பள்ளிவாயிலின் பிரதம இமாம் கலாநிதி ஸலாஹ் முஹம்மத் அல் புதைர் ,இலங்கையின் வேறொரு சாராரால் அழைக்கப்பட்டு வருகை தந்தவர்  நாட்டின் பல பாகங்களுக்கும் சென்ற பொழுது கல்முனை அல் ஹாமியாவிற்கும் சென்று உரையாற்றிய அவரது உரையாடல் 8-10-2002 ல் வெளியான தினகரன் நாளேட்டின் 2ஆம் பக்கத்தில் "ஈமானை பாதிக்கும் கப்ரு வணக்கம் நரகத்தில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டிருந்தது .

இப்படிப்பட்டதொரு மாபெரும் குற்றச்சாட்டை அவர்களால் சொல்லப்பட்ட பொழுது நம்மவர்கள் மவுனம் சாதித்தது ஏன் என்று புரியவில்லை ? அதற்குரிய காரணம்  என்னவாக இருக்குமென்று நாம் யோசித்த பொழுது நமக்கு கிடைத்த காரணம் இதுதான் ....

கப்ரு ஜியாரத் இருக்கும் பள்ளியில் தொழுவது ஹராம் என்றும் அதில் தொழுபவர்களெல்லாம் முஷ்ரிக்கீன்கள் என்றும் சொன்னவர்கள் அத்துணை பேரும் மக்கா முகர்ரமாவிலுள்ள ஹரம் ஷரீபில் தானே தொழுகின்றனர் ?

அத்துடன் அங்கே இலட்சக் கணக்கான மக்கள் சதா வருகை தந்த வண்ணம் உள்ளனர் . காரணம் அதிகமான  நன்மை கிடைக்குமென்றால் அங்கு தொழுவதற்குத்தான் கிடைக்கும் . அப்பேற்பட்ட பள்ளியில் ....

AL-BIDAYAH WAN-NIHAYA



"ஹழ்ரத் ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلامஅவர்களும் ,அவர்களுடைய தாயாருமான அன்னை ஹாஜரா عليه السلامஅடக்கப்பட்டிருப்பதாகவும் " இன்னும் ...


" ஹழ்ரத் ஸெய்யிதினா நூஹ் நபி عليه السلام அவர்களின் கப்ரும் இருப்பதாகவும் " இன்னும் .....


 " ஸெய்யிதினா நூஹ் நபி عليه السلام அவர்களின் கப்ரு கர்க் என்னும் ஊரில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அங்கே ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது " என்றும் சொல்லப்படுகிறதே !

[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம் 1 , பக்கம் 120 ,193 ]

மஸ்ஜிதுல் ஹரமில்  பல நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதை ஸஹீஹான , ஹசனான ,ளயீபான பல தகவல்கள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன .

இமாம் அஸ்ரகீ அவர்கள் அக்பார் மக்கா என்னும் நூலிலும் , ஹாபிழ் இப்னு ஜரீர் ,  ஹாபிழ் இப்னு அபீ  ஹாத்திம் , ஆகிய இருவரும் தத்தம் தனது தப்ஸீர்களிலும்  நபிமார்களான நூஹ் ,ஹுத் , ஸாலிஹ் , ஷுஐப் போன்றோர் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் .

இத்தகவலை ஹாபிழ் இப்னு ஜரீர் அத்திப்ரீ  முர்ஸலான ஒன்றெனக் கூறுவதோடு இது நம்பிக்கைக்குரிய தகவலென்றும் கூறுகின்றார் . ஹாபிழ் இப்னு கதீர் அவர்களும் இதனை முர்ஸல் எனக் கூறுவதோடு இதில் பலவீனம் இருப்பதாகவும் கூறுகின்றார் . எனினும் இத்தகவலை வேறுபல தகவல்களைக் கொண்டு ஊர்ஜிதப்படுத்துவதை எவராலும் மறுக்க முடியாது .    

உதாரணமாக இமாம் பாகிஹானி அவர்கள் ஃபழாயிலு மக்கா என்னும் நூலிலும் ,  ஹாபிழ் தகியுத்தீன் பாஸி அவர்கள் ஷிபாவுல்    ஃகராம் என்னும் நூலிலும் , ஹாபிழ் அஸ்ரகீ அவர்கள் தாரீக் மக்கா என்னும் நூலிலும்   , ஹாபிழ் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் முஸன்னப் என்னும் நூலிலும் , இமாம் முஹம்மத் பின் ஹசன் அவர்கள் அல் ஆஸார் என்னும் நூலிலும் ,  இமாம் அபூ யூசுப் அவர்கள் தமது அல் ஆஸார் என்னும் நூலிலும் ,  இமாம் ஹாகிம் அவர்கள் முஸ்தத்ரக் என்னும் நூலிலும் , ஹாபிழ் இப்னு ஸஃத் அவர்கள் அத்தபகாத் என்னும் நூலிலும் , ஹாபிழ் அபூ நயீம் அவர்கள் ஹுல்யா என்னும் நூலிலும் மேற்கண்ட தகவலை பதிவு செய்துள்ளனர் .

இவ்வனைத்து தகவல்களிலும் பன்னிரண்டு நபர்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள் .  அவர்களில் இருவர் ஸஹீஹானவர்கள் . இருவர் ஹஸனானவர்கள் . ஐவர் ளயீபானவர்கள் . ஒருவர் ஸஹீஹ் அல்லது ஹஸனானவர் .  இன்னும் ஒருவர் ஹசனுடைய     படித்தரத்துக்கு  ஒப்பாவார் . ஆதலால் மஸ்ஜிதுல் ஹராமில் நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்னும் தகவல் ஏற்கத்தக்க ஒன்றாகும் .

இதுதவிர நபியுல்லாஹ் இஸ்மாயீல்  عليه السلام அவர்களும் ,அவர்களுடைய அருமை தாயார் ஹாஜரா  عليه السلام அவர்களும் கஃபத்துல்லாவிற்கு பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்டுள்ளர்கள் என்பதை இப்னு ஜவ்ஸி அவர்கள் அல் முன்தழம் , பாகம் 1 ,பக்கம் 305 ழும் , இமாம் அப்துர்ரரஹ்மான் ஸுஹைலி அவர்கள் அர்ரெளழுல் உன்ப் .பாகம் 1,பக்கம் 88ழும் , சீறத் இப்னு ஹிஷாம் , பாகம் 1,பக்கம் 42 ழும் , ஹாபிழ் தகபி தாரீகுல் இஸ்லாம் , பாகம் 1 , பக்கம் 20ழும் ,அபுல் ஹசன் அலீ பின் ஹுசைன் மஸ்வூதி அவர்கள் அல் முரவ்வஜித் தஹப் ,பாகம் 2,பக்கம் 48ழும் , ஹாபிழ் இப்னு அதீர் அல் காமில் ,பாகம் 1,பக்கம் 102ழும் , அபுர் ரஃபீஃ சுலைமான் பின் மூஸா அல் கலாயி அவர்கள் - அல் இத்திபா பீ மகாஸீ ரசூலுல்லாஹ் வஸ்ஸலாஸத்தில் குலபா ,பாகம் 1,பக்கம் 63ல் குறிப்பிட்டுள்ளதை நாம் காணலாம் .

ஹழ்ரத் அப்துர்ர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உபைதுல்லாஹ் அல் குறைஷிய்யீ  அத்தமீமி رضي الله عنه என்னும் நபித்தோழர் பற்றி  கூறப்படும் தகவல் என்னவெனில் , ஸஹாபா தோழர் அவர்கள் கொல்லப்பட்ட போது ஹஸ்வரா என்னுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் .அதன்பின் மஸ்ஜிதுல் ஹராம் விஸ்தரிக்கப்பட்ட பொழுது அவருடைய கப்ரும் பள்ளியின் உட்பகுதியிலேயே அமைக்கப்பட்டது .

[ நூல் - அல் இஸாபா ,பாகம் 2,பக்கம் 410 . தஹ்தீபுத் தஹ்தீப் ,பாகம் 6,பக்கம் 227. அல் இக்துஸ் சமீம் , பக்கம் 1758 . இத்ஹாபுல் வரா , பாகம் 2,பக்கம் 102    ]

இத்ஹாபுல் வரா பி அக்பாரி உம்மில் குரா நூலில் ,பாகம் 2, பக்கம் 454 ல் ஹிஜ்ரி 451ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை கூறும் போது , மகாமே இப்ராஹீமுக்கும் ஹிஜ்ருக்கும் இடையில் தோண்டப்பட்ட பொழுது பெருவாரியான மண்டை ஓடுகளும் எலும்புகளும் தென்பட்டன . அதைக் கண்ட பொழுது அதை அவ்வாறே வைத்து மூடப்பட்டன என்று கூறுகின்றனர் .  

மேற்கண்ட தகவலிலிருந்து நமக்கு கிடைக்கும் விஷயம் என்னவெனில் ஹஸ்வரா என்னுமிடம் அருமை ஸஹாபா பெருமக்களின் காலத்தில் நல்லடக்கம் செய்யும் ஓர் இடமாக இருந்ததையும் அதன்பின் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் இணைக்கப்பட்டது என்பதையும் , கஃபாவின் அருகில் நபிமார்கள் அல்லாதவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துவதை நாம் காண்கின்றோம் . ஆக தற்போற்துள்ள  ஹரம் ஷரீபின் எல்லைக்குள்   பல கப்ருகள் இருக்கின்றன என்பதே உண்மையாகும் .

Masjid-Khayf

இதேபோல மக்காவிற்கு அருகில் இருக்கும் மினா என்னும் இடத்தில அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைபை எடுத்துக் கொண்டால் அப்பள்ளிக்குள் எழுபது நபிமார்களுடைய மண்ணறைகள் இருப்பதாக அருமை நாயகம்  அவர்களது பொன்மொழி முஸ்னதுல் பஸ்ஸார் என்னும் நூலில் ,எண் : 1177ழும் , தப்ரானி கபீர் ,பாகம் -12,பக்கம் 316ழும் கூறப்பட்டுள்ளது .

இத்தகவலை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் முக்தஸர் ஸவாயித் பஸ்ஸார் என்னும் நூலின் எண் : 813 ல்  ஸஹீஹான அறிவிப்பளர்களைக் கொண்டு கூறப்ப்பட்டதென்றும் , ஹாபிழ் ஹைத்தமி அவர்கள் மஜ்மவுஸ் ஸவாயித் என்னும் நூலின் ,பாகம் 3,பக்கம் 297 ல் ஹாபிழ் பஸ்ஸாரின் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைகக்குறியவர்கள் என்று கூறுகின்றார் .
             

No comments:

Post a Comment