Thursday, 18 December 2025

வழிகேடர்களுக்கு மறுப்புரை - 1

ஆக்கம் : முப்தி Dr.தெஹ்ஸீன் ரிழா ஹம்தானி காதிரி நூரி 

இந்த தலைப்பு சுன்னி சஹீஹுல் அகீதா முஸ்லிம்களுக்கு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மிகவும் முக்கியமானது. உம்மத்திற்குள் பிளவையும், சீர்கேட்டையும் உண்டாக்கியவர்களின் வழிகெட்ட நம்பிக்கைகளை அறியாமல் இருந்தால், ஒருவர் அவர்களின் தீமைகளிலிருந்து ஒருபோதும் பாதுகாக்கப்பட மாட்டார். 

நமது அகீதாக்கள்/கொள்கைகள் அல்லாஹ் தஆலா தன் இறை அருளை அருள்புரிந்த புனிதர்களின் அகீதாக்களுக்கு ஏற்ப இருந்தால்தான் உம்மத்தாக ஒன்றுபட முடியும்.

சூரதுல் ஃபாத்திஹாவில் நாம் தினமும் ஓதுகிறோம்:

_"எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக! நீ அருள் புரிந்தவர்களின் வழியை!"_ [அல்குர்ஆன், 1:5-6]

அல்லாஹ் தஆலா யாருக்கு அருள் புரிந்தான்?

அல்லாஹ் தஆலா கூறினான்:

_"யார் அல்லாஹ்வையும், தூதரையும் வழிப்படுகின்றாரோ அவர்கள் அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன் இருப்பார்கள்: நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் மற்றும் நல்லடியார்கள் – அவர்கள் எத்துனை சிறந்த தோழர்கள்!"_ [அல்குர்ஆன், 4:69]

ஆகவே, நேர்வழி என்பது நமது நபிமார்கள், சித்தீகீன்கள் (உண்மையாளர்கள்), ஷுஹதா (ஷஹீதுகள்) மற்றும் அவ்லியா-உல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்கள்) ஆகியோரின் வழியாகும்.

மேலும், கலிமா தய்யிபாவிலிருந்து நாம் அறிகிறோம்: உண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன் பொய்மையை மறுப்பது அவசியம். கலிமா ஷரீஃபில் நாம் முதலில் அறிவிக்கிறோம்:

லா இலாஹ:
"இறைவன் இல்லை (பொய்யான/வேறு தெய்வம் இல்லை),"

பின்னர் உறுதிப்படுத்தி கூறுகிறோம்,

இல்லல்லாஹ்:
"அல்லாஹ்வே (உண்மையான இறைவன்)"

ஆகவே, உம்மத்தை அழிவுக்கு உள்ளாக்கியவர்களின் பொய்யான நம்பிக்கைகளை மறுப்பதன் முக்கியத்துவம் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கும் அவசியமானது, தன்னை அதன் தீமைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இஸ்லாமின் உண்மையை உண்மையாக உறுதிப்படுத்துவதற்காகவும்.

( தொடரும்) 

No comments:

Post a Comment