கர்னுஷ் ஷைத்தான்- ஷைத்தானின் கொம்பு :
நவீன ஸவூதி அரேபியாவின் ஆளும் வர்க்கம் அதன் தலைநகர் ரியாத் ( நஜ்து) நகரில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் மாற்றுமதத்தவரின் " ஹாலோவீன்" நிகழ்வை விமர்சையாக கொண்டாடி வருகின்றது. அதற்கான விளம்பரங்களும்,செய்திகளும் ,நிகழ்வின் புகைப்படங்களும்.
https://saudigazette.com.sa/article/626295
https://www.nytimes.com/2022/10/29/world/middleeast/halloween-saudi-arabia.amp.html
https://www.arabnews.com/node/2189941/amp
*" Halloween - ஹல்லோவீன்* " நிகழ்வு அதன் வரலாறு பற்றி *Encyclopedia Britannica* பின்வருமாறு விவரிக்கின்றது.சிலை வணக்கத்தில் ஈடுபட்ட 'செல்டிக்' பழங்குடிகளின் 'சம்ஹைன்' பண்டிகையே இதன் ஆரம்ப புள்ளி.இறந்தவர்களது ஆன்மா வீடு திரும்புவதாகவும்,அதனால் ஆன்மாக்களை விரட்ட மக்கள் வேடமணிந்து ,நெருப்பு கொளுத்துவர்.அந்நாள் இன்றைய நவீன காலண்டர் தேதியில் நவம்பர் 1 ஆகும்.
அதன் தொடர்ச்சியாக 7 ஆம் நூற்றாண்டில் போப் நான்காம் போனிபேஸ் ' All Saints Day - கிறிஸ்தவ மதகுருக்களின் நாள் ' என்பதை மே 13 ஆம் தேதி கொண்டாட வழிவகுத்தார். போப் மூன்றாம் க்ரெகோரி அந்த கொண்டாட்டத்தை சிலைவணக்க்கம் புரிந்தவர்கள் கொண்டாடும் நவம்பர் 1 ஆம் தேதி அதற்கு பகரமாக மாற்றி அமைத்தார்.அதற்கு முந்தைய நாள் ஹல்லோவீன் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.
செல்டிக் பழங்குடிகளது பூர்வீகமான அயர்லாந்தில் துவங்கி,பிரிட்டன்,பிரான்ஸ்,அமேரிக்கா என்று உலகெங்கும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப் படுகின்றது.
ரபீயுல் அவ்வல் மீலாத் கொண்டாடக்கூடாது என்று ஒப்பாரி ஓலமிட்ட நவீன வஹாபிய கொள்கைவாதிகள் ,அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் பெட்ரோ டாலர் முதலாளிகள் ,குப்ரு ஷிர்க்கின் ஊற்றான இந்த பண்டிகையை ஸவூதி தலைநகர் ,ரியாதில் ( நஜ்து) கொண்டாடுவதை பற்றி ஒரு சிறு முக்கல்,முனகல் இல்லை. வஹாபிய பெட்ரோ டாலர் விசுவாசிகளது ஈமானிய நெஞ்சுரம் தான் என்னே ???
இதையெல்லாம் முன்கூட்டியே அறிவித்து இந்த உம்மத்தை எச்சரித்த அண்ணல் நபி ﷺ அவர்களது பொன்மொழிகள்.
*நஜ்து - கர்னுஷ் ஷைத்தான்* :
"அருமை நாயகம் ﷺ அவர்கள் கிழக்குத் திசையை முன்னோக்கி நின்றவர்களாக இங்கிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் எனக் கூறினர் "
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,கிதாப் பித்தன்,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]
"உம்முல் மூஃமினீன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இருந்து வெளிவந்த வாய்மையுள்ள வள்ளல் நபி ﷺ அவர்கள் கிழக்குத் திசையைச் சுட்டிக் காட்டி ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு இங்கிருந்து தான் குஃப்ரின் தலைமைப் பீடம் வெளியாகும் என்றனர் "
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,கிதாப் பித்தன்,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]
"அருமை நாயகம் முஹம்மத் ﷺ அவர்கள் மிம்பரில் அருகில் நின்றவர்களாக ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு குழப்பம் இங்கிருந்து தான் ,குழப்பம் இங்கிருந்து தான்எனக் கூறினார்கள் "
[நூல் - புஹாரி ஷரீப் , பத்ஹுல் பாரி ,பாகம் 13,பக்கம் 49 ]
"அருமை நாயகம் முஹம்மத் ﷺ அவர்கள் குத்பாவுக்காகத் தயாரான பொழுது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டின் பக்கமாக சைக்கினை செய்து ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் என்று மூன்று முறை கூறினார்கள் "
[நூல்- புஹாரி ஷரீப் ,கிதாபுல் ஜிஹாத் , நுஸ்கத்துல் காரி,பாகம் 6,பக்கம் 318]
"ஷைத்தானுடைய இரு கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு குழப்பம் இங்கிருந்து தான் வெளியாகும் . குழப்பம் இங்கிருந்து தான் தோற்றமெடுக்கும் ,குழப்பம் இங்கிருந்து தான் வெளியாகும் என்று மூன்று முறை கிழக்குத் திசையை நோக்கி தங்களின் முபாரக்கான கரத்தைக் கொண்டு சைக்கினை செய்தார்கள் ".
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]
"யா அல்லாஹ் ! எங்களின் ஷாமுக்கும் ,எமனுக்கு பரக்கத்துச் செய்வாயாக என ஏந்தல் நபி ﷺ அவர்கள் பிரார்த்தித்தனர் . அப்போது அங்கிருந்த தோழர்களில் ஒருவர் ,எங்களின் நஜ்துக்கும் ( அவர் அப்பகுதியை சேர்ந்தவர் ) என்று சொல்ல , நபியவர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக ஷாமுக்கும் ,எமனுக்கும் பிரார்த்திக்க ,அவர் மீண்டும் எங்கள் நஜ்துக்கும் என்று சொல்ல , நபியவர்கள் மீண்டும் முன்றாவது முறையாக ஷாமுக்கும் ,எமனுக்கும் பிரார்த்திக்க , அவர் மீண்டும் நபியவர்களிடம் எங்கள் நஜ்துக்கும் என்று சொல்ல , அது கேட்ட நபியவர்கள் ,அங்கிருந்து தான் குழப்பங்களும் ,பூகம்பங்களும் ,ஷைத்தானுடைய கொம்பும் உதயமாகும் என்று சொன்னார்கள் "
[நூல் - புஹாரி ,திர்மிதி ]
No comments:
Post a Comment