கண்மணி நாயகம் ﷺ <அவர்களால் கிழக்குத் திசையில் இருந்து தோன்றும் கர்னுஷ் ஷைத்தான் என்று எச்சரிக்கப்பட்ட அந்த கூட்டம் ,எந்த பெயரை கொண்ட கூட்டத்தினரை முன்மாதிரியாகக் கொண்ட கூட்டம் என்பதையும் , கிழக்குப் பிரதேசத்தின் எந்த ஊரிலிருந்து அது தோன்றியது என்பதையும் அடுத்து வரும் ஹதீஸ் நமக்கு துல்லியமாக காட்டுகிறது .
<"ஹழ்ரத் ஷரீக் இப்னு ஷிஹாப் رضي الله عنه அவர்கள் கூறுகின்றனர் . அருமை நாயகம் ﷺ அவர்களின் தோழர் பெருமக்களில் யாரையாவது சந்தித்து கவாரிஜியாக்களைப் பற்றி கேட்க வேண்டுமென ஆவல் கொண்டிருந்தேன் . அது அரஃபா உடைய தினத்தன்று அபூ ஸூர்ஆ என்ற நபித்தோழரைச் சந்திந்த பொழுது நிவர்த்தியாயிற்று . நான் அவரிடம் கவாரிஜியாக்களைப் பற்றி அருமை நாயகம் ﷺ அவர்கள் கூறியுள்ளதை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று கேட்டேன் . அதற்கவர் ;எனது இரு செவிப்புலன்கள் கேட்டதையும் இரு கண்கள் கண்டதையும் கூறுகின்றேன் என்று சொல்லி கூற துவங்கினார் .
ஒருமுறை நாயகம் ﷺ அவர்களிடம் ஒப்படைக்கப்பெற்ற திர்ஹங்கள் சிலவற்றை நபியவர்கள் பங்கீடு செய்து கொண்டிருந்தனர் . அப்போது அங்கே அமர்ந்து இருந்தவர்களில் கருப்பு நிறமும் ,தலைமுடி பின்னப்பட்டிருந்தவரும் ,வெண்மையான ஆடை அணிந்தவரும் ,இரு கண்களுக்கிடையில் ஸுஜூது உடைய அடையாளத்தை கொண்டிருந்தவருமாகிய ஒருவர் நபியவர்களை நாலாபுறமும் சுற்றி வந்தவராக தனக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்று பார்த்தார் . எதுவும் கிடைக்கவில்லை . அதனால் அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவராக நபியவர்களின் திருப்பெயரை சொல்லி அழைத்து , நீர் நீதமாக பங்கீடு செய்யவில்லை என்று கூறினார் .
அதுகேட்ட நபியவர்கள் சினம் கொண்டவராக எனக்குப் பின் என்னை விட நீதமாக பங்கீடு செய்யும் ஒருவரை பெற்றுக்கொள்ளவே மாட்டீர்கள் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மூன்று முறை சொல்லிவிட்டு ,
கிழக்குப் பிரதேசத்தில் இருந்து இவனைப் போல பலர் தோன்றுவார்கள் . இவனும் அவர்களில் நின்றுமுள்ளவன் தான் . அவர்கள் குரானை ஓதுவார்கள் ,அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . வில்லில் இருந்து விரைந்தோடும் அம்பு போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் . பின்னும் வில்லை விட்டு வெளியேறிய அம்பு எவ்வாறு மீண்டும் வில்லுக்குத் திரும்பாதோ அவ்வாறு அவர்கள் மார்க்கத்திற்கு திரும்ப மாட்டார்கள் எனக் கூறியவர்கள் ,தங்களின் முபாரக்கான திருக்கரத்தை தங்களின் முபாரக்கான நெஞ்சின் மீது வைத்தவர்களாக அவர்களின் அடையாளம் தலையை சிரைப்பதாம் .அவர்களில் இறுதியானவன் தஜ்ஜாலுடன் இணையும் வரை தோன்றிக் கொண்டே இருப்பார்கள் . அவர்களை நீங்கள் சந்திப்பீர்களேயானால் கொன்று விடுங்கள் . ஏனெனில் அவர்கள் பிறவியிலேயே மிகக் கொடியவர்கள் என்று மூன்று முறை மொழிந்தார்கள் "
[ நூல் - முஸ்னத் அஹ்மத் ,பாகம் 6,பக்கம் 662. முஸ்னத் தயாலிஸி ,என் -923. நஸாயீ குப்ரா ,பாகம் 2,பக்கம் 312 ,எண் 3566 ]
ஆக இதுவரை எடுத்துக் காட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நவீனமாக தோன்றும் கொள்கைப் பிரச்சனைகள் அனைத்தும் புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவின் கிழக்குப் பகுதியில் இருந்து தான் தோன்றும் என்பதை தெளிவுபடுத்தியதோடு ,இப்படியெல்லாம் எச்சரிக்கை நபியவர்களின் திருச்சபையில் தனது சுய லாபத்திற்காக கலிமா சொல்லி உள்ளுக்குள்ளேயே அல்லாஹ் ரஸூலின் விரோதியாக இருந் ஒருவன்தான் காரணம் என்பதையும் ,அவனும் கிழக்குப் பிரதேசத்தை சேர்ந்தவனாகத் தான் இருந்தான் என்பதையும் என்பதையும் மிகத் துல்லியமாக நமக்கு விளக்கி காட்டுகிறது .
இதில் புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவிற்கு கிழக்குப் பிரதேசத்தை நாம் ஆய்வுக்கு எடுப்போமேயானால் அரபு மண்ணில் ஒரேயொரு மாகாணத்தை தவிர மற்ற பகுதிகளில் வாழ்ந்த ஜனங்களில் ஒருவர் கூட நபிகள் நாயகம் ﷺ அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருக்கவில்லை என்பது புத்தியுள்ளோர் புரிந்து கொண்டுள்ள ஒன்றாகும் .
இவ்வாறே நபிகள் நாயகம் ﷺ அவர்களை தம் முகக் கண்ணால் காணும் பாக்கியம் பெற்ற அரபுப் பகுதியின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த அந்த ஒரேயொரு மாகாணத்தில் தோன்றிய பிரச்சினை தான் இன்றும் அந்த மாகாணத்தை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வருவதை'நாம் பார்க்கலாம் .இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும் என்று தான் வள்ளல் நபி ﷺ அவர்கள் அப்போதே பல்வேறு வகையிலும் நம்மை எச்சரித்தார்கள் .
பிரச்சினை உண்டாக்கிய அந்த மூலப் பிரதேசம் ,அதை ஒட்டியுள்ள பிற பகுதிகளையும் பாதித்ததோடு புதுப் புதுவகையான குழப்பங்களையும் எதிர்கொள்ள வைத்தென்பதை நாம் மறுக்க இயலாது .அதற்காக பாதிப்பின் தாக்கத்தை கொண்டிருந்த பிற பகுதிகளையெல்லாம் குழப்பத்தின் பிரதேசங்களாக சிலர் பிரகடனப் படுத்துவது மாபெரும் தவறாகும் .
மேலும் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் விஷயம் என்னவெனில் ,இஸ்லாத்தின் துவக்க காலம் தொட்டு இன்றுவரை உள்ள கொள்கை விளக்க பிரச்சனைக்கெல்லாம் அடித்தளமாக எந்த இடம் அமைந்திருந்தது என்பதை தெளிவு படுத்துவதேயாகும் .அருமை நபியவர்களின் பின்வரும் ஹதீதை பாருங்கள்.
ஹழ்ரத் அலி رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் திருச் சமூகத்திற்கு சிறிது தங்கத்தை அனுப்பி வைத்தனர் . அதை நபியவர்கள் (1) அக்ரஃ பின் ஹாபிஸ் (2) உயைனா பின் பத்ர் (3) ஸைத் அத்தாயி (4) அல்கமா பின் உலாஸா அல் அமிரிய்யு என்னும் நான்கு குழுவினருக்கும் பங்கீடு செய்தார்கள் .அதனால் குறைஷிகளும் ,அன்சாரிகளும் எங்களுக்கு தராமல் நஜ்த்உடைய பகுதியை சார்ந்த தலைவர்களுக்கே பங்கீடு செய்து விட்டீர்களே என்றனர் .அதுகேட்ட நபியவர்கள் :நஜ்த்உடைய பெரியவர்களின் உள்ளங்கைகளை சந்தோஷப்படுத்தி அவ்ர்களைக் கவர வேண்டுமென்னும் நோக்கத்தில் தான் அவ்வாறு செய்தேன் என்றார்கள் .
அப்போது குழிவிழுந்த கண்களையுடைய ,உயந்த நெற்றியுள்ள ,கன்னம் தடித்த ,அடர்த்தியான தாடியைக் கொண்ட ,தலைமுடியை சிரைத்த ஒருவன் ,முஹம்மதே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அல்லாஹ்வை அஞ்சும் என்றான் .அதுகேட்ட நபியவர்கள் நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் அல்லாஹ்வுக்கும் வழிபடுபவர் வேறு யார் என்றும் ,இப்பூமியிலுள்ள அனைவருக்கும் அல்லாஹ் என்னை நம்பிக்கையாளனாக அனுப்பி இருக்கும் பொழுது நீர் என்னை நம்பிக்கையாளனாக ஏற்கவில்லையா ? என்று சொல்ல அருகில் இருந்த ஹழ்ரத் காலித் பின் வலீத்'رضي الله عنه அவர்கள் அவனைக் கொள்வதற்கு அனுமதி கோர நபியவர்கள் தடுத்து விட்டார்கள் .
அதன்பின் அவன் அவ்விடத்தை விட்டு சென்ற பின் நபியவர்கள் , ' இவனுடைய வம்சத்தில் இருந்து ஒரு கூட்டம் தோன்றும் , அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் . ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காது . வில்லில் இருந்து வெளியாகும் அம்பைப் போல் அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் . மேலும் அவர்கள் விக்ரஹத் தொழும்பர்களை விட்டு விடுவார்கள் . முஸ்லிமகளை கொலை செய்வார்கள் . அவர்களை ஒருவேளை நான் சந்திப்பேனாயின் ஆதுடைய சமூகத்தார் கொல்லப்பட்டதைப் போன்று அவர்களைக் கொல்வேன் '' என்றனர் .
[ நூல் - புஹாரி ஷரீப் .பாகம் 2 , பக்கம் 645 . முஸ்லீம் ஷரிப் , கிதாபுஸ் ஸகாத், பாபு திக்ரில் கவாரிஜி , இக்மால் ,பாகம் 3 , பக்கம் -606 ]
கொடியோர்களான க்வாரிஜிய்யீன்கள் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நஜ்த் மாகாணத்தில் இருந்து தான் வெளிப்படுவார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழி நமக்குத் தெளிவாக விளக்கிக் காட்டி விட்டது .
அத்துடன் நஜ்த் என்பது அரபுப் பிரதேச மாகாணங்களில் ஒன்றென்பதையும் ,அம்மாகாணத்தை சார்ந்தவர்களில் நாயகம் ﷺ அவர்களின் திருக்கரத்தை பற்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்களும் இருக்கத்தான் செய்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்கின்றோம் .
அதன்றி நஜ்த் மாகாணமும் அங்கே வாழ்ந்த மக்களும் பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் . அங்கிருந்து தான் க்வாரிஜிய்யீன்கள் என்போர் தோன்றுவார்கள் என்பதெல்லாம் நாயகம் ﷺ அவர்களுக்கு தெரிந்து இருந்ததால் தான் அப்பகுதியைச் சேர்ந்த தலைவர்களை சந்தோஷப்படுத்தி ,அவர்களோடு ஓர் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டால் அடுத்து வரப்போகும் பிரச்சனைகள் சிறிது தளர்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்னும் ஆதங்கத்தில் தான் தனது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த குறைஷிகளுக்கும் ,அன்சாரிகளுக்கும் அப்பொருளை பங்கிடாமல் நஜ்துடைய தலைவர்களுக்கு பங்கீடு செய்தார்கள் கண்மணி நாயகம் ﷺ அவர்கள் .
இதைக் கண்ணுற்ற அவன் , நஜ்தை சேர்ந்த மக்கள் நம்பிக்குரிய நன்மக்களாக ,அல்லாஹ் ரஸுலுடைய திருப்பொருத்தத்தை பெற்றவர்களாக மாறுவதை விரும்பாததால் ,நபியவர்களை அவமதிக்கும் நோக்கில் அவர்களை பெயர் சொல்லி அழைத்து உங்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை . ஆகையால் நீங்கள் எல்லோருக்கும் பங்கீடு செய்யுங்கள் என்று சூசகமாகச் சொன்னான் . ஏனெனில் அவனும் ஒரு நஜ்த் வாசியாக இருந்ததே .
எனவே நஜ்த் மாகாணம் தான் பிரச்சனைகள் அனைத்துக்கும் தலைமை கேந்திரமாகும் . இதுதான் வழிகேட்டின் மர்கஸ் ஆகும் . இங்கிருந்து தோன்றிய அடிப்படைக்குரிய பிரச்சனைகள் காலப்போக்கில் அதன் அருகாமையில் இருந்த ஈராக்கில் ஒருபெரும் பேராபத்தை உண்டாக்கியது . ஈராக்கில் அன்று ஏற்பட்ட பிரச்னைகளுக்கு நஜ்த் தான் அடித்தளம் இட்டதென்பதை மூடி மறைக்க இன்று ஒரு கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது . காரணம் உண்மையை மூடி மறைப்பதென்பது தான் இவர்களின் பிறவிக் குணமாகும் .
அருமை நாயகம் ﷺ அவர்களின் திருக்கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றவர்களில் நஜ்த் பகுதியை சேர்ந்தவர்களும் இருந்தனர் . அவர்களும்
க்வான்களது வெளிப்பாடு , குப்ரின் தலைமைப் பீடம் , குழப்பங்களின் மர்கஸ் , ஷைத்தானின் கொம்பு போன்றவை வெளிப்படப் போகும் இடம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நஜ்த் தான் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தனர் . அத்துடன் அதற்கான காரணங்களையும் அவர்க;
புரிந்து கொண்டிருந்தனர் .
அது மட்டுமா ! புனித இஸ்லாம் அரபு மண்ணில் வேரூன்றுவதற்கு முன்பும் ,பின்பும் நஜ்துடைய பகுதியில் பிரச்சனைகள் தொடர்ச்சியாக காணப்பட்டதையும் , அத்துடன் நஜ்த் அருமை நாயகம் ﷺ அவர்களது வெறுப்புக்கு இலக்காகிப் போனதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர் .
இத்தனைக்குப் பிறகும் அப்பிரதேசம் நல்லோர்கள் வாழும் இடமாக மாற வேண்டுமென்னும் மேலான எண்ணத்தில் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை அடுத்து வரும் நாயகம் ﷺ அவர்களது அமுதவாக்கு எத்துணை அருமையாக விபரிக்கின்றது என்று பாருங்கள்
"யா அல்லாஹ் ! எங்களின் ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத்துச் செய்வாயாக என ஏந்தல் நபி ﷺ அவர்கள் பிரார்த்தித்தனர் . அப்போது அங்கிருந்த தோழர்களில் ஒருவர் ,எங்களின் நஜ்துக்கும் ( அவர் அப்பகுதியை சேர்ந்தவர் ) என்று சொல்ல , நபியவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஷாமுக்கும் ,எமனுக்கும் பிரார்த்திக்க ,அவர் மீண்டும் எங்கள் நஜ்துக்கும் என்று சொல்ல , நபியவர்கள் மீண்டும் முன்றாவது முறையாக ஷாமுக்கும் ,எமனுக்கும் பிரார்த்திக்க , அவர் மீண்டும் நபியவர்களிடம் <>எங்கள் நஜ்துக்கும் என்று சொல்ல , அது கேட்ட நபியவர்கள் ,அங்கிருந்து தான் குழப்பங்களும் ,பூகம்பங்களும் ,ஷைத்தானுடைய கொம்பும் உதயமாகும் என்று சொன்னார்கள் "
[நூல் - புஹாரி ,திர்மிதி ]
இந்த நபிமொழிக்கு விளக்கமளிக்கும் சிலர் நஜ்தில் வெறும் குழப்பம் மட்டுமே தோன்றும் எனக்கூறி உண்மையை மறைக்கப் பார்க்கின்றனர் . இது தவறாகும் .மாறாக இப்போதும் கூட நஜ்தில் பிரச்சனைகளும் ,குழப்பங்களும் இருப்பதாகத்தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறுகின்றனர் . ஆதலால் அது எப்படிப்பட்ட பிரச்சனைகளை அப்போதே சந்தித்து கொண்டிருந்தது என்பதை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம் .

No comments:
Post a Comment