Friday, 20 November 2026

ஹன்பலிக்களும் நவீன வஹாபிகளும்

ஷெய்குந் நஜ்த் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்பையும், அவரது  கொள்கைகளையும் மறுத்த 40 மாபெரும் ஹன்பலி அறிஞர்கள்!

இந்த அறிஞர்களின் பெயர்கள், ஷெய்கு முஸ்தஃபா ஹம்தூ இல்யான் அல்-ஹன்பலி அவர்கள் எழுதிய “The Hanbalis and Their Differences with Modern Salafiyya” (ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களும், நவீன ஸலஃபிய்யாக்களுடனான அவர்களது கருத்து வேறுபாடுகளும்) என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை.

இந்நூலில் பெரும்பாலும் அல்லாமா இப்னு ஹுமைத் அல்-ஹன்பலி அவர்கள் எழுதிய “அஸ்-ஸுஹுப் அல்-வாபிலா” என்ற நூலிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

மாபெரும் ஹன்பலி அறிஞரான அல்லாமா முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அஃபாலிக் அவர்கள், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அந்நஜ்தியின் ஆசிரியராக இருந்தவர். இவர் தனது மாணவரான இப்னு அப்துல் வஹ்ஹாபிற்கு எதிராக ஒரு நூலை எழுதி, அவர் அறிவற்றவராகவும், மார்க்கக் கல்வியில் தகுதியற்ற ஒரு சாதாரண மனிதராகவும் இருந்தார் என்பதை நிரூபித்தார். மேலும், அவருடைய கொள்கைகள் “அசுத்தமானவை” (قواعدك الخبيثة – கவ்வாயிதுகல் கபீஸா) என்றும் குறிப்பிட்டார்.

அவருடைய ஆசிரியர், அவருக்கு சவாலும் விடுத்தார். ஆனால், அதற்குப் பதிலளிக்க அவர் முன்வரவில்லை
மேலும், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் தந்தையும் ஒரு சிறந்த மார்க்க அறிஞராக இருந்தவர். அவரும் தனது மகனின் கொள்கைகள் குறித்து எச்சரித்தார்.

அதேபோன்று, அவருடைய மூத்த சகோதரரும் ஷெய்குல் இஸ்லாமுமான சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களும் தனது இளைய சகோதரரைக் கண்டித்தார். 

மேலும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது இளைய சகோதரரான முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபிடம், ஒரு முஜ்தஹிதுக்குத் தேவையான தகுதிகளில் பத்தில் ஒரு தகுதியைக்கூட காண முடியாது; அவர் அறிவற்றவர் என்று கூறினார்.

மக்கா நகரில் ஹன்பலி அறிஞர்களின் தலைமை நீதிபதியாக (காழியாக) இருந்த ஷெய்கு இப்னு ஹுமைத் அல்-ஹன்பலி அவர்கள், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை, மக்களைப் படுகொலை செய்த, பிறரை இலகுவாக காஃபிர் என்று தீர்ப்பளிக்கும் மனப்பான்மை கொண்ட ஒருவராகக் கருதினார்.

மேலும், ஹன்பலி அறிஞர்களுக்கான தனது அதிகாரப்பூர்வ கலைக்களஞ்சியத்தில், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபையோ, அவருடைய மகன்களையோ, பேரன்களையோ சேர்க்கவில்லை. ஏனெனில், அவர்களை அறிஞர்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தகுதியற்றவர்களாகவும், போதிய அறிவற்றவர்களாகவும் அவர் கருதினார்!

இப்னு அப்துல் வஹ்ஹாப் மற்றும் அவரது வஹ்ஹாபி இயக்கத்தை மறுத்த 40 ஹன்பலி அறிஞர்கள்

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹன்பலி அறிஞர்கள் அனைவரும் மிகுந்த மதிப்பிற்குரியவர்களாவர். வஹ்ஹாபிகளாலும் உயர்வாக மதிக்கப்படும் ஆளுமைகளாக இவர்கள் விளங்குகின்றனர்.

1. ஷெய்கு அல்-காழி சுலைமான் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1208).

2. ஷெய்கு முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு அலீ இப்னு ஸுஹைம் அல்-ஹன்பலி.

3\. ஷெய்கு சுலைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸுஹைம் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1230).

4\. ஷெய்கு முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அஃபாலிக் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1164).

5\. இமாம் அப்துல்லாஹ் இப்னு ஈஸா அல்-முவைஸீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1175).

6\. ஷெய்கு அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு ஸுஹைம் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1175).

7\. ஷெய்கு நாஸிர் இப்னு சுலைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸுஹைம் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1226).

8\. ஷெய்கு முர்பித் இப்னு அஹ்மத் இப்னு உமர் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1171).

9\. இமாம் முஹம்மத் அஸ்-ஸஃப்பாரீனி அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1188).

10\. ஷெய்குல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஃபைரூஸ் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1216).

11\. ஷெய்கு ஸைஃப் இப்னு அஹ்மத் அல்-அதீகீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1189).

12\. ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் இப்னு முஹம்மத் இப்னு ஃபைரூஸ் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1205).

13\. ஷெய்கு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அஸ்-ஸுபைரீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1225).

14\. ஷெய்கு முஹம்மத் இப்னு அலீ இப்னு ஸாலிம் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1246).

15\. ஷெய்கு அல்-காழி உஸ்மான் இப்னு அப்துல் அஜீஸ் இப்னு மன்ஸூர் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1282).

16\. ஷெய்கு உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜமாஅ் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1240).

17\. ஷெய்கு ஹஸன் அஷ்-ஷத்தீ அத்திமிஷ்கீ அல்-ஹன்பலி.

18\. ஷெய்கு அஹ்மத் இப்னு ஹஸன் இப்னு ரஷீத் அல்-அஃபாலிகீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1257).

19\. ஷெய்கு இப்ராஹீம் இப்னு நாஸிர் இப்னு ஜதீத் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1232).

20\. ஷெய்கு அப்துல் அஜீஸ் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அத்வான் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1179).

21\. ஷெய்கு ஸாலிஹ் இப்னு முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்-உனைஸீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1184).

22\. ஷெய்கு ஸாலிஹ் இப்னு ஸைஃப் இப்னு அஹ்மத் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1223).

23\. ஷெய்கு உஸ்மான் இப்னு ஸனத் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1250).

24\. ஷெய்கு அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் இப்னு முஹம்மத் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1161).

25\. ஷெய்கு முஹம்மத் இப்னு ஹம்மாத் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1261).

26\. ஷெய்கு ஹாஜி இப்னு யஸீத் இப்னு ஹுமைதான் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1192).

27\. ஷெய்கு ஹுமைதான் இப்னு துர்கீ இப்னு ஹுமைதான் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1203).

28\. ஷெய்கு அப்துல் முஹ்ஸின் இப்னு அலீ அல்-மதனீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1187).

29\. ஷெய்கு முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹுமைத் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1295).

30\. ஷெய்கு அப்துல்லாஹ் அல்-கத்தூமீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1331).

31\. ஷெய்கு முஸ்தஃபா இப்னு அஹ்மத் அஷ்-ஷத்தீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1348).

32\. ஷெய்கு முஹம்மத் ஜமீல் அஷ்-ஷத்தீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1379).

33\. ஷெய்கு இப்னு அப்துர் ரஸ்ஸாக் அல்-ஹன்பலி.

34\. ஷெய்கு இப்ராஹீம் இப்னு முஹம்மத் இப்னு ஸலீம் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1353).

35\. ஷெய்கு அப்துல்லாஹ் இப்னு அலீ இப்னு அம்ர் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1324).

36\. ஷெய்கு முஹம்மத் இப்னு இப்ராஹீம் இப்னு அரீகான் அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1271).

37\. ஷெய்கு இப்ராஹீம் இப்னு ஹம்மாத் இப்னு ஜாஸிர் அல்-ஹன்பலி.

38\. ஷெய்கு அப்துல் அஜீஸ் இப்னு ஹம்மாத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்-ஹன்பலி.

39\. ஷெய்கு இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு யூஸுஃப் அல்-ஹன்பலி.

40\. ஷெய்கு அப்துல்லாஹ் இப்னு மன்ஸூர் அல்-வாயிலீ அல்-ஹன்பலி (மரணம்: ஹிஜ்ரி 1189).

இத்தகைய கடும்போக்கு சிந்தனாவாதியான இப்னு அப்துல் வஹாப் நஜ்தியும், அதன் கொள்கைகளை அடியொற்றி துவங்கப்பட்ட ஏனைய வழிகேடான இயக்கங்களையும் விட்டு அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பாதுகாப்பானாக ! ஆமீன் ! 

No comments:

Post a Comment