கல்லுடைந்தாலும் சொல்லுடையாத இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இப்னு தைமிய்யா பற்றி கூறியது:
இப்னு தைமிய்யா என்பவன் அவமானப்படுத்தப்பட்டவனாகவும், குருடனாகவும், செவிடனாகவும், இழிவானவனாகவும் ஆக்கப்பட்டவன் ஆவான். இதை அவரது காலத்து இமாம்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவன் பாசிக் , பொய்யன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யார் அவனது சுயரூபத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாரோ, அவர் இமாம் அபூ ஹசன் அஸ் ஸுப்கீ அல்-முஜ்தஹித் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அவரது இமாமத், மகத்துவம், இஜ்திஹாத் அந்தஸ்து ஆகியவற்றில் ஒருமித்த கருத்து உள்ளது.
மேலும் அவரது மகனார் இமாம் தாஜுத்தீன் அஸ் ஸுப்கீ, ஷைகுல் இஸ்லாம் இஸ்ஸு பின் ஜமாஹ் மற்றும் அவரது காலத்து ஷாஃபிஈ, மாலிகீ, ஹனஃபீ உலமாக்களின் நூல்களையும் படிக்க வேண்டும்.
இப்னு தைமிய்யா பிந்தைய சூஃபிகளுக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை; அவன் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் இப்னு அல்ஃகத்தாப் رضي الله عنه மற்றும் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீ தாலிப் كرم الله وجهه ஆகியோருக்கும் எதிராக ஆட்சேபனை தெரிவித்தான்.
சுருக்கமாகச் சொல்வதானால்: அவனுடைய எழுத்துகளுக்கு எந்த மதிப்பும் இல்லை; மாறாக, அவை குப்பையில் வீசப்பட வேண்டியவை. அவனைப் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டியது என்னவென்றால், அவன் ஒரு பித்அத் செய்தவன் , வழிகெட்டவன், அறியாதவன், ஃகுலுவ் (அளவு கடந்து போவது) செய்தவன் ஆவான். அல்லாஹ் அவனுக்கு தனது நீதியின்படி கைமாறு செய்வானாக! அவனுடைய நம்பிக்கைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.
ஆதார நூல் 📕 : அல்-ஃபதாவா அல்-ஹதீஸிய்யா, இப்னு ஹஜர் அல்-ஹைதமீ رَحِمَهُ ٱللَّٰهُ , பக்கம் 114-115
No comments:
Post a Comment