ஆக்கம் : முப்தி Dr. தெஹ்ஸீன் ரிழா ஹம்தானி காதிரி நூரி
ராபிழியாக்கள் ( ஷியாக்கள்)
ராபிழியாக்கள் குழு என்பது இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஒரு குழுவாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழு தங்கள் நம்பிக்கை அமைப்புகளின் அடிப்படையில் பல துணைக் குழுக்களாகப் பிரிந்தது.
அண்ணல் நபி ﷺ ஸெய்யிதினா அலீ كرم الله وجهه அவர்களிடம் கூறினார்கள்:
"அலீயே ! உம்மில் ஈசா நபி போன்ற ஒரு ஒற்றுமை உள்ளது; யூதர்கள் அவரை எந்தளவு வெறுத்தனர் என்றால் அவரது தாயை அவதூறு செய்தனர். கிறிஸ்தவர்கள் அவரை அவ்வளவு நேசித்தனர் என்றால் அவர் தகுதியற்ற ஒரு அந்தஸ்துக்கு ( இறைவனின் குமாரன்) உயர்த்தினர்."
பின்னர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் அலீ كرم الله وجهه அவர்கள் கூறினார்கள்:
_"என்னால் இரு வகையான மக்கள் அழிவுக்கு உள்ளாவார்கள்: என்னை மிகைப்படுத்தி நேசிப்பவர், எனக்கு இல்லாத குணங்களைப் புகழ்பவர், மற்றும் என்னை மிகைப்படுத்தி வெறுப்பவர், என்னை அவதூறு செய்பவர். எச்சரிக்கை! நான் ஒரு நபி அல்ல, என் மீது வஹீ இறங்குவதில்லை."_
[ஆதார நூல் 📕 அல் முஸ்தத்ரக் லில் ஹாகிம், ஹதீஸ் 4622, ஸஹீஹ்]
இதிலிருந்து தெளிவாகிறது ஒரு குழு நமது எஜமானர் ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் அலீ முர்தளா كرم الله وجهه அவர்களிடம் மிகைப்படுத்தலால் அழிவுக்கு உள்ளாகும்.
இத்தகைய பண்பு ராபிழியாக்களது பழக்கமாகும். ஷீஆக்களின் இந்த மிகைப்படுத்தல்கள் மற்றும் பிற தவறான நம்பிக்கைகள் பின்வருமாறு:
- ஹழ்ரத் அலீ رضي الله عنه அண்ணல் நபி ﷺ அவர்களைத் தவிர அனைத்து நபிமார்களையும் விட உயர்ந்தவர்கள்.
- ஹழ்ரத் அலீ رضي الله عنه அன்ஹுவின் நேசத்தில், சிலரைத் தவிர மற்ற அனைத்து ஸஹாபாக்களையும் காஃபிர்கள் என்று அறிவிக்கின்றனர்.
- அவர்களின்படி, அசல் குர்ஆன் 17,000 வசனங்களைக் கொண்டிருந்தது. இன்றைய குர்ஆன் முழுமையடையாதது.
அவர்களது புத்தகங்களில் உள்ள குறிப்புகள்:
- ரிஜால் அல் காஷி, பக்கம் 12, கர்பலா பதிப்பு, ஈராக்.
- உஸூல் அல் காஃபி, தொகுதி 2, பக்கம் 634, தாருல் கிதாப், தெஹ்ரான்.
இந்த தவறான நம்பிக்கைகளால், ராபிழி ஷீஆ குழு இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டது. இவர்களது நம்பிக்கைகளைத் தெரிந்த பிறகு இவர்களை நேர்வழி பெற்றவர்கள் என்று கருதுபவர் அல்லது இவர்களது நம்பிக்கைகளை வெறும் கருத்து வேறுபாடு என்று கருதுபவர் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்.
_தொடரும்_
No comments:
Post a Comment