இப்னு தைமிய்யாவின் கொள்கையைத் தான் ,இப்னு அப்துல் வஹாபும் அவரை பின்பற்றுவோரும் ,ஏனைய இயக்கங்களனைத்தும் செயல்படுத்தி வருகின்றன . ஆதலால் அவர்களின் கொள்கைகளிலிருந்து உதாரணத்திற்காக ஒரேயோரு கொள்கையை மட்டும் உங்களின் பார்வைக்குத் தருகிறோம் . தூய சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் உடையோர் முடிவை தாமாகவே யூகித்துக் கொள்வர் .
1. நபிமார்களையும் , வலிமார்களையும் அழைத்து உதவி தேடுவது ஷிர்க்கை உண்டாக்கும் .
[ நூல் : கிதாபுல் வஸீலா ,இப்னு தைமிய்யா ,பக்கம் -63 ]
2. நிச்சயமாக முஹம்மத் அவர்கள் தமக்கே ஒரு நல்லதை செய்யவோ அல்லது தீயதைத் தடுக்கவோ சக்தி பெற்றவரல்ல .
[ நூல் : கஷ்புஷ் ஷுபுஹாத் , இப்னு அப்துல் வஹாப் நஜ்தி , பக்கம் - 6 ]
3. அல்லாஹ்வையும் ,அவனது ரஸூலையும் ,இறுதி நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் ,வலிமார்கள் ஒரு நல்லதைச் செய்யவோ அல்லது தீமையைத் தடுக்கவோ சக்தி படைத்தவர்கள் என்று நம்பிக்கை கொள்வதானது குப்ரை ஏற்படுத்தும் .
[ நூல் : அத்துரருந் நழீத் ஃபீ இக்லாஸி கலிமதித் தவ்ஹீத் ,காழீ ஷவ்கானீ , பக்கம் -53 ]
4. அல்லாஹ் அல்லாத வேறொருவரிடம் உதவி தேடுபவர் குப்ரை செய்துவிட்டார் .
[ நூல் : மஜ்மஅத்துத் தவ்ஹீத் , அப்துல் அஜீஸ் ஆலு சவூத் ,பக்கம் -112 ]
5. முஹம்மத் என்றும் அலீ என்றும் பெயர் வைக்கப்பட்டவர் எதற்கும் சக்தி கொண்டவரல்ல .
[ நூல் : தக்வீயத்துல் ஈமான் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத் மற்றும் அஹ்லே ஹதீத் இயக்கத்தின் முன்னோடி இஸ்மாயீல் திஹ்லவி ,பக்கம்- 42 ]
6. நபிமார்கள் ,வலிமார்கள் ,ஷுஹதாக்கள் , ஸாலிஹீன்கள் போன்ற அனைவருமே சரி சமமானவர்களே . ஆனால் சிலர் சிலரை அழைத்து உதவி தேடுகின்றனர் . இது தவறாகும் .
[ நூல் : தப்ஹீமுல் குர்ஆன் , ஜமாத்தே இஸ்லாமியின் முன்னோடி மவ்தூதி, 2: 532,533 ]
மேற்கொண்டோரின் கூற்றினை கொண்டு நபிமார்களும் , வலிமார்களும் , ஸாலிஹீன்களும் , ஷுஹதாக்களும் எதற்குமே லாயக்கில்லாதவர்கள் ( நவூதுபில்லாஹ் ) என்பதுதான் இவர்களனைவரின் கருத்தாகும் . இதில் இவர்கள் ஒவ்வொருவரும் அதைச் சொல்வதற்கென ஒரு பிரத்யேகமான பெயரையும் ,இயக்கத்தையும் தோற்றுவித்துக் கொண்டுள்ளனர் .
ஆக மொத்தத்தில் இவர்களனைவரும் அல்லாஹ் , ரஸுலுடைய மற்றும் வலிமார்களுடைய விரோதிகள் என்பதே எதார்த்தமாகும் . இனி இவர்கள் தமது கூற்றுக்களை உண்மையாக்குவதற்காக எடுத்து வைக்கும் ஆதாரங்களைக் பாருங்கள் ....
وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ
" இறுதிநாள் வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க முடியாத அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழிகெட்டவர்கள் யார் ? தங்களை அழைப்பதையே அவர்களால் அறிய முடியாது . "
[ ஸுரா அல் அஹ்காப் , வசனம் 5 ]
وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ
" அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் ,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள் "
[ ஸுரா அல் அஃராப் ,வசனம் 197 ]
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ
" உமக்கு எவ்வித நன்மையையோ ,தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் . அவ்வாறு செய்வீராயின் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர் "
[ ஸுரா யூனுஸ் ,வசனம் 106 ]
وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَؕ
" அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள் .அவர்களால் பிரார்திக்கப்டுபவர்களும் படைக்கப்பட்டவர்களே "
[ ஸுரா அந் நஹ்ல் ,வசனம் 20 ]
அத்துடன் ...
"நீர் கேட்டால் அல்லாஹ்விடமே கேளும் . இன்னும் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடும் " என்ற ஏந்தல் நபி ﷺ அவர்களின் அமுதவாக்கையும் தங்களின் ஆதாரமாக காட்டுகின்றனர் .
இவ்விஷயத்தில் இப்னு தைமிய்யா , முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் , மவ்தூதி , தேவ்பந்தி , அஹ்லே ஹதீத் , கைர் முகல்லிதீன்கள் என எல்லோருமே குர்ஆன் , ஹதீதுக்குரிய அதன் அஸல் பொருளைத் திருடி தங்களின் சுய விருப்பப் பிரகாரம் பொருள் சொன்ன க்வாரிஜஜீன்களின் வாரிசுகள் தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் ?
மேற்கண்ட குர்ஆன் வசனங்களின் பொருட்கள் நம்மிடமுள்ள தர்ஜுமத்துல் குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டதாகும் . இந்நூலின் ஆசிரியர் கூட இக்கூட்டங்களைச் சேர்ந்தவர் தான் என்பதே அப்பொருட்கள் சொல்லும் செய்தியாகும் .
இனி இவர்களின் கருத்துக்கு எதிராக குர்ஆனும் , ஹதீதும் என்ன சொல்கிறதென்பதைப் பார்ப்போம் .
مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ
" அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார் என்று ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் கேட்டபோது நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்பதாக ஹவாரிய்யீன்கள் சொன்னார்கள் "
[ ஸுரா ஸஃப் , வசனம் -14 ]
وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ هٰرُوْنَ اَخِى ۙ اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ
" இன்னும் எனக்கு எனது குடும்பத்திலிருந்து ஒரு அமைச்சரை ஆக்குவாயாக . அவர் எனது சகோதரர் ஹாரூனாகும் . அவர் மூலமாக எனது பலவீனத்தை அகற்றி உறுதிப்படுத்துவாயாக என நபி மூஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள் "
[ ஸுரா தாஹா , வசனம் - 29,30,31 ]
فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ
" நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவியாளனாகும் . இன்னும் ஜிப்ரீலும் ,ஈமான் கொண்டவர்களில் நல்லடியாளர்களும் பின்னர் அமரர்களும் உதவியாளர்களாகும் "
[ ஸுரா அத் தஹ்ரீம் , வசனம் 4 ]
"அருமை நாயகம் ﷺ அவர்களால் எங்களுடைய வெளிரங்க அந்தரங்க விஷயங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற எண்ணம் கொள்பவர் காபிராகும் . மேலும் இரு உலகிலும் கைசேதப்படக் கூடியவர்களாகும் "
[ தப்ஸீர் ஸாவி ]
"ஹாபிழ் இப்னு முக்ரி رضي الله عنها அவர்கள் கூறுகின்றனர் : நானும் ,ஹாபிழ் தப்ரானியும் , ஹாபிழ் இப்னு ஹிப்பானும் மதீனா முனவ்வராவில் இருக்கும் போது அத்தியாவசியத் தேவைகளுக்குரிய பொருட்கள் இல்லாததால் இரவு ,பகலாக நோன்பு நோற்றோம் .இஷாவுடைய தொழுகைக்கான நேரம் வந்தபோது நான் ,நாயகம் ﷺ அவர்களின் ரவ்ளா ஷரீபிற்கு சென்று , அல்லாஹ்வுடைய ரஸுலே ! நாயகமே ! பசிக்கிறது ! என்று சொன்னேன் . அப்போது இமாம் தப்ரானி رضي الله عنها உணவு வரும் அல்லது மரணம் வரும் எனக் கூறியவராக என்னை அமரச் சொன்னார்கள் . பின்னர் நானும் ,இப்னு ஹிப்பானும் தொழுகைக்கு தயாரான பொழுது வாசல்படியில் அலவி ஒருவர் வந்து நின்றார் . நான் கதவைத் திறந்த போது அவருடன் இன்னும் இரு வேலையாட்களும் இருந்தனர் . அவர்களது கரங்களில் மிகுதமான உணவு வர்க்கங்ககளைக் கொண்ட இரு பாத்திரங்கள் இருந்தன .அப்போது அவர் நாயகம் ﷺ அவர்கள் எனது கனவில் தோன்றி ,நீங்கள் பசிப்பதாக முறையிட்டதாகவும் இவைகளையெல்லாம் உங்களுக்கு கொடுக்கும்படியாக உத்தரவிட்டார்கள் என்றும் கூறினார் "
[ நூல் - ஸியர் அஃலாமின் நுபலாஃ , பாகம் -12 ,பக்கம் - 452 ]
"அபுல் கைர் அல் அக்தஃ அத்தீனாதி என்பார் கூறுகிறார் : நான் பசித்தவனாக அருமை நாயகம் ﷺ அவர்களின் ரவ்லா ஷரீபிற்கு வருகைதந்து ஆஜராகி ,அல்லாஹ்வின் ரஸுலே ! நான் உங்களுடைய விருந்தாளி ( எனக்குப் பசிக்கிறது ) என்றேன் . அதன்பின் மிம்பருக்குப் பின்னால் உறங்கி விட்டேன் . அப்போது தூக்கத்தில் நபியவர்களைக் கனவில் கண்டு அவர்களின் இரு கண்களுக்கும் இடையில் முத்தமிட்டேன் . அப்போது நபியவர்கள் எனக்கு ஒரு ரொட்டியைக் கொடுக்க அதில் பாதியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கண்விழித்து விட்டேன் . அப்போது மீதிப் பாதி எனது கையில் இருந்தது . "
[ நூல் - அத்துர்ரதுஸ் ஸமீனா ஃபீ தாரீகில் மதீனா , பக்கம் -225 . அவ்லியா வ கறாமத் ,பக்கம் -74 ]
இன்னொரு சம்பவத்தை பாருங்கள் . அபுல் ஃபதஹ் இப்னு ஹசன் என்பார் அபூ அலிய்யுல் கஸ்ஸானி என்பவருக்குச் சொன்னதாக சொல்லப்படுவது :
ஸமர்கந்த் என்னும் ஊரில் சில வருடங்களாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது . மக்கள் பலமுறை மழைக்காக பிரார்த்தித்து மழை பொழியவில்லை . இச்சந்தர்ப்பத்தில் அந்த ஊரை சேர்ந்த நீதிபதியிடம் ஸாலிஹான ஒருவர் வருகை தந்து , நான் ஒருகனவு கண்டேன் . அதன்படி நீங்களும் இவ்வூர் மக்களும் இமாம் புஹாரி رضي الله عنها அவர்களின் கப்ருக்கச் சென்று அவர்களிடம் மழை வேண்டி பிரார்த்திப்போம் . அல்லாஹ் நமக்கு மழையை தரக் கூடும் என்று சொன்னார் .
அதுகேட்ட நீதிபதி உமது கனவு நனவாகட்டும் என்று கூறி அவரும் ,அவ்வூர் மக்களும் அங்கு சென்று மழைக்காக பிரார்த்தித்தனர் . அப்போது அல்லாஹ்வுடைய பேரருளால் மழை பொழிந்தது . கடுமையான அம்மழை காரணமாக ஏழு நாட்கள் வரை தமது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர் . இமாமவர்களின் கப்ரு ஷரீபிற்கும் ஸமர்கந்திற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று மைல்களாகும் "
[ நூல் - ஸியர் அஃலாமின் நுபலாஃ , பாகம் -10 ,பக்கம் - 320 ]
வஹாபிய முகல்லிதுகளும் ,கைர் முகல்லிதுகளும் அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பது ஷிர்க்கென்று சொல்வது சரியா ? அல்லது குர்ஆனும் , ஹதீதும் சொல்வது சரியா ? என்பதை நீங்களே முடிவு செய்வதுடன் , இவ்வியக்கங்களின் குள்ள நரித்தனமான மார்க்கப் பணியைக் கண்டு ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .
அத்துடன் உங்கள் மனைவி ,மக்கள் ,சுற்றத்தார் இவர்களிடமிருந்து காப்பாற்றி விடுங்கள் . யாருடைய உள்ளங்களை இவர்கள் வளைத்துப் போடுகிறார்களோ , யார் இவர்களுடைய இயக்கங்களை ஆதரிக்கிறார்களோ அவர்கள் எப்படியாவது திருந்தி விடுவார்களென்று மட்டும் நினைக்காதீர்கள் .
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடலாம் , அவர்களை அழைக்கலாம் என்று நாம் சொல்வதாக நீங்கள் எண்ணி விடக் கூடாது . நபிமார்களையும் ,வலிமார்களையும் இந்த நஜ்து கொள்கைவாதிகள் அல்லாஹ் அல்லாதவர்கள் என்று பேசியதை வைத்துதான் நாமும் அவ்வாறு பேசினோமேயன்றி மற்றபடி நாம் அவர்களுடைய கருத்தை ஆதரிப்பவர்களல்ல . இனி அல்லாஹ் அல்லாதவர்கள் யார் என்பதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாதாக்களின் நல்லாசியால் விளக்குவோம் .இன்ஷா அல்லாஹ் !
இன்னும் இப்னு தைமிய்யா முதல் இவ்வுலகில் தோன்றிய வஹாபிய இயக்கமனைத்தும் நபிமார்களிடமும் ,வலிமார்களிடமும் உதவி தேடுவதை ஷிர்க் என்றும் பெரும் பாவம் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்களே !அதற்குரிய ஆதாரம் என்னெவென்று இதுவரை அவர்களிடம் நீங்கள் கேட்டதுண்டா ? ஒருமுறை அவர்களிடம் கேட்டுத்தான் பாருங்களேன் .
ஆம் .உயிரோடுள்ள ஒருவர் உயிரோடுள்ள இன்னொருவரிடம் உதவி தேடலாம் . அல்லது அவர் போருட்டாலும் கேட்கலாம் என்னும் விஷயத்தில் எந்தக் கருத்து வேற்றுமையும் கொள்ளாத வஹாபிய இயக்கத்தை சேர்ந்த அனைவரும் எதற்காக நபிமார்களிடமும் ,வலிமார்களிடமும் உதவி தேடக் கூடாதென்று சொல்கிறார்கள் தெரியுமா ?
நாம் உதவி தேடுபவர்களெல்லாம் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கிப் போய் விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தரும் விளக்கமும் ,இவர்களால் செய்யப்படும் பிரச்சாரமும் . இவர்களின் இப்பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான மிக மிகக் கீழ்த்தரமான பொய் பிரச்சாரமாகும் என்பதை குர்ஆன் ,ஹதீதைக் கொண்டே நம்மால் நிரூபிக்க முடியும் .
இருப்பினும் நாகூர் ஆளும் ஷாஹுல் ஹமீது ஸெய்யிது அப்துல் காதிர் பாதுஷா நாயகம் அவர்களது வழித்தோன்றல் , அல் ஆரிபுபில்லாஹ் அல்லாமா முஹம்மது பாக்கர் ஸாஹிப் ஆலிம் அவர்களால் எழுதப்பட்ட 'ஹிதாயத்துல் அனாம் இலா ஸியாரத்தில் அவ்லியாயில் கிராம் ' என்னும் நூலின் 70,71ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நிதர்சனமான சம்பவத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகிறோம் . அதாவது,
நபி பெருமானார் ﷺ அவர்களது ஸஹாபாத் தோழர்களான ஹழ்ரத் ஹுதைபதுல் யமனீ رضي الله عنها ,ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜாபிருள் அன்சாரி رضي الله عنه ஆகிய இருவரும் ஷஹீதாகி இராக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் . பிற்காலத்தில் வெள்ளப்பெருக்கால் இரு கப்ருகளுக்கும் சேதம் ஏற்பட்டது . அவை ஆற்றில் மூழ்கிப் போய்விடுமோ என்ற பீதியும் ஏற்பட்டது . அதுசமயம் இராக்கில் ஆட்சிபுரிந்த அமீர் பைஸல் (மக்கா ஷரீஃப் ஹுஸைனுடைய மகன் ) உலமாக்களிடம் பத்வா வாங்கி அவ்விரு கப்ருகளையும் தோண்டி எடுத்து ,அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார் . இவ்விஷயம் விளம்பரபடுத்தப்பட்டது . உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர் . அவ்விரு கப்ருகளும் 1300 ஆண்டுகளுக்கு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன . திரேகத்தில் எவ்வித பேதமும் ,மாறுபாடும் காணப்படவில்லை . வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பிரகாசத்துடன் இலக்கின .
அனைவரும் அக்கட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர் . காரீ ஒருவர்
'وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ '
அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.
[ அல் குர்ஆன் - 2:154 ]
பத்திரிகையில் வெளிவந்த செய்தி !
" இதர தேசங்களின் இராஜாங்க பிரதிநிதிகளும் இராக் அரசாங்கத்தின் சர்வ அதிகாரிகளும் திரண்டிருக்க ஷாஹ் பைஸல் அரசருக்கெதிரே முதன் முதலாக ஹழ்ரத் ஹுதைபா رضي الله عنها அவர்களின் பரிசுத்த பிரேதம் க்ரேன் மூலமாக அதிஜாக்கிரதையாக பூமியிலிருந்து அப்படியே தூக்கப்பட்டது . அந்த ஜனாஸா ஸ்டெரெச்சர் மீது அழகாய் அமைந்துஹ் விட்டது . பின்னர் ,க்ரேனிலிருந்து ஸ்டெரெச்சரை தனியாக பிரித்து ,அதை மாட்சிமை தாங்கிய ஷாஹ் பைஸல் ,முப்தியே அஃலம் இராக் ,துருக்கி ஜனநாயகப் பொது அமைச்சர்,மிஸ்ரு இளவரசராயிருந்த பாரூக் முதலானோர் தோல் மீது தூக்கிச் சென்று அழகிய கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்தனர் . இதற்குப் பின் ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லா رضي الله عنها அவர்களின் பரிசுத்த மேனியும் அடக்கஸ்தலத்திலிருந்து இதே வகையில் அழகிய முறையில் வெளியே எடுக்கப்பட்டது .
மாபெரும் டாக்டர்களான வைத்தியர்கள் பலர் இந்நிகழ்ச்சியைக் கண்டு திடுக்கிட்டனர் . ஒன்றும் புரியாமல் திகைத்தனர் . பிரஸ்தாப நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜெர்மன் கண் டாக்டர் ஒருவர் இருந்தார் . இவர் இந்நிகழ்ச்சியின் போது ஆர்வமாக பங்கு கொண்டார் . அவர் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும் ,பிரஸ்தாப பெரியார்களான ஸஹாபாக்களின் பிரேதங்கள் , கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஒன்றும் புரியாமல் ,இராக் பிரதம முப்தி அவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு , 'தங்களின் மார்க்கமான இஸ்லாம் சாத்தியமானது தான் ' என்பதற்கு இந்த ஸஹாபாக்களின் பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியை விட வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது ? இதோ யானும் முஸ்லிமாகி விட்டேன் . 'லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ' என்று கூறி முஸ்லிமாகி விட்டார் .
இத்தகைய சந்தர்ப்பத்தில் திரைப்படம் பிடிக்கும் ஒரு ஜெர்மன் கம்பெனி , அதிக தொலை தூரத்திலிருந்தெல்லாம் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களை பெரிய உபகாரம் செய்தது . பிரஸ்தாபப் படம் எடுக்கும் கம்பெனியார் ,இராக் அரசின் அனுமதி பெற்று தங்கள் செலவிலேயே ஒரு காரியம் செய்தனர் .
அடக்கஸ்தலத்தின் மேலே இருநூறு அடி உயரமுள்ள நான்கு கம்பாஸ்களின் மீது ஏறக்குறைய முப்பது அடி நீளமும் , இருபது அடி அகலமும் உள்ள டெலிவிஷன் திரைகளைப் பொருத்தினர் . இதனால் அங்கு குழுமியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நின்றவண்ணமாகவும் , அமர்ந்தவண்ணமாகவும் பிரஸ்தாப அடக்கஸ்தலங்களிலிருந்து கவ்ரவமிக்க இரு ஸஹாபா பெருமக்களின் பிரேதங்களைத் திறப்பதையும் , வெளியே எடுப்பதையும் தங்கள் கண்களால் நிதர்சனமாக நல்ல முறையில் காணும் சந்தர்ப்பம் கிட்டியது .
மறுநாள் பக்தாது நகரிலுள்ள சினிமா காட்சி சாலைகளில் எல்லாம் இந்நிகழ்ச்சி திரையிடப்பட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . இவ்விஷய நிகழ்ச்சிக்குப் பின் பக்தாது நகரிலேயே ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . அளவற்ற வகைகளில் யூதர்களும் ,கிருஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் எவ்விதக் கட்டாயமுமின்றி பள்ளிவாயில்களுக்கு வந்து மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் . நிதர்சனமான இந்நிகழ்ச்சி பண்டைய கால வரலாற்று ஏடு அல்ல .
இது நமது காலத்திலேயே நமது கண்களால் நிதர்சனமாக கண்ட ஒரு நிகழ்ச்சியாகும் .இத்தகைய அதிசயம் கி.பி.1932ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயமாகும் . இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு மதத்தினரும் ,அந்நிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கண்ணாரக் கண்டனர் . அகிலத்திலுள்ள பல பத்திரிகைகள் விஷேசமாய்ப் பிரசுரம் செய்தனர் . அன்றியும் ,இவ்வடக்கஸ்தலங்கள் பெயர் தெரியாத ஒரு சிலரைச் சார்ந்ததல்ல . இறுதி நபியாம் முஹம்மது ﷺ அவர்களது அந்தியத்த நண்பர்களான இரு ஸஹாபாக்களின் பிரேத நிகழ்ச்சியாகும் . அவர்கள் யாரென்பதை முஸ்லீம் உலகம் முன்னரே அறியும் .அவர்கள் எத்தகையோர் என்பதை முஸ்லீம் உலகம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றது .தற்சமயமோ ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்தாப அடக்கஸ்தலத்திற்கு சென்று தரிசித்து வருகின்றனர் . "
[ நூல் - நபஸுர் ரஹ்மான் , பக்கம் -196 ]
புனித இஸ்லாமிய மார்க்கத்திற்காக தமதுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகளின் புனித தேகங்கள் கூட இன்றும் அழியாமல் கப்ருக்குள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அவர்களைவிட எவ்வளவோ மேலான படித்தரங்களைக் கொண்டுள்ள நபிமார்களும் ,ஸித்தீக்கீன்களும் தமது திரேகத்தோடு ஏன் உயிரோடு இருக்க மாட்டார்கள் ! இனி அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் எனில் அவர்களிடம் உதவி தேடுவது எவ்வாறு ஷிர்க் ஆகும் ? இப்போது இன்னொரு ஆச்சரியமான அதேசமயம் அதிசயத்திற்குரிய நிகழ்ச்சியைப் பாருங்கள் .....
துஸ்தர் என்னும் நகரம் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் رضي الله عنها அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹழ்ரத் அபூ மூஸா அஷ்அரி رضي الله عنها அவர்களால் கைப்பற்றப்பட்ட நகரமாகும் . அதுபோது நடைபெற்ற சம்பவமொன்றை தாபயீன்களில் ஒருவரான ஹழ்ரத் ருபைஃ பின் மிஹ்ரான் (அபூ ஆலியா ) رضي الله عنها அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் ....
"நாங்கள் அந்த நகரத்தை வெற்றி கொண்ட போது ஒரு வீட்டில் இறந்துபோன ஒருவருடைய தேகம் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தோம் .அத்துடன் அவருடைய தலைமாட்டில் வேதநூல் ஒன்றும் இருந்தது . அந்த நூலை நாங்கள் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக் رضي الله عنها அவர்களின் சபைக்கு கொண்டு சென்றோம் . அப்போது அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக பல மொழிகளை சரளமாக பேசும் ஹழ்ரத் கஃபுல் அஹ்பார் رضي الله عنها அவர்களை அழைக்கப்பட்டு வாசிக்கப்பட்டது .
இச்சம்பவம் இப்னு தைமிய்யாவின் 'அஸ் ஸிராத்துல் முஸ்தகீம் ' என்னும் நூலில் 668ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதைக் கொண்டு அவர் நிரூபிக்க முனைவது கப்ரு பற்றிய விஷயமாகும் . இன்னும் அல்பானியும் " தக்ரீஜு அஹாதீதி ஃபழாயிலிஷ் ஷாமி வத்திமிஷ்கி " என்னும் நூலில் 51 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டு விட்டு அவரும் இப்னு தைமிய்யாவின் கருத்தையே எடுத்துக் காட்டுகிறார் . மேலும் இந்த சம்பவத்தை இமாம் இப்னு கதீர் அவர்கள் பதிவுசெய்துவிட்டு இது ஸஹீஹான தகவல் என்றும் கூறுகிறார் .
[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம் 2, பக்கம் 40 ]

என்ற குர்ஆனின் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார் .
அதற்கு அத்தாட்சியாக கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்த திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வமயந்தான் அருளப்பட்டது போல காணப்பட்டதாம் .
பிறகு அங்கு கூடியிருந்த ஜனசமுத்திரம், அலைகள்போல் அடுத்து நின்று தொழுது பகுதாதுக்கு 20 மைல் தூரத்தில் பாழடைந்து இருபிளவாகப் பிளந்து கிடக்கும் கிஸ்ரா கோட்டைக்குச் சமீபமாக , சஹாபி ஸல்மான் பார்ஸீ رضي الله عنه அவர்களது கபூர் ஷரீபுக்கு அடுத்தன்மையாக மற்றோரு கட்டிடத்தினுள் இரு ஸஹாபிகளும் நல்லடக்கம் செய்யப்பட்டனர் . இந்நிகழ்ச்சி ஆங்கில வருடம் 1932ஆம் ஆண்டு நடைபெற்றது .பத்திரிகைகள் பலவற்றிலும் இச்சேதி வெளியிடப்பட்டது . மதராஸில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை ஸைபுல் இஸ்லாமிலும், வட நாட்டின் உருது பத்திரிக்கைகளிலும் இவ்விபரம் வெளிவந்துள்ளது .
பத்திரிகையில் வெளிவந்த செய்தி !
6-11-1964 , நூருல் இஸ்லாம் தமிழ் வாரப் பத்திரிக்கையில்
"வாடாமலர் " என்ற பகுதியில் "இஸ்லாத்தின் அதிசய நிகழ்ச்சி " என்னும் தலைப்பில் வந்துள்ளதையும் நோட்டமிட்டு பாருங்கள் .
" இதர தேசங்களின் இராஜாங்க பிரதிநிதிகளும் இராக் அரசாங்கத்தின் சர்வ அதிகாரிகளும் திரண்டிருக்க ஷாஹ் பைஸல் அரசருக்கெதிரே முதன் முதலாக ஹழ்ரத் ஹுதைபா رضي الله عنها அவர்களின் பரிசுத்த பிரேதம் க்ரேன் மூலமாக அதிஜாக்கிரதையாக பூமியிலிருந்து அப்படியே தூக்கப்பட்டது . அந்த ஜனாஸா ஸ்டெரெச்சர் மீது அழகாய் அமைந்துஹ் விட்டது . பின்னர் ,க்ரேனிலிருந்து ஸ்டெரெச்சரை தனியாக பிரித்து ,அதை மாட்சிமை தாங்கிய ஷாஹ் பைஸல் ,முப்தியே அஃலம் இராக் ,துருக்கி ஜனநாயகப் பொது அமைச்சர்,மிஸ்ரு இளவரசராயிருந்த பாரூக் முதலானோர் தோல் மீது தூக்கிச் சென்று அழகிய கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்தனர் . இதற்குப் பின் ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லா رضي الله عنها அவர்களின் பரிசுத்த மேனியும் அடக்கஸ்தலத்திலிருந்து இதே வகையில் அழகிய முறையில் வெளியே எடுக்கப்பட்டது .
மாபெரும் டாக்டர்களான வைத்தியர்கள் பலர் இந்நிகழ்ச்சியைக் கண்டு திடுக்கிட்டனர் . ஒன்றும் புரியாமல் திகைத்தனர் . பிரஸ்தாப நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜெர்மன் கண் டாக்டர் ஒருவர் இருந்தார் . இவர் இந்நிகழ்ச்சியின் போது ஆர்வமாக பங்கு கொண்டார் . அவர் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும் ,பிரஸ்தாப பெரியார்களான ஸஹாபாக்களின் பிரேதங்கள் , கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஒன்றும் புரியாமல் ,இராக் பிரதம முப்தி அவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு , 'தங்களின் மார்க்கமான இஸ்லாம் சாத்தியமானது தான் ' என்பதற்கு இந்த ஸஹாபாக்களின் பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியை விட வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது ? இதோ யானும் முஸ்லிமாகி விட்டேன் . 'லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ' என்று கூறி முஸ்லிமாகி விட்டார் .
இத்தகைய சந்தர்ப்பத்தில் திரைப்படம் பிடிக்கும் ஒரு ஜெர்மன் கம்பெனி , அதிக தொலை தூரத்திலிருந்தெல்லாம் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களை பெரிய உபகாரம் செய்தது . பிரஸ்தாபப் படம் எடுக்கும் கம்பெனியார் ,இராக் அரசின் அனுமதி பெற்று தங்கள் செலவிலேயே ஒரு காரியம் செய்தனர் .
அடக்கஸ்தலத்தின் மேலே இருநூறு அடி உயரமுள்ள நான்கு கம்பாஸ்களின் மீது ஏறக்குறைய முப்பது அடி நீளமும் , இருபது அடி அகலமும் உள்ள டெலிவிஷன் திரைகளைப் பொருத்தினர் . இதனால் அங்கு குழுமியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நின்றவண்ணமாகவும் , அமர்ந்தவண்ணமாகவும் பிரஸ்தாப அடக்கஸ்தலங்களிலிருந்து கவ்ரவமிக்க இரு ஸஹாபா பெருமக்களின் பிரேதங்களைத் திறப்பதையும் , வெளியே எடுப்பதையும் தங்கள் கண்களால் நிதர்சனமாக நல்ல முறையில் காணும் சந்தர்ப்பம் கிட்டியது .
மறுநாள் பக்தாது நகரிலுள்ள சினிமா காட்சி சாலைகளில் எல்லாம் இந்நிகழ்ச்சி திரையிடப்பட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . இவ்விஷய நிகழ்ச்சிக்குப் பின் பக்தாது நகரிலேயே ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . அளவற்ற வகைகளில் யூதர்களும் ,கிருஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் எவ்விதக் கட்டாயமுமின்றி பள்ளிவாயில்களுக்கு வந்து மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் . நிதர்சனமான இந்நிகழ்ச்சி பண்டைய கால வரலாற்று ஏடு அல்ல .
இது நமது காலத்திலேயே நமது கண்களால் நிதர்சனமாக கண்ட ஒரு நிகழ்ச்சியாகும் .இத்தகைய அதிசயம் கி.பி.1932ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயமாகும் . இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு மதத்தினரும் ,அந்நிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கண்ணாரக் கண்டனர் . அகிலத்திலுள்ள பல பத்திரிகைகள் விஷேசமாய்ப் பிரசுரம் செய்தனர் . அன்றியும் ,இவ்வடக்கஸ்தலங்கள் பெயர் தெரியாத ஒரு சிலரைச் சார்ந்ததல்ல . இறுதி நபியாம் முஹம்மது ﷺ அவர்களது அந்தியத்த நண்பர்களான இரு ஸஹாபாக்களின் பிரேத நிகழ்ச்சியாகும் . அவர்கள் யாரென்பதை முஸ்லீம் உலகம் முன்னரே அறியும் .அவர்கள் எத்தகையோர் என்பதை முஸ்லீம் உலகம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றது .தற்சமயமோ ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்தாப அடக்கஸ்தலத்திற்கு சென்று தரிசித்து வருகின்றனர் . "
இதேபோல முஃதாவுடைய யுத்தத்தில் ஷஹீதான அருமை ஸஹாபாக்கள் ஏறக்குறைய 1342 வருடங்களுக்குப் பிறகும் அவர்களின் புனித தேகம் அழியாமல் இருந்தது கண்டுபிரிக்கப்பட்டது மட்டுமல்ல ,அவர்கள் தமது தலைகளில் அணிந்திருந்த வெள்ளை ,பச்சை மற்றும் சிவப்பு நிறத்தாலான தலைப்பாகைகள் கூட அப்படியே இருந்ததாக 'அல் ஜாமியத்துல் இஸ்லாமியா ' என்னும் சஞ்சிகையின் 201ஆம் இதழ் வெள்ளிக்கிழமை ,24 துல்கஃதா , 1351ல் முஃதாவின் ஷஹீதுகள் என்னும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது .
[ நூல் - நபஸுர் ரஹ்மான் , பக்கம் -196 ]
புனித இஸ்லாமிய மார்க்கத்திற்காக தமதுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகளின் புனித தேகங்கள் கூட இன்றும் அழியாமல் கப்ருக்குள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அவர்களைவிட எவ்வளவோ மேலான படித்தரங்களைக் கொண்டுள்ள நபிமார்களும் ,ஸித்தீக்கீன்களும் தமது திரேகத்தோடு ஏன் உயிரோடு இருக்க மாட்டார்கள் ! இனி அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் எனில் அவர்களிடம் உதவி தேடுவது எவ்வாறு ஷிர்க் ஆகும் ? இப்போது இன்னொரு ஆச்சரியமான அதேசமயம் அதிசயத்திற்குரிய நிகழ்ச்சியைப் பாருங்கள் .....
துஸ்தர் என்னும் நகரம் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் رضي الله عنها அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹழ்ரத் அபூ மூஸா அஷ்அரி رضي الله عنها அவர்களால் கைப்பற்றப்பட்ட நகரமாகும் . அதுபோது நடைபெற்ற சம்பவமொன்றை தாபயீன்களில் ஒருவரான ஹழ்ரத் ருபைஃ பின் மிஹ்ரான் (அபூ ஆலியா ) رضي الله عنها அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் ....
"நாங்கள் அந்த நகரத்தை வெற்றி கொண்ட போது ஒரு வீட்டில் இறந்துபோன ஒருவருடைய தேகம் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தோம் .அத்துடன் அவருடைய தலைமாட்டில் வேதநூல் ஒன்றும் இருந்தது . அந்த நூலை நாங்கள் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக் رضي الله عنها அவர்களின் சபைக்கு கொண்டு சென்றோம் . அப்போது அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக பல மொழிகளை சரளமாக பேசும் ஹழ்ரத் கஃபுல் அஹ்பார் رضي الله عنها அவர்களை அழைக்கப்பட்டு வாசிக்கப்பட்டது .
அதுபோது அவரை என்ன செய்தீர்கள் ? என்றும் , அவரைக் கொண்டு என்ன பிரயோஜனங்களைப் பெற்று கொண்டீர்கள் என்றும் கேட்டபோது , அவருடைய தேகம் சிதைந்து விடக் கூடாதென்பதற்காக இரவோடிரவாக அவரை நல்லடக்கம் செய்து ,அவருடைய கப்ரையும் சமப்படுத்தி விட்டோம் என்றனர் . இன்னும் ....
' அந்நகர மக்கள் மழை பொழியாமல் தடுக்கப்படும் போது அவரை வெளியே கொண்டு வருவார்கள் . உடனே மழை பொழியும் ' , அப்போது அவர் யார் ? எத்தனை காலமாக இந்த நிலையில் அவரை நீங்கள் பெற்றுக் கொண்டுள்ளீர்கள் எனக்கேட்க .....
அவர் தானியால் என்று சொல்லப்படுகிறார் . அவரை நாங்கள் சுமார் முந்நூறு ஆண்டுகளாக இறந்த நிலையில் பெற்றிருக்கின்றோம் . அவருடைய பிடரியிலுள்ள ஒரு சில முடிகளைத் தவிர வேறு எந்த மாற்றமும் அவரில் ஏற்படவில்லை என்றும் கூறினர் . "
இச்சம்பவத்தைக் கொண்டு இப்னு தைமிய்யா மற்றும் அல்பானி போன்றோரின் கொள்கை ஆதரவாளர்களிடம் நாம் கேட்பது என்ன தெரியுமா ?
அச்சம்பவம் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக் رضي الله عنها அவர்களின் காலத்தில் நடைபெற்றுள்ளதால் இதனை நீங்கள் எதற்குமே ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் . அவ்வாறின்றி இந்த நிகழ்ச்சியை உங்களின் கொள்கை கருத்துக்கு ஆதாரமாகக் கொள்வீர்களாயின் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் .
அடுத்து மேற்கண்ட நபர் தனது இறப்புக்கு பின்னர் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டுள்ளாரே ! இவர் என்ன நபியா ? அத்துடன் அந்நகர மக்கள் தங்களுக்கு மழை வேண்டுமென்றால் அவரைக் கொண்டுதான் பெற்றுள்ளனர் என்னும்போது இது ஷிர்க்கான காரியமல்லவா ? பின்னும் ஷிர்க்கான காரியத்தை தடுத்த நிறுத்த அல்லாஹ் அவருடைய தேகத்தை மறைத்திருக்கலாம் அல்லவா ?
இந்நிலையில் ஒருவருடைய தேகத்தை கொண்டு ஷிர்க் நடைபெறுவதற்கு அல்லாஹ்வும் உடந்தையாக இருந்தான் என்று எனக் கூறலாமா ? தயை கூர்ந்து பதில் தாருங்கள் . மரணித்தவர்களால் எதையுமே செய்ய முடியாது என்பது அல்லாஹ்வுடைய விரோதிகளின் கொள்கையாகும் .இதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரைத் தவிர உள்ள அனைத்து இயக்கங்களும் நபிமார்கள் ,வலிமார்கள் போன்றோரிடம் உதவி தேடுவதை பெரும் பாவமென்று சொல்வதால் இவர்களனைவரும் அல்லாஹ்வின் விரோதிகள் என்பது இதைக் கொண்டு வெள்ளிடை மலை போல தெளிவாக்கப்பட்டு விட்டது .

No comments:
Post a Comment